மோசடி பகுப்பாய்வு மூலம் ஆர்டர்களை மதிப்பாய்வு செய்தல்

மோசடியான ஆர்டர்களைக் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பு உங்கள் Shopify நிர்வாகியில் மதிப்பாய்வு செய்ய, நீங்கள் மோசடி பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம். சாத்தியமான சார்ஜ்பேக்குகளைத் தவிர்க்க, அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை மதிப்பாய்வு செய்யவும். அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிறைவேற்றுவது அதிக அளவிலான சார்ஜ்பேக்குகளுக்கு வழிவகுக்கும், இதனால் கட்டணச் செயலாக்கம் முடக்கப்பட்டு, Shopify Payments-இலிருந்து நீங்கள் நீக்கப்படலாம்.

ஆர்டர்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, திருடப்பட்ட கார்டுகளுக்கான நிதியை கிரெடிட் கார்டு நிறுவனங்களால் திரும்பப் பெற முடியும். சர்ச்சைக்குரிய எந்தவொரு கட்டணங்களுக்கும் நீங்கள் ஆதாரங்களைச் சேகரிக்கலாம். இருப்பினும், நிதியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவு கிரெடிட் கார்டை வழங்கிய வங்கியால் எடுக்கப்படுகிறதே தவிர, Shopify-ஆல் அல்ல. வங்கிகளின் கட்டணத் திருப்பல்களை Shopify ஏற்காது.

மோசடி பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மோசடி பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

மோசடி பகுப்பாய்வைப் புரிந்துகொள்ளுதல்

மோசடி பகுப்பாய்வு மோசடி காட்டிகள் மற்றும் தகுதியான ஆர்டர்களுக்கு மோசடி பரிந்துரையை உள்ளடக்கியது. ஆர்டரை நீங்களே விசாரிக்க மோசடி காட்டிகளைப் பயன்படுத்தவும். ஆர்டரின் ஒட்டுமொத்த ஆபத்து மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த படியைச் சரிபார்க்க, மோசடி பரிந்துரையைப் பயன்படுத்தவும்.

ஒரு ஆர்டருக்கான மோசடி காட்டிகள்

மோசடி காட்டிகள் என்பது ஒரு ஆர்டர் குறித்த தனிப்பட்ட விவரங்கள் ஆகும். வாடிக்கையாளர், இடம், சாதனம் மற்றும் வலையமைப்புச் செயல்பாட்டுடன் தொடர்புடைய முகவரி மற்றும் கட்டணச் சரிபார்ப்புகள் அல்லது முறைகளை அவை விவரிக்கலாம். கிடைக்கக்கூடிய காட்டிகள் ஆர்டர்களுக்கு இடையே மாறுபடலாம்.

மோசடியானது என நீங்கள் நினைக்கும் ஆர்டரை விசாரிக்க இந்த விவரங்களைப் பயன்படுத்தலாம். மோசடி காட்டிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  • ஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டு முகவரி சரிபார்ப்பு அமைப்பின் (AVS) சரிபார்ப்புகளில் தேர்ச்சி பெற்றதா என்பது
  • வாடிக்கையாளர் சரியான கார்டு சரிபார்ப்பு மதிப்பு (CVV) குறியீட்டை வழங்கியிருக்கிறாரா என்பது
  • வாடிக்கையாளரின் இடம் கட்டண முறையுடன் பொருந்துகிறதா என்பது
  • வழக்கத்திற்கு மாறான சாதனம் அல்லது வலையமைப்புச் செயல்பாடு உள்ளதா என்பது
  • வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முயன்றாரா என்பது

Shopify மதிப்பீட்டிற்கான திருத்தப்பட்ட ஆர்டர் ஆபத்து மதிப்பீடு பார்வையில், கிடைக்கக்கூடிய மோசடி காட்டிகள் நிழலிடப்பட்ட பேனலில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. மோசடியான நடத்தை தொடர்பான விவரங்கள், முறையான நடத்தை தொடர்பான விவரங்கள் மற்றும் நடுநிலையான விவரங்களைக் காட்டி ஐகான்கள் வேறுபடுத்துகின்றன. புதிய காட்டிகள் இல்லாத ஆர்டர்கள்கூட தற்போதுள்ள முகவரி மற்றும் கட்டணச் சரிபார்ப்புகளைக் காட்டலாம்.

