நிறைவேற்ற நேரம் என்பதைப் புரிந்துகொள்ளுதல்

ஒரு வாடிக்கையாளரால் ஆர்டர் செய்யப்படுவதற்கும், அந்த ஆர்டரை வணிகம் நிறைவேற்றுவதற்கும் இடையிலான நேரமே நிறைவேற்ற நேரம் ஆகும். ஷிப்பிங் தேவைப்படும் ஆர்டர்களின் ஷிப்மென்ட்டை, ஷிப்பிங் கேரியர் சேவையிடம் வணிகம் வழங்கும்போது அந்த ஆர்டர்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.

ஆர்டரைச் சரிபார்த்தல், ஷிப்பிங் லேபிள்களை அச்சிடுதல், தயாரிப்புகளைப் பொதியாக்கம் செய்தல், ஷிப்மென்ட்களை ஷிப்பிங் கேரியரிடம் ஒப்படைத்தல் ஆகிய அனைத்தும் ஒரு ஆர்டரின் நிறைவேற்ற நேரத்திற்குப் பங்களிக்கின்றன.

நிறைவேற்ற நேரத்தை உருவாக்கும் ஆர்டர் காலவரிசையின் ஒரு பகுதி

உங்கள் வணிகத்தைப் பொறுத்து, நிறைவேற்ற நேரத்தின் மீதான உங்களின் கட்டுப்பாடு மாறுபடும். நீங்கள் டிராப்ஷிப் செய்தால், நீங்கள் எந்தெந்தச் சப்ளையர்களுடன் பணிபுரிகிறீர்கள், அவர்களிடம் எவ்வளவு விரைவாக ஆர்டர்களை வழங்குகிறீர்கள் என்பதில் மட்டுமே உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும். தயாரிப்புகளை நீங்களே அனுப்பினால், தயாரிப்பை எவ்வளவு விரைவாகப் பேக்கேஜ் செய்கிறீர்கள் என்பது முதல் ஷிப்மென்ட்களை ஷிப்பிங் கேரியர்களிடம் எப்போது டிராப்-ஆஃப் செய்கிறீர்கள் என்பது வரை அனைத்தையும் நீங்களே கட்டுப்படுத்தலாம்.

ஆர்டர்கள் அட்டவணை மற்றும் ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் காட்டப்படும் Fulfill by தேதியையும் உங்களின் நிறைவேற்ற நேரம் தீர்மானிக்கிறது.

நிறைவேற்ற நேரங்களின் தாக்கம்

விரைவான நிறைவேற்ற நேரங்கள் பின்வரும் பலன்களை வழங்கலாம்:

  • குறைந்த செலவில் ஷிப்பிங் - நீங்கள் மெதுவான ஷிப்பிங் விருப்பங்களைத் தேர்வுசெய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம், ஆனாலும் ஷிப்மென்ட்கள் நியாயமான காலவரம்புகளுக்குள் வந்தடையும்.
  • அதிக வாடிக்கையாளர் திருப்தி - வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை விரைவாகப் பெறும்போது, அது உங்கள் வணிகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் நேர்மறையான அனுபவத்தை வழங்கவும் முடியும். இதனால் வாடிக்கையாளர் மீண்டும் உங்களிடம் ஆர்டர் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
  • சரக்கு இருப்பு வேகமாக நகரும் - உங்கள் தயாரிப்புகளைக் கிடங்குகளில் சேமித்து வைத்தால், ஷெல்ஃப்களில் தயாரிப்புகள் குறைந்த நேரமே இருப்பது, கிடங்குச் செலவுகளைக் குறைக்க உதவும்.
  • மிகவும் திறமையான நிறைவேற்றச் செயல்முறை - நிறைவேற்ற நேரத்தை மேம்படுத்துவதன் மூலம், உங்கள் பணியாளர்கள் திறமையாகப் பணிபுரிவதையும் தேவையற்ற தொழிலாளர் செலவுகள் இல்லை என்பதையும் நீங்கள் உறுதிசெய்யலாம்.

மெதுவான நிறைவேற்ற நேரங்கள் பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்தலாம்:

  • ஆதரவுச் சுமை - வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள் குறித்த அறிவிப்புகளைப் பெற உங்களைத் தொடர்புகொள்ளலாம், அவர்களுக்குப் பதிலளிப்பதற்கு அதிக நேரம் ஆகலாம்.
  • பூர்த்திசெய்யப்படாத எதிர்பார்ப்புகள் - சில வாடிக்கையாளர்கள் ஆர்டர்கள் சில நாட்களில் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். வணிகம் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், வாடிக்கையாளர் மீண்டும் அந்த வணிகத்திடம் ஆர்டர் செய்யாமல் போகலாம்.
  • அதிகச் செலவுகள் - திறமையற்ற நிறைவேற்ற நேரங்கள் காரணமாகப் பணியாளர்கள் அதிக நேரம் வேலைசெய்ய நேரலாம், கிடங்கு ஷெல்ஃப்களில் தயாரிப்புகள் அதிக இடத்தை ஆக்கிரமிக்கலாம். இவை இரண்டும் வணிகத்திற்கு அதிகச் செலவை ஏற்படுத்துகின்றன.

