ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களை அமைத்தல்

நீங்கள் உங்கள் தயாரிப்புகளை எங்கு அனுப்புகிறீர்கள் மற்றும் ஷிப்பிங்கிற்கு எவ்வளவு வசூலிக்கிறீர்கள் என்பதை ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்கள் வரையறுக்கின்றன. ஐரோப்பா அல்லது வட அமெரிக்கா போன்ற நாடுகள் அல்லது பிராந்தியங்களின் குழுவே ஷிப்பிங் மண்டலம் எனப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும், செக்அவுட்டில் ஷிப்பிங்கிற்காக உங்கள் வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்க, ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் உருவாக்கலாம்.

பின்வரும் வகையான ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் அமைக்கலாம்:

  • நிலையான கட்டணங்கள்: விலையை நீங்களே அமைக்கலாம் மற்றும் வெவ்வேறு கட்டண விருப்பங்களை வழங்கலாம்:
    • நிலையானது: அனைத்து ஆர்டர்களுக்குமான பொதுவான நிலையான கட்டணம்.
    • ஆர்டர் தொகை: ஆர்டர் மதிப்பின் நிபந்தனைகளைக் கொண்ட விலை அடிப்படையிலான கட்டணங்கள்.
    • எடை: உருப்படியின் எடையைச் சார்ந்த நிபந்தனைகளைக் கொண்ட எடை அடிப்படையிலான கட்டணங்கள்.
  • கேரியர் அல்லது செயலி மூலம் கணக்கிடப்பட்ட கட்டணங்கள்: எடை, பரிமாணங்கள் மற்றும் இலக்கு போன்ற ஆர்டர் விவரங்களின் அடிப்படையில் UPS அல்லது FedEx போன்ற ஷிப்பிங் கேரியர்கள் ஷிப்பிங் செலவைத் தீர்மானிக்கின்றன.

நீங்கள் அமைக்கும் ஷிப்பிங் கட்டணங்கள் எதற்கும் இலவச ஷிப்பிங்கையும் வழங்கலாம்.

தொடங்குவதற்கு முன்

ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களை அமைப்பதற்கு முன், பின்வரும் தகவல்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஷிப்பிங் சுயவிவரங்கள்: ஷிப்பிங் சுயவிவரங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும். குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் இடங்களுக்கான வெவ்வேறு ஷிப்பிங் விதிகளை உருவாக்க ஷிப்பிங் சுயவிவரங்கள் உங்களை அனுமதிக்கின்றன. இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகள், ஷிப்பிங் சுயவிவரத்தினுள் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களை அமைப்பதற்குப் பொருந்தும்.
  • சந்தைகள்: ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்க விரும்பினால், அந்த நாடு செயலில் உள்ள ஒரு சந்தையில் இருக்க வேண்டும். புதிய நாட்டிற்கான ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, முதலில் அந்த நாட்டை உள்ளடக்கிய சந்தையைச் சேர்த்து, அதைச் செயல்படுத்திவிட்டு உங்கள் கட்டணங்களை அமைக்கவும். வாடிக்கையாளர்களின் நாடு, கிடைக்கக்கூடிய கட்டணங்களைக் கொண்ட ஷிப்பிங் மண்டலத்தில் இருந்தாலும்கூட, செயலில் இல்லாத சந்தைகளிலுள்ள வாடிக்கையாளர்களால் ஆர்டர்களைச் செய்ய முடியாது. ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் சந்தைகள் குறித்து மேலும் அறிக.
  • ஷிப்பிங் மண்டல அமைப்பு: ஷிப்பிங் சுயவிவரத்திலுள்ள இடங்களின் குழுவிற்குள், ஒரு நாடு அல்லது பிராந்தியம் ஒரு ஷிப்பிங் மண்டலத்தில் மட்டுமே இருக்க முடியும். ஒரு நாடு அல்லது பிராந்தியத்தை மற்றொரு ஷிப்பிங் மண்டலத்தில் சேர்ப்பதற்கு முன், அதை ஒரு ஷிப்பிங் மண்டலத்திலிருந்து நீக்க வேண்டும்.
  • தயாரிப்பு எடைகள்: எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், உங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் எடை மதிப்புகளைக் கொண்டுள்ளன என்பதை உறுதிசெய்யவும். துல்லியமான எடைத் தகவல்கள் இல்லையெனில், செக்அவுட்டில் ஷிப்பிங் கட்டணங்கள் சரியாகக் கணக்கிடப்படாது.
  • கேரியர் அல்லது செயலி மூலம் கணக்கிடப்பட்ட கட்டணங்கள்: அமெரிக்காவிலுள்ள USPS அல்லது கனடாவிலுள்ள Canada Post போன்று எல்லாத் திட்டங்களிலும் கிடைக்கக்கூடிய, உள்ளமைக்கப்பட்ட கேரியர் ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்தலாம். UPS, FedEx அல்லது USPS போன்ற கேரியர்களுடன் உங்களின் சொந்த கேரியர் கணக்குகளை இணைக்க விரும்பினால், மூன்றாம் தரப்புக் கேரியர் கணக்கிட்ட ஷிப்பிங்கை நீங்கள் செயல்படுத்த வேண்டும்; இதற்கு குறிப்பிட்ட Shopify திட்டங்கள் அல்லது உங்கள் Shopify கணக்கில் கூடுதல் மாதாந்திரக் கட்டணம் தேவைப்படும்.

நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல்

ஆர்டர்களுக்கான ஷிப்பிங் செலவை அமைக்க, நிலையான கட்டண ஷிப்பிங் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு நிலையான தொகையை வசூலிக்கலாம், இலவச ஷிப்பிங்கை வழங்கலாம் அல்லது ஆர்டர் மதிப்பு அல்லது எடையின் அடிப்படையில் விலையை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, எல்லா ஆர்டர்களுக்கும் $10 USD என்றும், $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு $5 USD என்றும் வசூலிக்கலாம் அல்லது $100 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்கலாம்.

நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: புதிய ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

    1. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
    3. பிராந்தியங்கள் பிரிவில், மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகளையும் பிராந்தியங்களையும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. எந்த ஷிப்பிங் மண்டலத்தில் நீங்கள் ஷிப்பிங் விருப்பத்தைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு, ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கு ஒரு பெயரைச் சேர்க்கவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெயர் காட்டப்படும்.
    2. விருப்பத்திற்குரியது: Tracked shipping என்பது போல உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கான டெலிவரி விவரங்களைச் சேர்க்க, டெலிவரி விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் விவரங்களை உள்ளிடவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி விவரங்கள் காட்டப்படும்.
    3. கட்டண வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நிலையான கட்டணம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. விலை புலத்தில், இந்த ஷிப்பிங் விருப்பத்திற்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் வசூலிக்கும் தொகையை உள்ளிடவும். ஷிப்பிங் கட்டணத்தை இலவசமாக்க, இந்தப் புலத்தை காலியாக விடவும் அல்லது 0 என உள்ளிடவும்.
    5. விருப்பத்திற்குரியது: போக்குவரத்து நேரத்தை உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் காட்ட, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
      1. போக்குவரத்து நேரம் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தை உள்ளிடவும்
      2. நீங்கள் பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் போக்குவரத்து நேரத்திற்கான பிரத்தியேக வரம்பு அல்லது ஒற்றை மதிப்பை உள்ளிட்டு (3-5 days அல்லது 3 days போன்று), அதன்பின் முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    6. விருப்பத்திற்குரியது: இலவச ஷிப்பிங்கை வழங்க, இலவச ஷிப்பிங்கை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெற, ஒரு ஆர்டருக்கான குறைந்தபட்சத் தொகையை உள்ளிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர் தொகை அடிப்படையிலான கட்டணங்களை அமைத்தல்

ஆர்டர் தொகை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்கள், விலை அடிப்படையிலான கட்டணங்கள் எனவும் அறியப்படும், இவை ஆர்டரின் மொத்த மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு ஷிப்பிங் விலைகளை நீங்கள் வசூலிக்க அனுமதிக்கின்றன.

