ஆன்லைன் ஆர்டர்களுக்கான ஸ்டோரில் பிக்அப் அமைத்தல்

உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் ஒன்றில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்லைன் ஆர்டர்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில், உங்கள் செக்அவுட்டில் ஸ்டோரில் பிக்அப் விருப்பத்தை அமைக்கலாம்.

உங்கள் பிக்அப் இருப்பிடங்களுக்கான ஸ்டோர் இடமாற்றங்களையும் நீங்கள் அமைக்கலாம். பிக்அப் இருப்பிடத்தில் சரக்கு இருப்பு கிடைக்காதபோது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்குச் சரக்கு இருப்பைத் தானாகவே இடமாற்றம் செய்ய ஸ்டோர் இடமாற்றங்கள் உங்களை அனுமதிக்கின்றன.

உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், இயல்புநிலையான ஸ்டோரில் பிக்அப் அம்சத்திற்குப் பதிலாகத் தனிப்பயன் செயலியைப் பயன்படுத்தலாம்.

ஸ்டோரில் பிக்அப்பை அமைப்பதற்கான தேவைகள்

உங்கள் Shopify நிர்வாகியில் ஸ்டோரில் பிக்அப்பை அமைக்க, பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றும் ஒரு இடமாவது உங்களிடம் இருக்க வேண்டும்.
  • உங்கள் ஸ்டோரில் செக்அவுட்டின் சமீபத்திய பதிப்பு செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்:
    • உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், நீங்கள் Shopify Extensions-க்கு இடமாற வேண்டும்.
    • உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இல்லை என்றால், உங்கள் ஸ்டோரில் செக்அவுட்டின் சமீபத்திய பதிப்பு இருக்க வேண்டும். பெரும்பாலான ஸ்டோர்களில் ஏற்கனவே செக்அவுட்டின் சமீபத்திய பதிப்பு உள்ளது.

ஸ்டோரில் பிக்அப்பை அமைப்பதற்கான பரிசீலனைகள்

ஸ்டோரில் பிக்அப்பை அமைப்பதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஒரே ஆர்டரில் வாடிக்கையாளர் சில உருப்படிகளை ஷிப்பிங் செய்யவும், சில உருப்படிகளைப் பிக்அப் செய்யவும் தேர்ந்தெடுக்கலாம். பிக்அப் உருப்படிகளுக்கு ஸ்டோர் இடமாற்றம் தேவைப்பட்டால், செக்அவுட்டில் இடமாற்றத்திற்கான நேரத்தையும் சேர்த்துப் பிக்அப்பிற்கான உத்தேச நேரம் காண்பிக்கப்படும்.
  • பிக்அப் கிடைக்கும் தன்மையை ஆதரிக்கும் தீமைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர் தயாரிப்பைத் தமது கார்ட்டில் சேர்ப்பதற்கு முன்பே, அது பிக்அப்பிற்குக் கிடைக்குமா என்பதைப் பார்க்க முடியும். ஸ்டோர் இடமாற்றத்தின் மூலம் கிடைக்கும் தயாரிப்புகள், மாற்றியமைக்கப்பட்ட உத்தேசப் பிக்அப் நேரத்துடன் பிக்அப்பிற்குக் கிடைக்கும் தயாரிப்புகளாகக் காண்பிக்கப்படும்.

ஸ்டோரில் பிக்அப்பை அமைத்தல்

உங்கள் இடங்களுக்கு ஸ்டோரில் பிக்அப் சேவையை அமைக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களின் ஆர்டர்களைப் பிக்அப் செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திற்கும் ஸ்டோரில் பிக்அப்பை அமைக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், ஸ்டோரில் பிக்அப் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் எந்த இடத்திற்கு ஸ்டோரில் பிக்அப்பைச் செயல்படுத்த விரும்புகிறீர்களோ, அந்த இடத்தைக் கிளிக் செய்யவும்.

  4. இடத்தின் நிலை பிரிவில், இந்த இடத்திலேயே ஆர்டர்களைப் பிக்அப் செய்ய வாடிக்கையாளர்களை அனுமதி விருப்பத்தைச் செயல்படுத்தவும்.

  5. எதிர்பார்க்கப்படும் பிக்அப் தேதி பிரிவில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஸ்டோரில் பிக்அப்பிற்கான செயலாக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்தத் தகவல் உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படும்.

