ஆன்லைன் ஆர்டர்களுக்காக உள்ளூர் டெலிவரியை அமைத்தல்
உள்ளூர் வாடிக்கையாளர்கள் தங்களது ஆர்டர்களை டெலிவரி பெறுவதற்கான விருப்பத்தை நீங்கள் அமைக்கலாம். தகுதியான வாடிக்கையாளரின் முகவரி உங்கள் டெலிவரி பகுதிக்குள் அமைந்திருந்தால், அந்த வாடிக்கையாளருக்குச் செக்அவுட்டில் உள்ளூர் டெலிவரி ஒரு விருப்பமாகக் கிடைக்கும்.
உள்ளூர் டெலிவரியை அமைக்க, நீங்கள் டெலிவரி வழங்கும் ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளூர் டெலிவரி விருப்பத்தைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் அல்லது சில குறிப்பிட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு நீங்கள் டெலிவரி வழங்கலாம்.
உள்ளூர் டெலிவரியை அமைப்பதற்கு முன், உங்கள் ஸ்டோரில் இடங்கள் சேர்க்கப்பட்டு சரக்கு இருப்புகள் கையிருப்பில் உள்ளதா என்பதையும் ஒவ்வொரு டெலிவரி இருப்பிடமும் ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற முடியுமா என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
உங்களின் ஷிப்பிங் அமைப்புகளில் உள்ளூர் டெலிவரியை அமைத்த பிறகு, உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அறிந்துகொள்ளவும். நீங்களோ அல்லது உங்கள் பணியாளர்களோ ஆர்டர்களை டெலிவரி செய்வதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது மூன்றாம் தரப்பு டெலிவரி சேவையைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் Shopify POS ஐப் பயன்படுத்தினால், Shopify POS இல் இருந்தும் உங்களால் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை உருவாக்க முடியும்.
இந்தப் பக்கத்தில்
உள்ளூர் டெலிவரியை அமைப்பதற்கான பரிசீலனைகள்
உள்ளூர் டெலிவரியை அமைப்பதற்கு முன் பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:
- எந்தவொரு மூன்றாம் தரப்பு ஷிப்பிங் செயலிகளைப் பயன்படுத்துவதும் Shopify-இன் உள்ளூர் டெலிவரி முறையுடன் முரண்படலாம். மூன்றாம் தரப்புச் செயலிகள் என்பவை Shopify-ஆல் உருவாக்கப்படாதவை.
- B2B செக்அவுட்கள் உள்ளூர் டெலிவரியை ஆதரிக்காது. எனினும், நீங்கள் ஒரு B2B வரைவு ஆர்டரை உருவாக்கும்போது, ஷிப்பிங் முறையாக உள்ளூர் டெலிவரியை முன்கூட்டியே தேர்வு செய்தால், உள்ளூர் டெலிவரி ஆதரிக்கப்படும்.
- Shop Pay உடன் உள்ளூர் டெலிவரி செயல்படும், ஆனால் Apple Pay, Google Pay, Amazon Pay அல்லது PayPal போன்ற பிற விரைவான செக்அவுட்களுடன் செயல்படாது. செக்அவுட்டின் முதல் படியில் வாடிக்கையாளர் இந்தக் கட்டண முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, ஷிப்பிங் விருப்பமாக உள்ளூர் டெலிவரி கிடைக்காது.
- டெலிவரிக்காக உருப்படிகளைத் தயார் செய்யும் அல்லது ஆர்டர்களை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் Shopify நிர்வாகி அணுகல் தேவை.
- டெலிவரி ஆரத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் வணிக இடம் சரிபார்க்கப்பட வேண்டும். அது துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் இடத்தின் முகவரியைச் சரிபார்த்து மாற்றவும்.
- அதிகபட்ச டெலிவரி ஆரம் 160 கிலோமீட்டர்கள் அல்லது 100 மைல்கள் ஆகும். அண்டை மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தை நீங்கள் இயக்கியிருந்தாலும், பிற நாடுகளுக்கு டெலிவரி ஆரம் நீட்டிக்கப்படாது.
- அஞ்சல் குறியீட்டு மண்டலங்களை அமைக்கும்போது, நீங்கள் 3,000 எழுத்துகள் வரை உள்ளிடலாம்.
- ஒரு இடத்திற்கு நீங்கள் அதிகபட்சமாக 10 டெலிவரி மண்டலங்களைச் சேர்க்கலாம்.
- ஒரு மண்டலத்திற்கு அதிகபட்சமாக விலை சார்ந்த 3 கூடுதல் விதிகளை நீங்கள் அமைக்கலாம்.
