வெவ்வேறு ஷிப்பிங் சுயவிவரங்களிலிருந்து ஷிப்பிங் கட்டணங்களைக் கணக்கிடுதல்
நீங்கள் பல ஷிப்பிங் சுயவிவரங்களை உருவாக்கினால் அல்லது சுயவிவரங்களுக்குள் பல இடங்கள் இருந்தால், சில ஆர்டர்களில் வெவ்வேறு சுயவிவரங்கள் அல்லது இடங்களிலுள்ள தயாரிப்புகள் இருக்கலாம். இது நிகழும்போது, ஒவ்வொரு தயாரிப்புக்குமான தனித்தனி ஷிப்பிங் கட்டணங்கள் இணைக்கப்பட்டு, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளருக்கு ஒற்றை ஷிப்பிங் கட்டணமாகக் காட்டப்படும்.
ஒரே இருப்பிடக் குழுவிற்குள் பல இடங்களிலிருந்து ஷிப்பிங் செய்ய வேண்டிய ஆர்டர் உங்களிடம் இருந்தால், அதற்கான ஒற்றை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, $5 USD என்ற நிலையான கட்டணத்தைக் கொண்ட ஓர் இருப்பிடக் குழு உங்களிடம் இருந்து, ஓர் ஆர்டரை நிறைவேற்ற இரண்டு இடங்கள் தேவையெனில், வாடிக்கையாளரிடமிருந்து ஷிப்பிங்கிற்கு $5 USD வசூலிக்கப்படும்.
இந்தப் பக்கத்தில்
- எடை அடிப்படையிலான மற்றும் விலை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களை இணைத்தல்
- உங்கள் ஷிப்பிங் கட்டணங்களுக்குப் பெயரிடுதல்
- வெவ்வேறு சுயவிவரங்களிலுள்ள தயாரிப்புகளுக்கான இணைக்கப்பட்ட கட்டணங்கள்
- ஆர்டரை ஒரேயொரு இடத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் போதான இணைக்கப்பட்ட கட்டணங்கள்
- ஒற்றை ஷிப்பிங் சுயவிவரத்திற்குள் (ஒரே இருப்பிடக் குழு) நிலையான கட்டணங்கள்
- ஒற்றை ஷிப்பிங் சுயவிவரத்திற்குள் (வெவ்வேறு இருப்பிடக் குழுக்கள்) இணைக்கப்பட்ட கட்டணங்கள்
எடை அடிப்படையிலான மற்றும் விலை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களை இணைத்தல்
விலை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களும் எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களும் வெவ்வேறு வழிகளில் இணைக்கப்படுகின்றன. விலை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்கள் கார்ட்டின் மொத்த விலைக்குப் பொருந்தும். எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்கள், ஒவ்வொரு தயாரிப்பின் எடையுடன் உங்கள் ஸ்டோர் இயல்புநிலைப் பொதியின் எடையைச் சேர்த்து, கார்ட்டிலிருக்கும் தனிப்பட்ட தயாரிப்புகளின் எடையை இணைக்கின்றன.
உதாரணமாக, உங்களின் ஸ்டோர் இயல்புநிலைப் பொதியின் எடை 1 lb என வைத்துக்கொள்வோம். எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களை இணைக்க வேண்டிய இரண்டு தயாரிப்புகளுக்கு ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்கிறார். முதல் தயாரிப்பின் எடை 3 lb மற்றும் இரண்டாவது தயாரிப்பின் எடை 5 lb ஆகும். ஒவ்வொரு தயாரிப்புக்குமான எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணத்தைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் எடையானது, அந்தத் தயாரிப்பின் எடையுடன் ஸ்டோர் இயல்புநிலைப் பொதியின் எடையைச் சேர்த்ததாகும்.
