வெப்ஹூக்குகளை உருவாக்குதல்

வெப்ஹூக்குகள் என்பவை ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருந்து தரவை மீட்டெடுக்கவும் சேமிக்கவும் உதவும் ஒரு கருவியாகும். JSON அல்லது XML வடிவங்களில் நிகழ்வுத் தரவைச் சேமிக்கக்கூடிய ஒரு https:// URL-ஐப் பதிவுசெய்ய இவை உங்களை அனுமதிக்கின்றன. வெப்ஹூக்குகள் பொதுவாகப் பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன:

  • ஒரு ஆர்டரை அளித்தல்
  • ஒரு தயாரிப்பின் விலையை மாற்றுதல்
  • நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது உங்கள் IM கிளையண்ட்டிற்கு அல்லது பேஜருக்குத் தெரிவிப்பது
  • தரவுக் கிடங்கிற்காகத் தரவைச் சேகரித்தல்
  • உங்கள் கணக்கியல் மென்பொருளை ஒருங்கிணைத்தல்
  • ஆர்டர் உருப்படிகளை வடிகட்டுதல் மற்றும் ஆர்டர் குறித்துப் பல்வேறு ஷிப்பர்களுக்குத் தெரிவிப்பது
  • உங்கள் செயலியை வாடிக்கையாளர்கள் நிறுவல் நீக்கம் செய்யும்போது உங்கள் தரவுத்தளத்திலிருந்து அவர்களின் தரவை அகற்றுதல்

