SMS அறிவிப்புகளை அமைத்தல்

செக்அவுட்டின்போது மின்னஞ்சல் முகவரிக்குப் பதிலாக தொலைபேசி எண்ணை உள்ளிடுவதற்கான விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். நீங்கள் SMS அறிவிப்புகளை அமைத்திருந்து, உங்கள் வணிக முகவரி ஆதரிக்கப்படும் நாட்டில் இருந்தால், மின்னஞ்சல் முகவரிக்குப் பதிலாக தொலைபேசி எண்ணை உள்ளிடும் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் ஆர்டர் உறுதிப்படுத்தலைப் பெறுவார்கள்.

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள செக்அவுட் மற்றும் கணக்குகள் பக்கத்திலிருந்து, செக்அவுட்டின்போது வாடிக்கையாளர்கள் எந்தத் தொடர்பு முறையைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

SMS அறிவிப்புகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியவை

SMS அறிவிப்புகளை அமைப்பதற்கு முன், கீழேயுள்ளவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி இல்லாத வாடிக்கையாளர்கள்

  • வாடிக்கையாளர் சுயவிவரத்துடன் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்படாத நிலையில், வாடிக்கையாளருக்கு ஒரு ஒற்றை ஆர்டர் உறுதிப்படுத்தல் SMS அறிவிப்பு அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் ஷிப்பிங் அறிவிப்புகளையோ வேறு வகையான அறிவிப்புகளையோ SMS மூலம் பெற மாட்டார்கள். வாடிக்கையாளருக்கு அவர்களின் ஆர்டர் தொடர்பாக மேலும் பல SMS அறிவிப்புகளை அனுப்ப விரும்பினால், Shopify App Store இல் இருந்து ஒரு பரிவர்த்தனை SMS செயலியை நிறுவுங்கள்.
  • மின்னஞ்சல் முகவரி இல்லாதபோது மட்டுமே SMS அறிவிப்புகள் அனுப்பப்படும். வாடிக்கையாளருடன் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டிருந்தால், இயல்பாகவே அதற்குப் பதிலாக மின்னஞ்சல் அனுப்பப்படும். சுயவிவரத்துடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துள்ள வாடிக்கையாளர்கள், மின்னஞ்சலுக்குப் பதிலாக SMS மூலம் அறிவிப்புகளைப் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது.

SMS அறிவிப்புச் செலவுகள் மற்றும் தனிப்பயனாக்கம்

  • SMS அறிவிப்பை அனுப்பும்போது உங்களுக்கு எவ்விதச் செலவும் ஏற்படாது. வாடிக்கையாளர்களின் போன் கேரியரைப் பொறுத்து, வழக்கமான மெசேஜ் கட்டணங்கள் அவர்களுக்குப் பொருந்தக்கூடும்.
  • SMS அறிவிப்புகளைத் திருத்த முடியாது. வாடிக்கையாளர் பெயர், ஆர்டர் எண் மற்றும் பிற குறிப்பிட்ட விவரங்கள், சரியான தகவல்களுடன் தானாகவே புதுப்பிக்கப்படும். SMS அறிவிப்புகளைத் தனிப்பயனாக்க, Shopify App Store இல் இருந்து ஒரு பரிவர்த்தனை SMS செயலியை நிறுவுங்கள்.

ஆதரிக்கப்படாத தயாரிப்புகள் மற்றும் செக்அவுட் மீட்பு

  • CBD தயாரிப்புகளை விற்கும் ஸ்டோர்களுக்கு SMS அறிவிப்புகளுக்கான ஆதரவு இல்லை. நீங்கள் CBD தயாரிப்புகளை விற்றால், மின்னஞ்சல் மூலம் மட்டுமே ஆர்டர் மற்றும் ஷிப்பிங் அறிவிப்புகளை அமைக்க முடியும்.
  • வாடிக்கையாளர் ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி செக்அவுட் செய்யத் தொடங்கினால், உங்களால் கைவிடப்பட்ட செக்அவுட்டை மீட்க முடியாது.