முதல் தயாரிப்புக்கு, 4 lb ஷிப்மென்ட்டிற்கு எந்த ஷிப்பிங் கட்டணம் பொருந்துமோ அது (3 lb + 1 lb) பயன்படுத்தப்படும். இரண்டாவது தயாரிப்புக்கு, 6 lb ஷிப்மென்ட்டிற்கு எந்த ஷிப்பிங் கட்டணம் பொருந்துமோ அது (5 lb + 1 lb) பயன்படுத்தப்படும். பின்னர், ஒவ்வொரு தயாரிப்புக்குமான இவ்விரண்டு கட்டணங்களும் இணைக்கப்பட்டு செக்அவுட்டில் வாடிக்கையாளர் தேர்வுசெய்யும் ஷிப்பிங் கட்டணமாக வழங்கப்படும்.
உங்கள் ஷிப்பிங் கட்டணங்களுக்குப் பெயரிடுதல்
ஒரே பெயரைக் கொண்ட ஷிப்பிங் கட்டணங்கள் அவை வெவ்வேறு ஷிப்பிங் சுயவிவரங்களில் இருந்தாலும், ஒன்றாகச் சேர்க்கப்பட்டு செக்அவுட்டில் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும். உங்கள் கட்டணங்கள் அனைத்தும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தால், மிகவும் மலிவான விருப்பங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு Shipping என்ற பெயருடன் செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
உதாரணமாக, உங்களிடம் இரண்டு ஷிப்பிங் சுயவிவரங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்: ஒன்று சட்டைகளுக்கும் மற்றொன்று பேண்ட்களுக்கும். அவை ஒவ்வொன்றும் ஸ்டாண்டர்ட் அஞ்சல் சேவையையும் விரைவுபடுத்தப்பட்ட அஞ்சல் சேவையையும் வழங்குகின்றன. ஸ்டாண்டர்ட் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட அஞ்சல் சேவைகள் இரண்டு ஷிப்பிங் சுயவிவரங்களிலும் ஒரே பெயரைக் கொண்டிருந்தால், பேண்ட்களையும் சட்டைகளையும் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்குச் செக்அவுட்டில் இரண்டு ஷிப்பிங் விருப்பங்களுமே காட்டப்படும்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | பேண்ட்களுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | செக்அவுட்டில் இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணங்கள் | |
|---|---|---|---|
| ஷிப்பிங் கட்டணங்கள் |
|
|
|
இரண்டு சுயவிவரங்களிலும் கட்டணங்களுக்கு ஒரே பெயரிடப்படவில்லை எனில், மிகவும் மலிவான விருப்பங்கள் மட்டுமே ஒன்றாகச் சேர்க்கப்பட்டு செக்அவுட்டில் வாடிக்கையாளருக்கு Shipping எனக் காட்டப்படும்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | பேண்ட்களுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | செக்அவுட்டில் இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணங்கள் | |
|---|---|---|---|
| ஷிப்பிங் கட்டணங்கள் |
|
|
|
வெவ்வேறு சுயவிவரங்களிலுள்ள தயாரிப்புகளுக்கான இணைக்கப்பட்ட கட்டணங்கள்
உதாரணமாக, உலகளவிலான ஷிப்பிங்கிற்கு $3 USD வசூலிக்கும் சட்டைக்கான ஷிப்பிங் சுயவிவரமும், உலகளவிலான ஷிப்பிங்கிற்கு $5 USD வசூலிக்கும் பேண்ட்களுக்கான ஷிப்பிங் சுயவிவரமும் உங்களிடம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு வாடிக்கையாளர் சட்டைகள் மற்றும் பேண்ட்கள் இரண்டையுமே ஆர்டர் செய்தால், செக்அவுட்டில் அவருக்கு $8 USD ஷிப்பிங் கட்டணம் காட்டப்படும்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | பேண்ட்களுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் |
|---|---|---|
| US கிடங்கிலிருந்து $3 USD உலகளாவிய ஷிப்பிங் | US கிடங்கிலிருந்து $5 USD உலகளாவிய ஷிப்பிங் | $3 USD (சட்டைகள்) + $5 USD (பேண்ட்கள்) = $8 USD மொத்த ஷிப்பிங் |
ஆர்டரை ஒரேயொரு இடத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் போதான இணைக்கப்பட்ட கட்டணங்கள்
ஒரு ஷிப்பிங் சுயவிவரம் அல்லது இடத்திலிருந்து ஒற்றைக் கட்டணத்தைப் பெறுவதற்கான விருப்பம் இல்லையென்றால் மட்டுமே கட்டணங்கள் ஒன்றாகச் சேர்க்கப்படும். எல்லா உருப்படிகளும் ஒரு இடத்திலிருந்தே வர முடியும் என்றாலும், இந்த உருப்படிகளைக் கொண்ட இடங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால், ஆர்டரை எந்த இடம் நிறைவேற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றும் முன்னுரிமை தேர்ந்தெடுக்கும்.