- உள்ளூர் டெலிவரிக்கான ஷிப்பிங் விருப்பப் பெயரை உங்களால் மாற்ற முடியாது. உங்கள் ஸ்டோர் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளில் கிடைக்கும்போது, "Local delivery" என்ற ஷிப்பிங் விருப்பத்தின் பெயர் செக்அவுட்டின் ஷிப்பிங் பிரிவில் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். பேமெண்ட்ஸ் பிரிவில், உங்கள் ஸ்டோரின் மொழி எதுவாக இருந்தாலும் அது ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படும்.
வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தகுதி
உள்ளூர் டெலிவரியை நீங்கள் இயக்கும்போது, தகுதியான வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் அது ஒரு ஷிப்பிங் விருப்பமாகக் கிடைக்கும். செக்அவுட்டில், வாடிக்கையாளர்கள் டெலிவரி வழிமுறைகளைச் சேர்க்கலாம் என்பதோடு தொலைபேசி எண்ணையும் கட்டாயம் வழங்க வேண்டும். ஒரே ஆர்டரில் சில உருப்படிகளை ஷிப்பிங் மூலமாகவும் சில உருப்படிகளை உள்ளூர் டெலிவரி மூலமாகவும் பெற வாடிக்கையாளர்களால் தேர்வுசெய்ய முடியாது, எனவே அதற்குப் பதிலாக அவர்கள் இரண்டு தனித்தனி ஆர்டர்களை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் பின்வரும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்போது மட்டுமே, உள்ளூர் டெலிவரி அவர்களுக்கு ஒரு விருப்பமாகக் கிடைக்கும்:
- கார்ட்டில் உள்ள அனைத்துப் பருப்பொருள் தயாரிப்புகளும் ஒரு இடத்திலிருந்து டெலிவரி செய்யத் தகுதியானவை.
- முழு ஆர்டரையும் நிறைவேற்றுவதற்கான சரக்கு இருப்பு, டெலிவரி செய்யும் இடத்தில் கிடைக்கிறது.
- வாடிக்கையாளரின் டெலிவரி முகவரியை Google-ஆல் சரிபார்க்க முடியும். செக்அவுட்டின்போது, சரிபார்க்கப்பட்ட முகவரியைத் தேர்ந்தெடுக்க, வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கப்படும் முகவரிகளின் கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தலாம்.
- வாடிக்கையாளரின் முகவரி, குறிப்பிட்ட டெலிவரி ஆரத்திற்குள்ளும் அதே மாகாணம் அல்லது மாநிலத்திற்குள்ளும் இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட அஞ்சல் குறியீடுகளுக்குள்ளும் அதே நாட்டிற்குள்ளும் இருக்க வேண்டும்.
- செக்அவுட்டின் முதல் படியில் Shop Pay-ஐத் தவிர வேறு விரைவான செக்அவுட் முறையை வாடிக்கையாளர் தேர்வுசெய்யக்கூடாது. உங்களின் பெரும்பாலான வணிகங்களுக்கு உள்ளூர் டெலிவரி அல்லது நேரில் பெறுதலைச் சார்ந்திருந்தால், நீங்கள் உங்களின் விரைவான செக்அவுட்களைத் தற்காலிகமாக முடக்கலாம்.
உள்ளூர் டெலிவரி விருப்பத்தை அமைத்தல்
எந்தெந்த இடங்களிலிருந்து நீங்கள் டெலிவரி வழங்க விரும்புகிறீர்களோ அந்த ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளூர் டெலிவரியை நீங்கள் அமைக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட தூர ஆரத்திற்குள் டெலிவரியை வழங்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு டெலிவரியை வழங்கலாம். ஒரு இடத்திற்கு நீங்கள் அதிகபட்சமாக 10 டெலிவரி மண்டலங்களைச் சேர்க்கலாம். ஒவ்வொரு டெலிவரி மண்டலமும் தனித்தனியான நிபந்தனைக்கு உட்பட்ட விலைகளைக் கொண்டிருக்கலாம்.
உள்ளூர் டெலிவரியை அமைத்த பிறகு, நீங்கள் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை நிறைவேற்றத் தொடங்கலாம்.
