உங்களின் நிலையான ஷிப்பிங் கட்டணங்களுக்கான போக்குவரத்து நேரத்தை அமைத்தல்

செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்களுக்குப் போக்குவரத்து நேரத்தைக் காட்ட, உங்களின் நிலையான ஷிப்பிங் கட்டணங்களில் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்கலாம். போக்குவரத்து நேரம் என்பது உங்கள் ஷிப்பிங் கேரியர் உங்களிடமிருந்து ஷிப்மென்ட்டைப் பெறுவதற்கும் அது வாடிக்கையாளரின் முகவரியைச் சென்றடைவதற்குமான காலவரம்பைக் குறிக்கிறது.

விரைவான மற்றும் விலை உயர்ந்த ஷிப்பிங் விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மதிப்பைப் புரிந்துகொள்ள போக்குவரத்து நேரம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும், மேலும் தயாரிப்புகளை விரைவாகப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களிடம் விற்பனையை மேற்கொள்ளவும் உங்களுக்கு இது உதவும்.

போக்குவரத்து நேரத்தை அமைப்பதற்கான கவனத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் ஷிப்பிங் கட்டணங்களில் போக்குவரத்து நேரத்தைச் சேர்ப்பதற்கு முன், பின்வரும் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைச் சரிபார்க்கவும்:

  • அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள நிறைவேற்றும் இடங்களுக்குப் போக்குவரத்து நேரம் கிடைக்கிறது.
  • ஷிப்பிங் அமைப்புகளின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தும் ஸ்டோர்களில் மட்டுமே போக்குவரத்து நேரம் செயல்படும்.
  • ஆர்டரைச் செயலாக்கும் நேரத்தைப் போக்குவரத்து நேரம் கணக்கில் கொள்ளாது. செயலாக்க நேரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, செயலாக்க நேரத்தைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் குறைத்தல் என்பதைப் பார்க்கவும்.
  • வெவ்வேறு சுயவிவரங்களின் ஷிப்பிங் கட்டணங்களில் போக்குவரத்து நேரம் இருக்கும்போது மட்டுமே, செக்அவுட்டின் போது ஒருங்கிணைந்த ஷிப்பிங் கட்டணங்களுக்கான போக்குவரத்து நேரம் காட்டப்படும். இவற்றில் அதிகபட்சப் போக்குவரத்து நேரம் காட்டப்படும்.
  • நிலையான ஷிப்பிங் கட்டணங்களுக்கு மட்டுமே நீங்கள் போக்குவரத்து நேரத்தை உள்ளமைக்க முடியும். கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங் கட்டணங்களில் போக்குவரத்து நேரம் தானாகவே சேர்க்கப்படும்.
  • உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நாடுகள் கலந்து இருக்க முடியாது. உதாரணமாக, உங்கள் ஸ்டோர் அமெரிக்காவில் இருந்து, நீங்கள் பிரான்சுக்கும் ஷிப் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அமெரிக்காவிற்கு ஒரு ஷிப்பிங் மண்டலத்தையும் பிரான்சுக்கு வேறொரு ஷிப்பிங் மண்டலத்தையும் அமைக்க வேண்டும். இரு நாடுகளையும் ஒரே மண்டலத்தில் உங்களால் சேர்க்க முடியாது.
  • ஒவ்வொரு ஷிப்பிங் மண்டலத்திலும் ஒரு நாடும் அதன் பிராந்தியங்களும் மட்டுமே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரான்சுக்கான மண்டலத்தில் பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு மாகாணங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், பல நாடுகள் இருக்கக் கூடாது.
  • போக்குவரத்து நேரத்தை அமைப்பதற்கு முன், உங்கள் செயலிகளையும் இடங்களையும் அமைத்துக்கொள்ளுங்கள். நிறைவேற்றத்தை நிர்வகிக்கும் Printful போன்ற செயலிகள், உங்களின் ஷிப்பிங் சுயவிவரத்தில் ஒரு இடமாகத் தானாகவே சேர்க்கப்படும், மேலும் அவை உங்களின் தற்போதைய ஷிப்பிங் கட்டணங்களுக்கான போக்குவரத்து நேரத்தை முடக்கக்கூடும்.

