மின்னஞ்சல் அறிவிப்பு வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அறிவிப்புகள் பிரிவில் அணுகக்கூடிய பல அறிவிப்பு வார்ப்புருக்களை உங்கள் ஸ்டோர் கொண்டுள்ளது.
அனைத்து வார்ப்புருக்களுக்கும் ஒரே நேரத்தில் லோகோவைச் சேர்ப்பதன் மூலமாகவோ வண்ணத் திட்டத்தை மாற்றுவதன் மூலமாகவோ உங்கள் மின்னஞ்சல் அறிவிப்புகளைத் தனிப்பயனாக்கலாம். மேலும், ஒவ்வொரு மின்னஞ்சல் அறிவிப்பின் உள்ளடக்கத்தையும் நீங்கள் தனித்தனியாகத் திருத்தலாம்.
உங்கள் மின்னஞ்சல் அறிவிப்புகளின் உடல் பகுதி மற்றும் பொருள் தலைப்பைத் திருத்துவதற்கு முன், உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்த வேண்டும்.
SMS வார்ப்புருக்கள் பற்றிய தகவலுக்கு, SMS அறிவிப்புகள் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களில் லோகோவைச் சேர்த்தல்
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களுக்கான நிறங்களைத் தேர்ந்தெடுத்தல்
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் மொழியை மாற்றுதல்
- மின்னஞ்சல் அடிப்பகுதியில் உள்ள Shopify பிராண்டிங்கை அகற்றுதல்
- குறிப்பிட்ட மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குதல்
- அறிவிப்புகளில் தனிப்பயன் செய்தியைச் சேர்த்தல்
- உள்ளமைக்கப்பட்ட CSS-ஐப் பயன்படுத்தி மின்னஞ்சல் வார்ப்புருக்களை வடிவமைத்தல்
- மின்னஞ்சல் வார்ப்புருவின் முந்தைய அல்லது இயல்புநிலைப் பதிப்பிற்குத் திரும்புதல்
- எளிய உரை மின்னஞ்சல்களின் தானியங்கு மாற்றம்
உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களில் லோகோவைச் சேர்த்தல்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கோப்பைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, லோகோவைக் கண்டறிந்து பதிவேற்றுவதன் மூலம் அதைச் சேர்க்கவும்.
மொபைல்
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.
கோப்பைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, லோகோவைக் கண்டறிந்து பதிவேற்றுவதன் மூலம் அதைச் சேர்க்கவும்.
உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களுக்கான நிறங்களைத் தேர்ந்தெடுத்தல்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறக் குறியீட்டை உள்ளிடுவதன் மூலமாகவோ நிறத் தேர்வியைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ உங்கள் மின்னஞ்சல்களின் தனிப்படுத்தல் நிறத்தை மாற்றலாம்.
மொபைல்
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.
நிறக் குறியீட்டை உள்ளிடுவதன் மூலமாகவோ நிறத் தேர்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ உங்கள் மின்னஞ்சல்களின் தனிப்படுத்தல் நிறத்தை மாற்றலாம்.
உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் மொழியை மாற்றுதல்
உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்கள் காட்டப்படும் இயல்புநிலை மொழியானது, உங்கள் தீமின் மொழி மற்றும் வார்ப்புருக்களில் நீங்கள் செய்துள்ள திருத்தங்களைப் பொறுத்தது:
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களில் நீங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை எனில், உங்கள் தீமின் மொழியை மாற்றும்போது மின்னஞ்சல் வார்ப்புருவின் மொழியும் மாறும்.
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் பிரதானப் பகுதி (body) மற்றும் தலைப்பு ஆகிய இரண்டிலும் மாற்றங்களைச் செய்திருந்தால், தீமின் மொழியை மாற்றுவது மின்னஞ்சல் வார்ப்புருக்களின் மொழியை மாற்றாது.
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் தலைப்பில் மட்டும் மாற்றங்களைச் செய்திருந்தால், தீமின் மொழியை மாற்றுவது மின்னஞ்சல் வார்ப்புருக்களின் மொழியை மாற்றாது.