உங்களின் நிறைவேற்ற நேரங்களைப் புரிந்துகொள்ளுதல்

ஒரு ஆர்டரைச் செயல்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படியையும் புரிந்துகொள்ளும்போது, உங்களின் நிறைவேற்றச் செயல்முறையை மேலும் திறமையானதாக மாற்றுவதற்கான வழிகளை உங்களால் கண்டறிய முடியும். தேவையற்ற படிகளை அகற்றுவது, இரண்டு படிகளை ஒன்றாக இணைப்பது அல்லது ஒரே நேரத்தில் இரண்டு பணிகளைச் செய்வது ஆகியவை உங்களின் நிறைவேற்ற நேரத்தைக் குறைக்க உதவும்.

படி 1 - உங்கள் தயாரிப்புகளைக் குழுவாக்குதல்

நீங்கள் விற்கும் ஒவ்வொரு தயாரிப்பிற்கான செயலாக்கப் படிகளையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏதேனும் தயாரிப்புகள் ஒரே மாதிரியான படிகளைப் பகிர்ந்துகொண்டால், அவற்றை ஒன்றாகக் குழுவாக்குங்கள்.

உதாரணமாக, நீங்கள் டி-ஷர்ட்கள், தொப்பிகள் மற்றும் நகைகளை விற்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். தொப்பிகள் மற்றும் டி-ஷர்ட்களுக்கான ஆர்டர்களைச் செயலாக்குவதற்கு, அவற்றை ஒரு பேடட் உறைக்குள் வைத்து, ஷிப்பிங் லேபிளை அச்சிட்டு, அந்த உறையை உங்கள் ஷிப்பிங் கேரியரிடம் வழங்கினால் போதுமானதாக இருக்கும். இருப்பினும், நகைகளுக்கான ஆர்டர்களைச் செயலாக்குவதற்கு, நீங்கள் தயாரிப்பிற்கு இறுதிப் பாலிஷ் போட்டு, சிறிய நகைப்பெட்டியில் வைத்து, பெட்டியை அலங்கரித்து, அதை ஒரு டெலிவரிப் பெட்டியில் வைத்து, லேபிளை அச்சிட்டு, அதன் பிறகு உங்கள் ஷிப்பிங் கேரியரிடம் வழங்க வேண்டியிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், நிறைவேற்றச் செயலாக்கத்திற்கு உங்களிடம் இரண்டு குழுக்கள் இருக்கும்.

படி 2 - ஒவ்வொரு தயாரிப்புக் குழுவிற்கும் செயலாக்கப் படிகளின் பட்டியலை உருவாக்குதல்

ஒவ்வொரு தயாரிப்புக் குழுவிற்கும், அந்தக் குழுவிலுள்ள ஒரு தயாரிப்புக்கான ஆர்டரைச் செயலாக்குவதற்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படியையும் பட்டியலிடுங்கள்.

உதாரணமாக, உங்களுடைய கலைப்படைப்புகளின் பிரிண்ட்களை நீங்கள் விற்பதாகவும், உள்ளூர் அச்சிடும் நிறுவனம் மூலம் தேவைக்கேற்ப அவற்றை அச்சிடுவதாகவும் வைத்துக்கொள்வோம். உங்களின் நிறைவேற்றச் செயல்முறை பின்வருமாறு இருக்கலாம்:

  1. ஆர்டர் மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. கோரப்பட்ட பிரிண்ட்டைச் சரிபார்த்து, உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் திறந்து உள்ளூர் அச்சிடும் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் எழுதத் தொடங்கவும்.
  3. மின்னஞ்சலில் பிரிண்ட் கோப்பைப் பதிவேற்றி, பிறகு மின்னஞ்சலை அனுப்பவும்.
  4. பிரிண்ட் தயாராக உள்ளது என அச்சிடும் நிறுவனத்திடமிருந்து வரும் மின்னஞ்சல் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கவும்.
  5. அச்சிடும் நிறுவனத்திற்குச் சென்று, பிரிண்ட்டிற்கான கட்டணத்தைச் செலுத்தி, பிரிண்ட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
  6. வீட்டிற்குத் திரும்பவும்.
  7. பிரிண்ட்டைப் பேக்கேஜ் செய்யவும்.
  8. ஷிப்பிங் லேபிளை வாங்கி அச்சிட்டு, அதை பேக்கேஜுடன் இணைக்கவும்.
  9. ஷிப்பிங் கேரியரின் டிராப்-ஆஃப் இருப்பிடத்திற்குச் செல்லவும்.
  10. பேக்கேஜை டிராப்-ஆஃப் செய்யவும்.