US கிடங்கிலிருந்து 1 அலகு, கனடா கிடங்கிலிருந்து 1 அலகு என ஒரு வரிசை உருப்படியில் பல நிறைவேற்றும் இடங்கள் ஈடுபட்டு, இரண்டு இடங்களும் ஒரே இருப்பிடக் குழுவில் இருந்தால், அதிக முன்னுரிமை கொண்ட இடத்தின் கட்டணம் தேர்ந்தெடுக்கப்படும். மற்ற இடத்தின் கட்டணம் இலவசமாகும்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | பேண்ட்களுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் |
|---|---|---|
|
US கிடங்கு (முன்னுரிமை 1)
கனடா கிடங்கு (முன்னுரிமை 2)
|
US கிடங்கு (முன்னுரிமை 1, சரக்கு இருப்பு இல்லை)
கனடா கிடங்கு (முன்னுரிமை 2)
| $5 USD (சட்டைகள்) + $8 USD (பேண்ட்டுகள்) = $13 USD மொத்த ஷிப்பிங் |
கடைசி எடுத்துக்காட்டில், இரண்டு தயாரிப்புகளும் கிடைப்பதனால், இரண்டையும் நிறைவேற்றுவதற்கு நிறைவேற்றல் முன்னுரிமை கனடா நாட்டைச் சேர்ந்த இடத்தைத் தேர்வு செய்கிறது. இது செக்அவுட்டில் வாடிக்கையாளருக்கு $13 USD-ஐ ஒருங்கிணைந்த கட்டணமாக வழங்குகிறது. அமெரிக்காவில் உள்ள இடத்தில் பேண்ட்டுகள் கிடைத்தால், ஒருங்கிணைந்த ஷிப்பிங் கட்டணம் $8 USD ஆக இருக்கும்.
ஒரே ஷிப்பிங் சுயவிவரத்திலுள்ள (ஒரே இருப்பிடக் குழு) நிலையான கட்டணங்கள்
ஒரே இடத்தால் ஆர்டரை நிறைவேற்ற முடியாமல், நிலையான கட்டணம் பயன்படுத்தப்படும் ஒரே இருப்பிடக் குழுவில் உள்ள பல இருப்பிடங்களில் இருந்து ஆர்டரை நிறைவேற்ற முடியுமென்றால், நிலையான ஷிப்பிங் கட்டணம் அனைத்து இருப்பிடங்களுக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக, நியூயார்க் மற்றும் மிச்சிகன் கிடங்குகள் ஒரே இருப்பிடக் குழு 1 இல் இருப்பதாகக் கொள்வோம், மேலும் நீங்கள் நிலையான ஷிப்பிங் கட்டணமாக $5 USD-ஐ அமைக்கிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர் 2 வெவ்வேறு சட்டைகளை ஆர்டர் செய்கிறார், 1 நியூயார்க் இடத்தில் சரக்கு இருப்பில் உள்ளது, மற்றொன்று மிச்சிகன் இடத்தில் உள்ளது.