இந்தப் பார்வையில் உள்ள காட்டிகளிலிருந்து கிடைக்கக்கூடிய IP முகவரி தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. சில பார்வைகள் IP முகவரி கிடைக்காதபோது, கிடைக்கக்கூடிய இட விளக்கத்தைத் தனி மெட்டாடேட்டாவாகப் பட்டியலிடுகின்றன. வாடிக்கையாளர் இடத்திற்கும் கட்டண முறைக்கும் இடையிலான பொருந்தாமை போன்ற இடத் தொடர்பான ஆபத்து காட்டிகள் பட்டியலில் இருக்கும். IP முகவரி அல்லது இடத்தின் விளக்கம் மட்டும் மோசடிப் பரிந்துரையாகாது.

மொபைல் பதிப்புகள் உட்பட விவரங்கள் பார்வையின் பிற பதிப்புகள், அதிக ஆபத்து சிக்னல்கள், குறைந்த ஆபத்து சிக்னல்கள் மற்றும் பிற விவரங்கள் என்பதன் கீழ் காட்டிகளைத் தொகுக்கலாம் அல்லது சிவப்பு, பச்சை மற்றும் சாம்பல் நிற ஐகான்களைப் பயன்படுத்தலாம். தொகுக்கப்பட்ட பார்வைகள் காலியான குழுக்களைத் தவிர்க்கின்றன, அத்துடன் எல்லாக் காட்டிகளும் ஒரே குழுவைச் சேர்ந்ததாக இருக்கும்போது தலைப்புகளையும் தவிர்க்கலாம். மூன்றாம் தரப்பு மதிப்பீடுகளுக்கான காட்சியளிப்பும் மாறுபடலாம்.

தனிப்பட்ட காட்டிகள் மற்றும் குழுத் தலைப்புகள் ஆர்டரின் ஒட்டுமொத்த ஆபத்து நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஒரு காட்டி அல்லது காட்டிகளின் எண்ணிக்கையிலிருந்து ஆர்டரை நிறைவேற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்குப் பதிலாக, மோசடி பரிந்துரையை மதிப்பாய்வு செய்யவும்.

Shopify Protect தகவல் உள்ள ஆர்டர்களுக்கு, மோசடி காட்டிகளிலிருந்து பாதுகாப்பு நிலையைத் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யவும்.

மோசடி பகுப்பாய்வுப் பரிந்துரைகள்

தகுதியான ஆன்லைன் கிரெடிட் கார்டு ஆர்டர்களுக்கு, மோசடி காரணமாக கட்டணத் திருப்பல் ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்த, நடுத்தர அல்லது அதிக அளவில் உள்ளதா என்பதை மோசடி பரிந்துரை சுட்டிக்காட்டுகிறது. ஒரு ஆர்டரில் நடுத்தர அல்லது அதிக ஆபத்து இருந்தால், அது ஆர்டர்கள் பக்கத்தில், ஆர்டர் எண்ணுக்கு அடுத்துள்ள எச்சரிக்கை சின்னத்துடன் கொடியிடப்படும். ஆர்டர் அறிவிப்பு மின்னஞ்சல்களுக்கு நீங்கள் குழுசேரும்போது, கொடியிடப்பட்ட ஆர்டர்களும் அதில் சிறப்பித்துக் காட்டப்படும்.

அனைத்து Shopify ஸ்டோர்களிலும் முந்தைய பரிவர்த்தனைகள் குறித்துப் பயிற்றுவிக்கப்பட்ட இயந்திரக் கற்றல் அல்காரிதம்களால் மோசடி பரிந்துரைகள் இயக்கப்படுகின்றன. மோசடியான ஆர்டர்களைச் சிறப்பாகக் கண்டறிய இந்த அல்காரிதம்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன.