உதாரணமாக, நீங்கள் $0 USD முதல் $100 USD வரையிலான ஆர்டர்களுக்கு $24.99 USD ஷிப்பிங் கட்டணமாகவும், $100.01 USD முதல் $200 USD வரையிலான ஆர்டர்களுக்கு $9.99 USD ஷிப்பிங் கட்டணமாகவும் வசூலிக்கலாம், அத்துடன் $200.01 USD-க்கும் மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்கலாம். விலை அடிப்படையிலான கட்டணங்களுக்கான உதாரணங்களைக் காட்டும் பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்:

விலை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களுக்கான உதாரணம்
ஆர்டர் மதிப்புஷிப்பிங் கட்டண விலை
$0 USD - $100.00 USD$24.99 USD
$100.01 USD - $200.00 USD$9.99 USD
$200.01 USD மற்றும் அதற்கு மேல்$0 USD (இலவசம்)

ஒரு ஆர்டரில் பல ஷிப்பிங் சுயவிவரங்களைச் சேர்ந்த தயாரிப்புகள் இருக்கும்போது, பொருந்தக்கூடிய விலை அடிப்படையிலான கட்டணங்களை Shopify இணைக்கும். உதாரணமாக, $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு $5 USD கட்டணத்திலான Discounted shipping என்ற கட்டணம் இரண்டு சுயவிவரங்களில் செயலில் இருந்தால், இரண்டு சுயவிவரங்களின் தயாரிப்புகளையும் கொண்ட, மொத்தமாக $55 USD மதிப்புள்ள ஆர்டருக்குச் செக்அவுட்டில் $10 USD என்ற இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: புதிய ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

    1. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
    3. பிராந்தியங்கள் பிரிவில், மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகளையும் பிராந்தியங்களையும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. எந்த ஷிப்பிங் மண்டலத்தில் நீங்கள் ஷிப்பிங் விருப்பத்தைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு, ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கு ஒரு பெயரைச் சேர்க்கவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெயர் காட்டப்படும்.
    2. விருப்பத்திற்குரியது: Tracked shipping என்பது போல உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கான டெலிவரி விவரங்களைச் சேர்க்க, டெலிவரி விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் விவரங்களை உள்ளிடவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி விவரங்கள் காட்டப்படும்.
    3. கட்டண வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ஆர்டர் தொகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. ஒவ்வொரு வரம்பிற்கும் பின்வரும் தகவலை உள்ளிடுவதன் மூலம், உங்கள் விலை வரம்புகளை அமைக்கவும்:
      1. குறைந்தபட்சம் புலத்தில், இந்தக் கட்டணத்திற்கான குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை உள்ளிடவும்.
      2. அதிகபட்சம் புலத்தில், இந்தக் கட்டணத்திற்கான அதிகபட்ச ஆர்டர் மதிப்பை உள்ளிடவும். உங்களுக்கு அதிகபட்ச வரம்பு வேண்டாம் என்றால், இந்தப் புலத்தை காலியாக விடவும்.
      3. விலை புலத்தில், இந்த ஷிப்பிங் கட்டணத்திற்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் வசூலிக்கும் தொகையை உள்ளிடவும். ஷிப்பிங் கட்டணத்தை இலவசமாக்க, இந்தப் புலத்தை காலியாக விடவும் அல்லது 0 என உள்ளிடவும்.
      4. விருப்பத்திற்குரியது: போக்குவரத்து நேரம் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் போக்குவரத்து நேரத்திற்கான பிரத்தியேக வரம்பு அல்லது ஒற்றை மதிப்பை உள்ளிட்டு (3-5 days அல்லது 3 days போன்று), முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. கூடுதல் விலை வரம்புகளைச் சேர்க்க, Plus icon ஐகானைக் கிளிக் செய்யவும்.
    6. விருப்பத்திற்குரியது: இலவச ஷிப்பிங்கை வழங்க, இலவச ஷிப்பிங்கை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெற, ஒரு ஆர்டருக்கான குறைந்தபட்சத் தொகையை உள்ளிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