டிஜிட்டல் தயாரிப்பு அறிவிப்புகள்

  • டிஜிட்டல் தயாரிப்புகளைக் கொண்டுள்ள ஆர்டர்கள், SMS அறிவிப்புகளை ஆதரிக்கின்றன:
    • வாடிக்கையாளர் ஒரு டிஜிட்டல் கிஃப்ட் கார்டை வாங்கினால், அவர்களின் கிஃப்ட் கார்டுக்கான இணைப்புடன் கூடிய SMS அறிவிப்பை அவர்கள் பெறுவார்கள்.
    • வாடிக்கையாளர் ஒரு டிஜிட்டல் பதிவிறக்கத்தை வாங்கினால், செக்அவுட்டின் நன்றிப் பக்கத்தில் பதிவிறக்குவதற்கான இணைப்பு கிடைக்கும்; இது SMS மூலம் அனுப்பப்படும் ஆர்டர் உறுதிப்படுத்தலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், சில டிஜிட்டல் பதிவிறக்கச் செயலிகள் தனித்தனி மின்னஞ்சல்களை அனுப்புவதால், உங்கள் டிஜிட்டல் பதிவிறக்கங்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த உங்களின் அமைப்பை நீங்கள் பரிசோதிக்க வேண்டும்.

ஃபோன் எண் மூலம் செக்அவுட் செய்வதிலுள்ள வரம்புகள்

  • SMS அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாது.
  • ஃபோன் எண்ணை மட்டுமே பயன்படுத்தி வாடிக்கையாளர்களால் வாடிக்கையாளர் கணக்கை உருவாக்க முடியாது. கணக்கை உருவாக்க, அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.
  • Shop Pay வழியாகச் செக்அவுட் செய்ய, வாடிக்கையாளர்கள் ஃபோன் எண்ணை மட்டும் பயன்படுத்த முடியாது.
  • சர்வதேச வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரைச் செய்யும்போது, தொடர்புக்கான ஃபோன் எண்ணுடன் தங்கள் சர்வதேசப் பகுதி குறியீட்டைச் சேர்க்கவில்லை எனில், அவர்கள் SMS மெசேஜைப் பெறாமல் போகலாம். வாடிக்கையாளர் தனது SMS அறிவிப்பைப் பெறுவதை உறுதிசெய்ய, வாடிக்கையாளரின் தொடர்பு ஃபோன் எண்கள் E.164 தரநிலையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட வேண்டும் (எடுத்துக்காட்டாக, +18005550123).

SMS அறிவிப்புகள் ஆதரிக்கப்படும் நாடுகள்

உங்கள் வணிக முகவரி பின்வரும் நாடுகளில் ஒன்றில் அமைந்திருக்கும்போது மட்டுமே SMS அறிவிப்புகள் ஆதரிக்கப்படும்:

  • ஆஸ்திரேலியா
  • பிரேசில்
  • கனடா
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • அயர்லாந்து
  • இத்தாலி
  • ஜப்பான்
  • நியூசிலாந்து
  • ஸ்பெயின்
  • யுனைடெட் கிங்டம்
  • அமெரிக்கா

உங்கள் வணிகம் ஆதரிக்கப்படும் நாட்டில் இல்லையெனில், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அறிவிப்புகளை மட்டுமே உங்களால் வழங்க முடியும் அல்லது Shopify App Store இலிருந்து பரிவர்த்தனை SMS செயலியை நீங்கள் நிறுவ வேண்டும்.

SMS அனுப்புநர் ID-க்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் ஸ்டோரின் SMS அனுப்புநர் ID (உங்கள் ஸ்டோரிலிருந்து வரும் SMS மெசேஜ்களில் காட்டப்படும் அனுப்புநர் பெயர்) உங்களின் பொதுவான ஸ்டோர் தொடர்பு விவரங்கள் அமைப்புகளில் உள்ள உங்கள் ஸ்டோர் பெயரை அடிப்படையாகக் கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு உங்கள் SMS அனுப்புநர் ID எப்படிக் காட்டப்படும் என்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன:

  • 11 எழுத்துகளை விட நீளமாக உள்ள அனைத்து SMS அனுப்புநர் ID-க்களும் குறைக்கப்படும்.
  • ஸ்பேஸ்கள், நிறுத்தற்குறிகள் மற்றும் சிறப்பு எழுத்துகள் போன்ற எழுத்துகள்/எண்கள் அல்லாத பிற குறியீடுகளை, SMS அனுப்புநர் ID-க்கள் தவிர்த்துவிடும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் பெயர் My Shopify Store எனில், உங்கள் SMS அனுப்புநர் ID MyShopifySt எனக் காட்டப்படும்.
  • சில நாடுகளும் பிராந்தியங்களும் டைனமிக் SMS அனுப்புநர் ID-க்களை ஆதரிப்பதில்லை; அந்தச் சமயத்தில் உங்களின் SMS அனுப்புநர் ID-க்குப் பதிலாக, உங்கள் ஸ்டோரின் எண் வடிவிலான ஃபோன் எண் காட்டப்படும்.