போக்குவரத்து நேரம் மற்றும் டெலிவரி விளக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்

போக்குவரத்து நேரம் என்பது செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்களுக்குக் கணக்கிடப்பட்ட டெலிவரி தேதிகளைக் காட்டும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விருப்பமாகும். நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கும்போது, Standard, Express அல்லது Economy போன்ற கிடைக்கக்கூடிய போக்குவரத்து நேர விருப்பங்களிலிருந்து மட்டுமே உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

டெலிவரி விளக்கங்கள் என்பது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்குவதற்காக, ஏதேனும் நிலையான ஷிப்பிங் கட்டணத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய பிரத்தியேக உரையாகும்.

வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட டெலிவரி தகவல்களை நீங்கள் வழங்க வேண்டுமெனில், உங்களின் நிலையான ஷிப்பிங் கட்டணத்தில் பிரத்தியேக டெலிவரி விளக்கத்தைச் சேர்க்கலாம், ஆனால் போக்குவரத்து நேரம் காட்டுவதைப் போல் இது கணக்கிடப்பட்ட டெலிவரி தேதிகளைக் காட்டாது.

உங்கள் ஷிப்பிங் கட்டணத்தில் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்கவும்

ஒரு ஷிப்பிங் கட்டணத்தில் நீங்கள் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்கும்போது, செக்அவுட்டில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய ஷிப்பிங் கட்டணப் பெயரின் கீழே போக்குவரத்து நேரம் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்) என்ற ஷிப்பிங் விருப்பம் காட்டப்படலாம்.

புதிய ஷிப்பிங் கட்டணத்தில் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் பிரிவில், நீங்கள் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: புதிய ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்க, பின்வரும் படிகளை முடிக்கவும்:

    1. ஷிப்பிங் மண்டலங்கள் பிரிவில், மண்டலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மண்டலத்தின் பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் மண்டலத்திற்கான பெயரை உள்ளிடவும்.
    3. பிராந்தியங்கள் பிரிவில், இந்த மண்டலத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளையும் பிராந்தியங்களையும் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் கட்டணத்தைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் மண்டலத்திற்கு அடுத்துள்ள ஷிப்பிங் விருப்பத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பெயர் புலத்தில், உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கான பெயரைச் சேர்க்கவும்.

  6. விருப்பத்தேர்வு: உங்கள் ஷிப்பிங் விருப்பத்திற்கு ஒரு விளக்கத்தைச் சேர்க்க, விளக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, விளக்கத்தை உள்ளிடவும்.

  7. கட்டண வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நிலையானது, ஆர்டர் தொகை அல்லது எடை ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. விருப்பத்தேர்வு: நீங்கள் ஆர்டர் தொகை அல்லது எடை என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தால், நிபந்தனைக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகளை உள்ளிடவும்.

  9. விலை புலத்தில், இந்த ஷிப்பிங் விருப்பத்திற்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் வசூலிக்கும் தொகையை உள்ளிடவும்.

  10. போக்குவரத்து நேரம் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தை உள்ளிடவும்.

  11. விருப்பத்தேர்வு: நீங்கள் பிரத்தியேக போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  12. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்

  13. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தற்போதுள்ள ஷிப்பிங் கட்டணத்தில் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. ஷிப்பிங் பிரிவில், நீங்கள் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் போக்குவரத்து நேரத்தைச் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் விருப்பத்திற்கு அடுத்துள்ள … என்பதைக் கிளிக் செய்து, பிறகு ஷிப்பிங் விருப்பத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. போக்குவரத்து நேரம் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தை உள்ளிடவும்.

  5. விருப்பத்தேர்வு: நீங்கள் பிரத்தியேக போக்குவரத்து நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், பிரத்தியேகப் போக்குவரத்து நேரத்தை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

போக்குவரத்து நேரத்துடன் பொருந்தும் சேவைகள்

போக்குவரத்து நேரம் ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் ஷிப்பிங் கேரியர் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்கா

அமெரிக்காவிற்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
அமெரிக்காவிற்குள்சிக்கனமானது (5 முதல் 8 வணிக நாட்கள்)
  • USPS Media Mail
  • USPS Parcel Select Ground
  • UPS SurePost (Shopify-இல் ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்திக் கிடைக்காது)
நிலையானது (3 முதல் 4 வணிக நாட்கள்)
  • UPS Ground
  • USPS First Class Mail
  • USPS First Class Parcel Service
  • USPS Priority Mail
  • UPS 3 Day Select
விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்)
  • UPS 2nd Day Air
  • USPS Priority Mail Express
  • UPS Next Day Air
கனடாசர்வதேசச் சிக்கனமானது (6 முதல் 10 வணிக நாட்கள்)
  • USPS Priority Mail International
சர்வதேச நிலையானது (2 முதல் 3 வணிக நாட்கள்)
  • UPS Standard
  • UPS Worldwide Expedited
சர்வதேச விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்)
  • UPS Worldwide Saver
  • UPS Worldwide Express
  • DHL Worldwide Express
சர்வதேசம்சர்வதேசச் சிக்கனமானது (6 முதல் 18 வணிக நாட்கள்)
  • USPS First Class Package International
சர்வதேச நிலையானது (6 முதல் 12 வணிக நாட்கள்)
  • USPS Priority Mail International
  • UPS Worldwide Expedited
  • USPS Priority Mail Express International
சர்வதேச விரைவானது (1 முதல் 5 வணிக நாட்கள்)
  • UPS Worldwide Saver
  • UPS Worldwide Express
  • DHL Worldwide Express