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் பிரதானப் பகுதியில் மட்டும் மாற்றங்களைச் செய்திருந்தால், உங்கள் தீமின் மொழியை மாற்றும்போது தலைப்பு புதிய மொழிக்கு மாறும், ஆனால் மின்னஞ்சல் வார்ப்புருக்களின் பிரதானப் பகுதியின் மொழி மாறாது.
மின்னஞ்சல் அடிப்பகுதியில் Shopify பிராண்டிங்கை அகற்று
இயல்புநிலை அடிப்பகுதி வார்ப்புருவில் Shopify பிராண்டிங் அடங்கியிருக்கும், அது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அடிப்பகுதியில் Shopify மூலம் இயக்கப்படுகிறது எனக் காட்டப்படும். மின்னஞ்சல் அடிப்பகுதியில் உள்ள Shopify பிராண்டிங்கை நீங்கள் அகற்றலாம். உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், உங்கள் வாடிக்கையாளர் அறிவிப்பு மின்னஞ்சல் அடிப்பகுதிகளில் Shopify பிராண்டிங் இருக்காது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிராண்டிங் பிரிவில், "Shopify மூலம் இயக்கப்படுகிறது" என்ற பிராண்டிங்கைக் காட்டு என்பதை முடக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
பிராண்டிங் பிரிவில், "Shopify மூலம் இயக்கப்படுகிறது" என்ற பிராண்டிங்கைக் காட்டு என்பதை முடக்கவும்.
சேமி என்பதைத் தட்டவும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கு
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் அறிவிப்பு வகையைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் அறிவிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.
குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் செய்தியின் மின்னஞ்சல் பொருள் (Subject) மற்றும் மின்னஞ்சலின் பிரதானப் பகுதி (HTML) ஆகியவற்றைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் அறிவிப்பு வகையைத் தட்டவும்.
</> என்பதைத் தட்டவும்.
மின்னஞ்சல் செய்தியின் மின்னஞ்சல் பொருள் (Subject) மற்றும் மின்னஞ்சலின் பிரதானப் பகுதி (HTML) ஆகியவற்றைத் திருத்தவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் மாற்றங்களைச் சோதிக்கவும்
அறிவிப்பு வார்ப்புருவைத் தனிப்பயனாக்கும்போது, Shopify நிர்வாகியில் மாற்றங்களை நீங்கள் முன்னோட்டமிடலாம் அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது எப்படிக் காட்டப்படும் என்பதை மதிப்பாய்வு செய்ய அதை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.
படிகள்:
- உங்கள் சேமிக்கப்படாத மாற்றங்களை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அறிவிப்பை ஒரு சோதனை மின்னஞ்சலாக அனுப்ப, சோதனை மின்னஞ்சலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். Shopify நிர்வாகியில் உள்நுழைய நீங்கள் பயன்படுத்திய கணக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
- மாற்றங்கள் உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தால், முன்னோட்டச் சாளரத்தை மூடிவிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலில் வரிப் பதிவு எண்ணைச் சேர்க்கவும்
சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், வாடிக்கையாளர் விலைப்பட்டியல்கள் அல்லது பிற அறிவிப்புகளில் உங்கள் வரிப் பதிவு எண்ணைச் சேர்க்க வேண்டியிருக்கலாம். ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) விதிக்கும் வணிகங்கள், அவற்றின் பதிவு எண்ணைச் சேர்க்க வேண்டியிருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில், உங்கள் மதிப்புக்கூட்டு வரி (VAT) அடையாள எண்ணைச் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
அந்த எண்ணைச் சேர்க்க வேண்டுமா என்பதைக் கண்டறிய, உங்கள் வரி கணக்காளர் அல்லது அரசு அதிகாரியிடம் ஆலோசிக்கவும்.
மின்னஞ்சல் அறிவிப்பில் உங்கள் எண்ணைக் காட்ட, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
- நீங்கள் திருத்த விரும்பும் குறிப்பிட்ட மின்னஞ்சல் வார்ப்புருவை திறக்கவும்.
- மின்னஞ்சலின் பிரதானப் பகுதி (HTML) இடத்தில், தகுந்த இடத்தில் உங்களின் பதிவு அல்லது அடையாள எண்ணை உள்ளிடவும். வெளியீடு சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த HTML ஐச் சேர்க்கவும்.