ஆர்டருக்கான ஆபத்து நிலை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த படி ஆகிய இரண்டையும் மதிப்பாய்வு செய்யவும். ஆர்டர் ஆபத்து மதிப்பீடு பார்வையில், நீங்கள் இந்த ஆர்டரை நிறைவேற்றலாம், நிறைவேற்றுவதற்கு முன் வாடிக்கையாளருடன் உறுதிப்படுத்தவும் அல்லது இந்த ஆர்டரை ரத்துசெய்யப் பரிசீலிக்கவும் போன்ற வழிகாட்டுதல்கள் இருக்கலாம். இந்த வழிகாட்டுதல் தனிப்பட்ட காட்டியின் அடிப்படையில் இல்லாமல், ஆர்டரின் பரிந்துரையைப் பின்பற்றுகிறது.

ஆர்டரில் மோசடி நடப்பதற்கான அதிக ஆபத்து இருந்தால், நீங்கள் ஆர்டரைச் சரிபார்க்க, ஆர்டரை ரத்துசெய்ய அல்லது ஆர்டருக்கான பணத்தைத் திருப்பியளிக்க முயலலாம்.

தடுக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள செக்அவுட் முயற்சிகள்

Shopify Payments, ஆர்டர் உருவாக்கப்படுவதற்கு முன்பு சில அதிக ஆபத்துள்ள செக்அவுட் முயற்சிகளைத் தடுக்கலாம். இந்தச் செக்அவுட் முயற்சிகள் ஆர்டர்களாக மாறாது, எனவே அவற்றுக்கு ஆர்டர் மோசடிப் பரிந்துரை இருக்காது.

ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதன் கீழ் உள்ள தடுக்கப்பட்டவை பார்வையில், தடுக்கப்பட்ட செக்அவுட் முயற்சிகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். உங்களுக்கு வாடிக்கையாளரைத் தெரிந்திருந்து, விற்பனையை முடிக்க விரும்பினால், நீங்கள் வரைவு ஆர்டரை உருவாக்கி, வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸை அனுப்பலாம்.

ஆர்டரின் மோசடி பகுப்பாய்வைப் பார்த்தல்

ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் உள்ள ஆர்டர் ஆபத்து பிரிவில், ஆர்டரின் ஆபத்து நிலை, பரிந்துரை மற்றும் கிடைக்கக்கூடிய காட்டிகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். சந்தேகத்திற்கிடமான ஆர்டர்கள் ஆச்சரியக்குறி ஐகானுடன் கொடியிடப்படும்.

கிடைக்கக்கூடிய பார்வையைப் பொறுத்து முழுப் பகுப்பாய்வும் ஆர்டர் ஆபத்து மதிப்பீடு அல்லது இந்த ஆர்டர் பற்றி என லேபிளிடப்படலாம். ஒரு ஆர்டருக்குப் பல வழங்குநர்களின் மதிப்பீடுகள் இருக்கும்போது, யாருடைய மதிப்பீட்டை மதிப்பாய்வு செய்ய விரும்புகிறீர்களோ அந்த வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.

டெஸ்க்டாப்பில் திருத்தப்பட்ட Shopify மதிப்பீட்டில், ஆர்டரை விசாரிப்பது தொடர்பான பரிந்துரை இருக்கும்போது வாடிக்கையாளரைத் தொடர்புகொள்க செயல் கிடைக்கக்கூடும். இந்தச் செயலுக்கு ஆர்டரில் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இது தானாகவே மெசேஜ் எதையும் அனுப்பாமல், மின்னஞ்சல் உரையாடல் பெட்டியைத் திறக்கும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. மோசடி குறித்து மதிப்பாய்வு செய்ய விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. ஆர்டர் ஆபத்து பிரிவில், ஆர்டர் ஆபத்து மதிப்பீடு எனப் பெயரிடப்பட்டுள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. ஆபத்து நிலை, பரிந்துரைக்கப்பட்ட அடுத்த படி மற்றும் கிடைக்கக்கூடிய மோசடி காட்டிகளை மதிப்பாய்வு செய்யவும். கூடுதல் மதிப்பீடுகள் கிடைக்கும்போது அவற்றை மதிப்பாய்வு செய்ய, வேறொரு வழங்குநரின் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: வாடிக்கையாளரைத் தொடர்புகொள்க என்பது கிடைத்தால், மின்னஞ்சல் உரையாடல் பெட்டியைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும். அனுப்புவதற்கு முன் பெறுநரையும் மெசேஜையும் மதிப்பாய்வு செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Orders ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் மோசடி குறித்து மதிப்பாய்வு செய்ய விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. Order risk பிரிவில், ஆர்டரின் அபாயச் சுருக்கத்தைத் திறக்கவும்.
  4. உங்கள் செயலியின் பதிப்பைப் பொறுத்து முழுப் பகுப்பாய்வையும் திறக்க, About this order அல்லது Order risk evaluation என்பதைத் தட்டவும்.
  5. அபாய நிலை மற்றும் கிடைக்கக்கூடிய மோசடிக் குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்யவும். கூடுதல் மதிப்பீடுகள் கிடைக்கும்பட்சத்தில், அவற்றை மதிப்பாய்வு செய்ய, மற்றொரு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.