இருப்பிடக் குழு 1 இல் உள்ள நியூயார்க் மற்றும் மிச்சிகன் கிடங்குகள் இரண்டு சட்டைகளை நிறைவேற்றத் தேவைப்படுகின்றன. இரண்டு ஷிப்மென்ட்டுகளையும் உள்ளடக்கிய வழக்கமான ஷிப்பிங்கிற்கு $5 USD அல்லது விரைவான ஷிப்பிங்கிற்கு $8 USD என்ற ஒற்றை நிலையான ஷிப்பிங் கட்டணம் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும்.
| சட்டைகளின் ஷிப்பிங் சுயவிவரத்தில் உள்ள இருப்பிடக் குழு 1 | நிலையான ஷிப்பிங் கட்டணம் |
|---|---|
|
நியூயார்க் கிடங்கு:
| வழக்கமான ஷிப்பிங்கிற்கு மொத்தம் $5 USD |
மிச்சிகன் கிடங்கு:
| விரைவான ஷிப்பிங்கிற்கு $8 USD |
ஒரே ஷிப்பிங் சுயவிவரத்திலுள்ள (வெவ்வேறு இருப்பிடக் குழுக்கள்) ஒருங்கிணைந்த கட்டணங்கள்
ஒரே இடத்தால் ஆர்டரை நிறைவேற்ற முடியாவிட்டால், தயாரிப்புகள் ஒரு சுயவிவரத்திற்குள் உள்ள ஒரே இருப்பிடக் குழுவில் இருந்து, அவற்றுக்கு நிலையான கட்டணம் பயன்படுத்தப்பட்டால் தவிர, அனைத்துப் தயாரிப்புகளின் ஷிப்பிங் கட்டணங்களும் ஒன்றாகச் சேர்க்கப்படும்.
கீழே உள்ள அட்டவணையில், ஒரு சட்டையின் செலவு $30 USD ஆகவும் அமெரிக்கா மற்றும் கனடா கிடங்குகள் வெவ்வேறு இருப்பிடக் குழுக்களிலும் இருப்பதாகக் கொள்வோம்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் |
|---|---|
|
அமெரிக்கக் கிடங்கு (முன்னுரிமை 1, சரக்கு இருப்பில் 1 உள்ளது)
கனடா கிடங்கு (முன்னுரிமை 2)
| $5 USD (அமெரிக்கக் கிடங்கிலிருந்து சட்டை) + $8 USD (கனடா கிடங்கிலிருந்து சட்டை) = $13 USD மொத்த ஷிப்பிங் |
இரண்டு சட்டைகள் கொண்ட ஆர்டரின் செலவு 60 USD ஆகும். ஷிப்பிங் கட்டணங்கள் விலையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், ஒவ்வொரு சுயவிவரத்திலிருந்தும் 60 USD மதிப்புள்ள ஆர்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் கட்டணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அதற்குப் பதிலாக, எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்கள் ஒருங்கிணைக்கப்படும் சூழலைக் கவனியுங்கள். ஒரு சட்டையின் எடை 2 பவுண்டுகள் எனக் கொள்வோம்.
| சட்டைகளுக்கான ஷிப்பிங் சுயவிவரம் | இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் |
|---|---|
|
அமெரிக்கக் கிடங்கு (முன்னுரிமை 1, சரக்கு இருப்பில் 1 உள்ளது)
கனடா கிடங்கு (முன்னுரிமை 2)
| $3 USD (அமெரிக்கக் கிடங்கிலிருந்து சட்டை) + $5 USD (கனடா கிடங்கிலிருந்து சட்டை) = $8 USD மொத்த ஷிப்பிங் |
ஷிப்பிங் கட்டணங்கள் எடையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், எந்தக் கட்டணங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு இடத்திலும் உள்ள தயாரிப்புகளின் தனிப்பட்ட எடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சட்டையும் 2 பவுண்டுகள் என்பதால், 2 பவுண்டு ஆர்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் கட்டணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.