- விருப்பத்தேர்வு: உங்கள் தனிப்பயனாக்கங்கள் சரியாகக் காட்டப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க, உங்கள் மாற்றங்களை முன்னோட்டமிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் எடுத்துக்காட்டில், கடையின் உரிமையாளர் ஆர்டர் உறுதிப்படுத்தல் அறிவிப்பில் உள்ள ஸ்டோர் லோகோவிற்குப் பிறகு தனது முகவரி மற்றும் வரி எண்ணைச் சேர்த்துள்ளார்.
<table class="row">
<tr>
<td class="shop-name_cell">
{%- if shop.email_logo_url %}
<img src="{{shop.email_logo_url}}" alt="{{ shop.name }}" width="{{ shop.email_logo_width }}">
<p>150 Elgin St, Ottawa K2P 1L4 GST# 123456789</p>
{%- else %}
<h1 class="shop-name_text">
<a href="{{shop.url}}">{{ shop.name }}</a>
</h1>
{%- endif %}மாற்றாக, நீங்கள் Shopify App Store இலிருந்து ஒரு விலைப்பட்டியல் செயலியை வாங்கிப் பதிவிறக்கலாம். விலைப்பட்டியல்களில் வரி எண்ணைச் சேர்க்க விலைப்பட்டியல் செயலி உங்களை அனுமதிக்கிறது.
ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல் வார்ப்புருக்களில் சுங்க வரிசையைச் சேர்க்கவும்
நீங்கள் சுங்கவரி மற்றும் இறக்குமதி வரிகளை வசூலித்தால், வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியதற்கான பதிவைக் கொண்டிருப்பதற்கு உங்கள் அறிவிப்பு மின்னஞ்சல்களில் சுங்க வரிசை உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல் மின்னஞ்சல் வார்ப்புருக்களுக்கான இயல்புநிலை வார்ப்புருக்களை நீங்கள் பயன்படுத்தினால், சுங்க வரிசை உருப்படியைச் சேர்க்க உங்கள் மின்னஞ்சல்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். நீங்கள் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.
உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் ஆர்டர் பணத்தைத் திரும்பப்பெறுதல் மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கியிருந்தால், சுங்க வரிசையைச் சேர்க்க உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களில் பின்வரும் குறியீட்டைச் சேர்க்கலாம்.
{% if current_total_duties %}
<tr class="subtotal-line">
<td class="subtotal-line__title">
<p>
<span>Duties</span>
</p>
</td>
<td class="subtotal-line__value">
<strong>{{ current_total_duties | money }}</strong>
</td>
</tr>
{% endif %}ஆர்டர் விலைப்பட்டியல்களில் கட்டண விதிமுறைகளைச் சேர்க்கவும்
கட்டண விதிமுறைகள், ஒரு ஆர்டருக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தேதியைக் குறிப்பிடுகின்றன.
உங்களின் ஆர்டர் விலைப்பட்டியல் மின்னஞ்சல் வார்ப்புருவைத் தனிப்பயனாக்கியிருந்தால், நிறைவேற்றும்போது செலுத்த வேண்டியவை உட்பட, நிலுவைத் தேதிகளைச் சேர்க்க உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களில் பின்வரும் குறியீட்டைச் சேர்க்கலாம்.
{% assign due_date = payment_terms.next_payment.due_at | default: nil %}
{% if payment_terms.type == 'receipt' and due_date == nil %}
{% assign due_date = 'now' %}
{% endif %}
{% if payment_terms.type == 'fulfillment' and payment_terms.next_payment.due_at == nil % }
<h2> Payment of {{ order.total_outstanding | money }} is due on fulfillment </h2>
{% else %}
<h2>Payment of {{ order.total_outstanding | money }} is due {{ due_date | date: format: 'date' }}</h2>
{% endif %}உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருவில் கட்டண விதிமுறையின் பெயரைக் காட்ட, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
1. பின்வரும் பிரிவு இருந்தால், அதைக் கண்டறியவும்:
{% if shipping_address or billing_address or shipping_method %}2. அதைப் பின்வருபவற்றைக் கொண்டு மாற்றவும்:
{% if shipping_address or billing_address or shipping_method or payment_terms %}3. மின்னஞ்சலின் பிரதானப் பகுதி (HTML) இடத்தில், தகுந்த இடத்தில் உங்கள் கட்டண விதிமுறைகளின் பெயரை உள்ளிடவும்.