ஆதரிக்கப்படும் வெப்ஹூக் நிகழ்வுகள்

வெப்ஹூக்கை உருவாக்கும்போது, பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிகழ்வுகளிலிருந்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ஒவ்வொரு முறை ஆர்டருக்கான கட்டணம் செலுத்தப்படும்போதும் அனுப்பப்படும் ஒரு வெப்ஹூக்கை நீங்கள் உருவாக்க விரும்பினால், ஆர்டர் பேமெண்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மற்றொரு உதாரணமாக, கடையின் பண்பு புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அனுப்பப்படும் ஒரு வெப்ஹூக்கை நீங்கள் உருவாக்க விரும்பினால், கடைப் புதுப்பிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Shopify நிர்வாகியில் கிடைக்கக்கூடிய ஆதரிக்கப்படும் வெப்ஹூக் நிகழ்வுகளைப் பட்டியலிடும் அட்டவணை.
வகைநிகழ்வுகள்
கார்ட்
  • கார்ட் உருவாக்கம்
  • கார்ட் புதுப்பிப்பு
செக்அவுட்
  • செக்அவுட் உருவாக்கம்
  • செக்அவுட் நீக்கம்
  • செக்அவுட் புதுப்பிப்பு
சேகரிப்பு
  • சேகரிப்பு உருவாக்கம்
  • சேகரிப்பு நீக்கம்
  • சேகரிப்பு புதுப்பிப்பு
வாடிக்கையாளர்
  • வாடிக்கையாளர் SMS மார்க்கெட்டிங் ஒப்புதல் புதுப்பிப்பு
  • வாடிக்கையாளர் கணக்கு அமைப்புகள் புதுப்பிப்பு
  • வாடிக்கையாளர் உருவாக்கம்
  • வாடிக்கையாளர் நீக்கம்
  • வாடிக்கையாளர் முடக்கம்
  • வாடிக்கையாளர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் ஒப்புதல் புதுப்பிப்பு
  • வாடிக்கையாளர் இயக்கம்
  • வாடிக்கையாளர் குழு உருவாக்கம்
  • வாடிக்கையாளர் குழு நீக்கம்
  • வாடிக்கையாளர் குழு புதுப்பிப்பு
  • வாடிக்கையாளர் டேக்குகள் சேர்க்கப்பட்டன
  • வாடிக்கையாளர் டேக்குகள் அகற்றப்பட்டன
  • வாடிக்கையாளர் புதுப்பிப்பு
தள்ளுபடி
  • தள்ளுபடி உருவாக்கம்
  • தள்ளுபடி நீக்கம்
  • தள்ளுபடி புதுப்பிப்பு
வரைவு ஆர்டர்
  • வரைவு ஆர்டர் உருவாக்கம்
  • வரைவு ஆர்டர் நீக்கம்
  • வரைவு ஆர்டர் புதுப்பிப்பு
நிறைவேற்றம்
  • நிறைவேற்ற உருவாக்கம்
  • நிறைவேற்றல் ஆர்டரை நிறைவேற்றச் சேவையால் முடிக்க முடியாது
  • நிறைவேற்றல் ஆர்டரின் வரிசை உருப்படிகள் நேரில் பெறுவதற்காகத் தயாராக உள்ளன
  • நிறைவேற்றல் ஆர்டர் நகர்த்தப்பட்டது
  • நிறைவேற்றல் ஆர்டர் நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றல் ஆர்டர் மறுதிட்டமிடப்பட்டது
  • திட்டமிடப்பட்ட நிறைவேற்றல் ஆர்டருக்கான காலக்கெடு வந்துவிட்டது
  • நிறைவேற்றல் ஆர்டரின் ஆர்டர் வழிப்படுத்துதல் முடிந்தது
  • நிறைவேற்ற ஆர்டர்கள் ரத்துசெய்யப்பட்டன
  • நிறைவேற்ற ஆர்டர்களின் ரத்துக் கோரிக்கை ஏற்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களின் ரத்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களின் ரத்துக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களுக்கான நிறைவேற்றக் கோரிக்கை ஏற்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களுக்கான நிறைவேற்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களுக்கான நிறைவேற்றக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களின் நிறுத்திவைப்பு விடுவிக்கப்பட்டது
  • நிறைவேற்ற ஆர்டர்களின் வரிசை உருப்படிகள் உள்ளூர் டெலிவரிக்குத் தயாராக உள்ளன
  • நிறைவேற்ற ஆர்டர்கள் ஒன்றிணைக்கப்பட்டன
  • நிறைவேற்ற ஆர்டர்கள் பிரிக்கப்பட்டன
  • நிறைவேற்றப் புதுப்பிப்பு
சரக்கு இருப்பு
  • சரக்கு உருப்படி உருவாக்கம்
  • சரக்கு உருப்படி நீக்கம்
  • சரக்கு உருப்படி புதுப்பிப்பு
  • சரக்கு இருப்பு நிலை இணைப்பு
  • சரக்கு இருப்பு நிலை துண்டிப்பு
  • சரக்கு இருப்பு நிலை புதுப்பிப்பு
இடம்
  • இடச் செயலாக்கம்
  • இட உருவாக்கம்
  • இட முடக்கம்
  • இட நீக்கம்
  • இடத்தின் உருப்படி புதுப்பிப்பு
சந்தை
  • சந்தை உருவாக்கம்
  • சந்தை நீக்கம்
  • சந்தைப் புதுப்பிப்பு
ஆர்டர்
  • ஆர்டர் ரத்துசெய்தல்
  • ஆர்டர் உருவாக்கம்
  • ஆர்டர் நீக்கம்
  • ஆர்டர் திருத்தம்
  • ஆர்டர் நிறைவேற்றம்
  • ஆர்டரின் பேமெண்ட்
  • ஆர்டரின் ஆபத்து மதிப்பீடு மாற்றப்பட்டது
  • ஆர்டர் புதுப்பிப்பு
தயாரிப்பு
  • தயாரிப்பு உருவாக்கம்
  • தயாரிப்பு நீக்கம்
  • தயாரிப்புப் புதுப்பிப்பு
பணத்தைத் திரும்பப்பெறுதல்
  • பணத்தைத் திரும்பப்பெறுதலை உருவாக்குதல்
Shop
  • Shop புதுப்பிப்பு
டெண்டர்
  • டெண்டர் பரிவர்த்தனை உருவாக்கம்
தீம்
  • தீம் உருவாக்கம்
  • தீம் நீக்கம்
  • தீம் வெளியீடு
  • தீம் புதுப்பிப்பு
பரிவர்த்தனை
  • பரிவர்த்தனை உருவாக்கம்

வெப்ஹூக்குகளை உருவாக்கு

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு வெப்ஹூக்கை உருவாக்கலாம். உங்கள் ஸ்டோருக்கு மட்டுமே உரிய எழுத்துகள் மற்றும் எண்களின் கலவையைக் கொண்ட ID மூலம் உங்கள் வெப்ஹூக்குகள் கையொப்பமிடப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வெப்ஹூக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ⊕ வெப்ஹூக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நிகழ்வு கீழ்தோன்றும் மெனுவில், நீங்கள் வெப்ஹூக் நிகழ்வாகப் பயன்படுத்த விரும்பும் ஆதரிக்கப்படும் வெப்ஹூக் நிகழ்வுகளில் எதையாவது தேர்ந்தெடுக்கவும். வெப்ஹூக் உருவாக்கப்பட்ட பிறகு அதன் நிகழ்வை உங்களால் மாற்ற முடியாது.

  5. Shopify இந்தத் தகவலை உங்களுக்கு எந்த வடிவமைப்பில் அனுப்ப வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வடிவமைப்பை வடிவமைப்பு கீழ்தோன்றும் மெனுவில் தேர்ந்தெடுக்கவும். JSON அல்லது XML என இரண்டு விருப்பங்கள் உள்ளன.