மூன்றாம் தரப்பு மோசடிச் செயலிகள்

Shopify App Store இலிருந்து மோசடித் தடுப்புக்கு உதவும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கலாம். ஒவ்வொரு ஆர்டருக்குமான மோசடி பகுப்பாய்வுடன், இந்தச் செயலிகளில் உள்ள மோசடிக் குறிகாட்டிகளையும் பரிந்துரைகளையும் பார்க்கலாம்.

Shopify Flow மூலம் உங்களின் மோசடித் தடுப்பு உத்திகளைத் தானியங்குபடுத்துதல்

சாத்தியமான மோசடிக்காக ஆர்டர்களை மதிப்பாய்வு செய்வது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஒரு ஆர்டரை நிறைவேற்றலாமா என்பதைத் தீர்மானிக்க, மோசடி பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம். உங்கள் ஆர்டர்களில் சாத்தியமான மோசடி உள்ளதா எனத் தானாகவே சரிபார்க்க, நீங்கள் Shopify Flow மூலம் மோசடித் தடுப்புப் பணிப்பாய்வுகளை உருவாக்கலாம்.

மோசடி பகுப்பாய்வைத் தூண்டும் ஆர்டர்கள் கார்டு சோதனை அல்லது மீண்டும் நிகழும் மோசடியைக் காட்டினால், கார்டு சோதனைக்குப் பதிலளித்தல் மற்றும் சார்ஜ்பேக் அபாயத்தைக் குறைத்தல் குறித்த வழிகாட்டுதலை மதிப்பாய்வு செய்யவும்.

மோசடி பகுப்பாய்வைச் சோதித்தல்

உங்கள் ஸ்டோரில் மோசடி பகுப்பாய்வைச் சோதிக்கலாம் மற்றும் அதிக, நடுத்தர அல்லது குறைந்த அபாயம் கொண்ட ஒரு ஆர்டரை உருவகப்படுத்தலாம். சோதனை ஆர்டர்கள் உண்மையான மோசடிப் பரிந்துரையைப் பெறுவதில்லை, ஆனால் ஒன்றை உருவகப்படுத்த பின்வரும் மதிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். அபாய நிலையை உருவகப்படுத்த, ஆர்டரின் மொத்த மதிப்பு பூஜ்ஜியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அபாய நிலையை உருவகப்படுத்தும் சோதனை ஆர்டர்களை உருவாக்க, நீங்கள் Shopify Payments நுழைவாயிலைச் சோதனைப் பயன்முறையில் வைத்திருக்க வேண்டும். உங்கள் சோதனைக்கு மற்றொரு கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோர் Grow திட்டத்திலோ அதற்கு மேற்பட்ட திட்டத்திலோ இருக்க வேண்டும்.