அஞ்சல் குறியீடுகளுடன் உள்ளூர் டெலிவரியை அமைத்தல்
உங்கள் இடத்திற்கான அஞ்சல் குறியீடுகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட பகுதிகளுக்கு நீங்கள் உள்ளூர் டெலிவரியை அமைக்கலாம். நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் அஞ்சல் குறியீடுகளின் பட்டியலை, அதிகபட்சமாக 3,000 எழுத்துகள் வரை காற்புள்ளி மற்றும் இடைவெளியால் பிரித்து உள்ளிடலாம்.
| எங்கு டெலிவரி செய்ய விரும்புகிறீர்கள் | எதை உள்ளிட வேண்டும் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| குறிப்பிட்ட அஞ்சல் குறியீடுகள் மட்டும் | ஒவ்வொரு அஞ்சல் குறியீட்டையும் காற்புள்ளிகள் மற்றும் இடைவெளிகளால் பிரித்துப் பட்டியலிடுங்கள் | M5V1E3, M5V1K4, M5V3N597392, 97306, 97325 |
| குறிப்பிட்ட எழுத்துகளில் தொடங்கும் அனைத்து அஞ்சல் குறியீடுகளும் | தொடங்கும் எழுத்துகளையும் அதனைத் தொடர்ந்து ஒரு நட்சத்திரக் குறியீடு (*) அல்லது இடைவெளியையும் உள்ளிடவும் | M5V* அல்லது M5V (இடைவெளியுடன்) என்பதில் M5V1A1 முதல் M5V9Z9 வரையிலான எல்லாக் குறியீடுகளும் அடங்கும்9732* அல்லது 9732 (இடைவெளியுடன்) என்பதில் 97320 முதல் 97329 வரையிலான எல்லாக் குறியீடுகளும் அடங்கும் |
| யுனைடெட் கிங்டம் அஞ்சல் குறியீட்டுப் பகுதிகள் UK, Guernsey, Isle of Man மற்றும் Jersey-க்குப் பொருந்தும் | அஞ்சல் குறியீட்டுப் பகுதி அல்லது அவுட்வேர்ட் குறியீட்டை உள்ளிடவும். முழுமையான அஞ்சல் குறியீட்டுப் பகுதி அல்லது முழுமையான அவுட்வேர்ட் குறியீட்டின் அடிப்படையில் பொருத்தம் கண்டறியும் செயல்பாடு நடக்கும். | E என்பது E1 1AA மற்றும் E2 0AG ஆகியவற்றுடன் பொருந்தும், ஆனால் EH1 1TA உடன் பொருந்தாதுEH1 என்பது EH1 1TA உடன் பொருந்தும், ஆனால் EH11 1AA உடன் பொருந்தாதுEH11 என்பது EH11 1AA உடன் பொருந்தும், ஆனால் EH1 1TA உடன் பொருந்தாது |
படிகள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
கூடுதல் டெலிவரி முறைகள் பிரிவில், உள்ளூர் டெலிவரி என்பதைக் கிளிக் செய்யவும்.
எந்த இடத்திற்கு நீங்கள் உள்ளூர் டெலிவரியை இயக்க விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
இடத்தின் நிலை பிரிவில், இந்த இடத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை டெலிவரி செய் என்ற விருப்பத்தை இயக்கவும்.
டெலிவரி மண்டலங்கள் பிரிவில், அஞ்சல் குறியீடுகளைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் டெலிவரி மண்டலத்தை அமைக்கவும்:
- மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் டெலிவரி மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
- அஞ்சல் குறியீடுகள் புலத்தில், நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் அஞ்சல் குறியீடுகளின் பட்டியலைக் காற்புள்ளி மற்றும் இடைவெளியால் பிரித்து உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: குறிப்பிட்ட விலைக்கு மேலான ஆர்டர்களுக்கு மட்டுமே உள்ளூர் டெலிவரியை வழங்க, குறைந்தபட்ச ஆர்டர் விலை பிரிவில், ஒரு குறைந்தபட்ச ஆர்டர் விலையை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: உங்கள் மண்டலத்திற்கு விலை அடிப்படையிலான விதிகளைச் சேர்க்க, நீங்கள் நிபந்தனைக்குட்பட்ட விலை நிர்ணயத்தைச் சேர்க்கலாம்.
- டெலிவரி விலை புலத்தில், டெலிவரி விலையை உள்ளிடவும். இலவச டெலிவரியை வழங்க,
0என உள்ளிடவும். - விருப்பத்திற்குரியது: டெலிவரி தகவல் பிரிவில், உங்கள் உள்ளூர் டெலிவரி சேவைகளின் விவரங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி ஆரத்துடன் உள்ளூர் டெலிவரியை அமைக்கவும்
உங்கள் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் உள்ள பகுதிகளுக்கு நீங்கள் உள்ளூர் டெலிவரியை அமைக்கலாம்.