{% if payment_terms %}
<td class="customer-info__item">
<h4>Payment</h4>
<p> Terms: {{ payment_terms.name }} </p>
</td>
{% endif %}4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் எடுத்துக்காட்டில், கடையின் உரிமையாளர் தனது கட்டண விதிமுறைகளை shipping_method என்பதற்குப் பிறகு வாடிக்கையாளர் தகவல் பிரிவில் சேர்த்துள்ளார்.

அறிவிப்புகளில் பிரத்தியேகச் செய்தியைச் சேர்க்கவும்
பின்வருபவை உட்பட பல அறிவிப்புகளில் நீங்கள் பிரத்தியேகச் செய்தியைச் சேர்க்கலாம்:
- கைவிடப்பட்ட செக்அவுட்
- வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளுதல்
- வாடிக்கையாளர் செயலாக்கம்
- வரைவு ஆர்டர் விலைப்பட்டியல்
படிகள்:
- உரைப் புலத்தில் பிரத்தியேகச் செய்தியை உள்ளிடவும்.
- முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- செய்தி சரியாகக் காட்டப்படுகிறதா என்பதைச் சரிபார்த்துவிட்டு, சோதனை மின்னஞ்சலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இன்லைன் CSS ஐப் பயன்படுத்தி மின்னஞ்சல் வார்ப்புருக்களை வடிவமைத்தல்
இயல்புநிலை ஸ்டைல்ஷீட்டான <link rel="stylesheet" type="text/css" href="/assets/notifications/styles.css"> என்பதை மேலெழுதி, உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களை வடிவமைக்க இன்லைன் CSS ஐப் பயன்படுத்தலாம். வார்ப்புரு திருத்தி, வார்ப்புருவில் உள்ள எந்தவொரு ஸ்டைல் குறிச்சொற்களையும் தானாகவே இன்லைன் செய்கிறது. பதிலளிக்கக்கூடிய மின்னஞ்சல்களை எளிதாக உருவாக்குவதற்கு உதவ, இது மீடியா வினவல்களைப் பாதுகாக்கிறது. வெளிப்புற ஸ்டைல்ஷீட்கள் மற்றும் தீம் அசெட்களுடன் பதிவேற்றப்பட்ட ஸ்டைல்ஷீட்களை இன்லைன் செய்ய முடியாது, எனவே உங்கள் வார்ப்புருக்களின் <head> இல் உள்ள <style> குறிச்சொல்லில் CSS ஸ்டைலிங் சேர்க்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
மின்னஞ்சல் வார்ப்புருவின் முந்தைய அல்லது இயல்புநிலை பதிப்பிற்கு மாற்றுதல்
மின்னஞ்சல் அறிவிப்பு வார்ப்புருவின் முந்தைய பதிப்பு அல்லது இயல்புநிலை பதிப்பிற்கு நீங்கள் மாற்றலாம்.
நீங்கள் முந்தைய அல்லது இயல்புநிலைப் பதிப்பிற்கு மாற்றும்போது, வார்ப்புருவின் உள்ளடக்கத்தை மட்டுமே மாற்றுவீர்கள். உங்கள் மின்னஞ்சல் அறிவிப்புகளின் லோகோ அல்லது நிறம் ஆகியவற்றில் நீங்கள் செய்த தனிப்பயனாக்கங்கள் எவையும் மாற்றப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தொடர்புடைய அறிவிப்புகள் வகையைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் பார்க்க விரும்பும் அறிவிப்பு வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.
இதற்கு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, முந்தையது அல்லது இயல்புநிலை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
எளிய உரை மின்னஞ்சல்களின் தானியங்கு மாற்றம்
Apple Watch-க்கான Mail போன்ற, இந்தப் பதிப்பைக் காட்ட வேண்டிய மின்னஞ்சல் கிளையண்ட்களுக்காக உங்கள் HTML மின்னஞ்சல் வார்ப்புருக்கள் எளிய உரைக்கு மாற்றப்படுகின்றன.