எடை அடிப்படையிலான கட்டணங்களை அமைத்தல்

ஒரே இடத்திலிருந்து ஒரே ஷிப்பிங் விருப்பத்துடன் ஷிப்பிங் செய்யப்படும் உருப்படிகளின் ஒருங்கிணைந்த எடையின் அடிப்படையில், வெவ்வேறு ஷிப்பிங் விலைகளை வசூலிக்க எடை அடிப்படையிலான கட்டணங்கள் உங்களை அனுமதிக்கின்றன. எடை அடிப்படையிலான கட்டணங்களை அமைப்பதற்கு முன்பாக, உங்களின் அனைத்துத் தயாரிப்புகளிலும் துல்லியமான எடைத் தரவு இருப்பதை உறுதிசெய்யவும். தயாரிப்புகளின் எடைத் தகவல் விடுபட்டிருந்தால், செக்அவுட்டில் ஷிப்பிங் கட்டணங்கள் சரியாகக் கணக்கிடப்படாது.

உதாரணமாக, நீங்கள் 0 lb முதல் 0.99 lb வரையிலான ஆர்டர்களுக்கு $4.99 USD ஷிப்பிங் கட்டணமாகவும், 1 lb முதல் 4.99 lb வரையிலான ஆர்டர்களுக்கு $9.99 USD ஷிப்பிங் கட்டணமாகவும், அத்துடன் 5 lb முதல் 9.99 lb வரையிலான ஆர்டர்களுக்கு $19.99 USD ஷிப்பிங் கட்டணமாகவும் வசூலிக்கலாம். எடை அடிப்படையிலான கட்டணங்களுக்கான உதாரணங்களைக் காட்டும் பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்:

எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களுக்கான உதாரணம்
ஆர்டரின் மொத்த எடைஷிப்பிங் கட்டண விலை
0 lb - 0.99 lb$4.99 USD
1 lb - 4.99 lb$9.99 USD
5 lb - 9.99 lb$19.99 USD

எடை அடிப்படையிலான ஷிப்பிங் கட்டணங்களை இணைக்கும்போது, ஒவ்வொரு தயாரிப்புடனும் உங்களின் ஸ்டோரின் இயல்புநிலைப் பொதியின் எடையைச் சேர்த்து, தனிப்பட்ட தயாரிப்புகளின் எடைகளுக்குப் பொருந்தும் கட்டணங்களை Shopify இணைக்கும். இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணங்கள் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: புதிய ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

    1. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
    3. பிராந்தியங்கள் பிரிவில், மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகளையும் பிராந்தியங்களையும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. எந்த ஷிப்பிங் மண்டலத்தில் நீங்கள் ஷிப்பிங் விருப்பத்தைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு, ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கு ஒரு பெயரைச் சேர்க்கவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெயர் காட்டப்படும்.
    2. விருப்பத்திற்குரியது: Tracked shipping என்பது போல உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கான டெலிவரி விவரங்களைச் சேர்க்க, டெலிவரி விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் விவரங்களை உள்ளிடவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி விவரங்கள் காட்டப்படும்.
    3. கட்டண வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, எடை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. ஒவ்வொரு வரம்பிற்கும் பின்வரும் தகவலை உள்ளிடுவதன் மூலம், உங்கள் எடை வரம்புகளை அமைக்கவும்:
      1. குறைந்தபட்சம் புலத்தில், இந்தக் கட்டணத்திற்கான குறைந்தபட்ச ஆர்டர் எடையை உள்ளிடவும்.
      2. அதிகபட்சம் புலத்தில், இந்தக் கட்டணத்திற்கான அதிகபட்ச ஆர்டர் எடையை உள்ளிடவும். உங்களுக்கு அதிகபட்ச வரம்பு வேண்டாம் என்றால், இந்தப் புலத்தை காலியாக விடவும்.
      3. விலை புலத்தில், இந்த ஷிப்பிங் கட்டணத்திற்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் வசூலிக்கும் தொகையை உள்ளிடவும். ஷிப்பிங் கட்டணத்தை இலவசமாக்க, இந்தப் புலத்தை காலியாக விடவும் அல்லது 0 என உள்ளிடவும்.
      4. விருப்பத்திற்குரியது: போக்குவரத்து நேரம் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் போக்குவரத்து நேரத்திற்கான பிரத்தியேக வரம்பு அல்லது ஒற்றை மதிப்பை உள்ளிட்டு (3-5 days அல்லது 3 days போன்று), முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. கூடுதல் எடை வரம்புகளைச் சேர்க்க, Plus icon ஐகானைக் கிளிக் செய்யவும்.
    6. விருப்பத்திற்குரியது: இலவச ஷிப்பிங்கை வழங்க, இலவச ஷிப்பிங்கை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெற, ஒரு ஆர்டருக்கான குறைந்தபட்சத் தொகையை உள்ளிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உள்ளூர் நாணயங்களில் நிலையான கட்டணங்களை உருவாக்குதல்