வாடிக்கையாளரின் SMS அறிவிப்பு விருப்பத்தேர்வுகளை அமைத்தல்

வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யும்போது, இயல்பாகவே அவர்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவார்கள். வாடிக்கையாளர்களை அவர்களின் ஃபோன் எண்ணைப் பயன்படுத்திச் செக்அவுட் செய்ய அனுமதித்தால், அவர்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் என இரண்டில் ஒன்றை உள்ளிடத் தேர்வுசெய்யலாம். நீங்கள் SMS அறிவிப்புகளை அமைத்திருந்தால், உங்கள் வணிக முகவரி ஆதரிக்கப்படும் நாட்டில் அமைந்திருக்கும்போது, மின்னஞ்சல் முகவரிக்குப் பதிலாக ஃபோன் எண்ணை உள்ளிடும் வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஆர்டர் உறுதிப்படுத்தலை அவர்களின் மொபைல் ஃபோனில் SMS மூலம் பெறுவார்கள்.

வாடிக்கையாளர் ஃபோன் எண்ணை உள்ளிடும்போது, அது அவர்களின் வாடிக்கையாளர் தகவலில் சேமிக்கப்படும். இது இயல்பான ஷிப்பிங் ஃபோன் எண்ணாகவும் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவது உங்களுக்கு அவசியமாக இருந்தால், மின்னஞ்சலுக்கு மட்டும் உரிய விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

வாடிக்கையாளர்களுக்கான ஆர்டர் உறுதிப்படுத்தல் SMS அறிவிப்புகளைச் செயல்படுத்துவதென்பது, SMS மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கு விருப்பம் தெரிவிக்கும் விருப்பத்தேர்வை செயல்படுத்துவதில் இருந்து மாறுபட்ட தனியான ஒரு அமைப்பாகும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் தொடர்பு முறை பிரிவில், பின்வரும் ஏதேனும் SMS அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்:

    • ஃபோன் அல்லது மின்னஞ்சல் மூலம் செக்அவுட் செய்வதைத் தேர்ந்தெடுக்க, ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • மின்னஞ்சலை மட்டும் தேர்ந்தெடுக்க, மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.

  3. வாடிக்கையாளர் தொடர்பு முறை பிரிவில், பின்வரும் ஏதேனும் SMS அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்:

    • ஃபோன் அல்லது மின்னஞ்சல் மூலம் செக்அவுட் செய்வதைத் தேர்ந்தெடுக்க, ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • மின்னஞ்சலை மட்டும் தேர்ந்தெடுக்க, மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

Shopify SMS அறிவிப்புகளை முடக்குதல்

உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயன் ஆர்டர் SMS அறிவிப்புகளை அனுப்ப மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தினால், நகல் செய்திகள் அனுப்பப்படுவதைத் தவிர்க்க உங்கள் Shopify நிர்வாகியில் Shopify SMS அறிவிப்புகளை முடக்கவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஆர்டர் செயலாக்கம் பிரிவில், ஆர்டர் உறுதிப்படுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. SMS தாவலைக் கிளிக் செய்யவும்.

  5. Shopify ஆர்டர் உறுதிப்படுத்தல் SMS பிரிவில், முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. Shopify SMS முடக்கு உரையாடலில், முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  4. ஆர்டர் செயலாக்கம் பிரிவில், ஆர்டர் உறுதிப்படுத்தல் என்பதைத் தட்டவும்.

  5. SMS தாவலைத் தட்டவும்.

  6. Shopify ஆர்டர் உறுதிப்படுத்தல் SMS பிரிவில், முடக்கு என்பதைத் தட்டவும்.

  7. Shopify SMS முடக்கு உரையாடலில், முடக்கு என்பதைத் தட்டவும்.