ஷிப்பிங் சுயவிவரங்களை அமைத்தலும் நிர்வகித்தலும்
ஷிப்பிங் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் இருப்பிடங்களுக்கான ஷிப்பிங் விதிகளின் தொகுப்பாகும். உங்களின் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் ஒரே ஷிப்பிங் கட்டணங்களைக் கொண்டிருக்க, பொதுவான ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தை அமைத்தாலே போதுமானது. குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் கொண்டிருக்க விரும்பினால், கூடுதலான பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரங்களை உருவாக்கலாம்.
இரண்டு குறிப்பிட்ட தயாரிப்புகளுக்குப் பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தையும், மற்ற தயாரிப்புகளுக்குப் பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்தையும் பயன்படுத்தும் ஒரு ஸ்டோருக்கான ஷிப்பிங் அமைப்புகளைப் பின்வரும் வரைபடம் காட்டுகிறது. ஒவ்வொரு ஷிப்பிங் சுயவிவரமும் அது உள்ளடக்கியுள்ள இருப்பிடங்களுக்கு வெவ்வேறு ஷிப்பிங் மண்டலங்களையும் கட்டணங்களையும் கொண்டுள்ளது.

இந்தப் பக்கத்தில்
ஷிப்பிங் சுயவிவரங்களை அமைப்பதற்கான பரிசீலனைகள்
உங்கள் ஷிப்பிங் சுயவிவரங்களை அமைப்பதற்கு முன்பு, பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் ஷிப்பிங் மண்டலங்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஷிப்பிங் மண்டலங்கள் என்பவை ஒரே மாதிரியான ஷிப்பிங் கட்டணங்களைக் கொண்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களின் குழுக்களாகும். ஒவ்வொரு சுயவிவரத்திலும் உள்ள ஒவ்வொரு இருப்பிடமும் அதற்கெனத் தனிப்பட்ட ஷிப்பிங் மண்டலங்களையும் கட்டணங்களையும் கொண்டிருக்கலாம்.
- தேவைக்கேற்பத் தனிப்பயனாக்கப்படும் அச்சிடல் செயலிகள் போன்ற நிறைவேற்றத்தை நிர்வகிக்கும் சில செயலிகள், உங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தில் ஒரு இருப்பிடமாகத் தானாகவே சேர்க்கப்பட்டு, உங்களின் ஷிப்பிங் அமைப்புகளின் அமைவை மாற்றக்கூடும்.
- உங்கள் ஆர்டரில் வெவ்வேறு ஷிப்பிங் சுயவிவரங்கள் அல்லது இருப்பிடங்களில் இருந்தான தயாரிப்புகள் இருந்தால், ஒவ்வொரு தயாரிப்புக்கான தனித்தனி ஷிப்பிங் கட்டணங்கள் இணைக்கப்பட்டு, செக்அவுட்டின் போது உங்கள் வாடிக்கையாளருக்கு ஒற்றைச் ஷிப்பிங் கட்டணமாக வழங்கப்படும். செக்அவுட்டில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஷிப்பிங் கட்டணம் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஷிப்பிங் செலவுகளை ஏற்படுத்தக்கூடும்.
- நிலையான கட்டணம் வசூலிக்கும் ஒரே இருப்பிடக் குழுவிற்குள் உள்ள வெவ்வேறு இருப்பிடங்களில் இருந்து ஷிப் செய்யப்படும் தயாரிப்புகள் உங்கள் ஆர்டரில் இருந்தால், ஒற்றை நிலையான கட்டணம் பயன்படுத்தப்படும்.
- ஒரு தயாரிப்பு அல்லது தயாரிப்பு மாறுபாட்டை ஒரு நேரத்தில் ஒரேயொரு ஷிப்பிங் சுயவிவரத்தில் மட்டுமே உங்களால் சேர்க்க முடியும். நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது தயாரிப்பு மாறுபாட்டை இரண்டாவது ஷிப்பிங் சுயவிவரத்தில் சேர்த்தால், அது முதல் ஷிப்பிங் சுயவிவரத்தில் இருந்து தானாகவே அகற்றப்படும்.
- உங்களின் பணியாளர்கள் அல்லது கூட்டுப்பணியாளருக்கு உங்கள் ஷிப்பிங் சுயவிவரங்களுக்கான அணுகல் தேவைப்பட்டால், அவர்களுக்கு நீங்கள் தயாரிப்புகள் மற்றும் அமைப்புகளை நிர்வகி ஆகிய பணியாளர் அனுமதிகளை வழங்க வேண்டும்.
உங்கள் பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்தை அமைக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், பொதுவான சுயவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்றும் இடங்கள் பிரிவில், உங்கள் இருப்பிடங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுங்கள். மேலும் தகவலுக்கு, உங்கள் நிறைவேற்றும் இடங்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தில் நீங்கள் விரும்பும் ஒவ்வொரு ஷிப்பிங் மண்டலத்திற்கும், பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மண்டலப் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
- பிராந்தியங்கள் பிரிவில், மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு ஷிப்பிங் மண்டலத்திற்கும், ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, ஷிப்பிங் கட்டணத்தின் விவரங்களைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கு
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், பிரத்தியேகச் சுயவிவரத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சுயவிவரப் பெயர் என்பதில், சுயவிவரத்திற்கான பெயரை உள்ளிடவும்.
உங்கள் பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்:
- தயாரிப்புகள் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- தயாரிப்புகள் பிரிவில்,
நிறைவேற்றும் இடங்கள் பிரிவில், உங்கள் இருப்பிடங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுங்கள். மேலும் தகவலுக்கு, உங்கள் நிறைவேற்றும் இடங்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தில் நீங்கள் விரும்பும் ஒவ்வொரு ஷிப்பிங் மண்டலத்திற்கும், பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மண்டலப் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
- மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகள் அல்லது பிராந்தியங்களைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- மண்டலத்தில் நீங்கள் விரும்பும் ஒவ்வொரு ஷிப்பிங் கட்டணத்திற்கும், ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, கட்டண விவரங்களைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் சுயவிவரத்தைத் திருத்து
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஷிப்பிங் சுயவிவரத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தை நீக்கு
நீங்கள் ஒரு பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தை நீக்கலாம், ஆனால் பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்தை நீக்க முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் பிரத்தியேக ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
சுயவிவரத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, உறுதிப்படுத்த மீண்டும் சுயவிவரத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.