வெவ்வேறு சந்தைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் உள்ளூர் நாணயங்களில் நிலையான கட்டணங்களை உருவாக்கலாம். உதாரணமாக, யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு $10 USD நிலையான ஷிப்பிங் கட்டணத்தையும், ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு €15 EUR நிலையான ஷிப்பிங் கட்டணத்தையும் நீங்கள் வழங்கலாம்.

உங்கள் சந்தைக்கான உள்ளூர் நாணயங்களைச் செயல்படுத்தும்போது, வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் ஷிப்பிங் கட்டணங்கள் தானாகவே காட்டப்படும். தானியங்கி மாற்றத்தை நம்பியிருப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு பிராந்தியங்களுக்குக் குறிப்பிட்ட நிலையான கட்டணங்களை அமைக்க விரும்பினால், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்தனி ஷிப்பிங் மண்டலங்களை உருவாக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் Europe சந்தையில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் ஆகியவை இருந்தால், தானியங்கி மாற்றம் உங்கள் €10 EUR கட்டணத்தை ஸ்வீடிஷ் வாடிக்கையாளர்களுக்குத் தோராயமாக 120 SEK ஆகக் காட்டும். (மாற்றப்பட்ட தொகைக்கு பதிலாக) ஸ்வீடனுக்குச் சரியாக 120 SEK கட்டணம் விதிக்க விரும்பினால், தனித்தனி மண்டலங்களை உருவாக்கவும்: யூரோ நாடுகளுக்கு (பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி) €10 EUR கட்டணத்துடன் ஒரு மண்டலமும் ஸ்வீடனுக்கு 120 SEK கட்டணத்துடன் மற்றொரு மண்டலமும் உருவாக்கவும்.

கேரியர் அல்லது செயலி மூலம் கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல்

கேரியரால் கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணங்கள், செக்அவுட்டில் UPS, FedEx அல்லது USPS போன்ற கேரியர்களிடமிருந்து கட்டணங்களைக் காண்பிக்கும். எடை, பரிமாணங்கள் மற்றும் இலக்கு உள்ளிட்ட ஆர்டர் விவரங்களின் அடிப்படையில் கேரியர்கள் கட்டணங்களைத் தீர்மானிக்கின்றன. நீங்கள் ஒரு ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது ஷிப்பிங் கேரியர் உங்களிடம் விதிக்கும் அதே தொகையை உங்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க இது உதவுகிறது.