  6. விருப்பத்தேர்வு: ஸ்டோர் இடமாற்றத்தை அமைக்க, பின்வரும் பணிகளை முடிக்கவும்:

    1. ஸ்டோர் இடமாற்றங்கள் பிரிவில், ஸ்டோரில் பிக்அப் செய்யும் இடத்தில் சரக்கு இருப்பு இல்லாதபோது எந்த இடங்களிலிருந்து சரக்கு இருப்பை இடமாற்ற விரும்புகிறீர்களோ, அந்த இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. ஸ்டோர் இடமாற்றம் தேவைப்படும் ஆர்டர்களுக்கு வேறு செயலாக்க நேரத்தை அமைக்க, ஸ்டோர் இடமாற்றம் தேவைப்படும்போது செக்அவுட்டில் வேறு செயலாக்க நேரத்தை அமை என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து செயலாக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. பிக்அப்பிற்குத் தயார் என்ற அறிவிப்பு பிரிவில், உங்கள் வாடிக்கையாளர்களுக்கான பிக்அப் வழிமுறைகளை உள்ளிடவும். இந்தப்புலம் பிக்அப்பிற்குத் தயார் அறிவிப்பு வார்ப்புருவில் உள்ள email_body மாறியில் நீங்கள் கொண்டுள்ள எந்தவொரு தனிப்பயனாக்கங்களையும் மாற்றியமைக்கும்.

  8. விருப்பத்தேர்வு: செக்அவுட் மாதிரிக்காட்சி பிரிவில், செக்அவுட்டில் உங்கள் ஸ்டோரில் பிக்அப் விருப்பம் எப்படிக் காண்பிக்கப்படும் என்பதை முன்னோட்டமிடவும்.

  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டோர் இடமாற்றங்களை அமைத்தல்

இயல்புநிலையாக, முழு ஆர்டருக்கான இருப்பும் பிக்அப் இருப்பிடத்தில் இருந்தால் மட்டுமே ஸ்டோரில் பிக்அப் கிடைக்கும். உங்களிடம் பல இருப்பிடங்கள் இருந்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்குச் சரக்கு இருப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கும் ஸ்டோர் இடமாற்றங்களை நீங்கள் அமைக்கலாம். ஸ்டோர் இடமாற்றம் தேவைப்படும் ஆர்டர்களுக்கு வெவ்வேறு செயலாக்க நேரங்களையும் அமைக்கலாம். எந்தவொரு ஒற்றை இடத்தாலும் அனைத்துச் சரக்கு இருப்புகளையும் இடமாற்றம் செய்ய முடியாவிட்டால், ஆர்டருக்காகப் பல இடமாற்றங்கள் உருவாக்கப்படும். சரக்கு இருப்பு கிடைக்கும் இடங்களிலேயே பிக்அப் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், ஸ்டோரில் பிக்அப் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் எந்த இடத்திற்கு ஸ்டோர் இடமாற்றங்களை அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த இடத்தைக் கிளிக் செய்யவும்.

  4. ஸ்டோர் இடமாற்றங்கள் பிரிவில், பிக்அப் இருப்பிடத்தில் சரக்கு இருப்பு கிடைக்காதபோது எந்த இடங்களிலிருந்து சரக்கு இருப்பை இடமாற்ற விரும்புகிறீர்களோ, அந்த இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்தேர்வு: ஸ்டோர் இடமாற்றம் தேவைப்படும் ஆர்டர்களுக்கு வேறு செயலாக்க நேரத்தை அமைக்க, ஸ்டோர் இடமாற்றம் தேவைப்படும்போது செக்அவுட்டில் வேறு செயலாக்க நேரத்தை அமை என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து செயலாக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இடமாற்ற விலக்குகளை அமைத்தல்

ஸ்டோர் இடமாற்றங்களிலிருந்து குறிப்பிட்ட தயாரிப்புச் சேகரிப்புகளை நீங்கள் விலக்கலாம். உதாரணமாக, உங்களின் சில தயாரிப்புகள் பிக்அப் இருப்பிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடியாத அளவு பெரியதாக இருந்தால், இந்தத் தயாரிப்புகளை நீங்கள் ஸ்டோர் இடமாற்றங்களிலிருந்து விலக்கலாம். நீங்கள் தயாரிப்புச் சேகரிப்புகளை விலக்கலாமே தவிர, குறிப்பிட்ட தயாரிப்புகளை விலக்க முடியாது.