படி 3 - ஒவ்வொரு படிக்கும் கூடுதல் விவரங்களை வழங்கவும்

படிகளில் பின்வருபவை போன்ற கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும்:

  • ஒவ்வொரு படிக்கும் ஆகும் நேரம்
  • உங்களிடமிருந்து தேவைப்படும் ஏதேனும் கூடுதல் செயல்கள்
  • படிக்குத் தேவைப்படும் ஏதேனும் கூடுதல் பொருட்கள்

படி 4 - வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த தயாரிப்புகள் உள்ள ஆர்டர்களுக்கான செயலாக்கப் படிகளை உருவாக்கவும்

எடுத்துக்காட்டாக, படி 1 இல் உள்ள தொப்பி, டி-ஷர்ட் மற்றும் நகை ஸ்டோருக்கான சூழலைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு தொப்பி மற்றும் நகை ஆகிய இரண்டையும் பேக்கிங் செய்யும் ஆர்டர்களுக்குத் தனியாகப் படிகளை நீங்கள் அமைக்க வேண்டும்.

உங்கள் நிறைவேற்ற நேரத்தை மேம்படுத்தவும்

ஆர்டரைச் செயலாக்குவதற்கான உங்கள் படிகளைப் புரிந்துகொண்ட பிறகு, ஒவ்வொரு செயலாக்கத்தையும் மேம்படுத்தப் பின்வரும் வழியைக் கருத்தில் கொள்ளவும்:

  • முன்கூட்டியே தயார் செய்யக்கூடிய படிகளை ஹைலைட் செய்யவும். எடுத்துக்காட்டாக, பெட்டியைத் தயார் செய்வது அல்லது சரக்கு இருப்பு அறையில் இருந்து ஷிப்பிங் நிலையத்திற்குச் சரக்கு இருப்பை மாற்றுவது.
  • இயன்றவரை எந்தவொரு மேனுவல் பணிகளையும் தானியியக்கமாக்கவும்.
  • நீங்கள் ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்தினால், ஷிப்பிங் லேபிள்களை மொத்தமாக வாங்கவும்.
  • ஒரே நேரத்தில் செய்யக்கூடிய படிகளைக் கண்டறியவும். எடுத்துக்காட்டாக, ஒரு படிக்கு நீங்கள் 15 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்றால், அந்த நேரத்தில் வேறு ஏதாவது ஒரு படியைச் செய்ய முடியுமா என்று பார்க்கவும்.
  • தேவையற்ற படிகளை அகற்றவும்.

எடுத்துக்காட்டாக, படி 2 இலிருந்து ஆர்ட் பிரிண்ட் நிறைவேற்றச் செயல்முறையைப் பின்வரும் வழிகளில் நீங்கள் மேம்படுத்தலாம்:

  • படிகள் 1-3 ஐ இணைக்கலாம் - உங்கள் அனைத்து பிரிண்ட்டுகளையும் Google Drive அல்லது Dropbox போன்ற கிளவுட்-அடிப்படையிலான கோப்புச் சேமிப்பகச் சேவைக்கு பதிவேற்றவும். உங்கள் உள்ளூர் பிரிண்டிங் நிறுவனத்திற்குப் பிரிண்ட்டுகளுக்கான அணுகலை வழங்கவும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ளூர் பிரிண்டிங் நிறுவனத்தை ஒரு தனிப்பயன் நிறைவேற்றச் சேவையாக அமைக்கவும். இறுதியாக, ஆர்டர்களைத் தானாகவே நிறைவேற்ற உங்கள் Shopify அமைப்புகளைச் சரிசெய்யவும்.

    இந்த அமைவின் மூலம், உங்கள் ஸ்டோரில் ஒரு ஆர்டர் செய்யப்படும்போது, அனைத்து விவரங்களுடன் உங்கள் உள்ளூர் பிரிண்டிங் நிறுவனத்திற்கு உடனடியாக ஒரு மின்னஞ்சல் செல்லும். அவர்கள் கிளவுட்-அடிப்படையிலான கோப்புச் சேமிப்பகச் சேவை வழியாகப் பிரிண்ட்டை அணுகலாம்.