நீங்கள் ஒரு டெலிவரி ஆரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அண்டை மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களைச் சேர் என்பதை இயக்குவதன் மூலம், அண்டை மாநிலங்கள், மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களை நீங்கள் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் வணிகமானது California இன் தென்கிழக்கு மூலையில், Arizona இல் இருந்து மேற்கு நோக்கி 10 மைல் தொலைவில் அமைந்து, நீங்கள் உங்களின் டெலிவரி ஆரத்தை 20 மைல்களாக அமைத்து, அண்டை மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களைச் சேர் என்பதைச் செயல்படுத்தினால், உங்கள் டெலிவரி ஆரம் Arizona இக்குள் 10 மைல்கள் நீட்டிக்கப்படும். இந்த அமைப்பைச் செயல்படுத்தாவிட்டால், Arizona இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் டெலிவரி கிடைக்காது.
ஆரத்தின் அடிப்படையில் பல டெலிவரி மண்டலங்களின் எடுத்துக்காட்டைக் காட்டும் பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.
| மண்டலம் | டெலிவரி ஆரம் | குறைந்தபட்ச ஆர்டர் விலை | டெலிவரி விலை |
|---|---|---|---|
| மண்டலம் 1 | 5 கிமீ | $20.00 USD | $5.00 USD |
| மண்டலம் 2 | 10 கிமீ | $20.00 USD | $10.00 USD |
| மண்டலம் 3 | 20 கிமீ | $20.00 USD | $20.00 USD |
உங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் 8 கிமீ தொலைவுக்குள் அமைந்திருந்தால், அவர்களிடம் $10.00 கட்டணமாக வசூலிக்கப்படும். மண்டலங்கள் 2 மற்றும் 3 ஆகிய இரண்டும் 8 கிமீக்குள் அமைந்துள்ள வாடிக்கையாளருக்குப் பொருந்தினாலும், மண்டலம் 2-க்கான டெலிவரி விலை, மண்டலம் 3-ஐ விடக் குறைவு, எனவே வாடிக்கையாளருக்கு மண்டலம் 2-க்கான டெலிவரி விலை வசூலிக்கப்படும்.
உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் $20 USD-க்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு உள்ளூர் டெலிவரி கிடைக்காது, ஏனெனில் மண்டலங்கள் 1, 2 மற்றும் 3 ஆகிய அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆர்டர் விலை $20.00 USD ஆக உள்ளது.
படிகள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
கூடுதல் டெலிவரி முறைகள் பிரிவில், உள்ளூர் டெலிவரி என்பதைக் கிளிக் செய்யவும்.
எந்த இடத்திற்கு நீங்கள் உள்ளூர் டெலிவரியை இயக்க விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
இடத்தின் நிலை பிரிவில், இந்த இடத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை டெலிவரி செய் என்ற விருப்பத்தை இயக்கவும்.
டெலிவரி மண்டலங்கள் பிரிவில், டெலிவரி ஆரத்தை அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் டெலிவரி ஆரத்தில் அண்டை மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களைச் சேர்க்க, அண்டை மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆரத்தின் அளவீடு பிரிவில், அளவீட்டு அலகொன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மண்டலத்தை அமைக்கவும்:
- மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் டெலிவரி மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
- இதுவரையான டெலிவரி ஆரம் புலத்தில், மண்டலத்திற்கான அதிகபட்சத் தொலைவை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: குறிப்பிட்ட விலைக்கு மேலான ஆர்டர்களுக்கு மட்டுமே உள்ளூர் டெலிவரியை வழங்க, குறைந்தபட்ச ஆர்டர் விலை பிரிவில், ஒரு குறைந்தபட்ச ஆர்டர் விலையை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: உங்கள் மண்டலத்திற்கு விலை அடிப்படையிலான விதிகளைச் சேர்க்க, நீங்கள் நிபந்தனைக்குட்பட்ட விலை நிர்ணயத்தைச் சேர்க்கலாம்.
- டெலிவரி விலை புலத்தில், டெலிவரி விலையை உள்ளிடவும். இலவச டெலிவரியை வழங்க,
0என உள்ளிடவும். - விருப்பத்திற்குரியது: டெலிவரி தகவல் பிரிவில், உங்கள் உள்ளூர் டெலிவரி சேவைகளின் விவரங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி மண்டலங்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட விலை நிர்ணயத்தைச் சேர்த்தல்
ஆர்டர் மதிப்பைப் பொறுத்து உள்ளூர் டெலிவரிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதைத் தீர்மானிக்க, விலை அடிப்படையிலான விதிகளை நீங்கள் சேர்க்கலாம். உங்களின் உள்ளூர் டெலிவரி விருப்பத்திற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க ஒரு மண்டலத்திற்கு 3 கூடுதல் விதிகள் வரை நீங்கள் அமைக்கலாம்.