தொடங்குவதற்கு முன், பிக்அப் இருப்பிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடியாத தயாரிப்புகளுக்காக ஒரு சேகரிப்பை உருவாக்கவும். உங்கள் சேகரிப்பு வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படுவதைத் தவிர்க்க, எந்த விற்பனைச் சேனல்களிலும் அந்தச் சேகரிப்பு சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், ஸ்டோரில் பிக்அப் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இடமாற்ற விலக்குகள் பிரிவில், சேகரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஸ்டோர் இடமாற்றங்களிலிருந்து நீங்கள் விலக்க விரும்பும் சேகரிப்புகள் எதையேனும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிக்அப் சேவையைச் செயல்படுத்துதல்

ஸ்டோரில் பிக்அப் வசதியை நிர்வகிக்க நீங்கள் ஒரு தனிப்பயன் செயலியைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் Shopify நிர்வாகியில் பிக்அப் சேவையைச் செயல்படுத்தி, தற்போதைய ஸ்டோரில் பிக்அப் அமைப்புகளை மாற்றலாம். ஸ்டோரில் பிக்அப் செய்வதற்கான தனிப்பயன் செயலிகள் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. கூடுதல் விநியோக முறைகள் பிரிவில், ஸ்டோரில் பிக்அப் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பிக்அப் சேவை பிரிவில், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் ஸ்டோரில் பிக்அப் அம்சத்திற்குப் பயன்படுத்த விரும்பும் தனிப்பயன் செயலியைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பிக்அப் சேவையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உருப்படிகளைக் கைமுறையாக இடமாற்று

ஸ்டோரில் பிக்அப் ஆர்டரை உங்களால் நிறைவேற்ற முடியாமல், வேறு எங்கிருந்தாவது உருப்படிகளை இடமாற்ற வேண்டியிருந்தால் அல்லது ஸ்டோர் இடமாற்றத்திற்குத் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சாத்தியமில்லை என்றால், ஸ்டோரில் பிக்அப் ஆர்டரின் இடத்தை நீங்கள் கைமுறையாக மாற்றலாம். செக்அவுட்டின் போது வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த பிக்அப் இருப்பிடத்தை உங்களால் மாற்ற முடியாது.

படிகள்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஸ்டோரில் பிக்அப் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றப்படாதது பிரிவில், Horizontal menu பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  4. இடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. புதிய இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. இடத்தை மாற்று பிரிவில், ஒரு புதிய இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. இடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டோரில் பிக்அப் ஆர்டரை நிறைவேற்றுதல்

உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து ஸ்டோரில் பிக்அப் ஆர்டரைப் பிக்அப் செய்யத் தயார் எனக் குறிப்பதன் மூலமும், வாடிக்கையாளர் தனது ஆர்டரைப் பெற்ற பிறகு பிக்அப் செய்யப்பட்டது எனக் குறிப்பதன் மூலமும் அதை நிறைவேற்றலாம். ஒவ்வொரு நிலையிலும், உங்கள் வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த அறிவிப்பு மின்னஞ்சல்களை அனுப்பலாம். உங்கள் ஸ்டோரில் பிக்அப் ஆர்டருக்குத் தயாரிப்பு இடமாற்றம் தேவைப்பட்டால், உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்கு அடுத்து இடமாற்றம் தேவை பேட்ஜ் காண்பிக்கப்படும்.

ஒரு ஆர்டரைப் பிக்அப் செய்யத் தயாராக உள்ளது எனக் குறிக்கவும்

நீங்கள் ஒரு ஆர்டரைப் பிக்அப் செய்யத் தயார் எனக் குறிக்கும்போது, உங்கள் வாடிக்கையாளருக்குப் பிக்அப் செய்யத் தயார் அறிவிப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும். இந்த மின்னஞ்சலை ஆர்டர் காலவரிசை மூலம் நீங்கள் பார்க்கலாம் அல்லது மீண்டும் அனுப்பலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஸ்டோரில் பிக்அப் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: பிக்அப் இருப்பிடத்திற்கு உருப்படிகளை நகர்த்த இடமாற்றம் தேவைப்பட்டால், தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்போது பிக்அப் இருப்பிடத்திற்கு இடமாற்று என்பதைக் கிளிக் செய்யவும். உருப்படிகளைக் கைமுறையாக இடமாற்றுவதன் மூலம் மட்டுமே இந்தச் செயலை உங்களால் செயல்தவிர்க்க முடியும்.