கனடா

கனடாவிற்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
கனடாவிற்குள்நிலையானது (3 முதல் 9 வணிக நாட்கள்)
  • Canada Post Expedited Parcel
  • Canada Post Regular Parcel (Shopify-இல் ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்திக் கிடைக்காது)
விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்)
  • Canada Post Xpresspost
  • Canada Post Priority
அமெரிக்காசர்வதேச நிலையானது (4 முதல் 8 வணிக நாட்கள்)
  • Canada Post Small Packet Air USA
  • Canada Post Tracked Packet USA
  • Canada Post Expedited Parcel USA
சர்வதேச விரைவானது (2 முதல் 3 வணிக நாட்கள்)
  • Canada Post Xpresspost USA
சர்வதேசம்சர்வதேசச் சிக்கனமானது (20 முதல் 60 வணிக நாட்கள்)
  • Canada Post Small Packet International Surface
  • Canada Post International Parcel Surface
  • Canada Post International Parcel Air
சர்வதேச நிலையானது (6 முதல் 10 வணிக நாட்கள்)
  • Canada Post Small Packet International Air
  • Canada Post Tracked Packet Intl
சர்வதேச விரைவானது (4 முதல் 7 வணிக நாட்கள்)
  • Canada Post Xpresspost Intl

பிரான்ஸ்

பிரான்ஸிற்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (பிரான்ஸ்)ஸ்டாண்டர்டு (2 முதல் 4 வணிக நாட்கள்)
  • La Poste Lettre Verte
  • La Poste Lettre Recommandée
  • La Poste Prêt-à-Recommandée Suivi
  • La Poste Prêt-à-Poster Lettre Suivie
  • La Poste Lettre Recommandée Mobile
  • La Poste Valeur Declarée Nationale
  • La Poste Lettre Suivie
  • La Poste Prêt-à-Poster Smart Valeur Declarée
  • La Poste Prêt-à-Poster Lettre Verte
  • La Poste Prêt-à-Poster Regionaux Lettre Verte
  • Colissimo France (Métropole)
  • Colissimo Etiquette Prepayée
  • Colissimo Prêt-à-Envoyer France
  • Colissimo Expert
  • Colis Privé Livraison a domicile
  • Mondial Relay Points Relais
  • DPD Classic
  • UPS Standard
விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்)
  • La Poste Lettre Prioritaire
  • La Poste Prêt-à-Poster Regionaux Lettre Prioritaire
  • La Poste Prêt-à-Poster Lettre Prioritaire
  • Chronopost Chrono Relais 13 (Métropole)
  • Chronopost Chrono Sameday
  • Chronopost Chrono (8, 9, 10, 13, 18)
  • Chronopost Prêt-à-Expedier Chrono 13 (Métropole)
  • DHL Express (9:00; 12:00; 18:00)
  • UPS Express Plus
  • UPS Express
  • UPS Express Saver
சர்வதேச (ஐரோப்பா)
ஸ்டாண்டர்டு (2 முதல் 8 வணிக நாட்கள்)
  • La Poste Lettre Suivie Internationale
  • Chrono Classic (Europe)
  • Chrono Relais (Europe)
  • Colissimo Expert (Europe)
  • Colissimo International (Europe)
  • Colissimo Prêt-à-Envoyer Europe
  • DHL GlobalMail
  • DHL Colis
  • DHL Economy Select
  • Delivengo Easy
  • Mondial Relay Points Relais
  • Mondial Relay Accueil
  • DPD Classic Europe
  • UPS Standard - Europe
எக்ஸ்பிரஸ் (1 முதல் 3 வணிக நாட்கள்)
  • La Poste Lettre Prioritaire Internationale
  • Chronopost Prêt-à-Expedier Chrono Express (Europe)
  • Chronopost Chrono Express (Europe)
  • DHL Express Worldwide
  • UPS Worldwide Express Freight
  • UPS Worldwide Express Freight Midday
  • UPS Express Saver