நீங்கள் ஒரு புதிய டெலிவரி மண்டலத்தை அமைக்கும்போது நிபந்தனைக்குட்பட்ட விலை நிர்ணயத்தைச் சேர்க்கலாம், அல்லது ஏற்கனவே இருக்கும் மண்டலத்தைத் திருத்துவதன் மூலம் அதைப் பின்னர் சேர்க்கலாம்.
எடுத்துக்காட்டாக, உங்களிடம் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு $5 USD உள்ளது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பின்வரும் விதிகளை அமைக்கலாம்:
- $5 USD முதல் தொடங்கும் ஆர்டர்கள் = $5 USD டெலிவரிக் கட்டணம்
- $10 USD முதல் தொடங்கும் ஆர்டர்கள் = $3 USD டெலிவரிக் கட்டணம்
- $20 USD முதல் தொடங்கும் ஆர்டர்கள் = இலவச டெலிவரி
உங்களின் நிபந்தனைகளின் தொகுப்பில் உள்ள இறுதி விதிக்கு எந்தவொரு அதிகபட்ச ஆர்டர் மதிப்பு வரம்பும் இல்லை.
டெலிவரி மண்டலத்தை அமைக்கும்போது, மண்டல அமைப்புகளில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட விலை நிர்ணயத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு விதிக்கும், ஆர்டர் மதிப்பு வரம்பு மற்றும் டெலிவரி விலையை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் டெலிவரியுடன் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைத் தனிப்பயனாக்குங்கள்
வாடிக்கையாளர்களுக்கான உள்ளூர் டெலிவரித் தகவலைச் சேர்க்க உங்களின் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைத் தனிப்பயனாக்கலாம். டெலிவரி காலவரையறைகள் அல்லது சிறப்பு வழிமுறைகள் போன்ற உள்ளூர் டெலிவரிக்கு எதை எதிர்பார்க்கலாம் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள இது உதவுகிறது.
நீங்கள் உள்ளூர் டெலிவரியை அமைக்கும்போது, டெலிவரி தகவல் புலத்தில் உள்ளடக்கத்தைச் சேர்க்கவும். இந்த உள்ளடக்கம் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களுக்கான ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களில் தானாகவே காட்டப்படும்.
பின்வரும் Liquid மாறியின் மூலமாக நீங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் வார்ப்புருவை நேரடியாகத் தனிப்பயனாக்கலாம்: {% if delivery_instructions != blank %}; Delivery instructions: {{delivery_instructions}} {% endif %}
ஒரு வார்ப்புருவை அதன் இயல்புநிலைக்கு மீட்டமைக்க வேண்டுமானால், இயல்புநிலைக்கு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் அறிவிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் பொருள் புலம் மற்றும் மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் அறிவிப்பின் பெயரைத் தட்டவும்.
மின்னஞ்சல் பொருள் புலம் மற்றும் மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தைத் திருத்தவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
டெலிவரி மண்டலங்களைத் திருத்தவும்
டெலிவரி ஆரம், அஞ்சல் குறியீடுகள், விலை நிர்ணயம் அல்லது பிற அமைப்புகளை மாற்ற, ஏற்கனவே உள்ள டெலிவரி மண்டலங்களை நீங்கள் திருத்தலாம்.
படிகள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், உள்ளூர் டெலிவரி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் திருத்த விரும்பும் டெலிவரி மண்டலம் உள்ள இடத்தைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி மண்டலங்கள் பிரிவில், நீங்கள் மாற்ற விரும்பும் மண்டலத்திற்கு
> திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
மண்டல அமைப்புகளில் உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் டெலிவரியை முடக்கவும்
வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் டெலிவரியை வழங்க விரும்பாதபோது ஒரு இடத்திற்கான உள்ளூர் டெலிவரியை நீங்கள் முடக்கலாம். உள்ளூர் டெலிவரியை முடக்குவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான செக்அவுட் விருப்பத்திலிருந்து அது அகற்றப்படும்.
படிகள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், உள்ளூர் டெலிவரி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் டெலிவரியை எந்த இடத்திற்கு முடக்க வேண்டுமோ, அந்த இடத்தைக் கிளிக் செய்யவும்.
இடத்தின் நிலை பிரிவில், இந்த இடத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஆர்டர்களை டெலிவரி செய் விருப்பத்தை முடக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.