கார்பன்-நடுநிலை ஷிப்பிங் விருப்பங்களின் மூலம் உங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்தல்

Planet மூலம் ஒவ்வொரு ஷிப்மென்ட்டையும் கார்பன் நடுநிலையாக நீங்கள் மாற்றலாம். அதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்தலாம், வாடிக்கையாளர்களைச் செலுத்த அனுமதிக்கலாம் அல்லது இரண்டு வழிகளையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கைப் புரிந்துகொள்ளுதல்

வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்வது பெரும்பாலும் பருவநிலை மாற்றத்திற்குக் காரணமாகும் கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகிறது. வளிமண்டலத்திலிருந்து சமமான அளவு கார்பன் டை ஆக்சைடை (CO₂) அகற்றும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதன் மூலம், இந்த உமிழ்வுகளை ஈடுகட்ட Planet உங்களை அனுமதிக்கிறது. செக்அவுட்டின்போது கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கை வழங்குவதன் மூலம், உங்கள் டெலிவரிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுடன், நிலையான விருப்பங்களுக்கான வாடிக்கையாளர் தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

Planet சந்தாத் திட்டங்கள்

ஒவ்வொரு ஷிப்மென்ட்டையும் கார்பன் நடுநிலையாக மாற்ற Planet உங்களை அனுமதிக்கிறது. அதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்தலாம், வாடிக்கையாளர்களைச் செலுத்த அனுமதிக்கலாம் அல்லது இரண்டு வழிகளையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை

எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆர்டருக்கும் ஷிப்பிங் உமிழ்வுகளை ஈடுகட்ட நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். ஒரு ஆர்டருக்கான சராசரி செலவு, நீங்கள் தேர்வுசெய்கின்ற கார்பன் அகற்றுதல் வகை, ஷிப்பிங் தூரம், பேக்கேஜ் எடை மற்றும் ஷிப்பிங் முறை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

வாடிக்கையாளர் தேர்வு

வாடிக்கையாளர் தேர்வு திட்டத்தின் மூலம், கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கிற்கு $0.50 USD கட்டணம் செலுத்துவதன் வழியே பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் உங்கள் வாடிக்கையாளர்களைப் பங்கேற்கச் செய்யலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்படும் நிதி, அவர்களது ஷிப்மென்ட்டின் உமிழ்வுகளை ஈடுகட்டப் பயன்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த விருப்பம் (எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை + வாடிக்கையாளர் தேர்வு)

ஒருங்கிணைந்த விருப்பத் திட்டத்தின் மூலம், எல்லா ஆர்டர்களுக்கும் கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கை வழங்குவது மட்டுமின்றி, பருவநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் உங்களுடன் இணைய உங்கள் வாடிக்கையாளர்களையும் அழைக்கிறீர்கள். ஒரு ஆர்டருக்கான சராசரி செலவு, நீங்கள் தேர்வுசெய்கின்ற கார்பன் அகற்றுதல் வகை, ஷிப்பிங் தூரம், பேக்கேஜ் எடை மற்றும் ஷிப்பிங் முறை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, சமூகம் என்ற உணர்வை உருவாக்குவதுடன் கார்பன் உமிழ்வை அகற்றுவதில் வாடிக்கையாளர்களைப் பங்கேற்கவும் ஊக்குவிக்கிறது.

கார்பன் அகற்றுதல் வகைகள்

நீங்கள் எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை அல்லது ஒருங்கிணைந்த விருப்பத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், உங்கள் ஆர்டர்களுக்கான கார்பன் உமிழ்வை Planet எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். எல்லா விருப்பங்களும் ஒவ்வொரு டெலிவரியும் கார்பன் நடுநிலையானது என்பதை உறுதிசெய்கின்றன.

