Shopify Flow மூலம் அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகித்தல்

Shopify Flow என்பது ஒரு இலவச ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல் தளமாகும். இது உங்கள் Shopify ஸ்டோரிலும் செயலிகளிலும் உள்ள பணிகள் மற்றும் செயல்முறைகளைத் தானியக்கமாக்க உதவுகிறது. அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகிப்பது போன்ற, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சில பணிகளைத் தானியக்கமாக்க நீங்கள் Shopify Flow-ஐப் பயன்படுத்தலாம்.

Shopify Flow-ஐ நிறுவுவது குறித்த பேனர் உங்கள் Shopify நிர்வாகியில் கிடைத்தால், நீங்கள் Flow-ஐ நிறுவு என்பதைக் கிளிக் செய்து, குறைந்த மற்றும் நடுத்தர ஆபத்துள்ள ஆர்டர்களில் தானாகவே பேமெண்ட்டுகளைப் பெறும் பணிப்பாய்வை உடனடியாகச் செயல்படுத்தலாம். இல்லையெனில், Shopify App Store-இல் இருந்து Shopify Flow-ஐ நிறுவி, முன்பே உருவாக்கப்பட்ட வார்ப்புருவைப் பயன்படுத்தலாம் அல்லது உங்களின் சொந்தப் பணிப்பாய்வை உருவாக்கலாம்.

அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகிக்க Shopify Flow-ஐப் பயன்படுத்துவதற்கு முன்

அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகிக்க நீங்கள் பணிப்பாய்வை உருவாக்கும்போதோ திருத்தும்போதோ, ஆர்டர் உருவாக்கப்பட்டது என்ற தூண்டுதலுக்குப் பதிலாக ஆர்டர் ஆபத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது என்ற தூண்டுதலைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். ஏனெனில் ஆர்டர் உருவாக்கப்பட்ட பிறகு, மோசடி பகுப்பாய்வு செய்து முடிப்பதற்குச் சிறிது நேரம் ஆகும். ஆர்டர் ஆபத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது எனத் தொடங்கும் பணிப்பாய்வுகள், ஆர்டர் உருவாக்கப்பட்டவுடன் உடனடியாக இயங்காது; மாறாக ஆர்டரில் மோசடி பகுப்பாய்வு முடிந்த பிறகே தூண்டப்படும்.

பேமெண்ட்டைப் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பணிப்பாய்வை நீங்கள் செயல்படுத்திய பிறகு, உங்கள் அமைப்புகளில் கிரெடிட் கார்டு அங்கீகாரம் மற்றும் பெறுதல் என்பது கைமுறையாகப் பெறு என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். பேமெண்ட்டுகளைப் பெறுவதை நிர்வகிக்கும் பணிப்பாய்வுகள், தானியங்கு பெறுதல் அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால் செயல்படாது.

Shopify Flow பணிப்பாய்வுகளை அமைத்தல்

Shopify Flow இல் தூண்டுதல்கள், நிபந்தனைகள் மற்றும் செயல்களைக் கொண்ட பணிப்பாய்வுகளை உருவாக்குவதன் மூலம் Shopify இல் செய்யப்படும் பொதுவான பணிகளை நீங்கள் தானியங்குபடுத்தலாம். அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகிக்க Shopify Flow ஐப் பயன்படுத்த, நீங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பணிப்பாய்வுகளை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆர்டர் அதிக ஆபத்துள்ளதாக இல்லாவிட்டால் பேமெண்ட்டைப் பெறலாம் அல்லது அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்து மீளிருப்பு செய்யலாம். இந்தப் பணிப்பாய்வுகள் Shopify இன் மோசடி பகுப்பாய்வின் தகவலின் அடிப்படையில் செயல்படுகின்றன.

அதிக மோசடி ஆபத்து இல்லாத ஆர்டரைப் பெறுதல்

இந்தப் பணிப்பாய்வு ஆபத்து மற்றும் நடுத்தர ஆபத்து உள்ள ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைப் பெறுகிறது மற்றும் அதிக ஆபத்துள்ள ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைப் பெறுவதைத் தவிர்க்கிறது. நீங்கள் வார்ப்புருவைத் தானாகவே நிறுவலாம் அல்லது பின்வரும் படிகளைச் செய்வதன் மூலம் Shopify நிர்வாகியில் வார்ப்புருவை நேரடியாக நிறுவித் தனிப்பயனாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Flow என்பதற்குச் செல்லவும்.