ஷிப்பிங்கிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதைத் தீர்மானிக்கும்போது ஷிப்பிங் கேரியர்கள் பின்வரும் காரணிகளைப் பயன்படுத்துகின்றன:

  • ஷிப்பிங் தோற்றம்
  • ஷிப்பிங் இலக்கு
  • ஷிப்மென்ட்டின் எடை
  • ஷிப்மென்ட்டின் மதிப்பு
  • ஷிப்மென்ட் பெட்டியின் பரிமாணங்கள்
  • பரிமாண எடை
  • கோரப்பட்ட டெலிவரி வேகம்

செக்அவுட்டில் கேரியரால் கணக்கிடப்பட்ட துல்லியமான கட்டணங்களை உறுதிசெய்ய, துல்லியமான தயாரிப்பு எடைகளை நீங்கள் உள்ளிட வேண்டும். இந்தக் கட்டணங்கள் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நேரத்தைக் காட்டுகின்றன, ஆனால் அவற்றில் உங்கள் செயலாக்க நேரம் சேர்க்கப்படவில்லை. செயலாக்க நேரம் மற்றும் போக்குவரத்து நேரம் இரண்டையும் உள்ளடக்கிய விநியோகத் தேதிகளைக் காட்ட, விநியோகத் தேதிகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்கள் கிடைக்கும் தன்மை

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்கள் கிடைக்கின்றன. கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்கள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களில் அவற்றின் கிடைக்கும் தன்மை குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:

நிறைவேற்றும் இடத்தின் அடிப்படையில் கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்கள் கிடைக்கும் தன்மை
நிறைவேற்றும் இடம்கிடைக்கும் கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்கள்
அமெரிக்காUSPS, DHL மற்றும் UPS
கனடாCanada Post மற்றும் Purolator
யுனைடெட் கிங்டம்DPD UK, InPost UK மற்றும் Royal Mail
இத்தாலிBRT
ஜெர்மனிDHL Paket
ஸ்பெயின்Seur

கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்களை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: புதிய ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

    1. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
    3. பிராந்தியங்கள் பிரிவில், மண்டலத்தின் பகுதியாக இருக்கும் நாடுகளையும் பிராந்தியங்களையும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. எந்த ஷிப்பிங் மண்டலத்தில் நீங்கள் ஷிப்பிங் விருப்பத்தைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு, ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்கவும்:

    1. விருப்பத்திற்குரியது: Tracked shipping என்பது போல உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கான டெலிவரி விவரங்களைச் சேர்க்க, டெலிவரி விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் விவரங்களை உள்ளிடவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி விவரங்கள் காட்டப்படும்.
    2. கட்டண வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து கேரியர் அல்லது செயலி மூலம் கணக்கிடப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. இதைக் கிளிக் செய்யவும்: கேரியர் மற்றும் செயலிகளைத் தேர்ந்தெடு, அதன் பிறகு பின்வரும் படிகளை நிறைவு செய்யவும்:
      1. கேரியர் அல்லது செயலி கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ஒரு ஷிப்பிங் கேரியர் அல்லது செயலியைத் தேர்ந்தெடுக்கவும்.
      2. செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் காட்ட விரும்பும் ஷிப்பிங் சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்க எந்தச் சேவைகளும் கிடைக்கவில்லை எனில், கேரியர் அல்லது செயலி மூலம் கட்டணங்கள் தானாகவே காட்டப்படும்.
      3. விருப்பத்திற்குரியது: புதிய ஷிப்பிங் சேவைகள் கிடைக்கும்போது அவற்றைத் தானாகவே சேர்க்க, புதிய சேவைகள் கிடைக்கும்போது தானாகவே சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      4. விருப்பத்திற்குரியது: கையாளுதல் கட்டணம் பிரிவில், கேரியர் கட்டணத்துடன் சேர்க்க ஒரு சதவீதத்தை அல்லது நிலையான தொகையை உள்ளிடவும். பொதியாக்கம் மற்றும் கையாளுதல் செலவுகளை ஈடுகட்ட நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.
      5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. விருப்பத்திற்குரியது: ஆர்டர்கள் குறைந்தபட்ச மதிப்பைப் பூர்த்தி செய்யும்போது இலவச ஷிப்பிங்கை வழங்க, இலவச ஷிப்பிங்கை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு ஆர்டர் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெறத் தேவையான குறைந்தபட்ச தொகையை உள்ளிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்களுக்கு மார்க்கப் அல்லது தள்ளுபடி அளித்தல்

செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் கட்டணங்களை மார்க்கப் செய்ய அல்லது தள்ளுபடி செய்ய, கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் சரிசெய்யலாம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்குக் கட்டணம் அதிகமாக இருந்தால், விற்பனையை அதிகரிக்க நீங்கள் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்யலாம். அதற்குப் பதிலாக, உங்களின் பொதியாக்கம் மற்றும் கையாளுதல் செலவுகளை ஈடுகட்ட முடியாத அளவுக்குக் கட்டணம் மிகக் குறைவாக இருந்தால், நீங்கள் அதை அதிகரிக்கலாம்.

கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்களை, கூடுதல் நிலையான கட்டணம் அல்லது மொத்த ஷிப்பிங் கட்டணத்தின் ஒரு சதவீதம் மூலம் நீங்கள் மார்க்கப் செய்யலாம். கூடுதல் நிலையான கட்டணம் மற்றும் சதவீத மார்க்கப் ஆகிய இரண்டையும் சேர்க்க, கேரியரால் கணக்கிடப்படும் கட்டணத்தை நீங்கள் சரிசெய்தால், நிலையான கட்டணம் சேர்க்கப்படுவதற்கு முன்பு சதவீதம் கணக்கிடப்படும். எடுத்துக்காட்டாக, 50% மார்க்கப் மற்றும் $1.00 USD நிலையான கட்டணத்துடன் கூடிய $5.00 USD கட்டணமானது, வாடிக்கையாளருக்கு $9.00 USD ஆக அல்லாமல் $8.50 USD ஆகக் கணக்கிடப்படும்.

தள்ளுபடி செய்யப்பட்ட ஷிப்பிங்கை வழங்க நீங்கள் விரும்பினால், -5% அல்லது $-2.50 போன்ற எதிர்மறை மதிப்பை உள்ளிடவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் சரிசெய்ய விரும்பும், கேரியரால் கணக்கிடப்படும் கட்டணத்தின் அருகில் உள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, ஷிப்பிங் விருப்பத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கையாளுதல் கட்டணம் பிரிவில், கட்டணச் சரிசெய்தல்களை அமைக்கவும்.

  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்து, அதன் பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களின் தற்போதைய ஷிப்பிங் விருப்பத்தில் இலவச ஷிப்பிங்கைச் சேர்த்தல்

உங்களின் தற்போதைய ஷிப்பிங் விருப்பத்திற்கு இலவச ஷிப்பிங்கை வழங்கலாம். ஒரு ஆர்டர் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெற, நீங்கள் குறைந்தபட்ச தொகையை உள்ளிட வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் குறைந்தபட்ச தொகையாக $50 USD என்பதை உள்ளிடலாம். $50 USD அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்கள் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெறும் என்பதே இதன் பொருளாகும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் விருப்பத்திற்கு Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, ஷிப்பிங் விருப்பத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. இலவச ஷிப்பிங்கை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு ஆர்டர் இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெறத் தேவையான குறைந்தபட்ச தொகையை உள்ளிடவும்.

  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நிபந்தனைக்குட்பட்ட கட்டணங்கள் மற்றும் இலவச ஷிப்பிங் கவரேஜ்

எந்தவொரு கட்டண வகைக்கும் நீங்கள் இலவச ஷிப்பிங்கை வழங்கலாம். இலவச ஷிப்பிங் எவ்வாறு பொருந்தும் என்பது கட்டணத்தில் நிபந்தனைகள் உள்ளதா என்பதைப் பொறுத்தது:

  • நிபந்தனைகள் இல்லாத கட்டணங்கள்: இந்தக் கட்டணத்தின் கீழ் வரும் ஒவ்வொரு ஆர்டருக்கும் இலவச ஷிப்பிங் பொருந்தும்.
  • ஆர்டர் தொகை அல்லது எடை அடிப்படையிலான கட்டணங்கள்: ஒரு ஆர்டர் அதன் மொத்தம் அல்லது எடையை உள்ளடக்கிய ஒரு அடுக்கிற்குள் (tier) வரும்போது மட்டுமே இலவச ஷிப்பிங் பொருந்தும்.

