வாடிக்கையாளர் அறிவிப்புகளை அமைத்தல்

வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பவை வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள், ஷிப்பிங் அறிவிப்புகள், கணக்குச் செயல்பாடு ஆகியவை குறித்து அவர்களுக்கு அனுப்பப்படும் தானியங்கு மின்னஞ்சல்கள், SMS மெசேஜ்கள் ஆகும். பெரும்பாலான வாடிக்கையாளர் அறிவிப்புகள் தானாகவே அனுப்பப்படும், அவற்றை முடக்க முடியாது.

உங்கள் வாடிக்கையாளர்களோ பணியாளர்களோ மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறவில்லை எனில், அவர்கள் தங்களின் ஸ்பேம் அல்லது குப்பை ஃபோல்டரைச் சரிபார்க்க வேண்டும். சிக்கல் தொடர்ந்தால், அவர்கள் வேறொரு மின்னஞ்சல் வழங்குநரைப் பயன்படுத்தும் மாற்று மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.

அறிவிப்பு நிகழ்வுகள்

உங்கள் ஸ்டோரில் உள்ள குறிப்பிட்ட நிகழ்வுகளால் அறிவிப்புகள் தூண்டப்படுகின்றன. பின்வரும் எடுத்துக்காட்டுகளைச் சரிபார்க்கவும்:

  • வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை வழங்குகிறார், அவருக்கு ஆர்டர் உறுதிப்படுத்தல் அறிவிப்பு அனுப்பப்படும்.
  • நீங்கள் ஒரு ஆர்டரை நிறைவேற்றுகிறீர்கள், வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் அறிவிப்பு அனுப்பப்படும்.
  • நீங்கள் ஒரு ஆர்டருக்கான பணத்தைத் திரும்ப வழங்கும்போது, ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல் அறிவிப்பு அனுப்பப்படும்.

அறிவிப்புகளை முடக்குதல்

உங்கள் Shopify நிர்வாகியில் குறிப்பிட்ட செயல்களைச் செய்யும்போது பின்வரும் அறிவிப்புகளை நீங்கள் முடக்கலாம்:

  • ஆர்டர் ரத்துசெய்யப்பட்டது: ஆர்டர் ரத்துசெய்யப்படும்போது அனுப்பப்படும்
  • ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல்: ஆர்டருக்கான பணம் திரும்ப வழங்கப்படும்போது அனுப்பப்படும்
  • ஷிப்பிங் உறுதிப்படுத்தல்: ஆர்டர் நிறைவேற்றப்படும்போது அனுப்பப்படும்
  • ஷிப்பிங் அறிவிப்பு: கண்காணிப்புத் தகவல் புதுப்பிக்கப்படும்போது அனுப்பப்படும்
  • டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது: ஷிப்மென்ட் டெலிவரிக்கு அனுப்பப்படும்போது அனுப்பப்படும்
  • டெலிவரி செய்யப்பட்டது: ஷிப்மென்ட் டெலிவரி செய்யப்படும்போது அனுப்பப்படும்

ஆர்டர் ரத்துசெய்யப்பட்டதற்கான அறிவிப்புகளை முடக்குதல்

நீங்கள் ஒரு ஆர்டரை ரத்துசெய்யும்போது, அதற்கான அறிவிப்பை முடக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்கலாம். ஆர்டர்களை ரத்துசெய்தல் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் சில செயல்கள் > ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆர்டரை ரத்துசெய்வதற்கான விவரங்களை உள்ளிடவும்.

  5. வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வுநீக்கவும்.

  6. ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல் அறிவிப்புகளை முடக்குதல்

நீங்கள் ஒரு ஆர்டருக்கான பணத்தைத் திரும்ப வழங்கும்போது, அதற்கான அறிவிப்பை முடக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்கலாம். ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பணத்தைத் திரும்ப வழங்க விரும்பும் ஆர்டருக்கான ஆர்டர் எண்ணைக் கிளிக் செய்யவும்.