ஜெர்மனி

ஜெர்மனிக்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (ஜெர்மனி)ஸ்டாண்டர்டு (2 முதல் 4 வணிக நாட்கள்)
  • DHL Päckchen (S or M)
  • DHL Paket
  • GLS Paketversand National (XS - XL)
  • GLS BusinessParcel - Paketversand National
  • Deutsche Post Brief (Standard, Kompakt, Gross, Maxi) National
  • Deutsche Post Einschreiben (Brief) National
  • Deutsche Post Wertbrief National
  • Deutsche Post Warenversand (< 500g, < 1000g) National
  • Evri Päckchen und Pakete - National
  • DPD Brief (Standard, Kompakt, Gross, Maxi 1, Maxi 2)
  • DPD Shop2Shop
  • DPD Classic
  • UPS Standard - Versand Deutschland
விரைவானது (1 முதல் 2 வணிக நாட்கள்)
  • DHL ExpressEasy
  • HL Express Domestic
  • DHL Express Domestic (9:00, 10:00, 12:00)
  • GLS ExpressParcel - Geschäftskunden - Express Versand National
  • DPD Express - National
  • UPS Express Saver - National
  • UPS Express - National
  • UPS Express 12:00 - National
  • UPS Express Plus - National
  • UPS Express Critical Domestic
  • FedEx Priority Overnight
சர்வதேச (ஐரோப்பா)
ஸ்டாண்டர்டு (2 முதல் 8 வணிக நாட்கள்)
  • GLS Paketversand Eurozone (I - IV)
  • GLS EuroBusinessParcel - Paketversand Europa
  • Deutsche Post Briefe (Standard, Kompakt, Gross, Maxi) International
  • Deutsche Post Einschreiben (Brief) International
  • Deutsche Post Wertbrief - International
  • Deutsche Post Warenpost (XS, S, M, L) International
  • DHL Economy Select
  • FedEx International Economy
  • DPD Brief (Standard, Kompakt, Gross, Maxi 1, Maxi 2)
  • DPD Classic
  • DPD Guaranteed
  • UPS Standard - Europe
எக்ஸ்பிரஸ் (1 முதல் 4 வணிக நாட்கள்)
  • DHL ExpressEasy
  • GLS EuroExpressParcel - Geschäftskunden - Express Versand Europa
  • DPD Express - International - Europa
  • FedEx Europe First
  • FedEx International Priority

இத்தாலி

இத்தாலிக்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (இத்தாலி)ஸ்டாண்டர்டு (2 முதல் 6 வணிக நாட்கள்)
  • Italy SDA Extra Large
  • Poste Italiane Posta 1
  • Poste Italiane Posta 4
  • Poste Italiane Pieghi di libri
  • Poste Italiane Delivery Standard
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் (1 முதல் 4 வணிக நாட்கள்)
  • Bartolini (BRT) Servizio Express
  • Bartolini (BRT) Servizio Priority
  • Bartolini (BRT) Servizio 10:30
  • GLS Italy National Express
  • GLS Italy Safe Plus
  • Poste Italiane Delivery Express
  • TNT Express (10:00, 12:00)
  • UPS Express Saver
சர்வதேச (ஐரோப்பா)
ஸ்டாண்டர்டு சர்வதேச (4 முதல் 9 வணிக நாட்கள்)
  • Bartolini (BRT) Il Servizio DPD Group
  • Bartolini (BRT) Il Servizio EuroExpress
  • GLS Italy Parcel
  • Poste Italiane Delivery Europe
  • Poste Italiane Postamail Internazionale
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் சர்வதேச (2 முதல் 6 வணிக நாட்கள்)
  • GLS Italy Express
  • Poste Italiane Postapriority Internazionale
  • Poste Italiane Delivery International Express
  • TNT Express (9:00, 10:00, 12:00)
  • UPS Express
  • UPS Express Saver