  4. பிக்அப் செய்யத் தயார் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பிக்அப் செய்யத் தயாராக உள்ளது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு ஆர்டரைப் பிக்அப் செய்யப்பட்டது எனக் குறிக்கவும்

உங்கள் வாடிக்கையாளர் அவர்களின் ஆர்டரைப் பெற்ற பிறகு, ஆர்டரைப் பிக்அப் செய்யப்பட்டது எனக் குறிக்கலாம் மற்றும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்பலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பிக்அப் செய்யப்பட்டது எனக் குறிக்க வேண்டிய ஸ்டோரில் பிக்அப் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. பிக்அப் செய்யப்பட்டது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளரால் பிக்அப் செய்யப்பட்டது உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. ஆர்டரை நிறைவேற்றப்பட்டது எனக் குறிக்க, பிக்அப் செய்யப்பட்டது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

செக்அவுட் அனுபவம்

ஸ்டோரில் பிக்அப் வசதியைச் செயல்படுத்திய பிறகு, உங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் செக்அவுட்டின் டெலிவரி பிரிவில் அனுப்பு மற்றும் நேரில் பெறுதல் ஆகிய விருப்பங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் நேரில் பெறுதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, தங்களின் ஆர்டரைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்டிலுள்ள பிக்அப் இருப்பிடங்களை மட்டுமே பார்க்க முடியும். அவர்களின் நாட்டில் பிக்அப் இருப்பிடங்கள் ஏதுமில்லை எனில், செக்அவுட்டின் போது பிக்அப் இருப்பிடங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் காண்பிக்கப்படும். அவர்கள் எனது இருப்பிடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்து நாட்டை மாற்றிக்கொள்ளலாம்.

ஸ்டோரில் பிக்அப் அமைப்புகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயலாக்க நேரம் செக்அவுட்டில் காண்பிக்கப்படும்.

பிக்அப் கிடைக்கும் தன்மையை உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காண்பித்தல்

ஒரு தயாரிப்பு ஸ்டோரில் பிக்அப் செய்ற்குக் கிடைக்குமா என்பதை வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கச் சில தீம்கள் உங்களை அனுமதிக்கின்றன. ஒவ்வொரு தயாரிப்புப் பக்கத்திலும், அந்தத் தயாரிப்பு கிடைக்குமா என்பதையும் பிக்அப் செய்வதற்கான மதிப்பிடப்பட்ட நேரத்தையும் பிக்அப் கிடைக்கும் தன்மைப் பிரிவு காண்பிக்கும்.

ஸ்டோரில் பிக்அப் வசதியைச் செயல்படுத்திய பிறகு, உங்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிக்அப் இருப்பிடங்களில் ஒரு தயாரிப்பைப் பிக்அப் செய்ய முடியுமா என்பதைத் தயாரிப்புப் பக்கம் காண்பிக்கும். குறைந்தது ஒரு பிக்அப் இருப்பிடத்திலாவது இருப்பில் உள்ள மற்றும் தயாரிப்பு மாறுபாட்டின் விவரங்களில் உள்ள ஷிப்பிங் பிரிவில் பருப்பொருள் தயாரிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே இந்தத் தகவல் காண்பிக்கப்படும்.

நீங்கள் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் ஸ்டோரில் பிக்அப் வசதியைச் செயல்படுத்தியிருந்தால், அந்த இடத்தின் இருப்பிடம் மற்றும் பிக்அப் கிடைக்கும் தன்மை காண்பிக்கப்படும். பிக்அப் இருப்பிடம் குறித்து மேலும் அறிய, வாடிக்கையாளர்கள் ஸ்டோர் தகவலைப் பார் என்பதைக் கிளிக் செய்யலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு நீங்கள் ஸ்டோரில் பிக்அப் வசதியைச் செயல்படுத்தியிருந்தால், உங்கள் ஸ்டோர்களில் ஒன்றின் இருப்பிடத்தையும் பிக்அப் கிடைக்கும் தன்மையையும் பிக்அப் கிடைக்கும் தன்மைப் பிரிவு காண்பிக்கும். பிக்அப் வசதி செயல்படுத்தப்பட்டுள்ள உங்களின் எல்லா இடங்களிலும் தயாரிப்பு கிடைக்கிறதா என்பதைப் பார்க்க, வாடிக்கையாளர்கள் பிற ஸ்டோர்களில் கிடைக்கும் தன்மையைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யலாம்.