  3. பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பதைக் கிளிக் செய்து, பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான விவரங்களை உள்ளிடவும்.

  4. வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வுநீக்கவும்.

  5. பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷிப்பிங் உறுதிப்படுத்தல் அறிவிப்புகளை முடக்கு

ஆர்டரை நிறைவேற்றும்போது, வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தடுக்க ஷிப்பிங் உறுதிப்படுத்தல் அறிவிப்பை நீங்கள் முடக்கலாம். ஆர்டர் நிறைவேற்றம் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டருக்கான ஆர்டர் எண்ணைக் கிளிக் செய்யவும்.

  3. தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆர்டர் நிறைவேற்றத்திற்கான விவரங்களை உள்ளிடவும்.

  5. உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்மென்ட் விவரங்களை இப்போதே அனுப்பவும் என்பதற்கான தேர்வை நீக்கவும்.

  6. ஆர்டர் நிறைவேற்றத்தை முடிக்கவும்.

ஷிப்பிங் புதுப்பிப்பு அறிவிப்புகளை முடக்கு

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கப்பட்ட ஒரு ஆர்டருக்கான கண்காணிப்புத் தகவலைச் சேர்க்கும்போது அல்லது புதுப்பிக்கும்போது, வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்க ஷிப்பிங் புதுப்பிப்பு அறிவிப்பை நீங்கள் முடக்கலாம். கண்காணிப்புத் தகவலைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஆர்டருக்கான ஆர்டர் எண்ணைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றங்கள் பிரிவில், … என்பதைக் கிளிக் செய்து, பின் கண்காணிப்பைக் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. புதிய கண்காணிப்பு விவரங்களை உள்ளிடவும்.

  5. வாடிக்கையாளருக்கு அறிவிப்பு மின்னஞ்சலை அனுப்பு என்பதற்கான தேர்வை நீக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது அல்லது டெலிவரி செய்யப்பட்டது எனும் அறிவிப்புகளை முடக்கு

ஷிப்பிங் நிலை 'டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது' அல்லது 'டெலிவரி செய்யப்பட்டது' என மாறும்போது, வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தடுக்க நீங்கள் அறிவிப்புகளை முடக்கலாம். கேரியர் அல்லது நிறைவேற்றச் செயலியிடமிருந்து தொடர்புடைய நிலையுடனான கண்காணிப்பு நிகழ்வு பெறப்படும்போது இந்த அறிவிப்புகள் அனுப்பப்படும். கண்காணிப்பு நிகழ்வின் ஆதாரங்கள், துல்லியம் மற்றும் நேரம் ஆகியவை கேரியரைப் பொறுத்து மாறுபடும்.

உள்ளூர் டெலிவரி ஆர்டர்களுக்கு இந்த அறிவிப்புகள் கிடைக்காது. உள்ளூர் டெலிவரிக்குத் தனி டெலிவரி உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் பயன்படுத்தப்படுகிறது, ஆர்டரை 'டெலிவரி செய்யப்பட்டது' எனக் குறிக்கும்போது அது அனுப்பப்படும். உள்ளூர் டெலிவரி ஆர்டர்களுக்கான வாடிக்கையாளர் அறிவிப்புகள் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஷிப்பிங் புதுப்பிக்கப்பட்டது பிரிவில், டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது அல்லது டெலிவரி செய்யப்பட்டது என்பதை முடக்கவும்.

ஆதரிக்கப்படும் மின்னஞ்சல் கிளையண்ட்கள்

வாடிக்கையாளர் மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பின்வரும் முக்கிய மின்னஞ்சல் கிளையண்ட்கள் ஆதரிக்கின்றன:

  • Apple Mail 8, 9
  • Outlook 2007 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
  • Thunderbird
  • iPad மற்றும் iPhone-க்கான iOS Mail
  • Android-இல் Gmail
  • AOL Mail
  • Gmail (இணையச் செயலி)
  • Office 365
  • Yahoo! Mail
  • Outlook.com