ஆரடரை உருவகப்படுத்த, பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தவும்:

ஷிப்பிங் முகவரியின் Apartment, suite, etc. புலத்தில் பின்வரும் சோதனை மதிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்:

  • அதிக அபாயப் பரிந்துரைகளை உருவாக்க shopify.test.high
  • நடுத்தர அபாயப் பரிந்துரைகளை உருவாக்க shopify.test.medium
  • குறைந்த அபாயப் பரிந்துரைகளை உருவாக்க shopify.test.low

மோசடி பகுப்பாய்வின் சிக்கல் தீர்த்தல்

மோசடி பகுப்பாய்வு நிலுவையில் உள்ளது

மோசடி பகுப்பாய்வு பொதுவாக உடனுக்குடன் நடக்கும், ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் இதற்குச் சில நிமிடங்கள் ஆகலாம். ஆர்டரில் fraud analysis isn't available yet என்ற மெசேஜ் இருந்தால், பக்கத்தைப் புதுப்பிக்கவும் அல்லது சில நிமிடங்களில் மீண்டும் சரிபார்க்கவும். நீங்கள் ஆர்டரை நிறைவேற்றுவதற்கு முன், மோசடி பகுப்பாய்வு முடிவடையும் வரை காத்திருக்கவும்.

ஒரு வாடிக்கையாளரின் IP முகவரி தற்காலிகத் தடைப்பட்டியலில் உள்ளது

வாடிக்கையாளரின் IP முகவரி தற்காலிகத் தடைப்பட்டியலில் இருப்பதாகக் கைவிடப்பட்ட செக்அவுட் சுட்டிக்காட்டினால், மோசடி பகுப்பாய்வு அந்த IP முகவரியைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது என அர்த்தம். குறுகிய நேரத்தில் ஒரே IP முகவரியிலிருந்து பல ஆர்டர்களோ தோல்வியடைந்த கட்டண முயற்சிகளோ வரும்போது இது நிகழலாம்.

இந்தத் தடை தற்காலிகமானது மற்றும் பொதுவாக ஒரு நாளுக்குள் தானாகவே அகற்றப்படும். இதை முன்கூட்டியே அகற்றுவதற்கு வழியில்லை, எனவே ஆர்டர் செய்பவர் காத்திருக்க வேண்டும். அந்த IP முகவரியிலிருந்து ஆர்டர் செய்ய மீண்டும் முயற்சிப்பது தடையை நீட்டிக்கலாம்.

தடை அகற்றப்படுவதற்கு முன்பு ஆர்டர்களைச் செய்ய:

அதிக அபாய செக்அவுட் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது

கைவிடப்பட்ட செக்அவுட்டின் Timeline இல் Blocked due to high risk of fraud என்பது இருந்தால், ஆர்டர் உருவாக்கப்படுவதற்கு முன்பே Shopify Payments பேமெண்ட்டைத் தடுத்துள்ளது என்று அர்த்தம். எந்தப் பேமெண்ட்டும் கைப்பற்றப்படவில்லை.

ஒவ்வொரு முறை வாடிக்கையாளர் செக்அவுட்டைச் சமர்ப்பிக்கும்போதும், Shopify Payments அபாயத்தை மதிப்பிடுகிறது. வாடிக்கையாளர் வேறு பேமெண்ட் அல்லது பில்லிங் விவரங்களுடன் மீண்டும் முயன்றால், பேமெண்ட் தடுக்கப்படாமல் போகலாம்.

உங்களுக்கு அந்த வாடிக்கையாளரைத் தெரிந்திருந்து, விற்பனையை முடிக்க விரும்பினால், வரைவு ஆர்டரை உருவாக்கி, வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பவும்.

மூன்றாம் தரப்பு நுழைவாயில் ஒரு ஆர்டரை மதிப்பாய்வு செய்கிறது

உங்கள் மூன்றாம் தரப்பு கட்டண நுழைவாயில் மோசடிக்காக ஒரு ஆர்டரை மதிப்பாய்வு செய்கிறது என்றால், உங்கள் Shopify நிர்வாகியில் மதிப்பாய்வு நிலை புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம், ஏனெனில் சில நுழைவாயில்கள் மதிப்பாய்வுப் புதுப்பிப்புகளைச் Shopifyக்குத் திருப்பி அனுப்புவதில்லை.

ஆர்டரின் நிலையைச் சரிபார்க்க, உங்கள் கட்டண நுழைவாயிலை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் நுழைவாயிலின் டாஷ்போர்டில் ஆர்டரை மதிப்பாய்வு செய்யவும்.