இந்த அம்சம் தற்போது Dawn, Horizon குடும்பத்தைச் சேர்ந்த தீம்கள் மற்றும் Shopify Theme Store இல் உள்ள பல கட்டண தீம்களில் கிடைக்கிறது.

ஸ்டோரில் பிக்அப் வசதியை முடக்கு

உங்கள் இடத்தில் இனி ஸ்டோரில் பிக்அப் வசதியை வழங்க விரும்பவில்லை எனில், அதை முடக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஸ்டோரில் பிக்அப் பிரிவில், › ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ஸ்டோரில் பிக்அப் வசதியை முடக்க விரும்பும் இடத்தைக் கிளிக் செய்யவும்.

  4. ஸ்டோரில் பிக்அப் வசதியை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உரையாடல் பெட்டியில், ஸ்டோரில் பிக்அப் வசதியை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டோரில் பிக்அப் சிக்கல் தீர்த்தல்

ஸ்டோரில் பிக்அப் வசதியில் சிக்கல்களை எதிர்கொண்டால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

வார்ப்புருவை விட வெவ்வேறு உள்ளடக்கத்தைக் காண்பிக்கும் பிக்அப் செய்யத் தயார் அறிவிப்பிற்கான சிக்கல் தீர்த்தல்

வாடிக்கையாளர்கள் பெறும் பிக்அப் செய்யத் தயார் அறிவிப்பானது அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதில் உள்ள உங்களின் வார்ப்புருவிலிருந்து வேறுபட்டதாக இருந்தால், இடம் சார்ந்த பிக்அப் வழிமுறைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இடம் சார்ந்த பிக்அப் வழிமுறைகள் பொதுவான அறிவிப்பு வார்ப்புருவை மேலெழுதும். இருப்பிட அமைப்புகளில் தனிப்பயன் பிக்அப் வழிமுறைகளைச் சேர்த்திருந்தால், உங்கள் அறிவிப்பு வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கத்திற்குப் பதிலாக அறிவிப்பில் இந்த வழிமுறைகள் பயன்படுத்தப்படும்.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, பின்வரும் பணிகளில் ஒன்றை முடிக்கவும்:

  • இருப்பிட அமைப்புகளில் உள்ள பிக்அப் வழிமுறைகளைத் திருத்தவும் அல்லது அகற்றவும். உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி > ஸ்டோரில் பிக்அப் பகுதிக்குச் சென்று, இடத்தைக் கிளிக் செய்து பிக்அப் செய்யத் தயார் அறிவிப்பு பிரிவைத் திருத்தவும்.
  • உங்களின் அறிவிப்பு வார்ப்புருவில் இருந்து {{ pickup_instructions }} மாறியை அகற்றவும். உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் > பிக்அப் செய்யத் தயார் பகுதிக்குச் சென்று, வார்ப்புருவிலிருந்து {{ pickup_instructions }} மாறியை அகற்றவும்.
பிழைகாணல்: உங்கள் ஆர்டரை நேரில் பெற்றுக்கொள்ள முடியாது

வாடிக்கையாளர்கள் செக்அவுட்டின் போது உங்கள் ஆர்டரை நேரில் பெற்றுக்கொள்ள முடியாது. ஷிப்பிங் முகவரியை உள்ளிடவும் என்ற பிழையைப் பெற்றால், உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்கு ஷிப்பிங் மண்டலம் விடுபட்டதே அதற்குக் காரணமாகும்.

வாடிக்கையாளர்கள் ஆர்டர்களைப் பெற்றுக்கொள்ளும் நேரடி இடத்துடன் எந்த ஷிப்பிங் மண்டலமும் தொடர்புபடுத்தப்படாதபோது இந்தப் பிழை தோன்றும். உங்கள் ஷிப்பிங் அமைப்புகளில், உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் இங்கிருந்து ஷிப்பிங் செய்யப்படவில்லை என்பது காட்டப்படலாம்.

இந்தப் பிழையைத் தீர்க்க:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
  2. உங்கள் பிக்அப் இருப்பிடத்திற்கான ஷிப்பிங் மண்டலத்தில், கட்டணத்தைச் சேர் > புதிய கட்டணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உண்மையான ஷிப்பிங் கட்டணங்கள் எதையும் சேர்க்காமல் முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

மண்டலத்தில் நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க வேண்டியதில்லை. பிக்அப் இருப்பிடம் சரியாகச் செயல்பட, இந்த மண்டலம் இருக்க வேண்டும்.