  2. பணிப்பாய்வை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வார்ப்புருக்களை உலாவு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆபத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆர்டருக்கு அதிக மோசடி ஆபத்து இல்லாவிட்டால் பேமெண்ட்டைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. விருப்பத்திற்குரியது: நிறைவேற்றப்படாத ஆர்டர்களை நீங்கள் தடமறிய விரும்பினால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. சரிபார் பெட்டியில், இல்லையெனில் என்பதற்கு அடுத்துள்ள + குறியீட்டைக் கிளிக் செய்யவும்.
    2. செயல் என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. ஒரு செயலைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரு டேக்கைச் சேர்க்க ஆர்டர் டேக்குகளைச் சேர் என்ற செயலைப் பயன்படுத்தலாம் அல்லது பேமெண்ட் பெறப்படவில்லை என்பதைக் குறிக்க உங்களுக்கோ உங்கள் பணியாளர்களுக்கோ மின்னஞ்சல் அனுப்ப அக மின்னஞ்சலை அனுப்பு என்ற செயலைப் பயன்படுத்தலாம்.
  7. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பணிப்பாய்வைச் சேமித்துப் பயன்படுத்தத் தொடங்க, பணிப்பாய்வை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பணிப்பாய்வைச் செயல்படுத்தாமல் சேமிக்க, வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்து மீளிருப்பு செய்தல்

இந்தப் பணிப்பாய்வு அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்கிறது மற்றும் ஆர்டர்களில் உள்ள உருப்படிகளை மீளிருப்பு செய்கிறது. இது ஆர்டரில் ஒரு டேக்கையும் ஆர்டரை அளித்த வாடிக்கையாளரிடம் ஒரு டேக்கையும் சேர்க்கிறது மற்றும் அதிக ஆபத்து காரணமாக ஆர்டர் ரத்துசெய்யப்பட்டதைக் குறிக்கும் ஒரு மின்னஞ்சலையும் அனுப்புகிறது. நீங்கள் வார்ப்புருவைத் தானாகவே நிறுவலாம் அல்லது பின்வரும் படிகளைச் செய்வதன் மூலம் Shopify நிர்வாகியில் வார்ப்புருவை நேரடியாக நிறுவித் தனிப்பயனாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Flow என்பதற்குச் செல்லவும்.

  2. பணிப்பாய்வை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வார்ப்புருக்களை உலாவு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆபத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்து மீளிருப்பு செய்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: பணிப்பாய்வு எடுக்கும் செயல்களைத் திருத்த, நீங்கள் மாற்ற விரும்பும் செயலைக் கிளிக் செய்யவும். எடுத்துக்காட்டாக, மின்னஞ்சலின் இலக்கை மாற்ற, அக மின்னஞ்சலை அனுப்பு பெட்டியைக் கிளிக் செய்து, பிறகு your.email@example.com என்பதை நீங்கள் பயன்படுத்த விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு மாற்றவும்.

  6. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பணிப்பாய்வைச் சேமித்துப் பயன்படுத்தத் தொடங்க, பணிப்பாய்வை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பணிப்பாய்வைச் செயல்படுத்தாமல் சேமிக்க, வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

அடிக்கடி உருப்படிகளைத் திருப்பியளிக்கும் வாடிக்கையாளர்களுக்கான ஆர்டர்களை ரத்துசெய்தல்

கடந்த ஆறு மாதங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தயாரிப்புகளைத் திருப்பியளித்த வாடிக்கையாளர்களுக்கான ஆர்டர்களை ரத்துசெய்யும். நீங்கள் வார்ப்புருவைத் தானாகவே நிறுவலாம் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் வார்ப்புருவை நேரடியாக நிறுவித் தனிப்பயனாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Flow என்பதற்குச் செல்லவும்.

  2. பணிப்பாய்வை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வார்ப்புருக்களை உலாவு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆபத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, அடிக்கடி உருப்படிகளைத் திருப்பியளிக்கும் வாடிக்கையாளர்களுக்கான ஆர்டர்களை ரத்துசெய்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: பணிப்பாய்வு எடுக்கும் செயல்களைத் திருத்த, நீங்கள் மாற்ற விரும்பும் செயலைக் கிளிக் செய்யவும். எடுத்துக்காட்டாக, மின்னஞ்சலின் இலக்கை மாற்ற, அக மின்னஞ்சலை அனுப்பு பெட்டியைக் கிளிக் செய்து, பிறகு your.email@example.com என்பதை நீங்கள் பயன்படுத்த விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு மாற்றவும்.

  6. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பணிப்பாய்வைச் சேமித்துப் பயன்படுத்தத் தொடங்க, பணிப்பாய்வை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பணிப்பாய்வைச் செயல்படுத்தாமல் சேமிக்க, வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

அறியப்பட்ட மோசமான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் ஆர்டர்களை ரத்துசெய்தல் மற்றும் குறிச்சொல்லிடுதல்

கடந்தகால மோசடியான ஆர்டர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தும் ஆர்டர்களைத் தானாகவே ரத்துசெய்யும். மோசடியான வாடிக்கையாளர்கள் இதைச் சுலபமாகத் தவிர்க்க முடியும் என்றாலும், தானியங்கு மோசடியைத் தடுக்க இது உதவும். நீங்கள் வார்ப்புருவைத் தானாகவே நிறுவலாம் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் வார்ப்புருவை நேரடியாக நிறுவித் தனிப்பயனாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Flow என்பதற்குச் செல்லவும்.

  2. பணிப்பாய்வை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வார்ப்புருக்களை உலாவு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆபத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, அறியப்பட்ட மோசமான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் ஆர்டர்களை ரத்துசெய்து குறிச்சொல்லிடுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.