நீங்கள் ஆர்டர் தொகை அல்லது எடை அடிப்படையிலான அடுக்குகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் அடுக்குகள் ஆர்டர் மொத்தங்கள் அல்லது எடைகளின் முழு வரம்பையும் உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங்கைச் சேர்த்தல்

குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இலவச ஷிப்பிங்கைச் சேர்க்கலாம்:

  • சில தயாரிப்புகளுக்கு மட்டும் இலவச ஷிப்பிங்கை வழங்க, நீங்கள் தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கி பொருத்தமான தயாரிப்புகளைச் சேர்க்க வேண்டும், பிறகு இலவச ஷிப்பிங்கை வழங்கும் நிலையான கட்டணத்தை உருவாக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங்கை வழங்க, நீங்கள் இலவச ஷிப்பிங் தள்ளுபடியை உருவாக்க வேண்டும். தள்ளுபடிக்குத் தகுதியான வாடிக்கையாளர்கள் செக்அவுட்டின் போது தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடலாம், பின்னர் அவர்களின் ஆர்டருக்கு இலவச ஷிப்பிங் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர் பணத் தள்ளுபடி மற்றும் இலவச ஷிப்பிங் தள்ளுபடி இரண்டையும் பெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கவும்.

ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களைத் திருத்து

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் மண்டலம் அல்லது கட்டணத்திற்கு அடுத்துள்ள, Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. மண்டலத்தைத் திருத்து அல்லது ஷிப்பிங் விருப்பத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. தேவையான மாற்றங்களைச் செய்துவிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் கட்டணங்களை நீக்கு

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் சுயவிவரங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் ஷிப்பிங் மண்டலம் அல்லது கட்டணத்திற்கு அடுத்துள்ள, Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷிப்பிங் கட்டணங்களைத் தேர்ந்தெடுப்பதில் வாடிக்கையாளர் அனுபவம்

செக்அவுட்டில் வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணங்கள் காட்டப்பட வேண்டும் என்பதை உங்கள் ஷிப்பிங் அமைப்புகள் தீர்மானிக்கின்றன. உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை அமைத்த பிறகு, உங்கள் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய கட்டணங்களைச் சரிபார்க்க நீங்கள் ஒரு சோதனை ஆர்டரைச் செய்யலாம். ஷிப்பிங் கட்டணங்களைச் சோதித்தல் மற்றும் சிக்கல் தீர்த்தல் குறித்து மேலும் அறிக.

வாடிக்கையாளர்கள் டெலிவரி முகவரியை உள்ளிடும் வரை எந்த ஷிப்பிங் கட்டணங்களும் அவர்களுக்கு வழங்கப்படாது. ஒரு வாடிக்கையாளர் செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரியை உள்ளிட்ட பிறகு, பொருந்தக்கூடிய ஷிப்பிங் கட்டணங்கள் காட்டப்படும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களின் ஆர்டருக்குப் பொருந்தும் கட்டணங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன, மேலும் மலிவான கட்டணம் இயல்பாகவே காட்டப்படும். வாடிக்கையாளர் செக்அவுட்டை அடைந்த பிறகு தனது ஆர்டர் உள்ளடக்கங்களை மாற்றினால், அவர்கள் இறுதி கொள்முதல் படிநிலையைத் தொடரும்போது ஷிப்பிங் கட்டணங்கள் மறுபடியும் கணக்கிடப்படும்.

உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் சேர்க்கப்படாத ஒரு பிராந்தியத்தின் ஷிப்பிங் முகவரியை உள்ளிடும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் பிராந்தியத்திற்கு எந்த ஷிப்பிங் கட்டணமும் இல்லை என்ற அறிவிப்பு வழங்கப்படும்.