  6. தரவு எங்குச் சேமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த URL-ஐ URL புலத்தில் உள்ளிடவும். பின்வரும் URL-களுக்கு வெப்ஹூக்குகளை வழங்க முடியாது:

    • லோக்கல்ஹோஸ்ட்
    • "internal" என்ற வார்த்தையில் முடியும் எந்தவொரு URL (உதாரணமாக example.com/internal)
    • ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு தனிப்பயன் டொமைனிலிருந்தும் வரும் எந்தவொரு URL
    • "போலியான" டொமைன்கள் (உதாரணமாக www.example.com)
    • Shopify டொமைன்கள் (உதாரணமாக shopify.com மற்றும் myshopify.com)
  7. வெப்ஹூக் API பதிப்பு என்பதில் உங்களுக்கு விருப்பமான வெப்ஹூக் பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. வெப்ஹூக்குகள் என்பதைத் தட்டவும்.

  4. ⊕ வெப்ஹூக்கை உருவாக்கு என்பதைத் தட்டவும்.

  5. நிகழ்வு கீழ்தோன்றும் மெனுவில், நீங்கள் வெப்ஹூக் நிகழ்வாகப் பயன்படுத்த விரும்பும் ஆதரிக்கப்படும் வெப்ஹூக் நிகழ்வுகளில் எதையாவது தேர்ந்தெடுக்கவும். வெப்ஹூக் உருவாக்கப்பட்ட பிறகு அதன் நிகழ்வை உங்களால் மாற்ற முடியாது.

  6. Shopify இந்தத் தகவலை உங்களுக்கு எந்த வடிவமைப்பில் அனுப்ப வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வடிவமைப்பை வடிவமைப்பு கீழ்தோன்றும் மெனுவில் தேர்ந்தெடுக்கவும். JSON அல்லது XML என இரண்டு விருப்பங்கள் உள்ளன.

  7. தரவு எங்குச் சேமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த URL-ஐ URL புலத்தில் உள்ளிடவும். பின்வரும் URL-களுக்கு வெப்ஹூக்குகளை வழங்க முடியாது:

    • லோக்கல்ஹோஸ்ட்
    • "internal" என்ற வார்த்தையில் முடியும் எந்தவொரு URL (உதாரணமாக example.com/internal)
    • ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு தனிப்பயன் டொமைனிலிருந்தும் வரும் எந்தவொரு URL
    • "போலியான" டொமைன்கள் (உதாரணமாக www.example.com)
    • Shopify டொமைன்கள் (உதாரணமாக shopify.com மற்றும் myshopify.com)
  8. வெப்ஹூக் API பதிப்பு என்பதில் உங்களுக்கு விருப்பமான வெப்ஹூக் பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  9. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் புதிய வெப்ஹூக் சேமிக்கப்பட்ட பிறகு, அது வெப்ஹூக்குகள் பக்கத்தில் காட்டப்படும்.

வெப்ஹூக்குகளைத் திருத்து

வெப்ஹூக் உருவாக்கப்பட்ட பிறகு அதன் உள்ளமைவை உங்களால் திருத்த முடியும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வெப்ஹூக் நிகழ்வை உங்களால் மாற்ற முடியாது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வெப்ஹூக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வெப்ஹூக்கைத் திருத்து உரையாடல் பெட்டியில், தேவைக்கேற்ப வெப்ஹூக்கை மாற்றவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. வெப்ஹூக்குகள் என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > திருத்து என்பதைத் தட்டவும்.

  5. வெப்ஹூக்கைத் திருத்து உரையாடல் பெட்டியில், தேவைக்கேற்ப வெப்ஹூக்கை மாற்றவும்.

  6. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வெப்ஹூக்குகளைச் சோதி

நீங்கள் விரும்பும் நிகழ்வுத் தகவல் சரியான URLக்கு அனுப்பப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, உங்கள் வெப்ஹூக்கைச் சோதிக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வெப்ஹூக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் சோதிக்க விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > சோதனையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வெப்ஹூக்கிற்காக நீங்கள் குறிப்பிட்ட URLஇல், அறிவிப்பு வேலை செய்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. வெப்ஹூக்குகள் என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் சோதிக்க விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > சோதனையை அனுப்பு என்பதைத் தட்டவும்.

  5. வெப்ஹூக்கிற்காக நீங்கள் குறிப்பிட்ட URLஇல், அறிவிப்பு வேலை செய்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

வெப்ஹூக்குகளை நீக்கு

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஒரு வெப்ஹூக்கை நீங்கள் நீக்கலாம். இந்தச் செயலைச் செயல்தவிர்க்க முடியாது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வெப்ஹூக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. வெப்ஹூக்குகள் என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் நீக்க விரும்பும் வெப்ஹூக்கைக் கொண்டுள்ள வரிசையில், Horizontal menu > நீக்கு என்பதைத் தட்டவும்.