ஷிப்பிங் சுயவிவரங்கள்

ஷிப்பிங் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் இடங்களுக்கான ஷிப்பிங் விதிகளின் தொகுப்பாகும். தயாரிப்பு அடிப்படையிலான விதிகளின் மூலம் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்களை வசூலிக்கவும் உங்கள் தயாரிப்புகளை எங்கு அனுப்புகிறீர்கள் மற்றும் எங்கிருந்து அனுப்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் வெவ்வேறு கட்டணங்களை அமைக்கவும் ஷிப்பிங் சுயவிவரங்களைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு நீங்கள் ஷிப்பிங் சுயவிவரங்களை அமைக்கலாம் மற்றும் அத்தயாரிப்புகளை நிறைவேற்றும் ஒவ்வொரு இடத்திற்குமான ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களை உள்ளமைக்கலாம்.

உங்கள் ஸ்டோர் இரண்டு வகையான ஷிப்பிங் சுயவிவரங்களைப் பயன்படுத்துகிறது:

  • பொதுவான ஷிப்பிங் சுயவிவரம்: ஒவ்வொரு Shopify ஸ்டோரும் இயல்புநிலையாக அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்துடன் வருகிறது. உங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான ஷிப்பிங் கட்டணங்கள் வேண்டும் என விரும்பினால், இந்தப் பொதுவான சுயவிவரமே போதுமானது. உங்களின் அனைத்துத் தற்போதைய மற்றும் புதிய தயாரிப்புகளும் பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்தில் சேர்க்கப்படும். ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாடு பிரத்தியேக சுயவிவரத்தில் இல்லையெனில், அது பொதுவான ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்தும்.
  • பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரம்: வெவ்வேறு தயாரிப்புகளுக்கு வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்கள் தேவைப்படும்போது 99 பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரங்கள் வரை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணமாக, அதிகச் செலவாகும் ஷிப்பிங் விருப்பங்கள் தேவைப்படும் எளிதில் உடையக்கூடிய தயாரிப்புகளை நீங்கள் விற்றால், இந்தத் தயாரிப்புகளுக்கு என ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கி, மற்ற தயாரிப்புகளை விட இவற்றிற்கு வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்களை வசூலிக்கலாம்.

இந்தப் பிரிவில்