  • படி 8, படி 4 இன் போது நடக்கலாம் - உங்கள் பிரிண்டிங் நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் உறுதிப்படுத்தலுக்குக் காத்திருக்கும்போதே, ஷிப்பிங் லேபிளைப் பிரிண்ட் செய்து பேக்கேஜுடன் இணைத்துப் பேக்கேஜைத் தயார் செய்யலாம்.

  • படி 6 ஐ அகற்றலாம் - நீங்கள் பிரிண்ட்டை நேரில் பெறுவதற்கு முன்பே பேக்கேஜ் மற்றும் லேபிளைத் தயார் செய்தால், அதைப் பெற்றவுடனே பேக்கேஜ் செய்துவிட்டு நேரடியாக ஷிப்பிங் கேரியரின் டிராப்-ஆஃப் இருப்பிடத்திற்குச் செல்லலாம்.

மேற்கண்ட மாற்றங்களைச் செய்த பிறகு, உங்களின் நிறைவேற்றச் செயல்முறை பின்வருமாறு இருக்கும்:

  1. ஆர்டர் மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. ஷிப்பிங் லேபிளை வாங்கி அச்சிட்டு, அதை பேக்கேஜுடன் இணைக்கவும்.
  3. பிரிண்ட் தயாராக உள்ளது என அச்சிடும் நிறுவனத்திடமிருந்து வரும் மின்னஞ்சல் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கவும்.
  4. பொதியாக்கத்துடன் பிரிண்டிங் நிறுவனத்திற்குச் சென்று, பிரிண்ட்டுக்குப் பணம் செலுத்தி, பிரிண்ட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  5. தயாரிப்பைப் பேக்கிங் செய்து முடிக்கவும்.
  6. ஷிப்பிங் கேரியரின் டிராப்-ஆஃப் இருப்பிடத்திற்குச் செல்லவும்.
  7. பேக்கேஜை டிராப்-ஆஃப் செய்யவும்.

உங்கள் செயல்முறைகளைத் தானியியக்கமாக்குவதற்கான பிற வழிகளை ஆராய, பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்:

நிறைவேற்ற மைய விருப்பங்களை ஆராயுங்கள்

ஆர்டர்களை நீங்களே செயலாக்குவதற்கு அதிக நேரம் எடுத்தால், நிறைவேற்ற மையத்துடன் இணைந்து பணியாற்றுவதைக் கருத்தில் கொள்ளவும். நிறைவேற்ற மையங்கள் உங்கள் சார்பாக ஆர்டர்களைச் செயலாக்கி அனுப்பும். இது உங்கள் வணிகத்தின் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது.

பின்வரும் விருப்பங்களை ஆராய்வதைக் கருத்தில் கொள்ளவும்:

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

நீங்கள் ஒரு விற்பனையைத் திட்டமிட்டால் அல்லது ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தால் பெரிதும் பாதிப்படையும் வணிகத்தை நடத்தினால், அதிக அளவிலான ஆர்டர்களுக்கு உங்கள் வணிகம் தயாராக இருப்பதை உறுதிசெய்யவும்.

நீங்கள் தயாராகுவதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • போதுமான உதவி இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • நிகழ்வுகளுக்குச் சில நாட்களுக்கு முன்பே உங்கள் தயாரிப்புகளைத் தயார் செய்யுங்கள்.
  • பெட்டிகள், டேப், மெயிலர்கள், பிரிண்டர் பேப்பர், இங்க் மற்றும் லேபிள்கள் போன்ற போதுமான ஷிப்பிங் மற்றும் பேக்கிங் பொருட்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • உங்களின் பிரதான ஷிப்பிங் கேரியரின் கட்-ஆஃப் நேரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த நேரங்களுக்கு ஏற்பத் திட்டமிடுங்கள். எடுத்துக்காட்டாக, மாலை 4:00 மணிக்குப் பிறகு உங்கள் கேரியர் ஷிப்மென்ட்களை ஏற்கவில்லை என்றால், 3:30 மணிக்குள் உங்களின் அனைத்து ஆர்டர்களையும் முடித்துவிடுங்கள்.

எதிர்கால நிகழ்வுகளுக்குத் திட்டமிட உதவும் வகையில், உங்களிடம் தீர்ந்துபோன பொருட்கள் அல்லது நீண்ட நேரமெடுத்த படிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் நிறைய பணியாளர்கள் இருந்தால் நிறைவேற்ற நேரம் குறைந்திருக்குமா அல்லது அதிக நேரமெடுக்கும் மேனுவல் பணிகளைத் தானியியக்கமாக்குவதற்கு வழிகள் உள்ளதா என்று கருதிப் பார்க்கவும்.