உங்கள் ஷிப்பிங் உமிழ்வுகளைக் கணக்கிடுதல்
இந்தப் பக்கத்தில்
உங்கள் ஷிப்பிங் உமிழ்வுகளை மதிப்பிடுதல்
உங்கள் உமிழ்வுகளை மதிப்பிட, ஷிப்மென்ட்டின் தடமறிவதற்கான எண்ணுடன் தொடர்புடைய ஆர்டர் கண்காணிப்புத் தரவை Planet நம்பியுள்ளது. இந்தத் தரவு உமிழ்வுகளை மிகவும் துல்லியமாகக் கணக்கிட அனுமதிக்கிறது. இருப்பினும், தடமறிவதற்கான எண் கிடைக்கவில்லை என்றாலோ ஷிப்பிங் கேரியர் ஆதரிக்கப்படவில்லை என்றாலோ, மதிப்பிடப்பட்ட உமிழ்வுகளை 3 என்ற நிச்சயமற்ற தன்மைக் காரணியால் Planet பெருக்கும். தரவுகள் சீரற்றதாக அல்லது விடுபட்டிருக்கும் சமயங்களில் கூட, அனைத்து உமிழ்வுகளும் கணக்கில் கொள்ளப்படுவதை நிச்சயமற்ற தன்மைக் காரணி உறுதி செய்கிறது.
எடுத்துக்காட்டு: உங்கள் ஷிப்பிங் உமிழ்வுகளைக் கணக்கிட நிச்சயமற்ற தன்மைக் காரணியைப் பயன்படுத்துதல்
இந்தச் செயல்முறையை விளக்குவதற்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் போஸ்டனில் இருந்து நியூயார்க்கிற்கு ஒரு பேக்கேஜை அனுப்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இரு நகரங்களுக்கும் இடையிலான நேர்கோட்டு தூரம் தோராயமாக 305 கிமீ ஆகும், ஆனால் மிகக் குறுகிய சாலை வழித்தடம் சுமார் 350 கிமீ ஆகும். கண்காணிப்புத் தரவு கிடைத்தால், கணக்கீட்டிற்காகப் பயணத்த சரியான தூரத்தை Planet பயன்படுத்தும்.
கண்காணிப்புத் தரவு கிடைக்காத சந்தர்ப்பங்களில், மூல இடம் மற்றும் சேருமிட முகவரிகளுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிட Haversine சூத்திரத்தை Planet பயன்படுத்துகிறது. Haversine தூரம் என்பது கோளத்தின் மேற்பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான கோண தூரத்தைக் குறிக்கிறது. இது ரேடியன்களில் குறிக்கப்படும் ஒவ்வொரு புள்ளியின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆயங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இந்தச் சூத்திரம் கண்காணிப்புத் தரவு இல்லாமலும் கூட தூரத்தைத் துல்லியமாக மதிப்பிட Planet-ஐ அனுமதிக்கிறது. தபால் நிலையங்கள் மற்றும் விநியோக மையங்களிலிருந்து பயணிக்கப்பட்ட தூரங்கள், அதேபோல உங்கள் வாடிக்கையாளரின் வீட்டின் வாசலில் பேக்கேஜை டெலிவரி செய்ய கூரியர் பயணித்த பாதை போன்ற வழியில் உள்ள மாறுபாடுகளைக் கணக்கில் கொள்ள, அதன் முடிவில் கிடைக்கும் உமிழ்வுகள் 3-ஆல் பெருக்கப்படும்.
Planet எப்படி ஷிப்பிங் உமிழ்வுகளை மதிப்பிடுகிறது என்பது குறித்த கூடுதல் பரிசீலனைகள்
Planet-இன் மாடல்களும் மதிப்பீடுகளும் உள்ளிடப்படும் தரவைச் சார்ந்துள்ளன, மேலும் சில சமயங்களில் தரவு கிடைக்காமல் போகலாம். இதற்குத் தீர்வு காணும் வகையில், தரவு விடுபட்டிருக்கும் சூழ்நிலைகளிலும் கூட, போதுமான அளவுக்குக் கார்பன் அகற்றுதலை வாங்குவதை உறுதி செய்வதற்காக, Planet கார்பன் உமிழ்வுகளை வேண்டுமென்றே அதிகமாக மதிப்பிடுகிறது. போக்குவரத்திற்காக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை பாதிப்பில் 95% கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகளால் ஏற்படுகிறது. போக்குவரத்தின் போது வெளியாகும் மற்ற பசுமைக்குடில் வாயுக்களை இந்த மதிப்பிடப்பட்ட உமிழ்வுகள் கணக்கில் கொள்ளாது.
கடல்வழிப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உமிழ்வுகளைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்குத் தேவையான தரவு இந்த முறையில் ஷிப் செய்யப்பட்ட ஆர்டர்களால் உருவாக்கப்படுவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உமிழ்வுகளை மதிப்பிட தொழில்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஷிப்பிங் உமிழ்வுகளைத் தீர்மானிக்கப் பயன்படும் முதன்மைக் காரணிகள்
ஷிப்பிங் உமிழ்வுகளைத் தீர்மானிக்க, எடை, தூரம் மற்றும் போக்குவரத்தின் வகை ஆகிய மூன்று முதன்மைக் காரணிகளை Planet கருத்தில் கொள்கிறது.
- எடை: ஷிப்மென்ட்டின் எடை என்பது கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் முதன்மை மதிப்பாகும். எடை கிடைக்கவில்லை என்றால், Planet ஷிப்மென்ட்டின் சராசரி எடையை மாற்றாகப் பயன்படுத்தும்.
- தூரம்: கண்காணிப்புத் தரவு கிடைத்தால், கண்காணிப்புத் தகவலில் பதிவு செய்யப்பட்ட தூரத்தை Planet பயன்படுத்தும். கண்காணிப்புத் தரவு கிடைக்காத சந்தர்ப்பங்களில், மூல இடம் மற்றும் சேருமிட முகவரிகளுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிட Haversine சூத்திரத்தை Planet பயன்படுத்துகிறது. Haversine தூரம் என்பது கோளத்தின் மேற்பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான கோண தூரத்தைக் குறிக்கிறது. வழியில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கணக்கில் கொள்ள, இந்தத் தூரம் 3 என்ற நிச்சயமற்ற தன்மைக் காரணியால் பெருக்கப்படும்.
- போக்குவரத்தின் வகை: விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துடன் தொடர்புடைய பொருத்தமான கார்பன்-செறிவை ஒதுக்குவதற்காக, வேகம் மற்றும் பயணிக்கப்பட்ட தூரத்தின் அடிப்படையில் போக்குவரத்து முறையை Planet தீர்மானிக்கிறது.