ஸ்பெயின்

ஸ்பெயினுக்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (ஸ்பெயின்)ஸ்டாண்டர்டு (2 முதல் 5 வணிக நாட்கள்)
  • Correos Paq Estándar
  • Correos Paquete Azul
  • Correos Paq Ligero
  • Correos Carta Ordinaria
  • GLS Business Parcel
  • GLS Business Small Parcel
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் (1 முதல் 4 வணிக நாட்கள்)
  • Correos Express Equipaq 24
  • Correos Express Paq 10, 14, 24
  • Correos Express Islas Express
  • Correos Express Paq Empresa 14
  • Correos Paq Premium
  • Correos Paq Today
  • Correos Carta Urgente
  • GLS ExpressParcel (8:30, 10:00, 14:00)
  • TNT Express (9:00, 10:00, 12:00, 18:00)
  • UPS Express Saver
சர்வதேச (ஐரோப்பா)
ஸ்டாண்டர்டு சர்வதேச (4 முதல் 10 வணிக நாட்கள்)
  • Correos Paq Light Internacional
  • Correos Express Internacional Estándar
  • GLS EuroBusinessParcel
  • GLS EuroBusinessSmallParcel
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் சர்வதேச (2 முதல் 7 வணிக நாட்கள்)
  • Correos Express Internacional Express
  • TNT Express (9:00, 10:00, 12:00)
  • UPS Express
  • UPS Express Saver

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (ஆஸ்திரேலியா)ஸ்டாண்டர்டு (2 முதல் 8 வணிக நாட்கள்)
  • Australia Post Parcel Post
  • Australia Post Regular Letters
எக்ஸ்பிரஸ் (1 முதல் 4 வணிக நாட்கள்)
  • Australia Post Express Post Parcels
  • Australia Post Express Post Letters
சர்வதேச (உலகளாவிய)
ஸ்டாண்டர்டு சர்வதேச (6 முதல் 27 வணிக நாட்கள்)
  • Australia Post International Standard
  • DHL Packet International
  • DHL Packet Plus International
  • DHL Parcel International Standard

யுனைடெட் கிங்டம்

யுனைடெட் கிங்டமுக்கான போக்குவரத்து நேரத்திற்குள் டெலிவரி செய்யும் ஷிப்பிங் சேவைகள்.
இலக்குகிடைக்கக்கூடிய போக்குவரத்து நேரம்பொருந்தக்கூடிய சேவைகள்
உள்நாட்டு (யுனைடெட் கிங்டம்)ஸ்டாண்டர்டு (2 முதல் 4 வணிக நாட்கள்)
  • Royal Mail 1st and 2nd Class
  • DHL Parcel
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் (1 முதல் 3 வணிக நாட்கள்)
  • Royal Mail Tracked 24 and 48
  • Royal Mail Special Delivery Guaranteed by 9am® and 1pm®
  • Royal Mail Sameday
  • Royal Mail 24® and 48®
  • Parcelforce (express9, express10, expressAM, express24, express48, express48large)
  • DPD By 10:30 and By 12:00
  • DHL Local NEXT DAY
  • DHL Express (9:00, 12:00)
  • DHL Express Domestic
  • DHL Express Easy
  • UPS Express Saver
சர்வதேச (ஐரோப்பா)
ஸ்டாண்டர்டு சர்வதேச (2 முதல் 11 வணிக நாட்கள்)
  • Royal Mail International Signed
  • Royal Mail International Tracked
  • Royal Mail International Standard
  • Royal Mail International Business Standard Priority
  • DPD Classic
  • DPD Air Classic
  • DPD Direct
  • DHL Parcel Connect
  • UPS Standard
எகானமி இன்டர்நேஷனல் (10 முதல் 15 வணிக நாட்கள்)
  • Royal Mail இன்டர்நேஷனல் பிசினஸ் ஸ்டாண்டர்டு எகானமி
சர்வதேச (உலகளாவிய)
ஸ்டாண்டர்டு இன்டர்நேஷனல் (3 முதல் 17 வணிக நாட்கள்)
  • Parcelforce globalvalue
  • Royal Mail International Signed
  • Royal Mail International Tracked
  • Royal Mail International Standard
  • Royal Mail International Business Standard Priority
  • DPD Air Classic
  • DPD Direct
  • DHL Parcel International
  • UPS Standard
எக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனல் (2 முதல் 11 வணிக நாட்கள்)
  • globalexpress
  • DPD Express
  • DHL Express (9:00, 10:30, 12:00)
  • DHL Express Worldwide
  • DHL Express Easy
  • UPS Express Saver
  • UPS Expedited
எகானமி இன்டர்நேஷனல் (10 முதல் 60 வணிக நாட்கள்)
  • Parcelforce globaleconomy
  • Royal Mail இன்டர்நேஷனல் எகானமி
  • Royal Mail இன்டர்நேஷனல் பிசினஸ் ஸ்டாண்டர்டு எகானமி