Decade

Decade அகற்றுதல் வகையானது, காடுகளை வளர்த்தல் மற்றும் புல்வெளிகளை மீட்டெடுத்தல் போன்ற இயற்கை சார்ந்த திட்டங்களிலிருந்து கார்பன் வரவுகளைப் பயன்படுத்துகிறது. மேலும் இது Grassroots Carbon மற்றும் Pachama போன்ற நிறுவனங்களுடன் கூட்டாளராகச் செயல்படுகிறது.

Century

Century அகற்றுதல் வகையானது, இயற்கை சார்ந்த திட்டங்களை, நேரடி காற்றுப் பிடிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாறைச் சிதைவு போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கலக்கிறது. மேலும் இது Mati, Vaulted, Climeworks மற்றும் Planetary போன்ற நிறுவனங்களுடன் கூட்டாளராகச் செயல்படுகிறது.

மில்லினியம்

மில்லினியம் விருப்பமானது, இந்தத் தொழில்நுட்பங்களில் இன்னும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இயற்கை சார்ந்த திட்டங்களை, நேரடி காற்றுப் பிடிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாறைச் சிதைவு போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கலக்கிறது. மேலும் இது Mati, Vaulted, Climeworks மற்றும் Planetary போன்ற நிறுவனங்களுடன் கூட்டாளராகச் செயல்படுகிறது.

சந்தாத் திட்ட மாறுபாடுகள்

Planet சந்தாத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மதிப்பிடப்பட்ட விலையானது, Shopify பிளாட்ஃபார்ம் முழுவதும் ஒரு ஆர்டருக்கு ஏற்படும் சராசரி உமிழ்வுகளின் அடிப்படையிலானது. எனினும், உங்கள் ஸ்டோருக்கான ஒரு ஆர்டரின் உண்மையான செலவு, ஷிப்பிங் தூரம், பேக்கேஜ் எடை மற்றும் போக்குவரத்து முறை போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.

Planet-இன் பில்லிங் மற்றும் கட்டணங்கள்

நீங்கள் Planet-க்குச் சந்தா பெறும்போது, மாதாந்திர அடிப்படையில் தானாகவே உங்களுக்குப் பில் செய்யப்படும்.

நீங்கள் எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை திட்டத்தைத் தேர்வுசெய்தால், உங்களின் கார்பன்-நடுநிலை ஷிப்பிங் கட்டணங்களுக்குப் பில் செய்யப்படும். வாடிக்கையாளர் தேர்வு திட்டத்தைத் தேர்வுசெய்தால், கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கிற்கு வாடிக்கையாளர்கள் அளித்த பங்களிப்புக்குச் சமமாக உங்கள் பில் இருக்கும். நீங்கள் ஒருங்கிணைந்த விருப்பத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், உங்களின் கார்பன்-நடுநிலை ஷிப்பிங் கட்டணங்களுடன் வாடிக்கையாளர் பங்களிப்புகளும் உங்கள் பில்லில் சேர்க்கப்படும்.

இதில் Shopify எந்தப் பங்கையும் எடுத்துக்கொள்வதில்லை—100% நிதியும் கார்பன் அகற்றுதல் திட்டங்களுக்கே செல்கிறது.

எல்லா ஷிப்மென்ட்களும் கார்பன் நடுநிலையானவை மற்றும் ஒருங்கிணைந்த விருப்பத் திட்டங்களுக்கு, ஒரு ஆர்டருக்கான கண்காணிப்புத் தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாகக் கண்காணிப்புத் தகவல் சுட்டிக்காட்டும்போது, அது டெலிவரி செய்யப்பட்டதாக Planet கருதும்.

கண்காணிப்புத் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில், ஒரு ஆர்டர் எப்போது டெலிவரி செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்பதைத் தீர்மானிக்க Planet ஒரு இயல்புநிலை காலவரம்பைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, வாடிக்கையாளர் ஆர்டர் செய்த 20 நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கப்படும். கண்காணிப்புத் தகவல் இல்லாவிட்டாலும், பேக்கேஜ் அதன் இலக்கை அடைவதற்கான நியாயமான நேரத்தை இது அனுமதிக்கிறது.