Shop Promise ஐச் செயல்படுத்துதல்
Shop Promise தற்சமயம் அமெரிக்க உள்நாட்டு ஆர்டர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. உங்கள் ஸ்டோர் அனைத்து ஸ்டோர் தேவைகளையும் பூர்த்தி செய்யும்போது, நீங்கள் Shop Promise-ஐ இயக்கலாம். உங்கள் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் உள்ள Shop Promise கார்டில் இருந்து Shop Promise-ஐ நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் கொள்கைகள் அமைப்புகளில் உள்ள Shop Promise கார்டில் இருந்தும் இதைத் திறக்கலாம். உங்கள் ஸ்டோரின் தகுதித்தன்மை ஒவ்வொரு நாளும் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது, மேலும் கார்டு உங்கள் ஸ்டோரின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.
Shop Promise-ஐ இயக்கியதும், ஒவ்வொரு தயாரிப்பும் அதற்குத் தகுதியான பலன்களைக் காண்பிக்கும். தகுதியான சில ஸ்டோர்களுக்கு Shopify-உம் Shop Promise-ஐ இயக்கக்கூடும். திட்டம் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு உங்கள் ஸ்டோரில் Shop Promise இயக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் இயக்க வேண்டியதில்லை.
இப்பக்கத்தில்
Shop Promiseஐச் செயல்படுத்து
நீங்கள் Shop Promise-ஐ இயக்கும்போது, Shop Promise சேவை விதிமுறைகளை ஏற்கிறீர்கள். உங்கள் நிலை செயலில் உள்ளது என மாறும், ஆனால் உங்கள் தயாரிப்புகளில் Shop Promise பேட்ஜ் உடனடியாகக் காட்டப்படாமல் போகலாம்.
Shop Promise-ஐ இயக்குவதற்கு முன், நீங்கள் தானியங்கு டெலிவரி தேதிகளை இயக்கலாம், இதன்மூலம் தயாரிப்புகள் நம்பகமான டெலிவரி என்பதைக் காட்ட முடியும், மேலும் தயாரிப்புகள் ரிட்டர்ன் பலனைக் காட்டுவதற்கு ரிட்டர்ன் விதிகளை அமைக்கலாம். Shop Promise-ஐ இயக்க இரண்டுமே தேவையில்லை. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் Shop செயலி ஆகியவற்றுக்காகத் தானியங்கு டெலிவரி தேதிகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன.
தானியங்கு டெலிவரி தேதிகள் அல்லது ரிட்டர்ன் விதிகள் முடக்கப்பட்டிருந்தால், Shop Promise-ஐ இயக்கு டயலாக் திறக்கப்படும், அதோடு உங்கள் தயாரிப்புகள் எத்தகைய பலன்களைக் காண்பிக்கத் தயாராக உள்ளன என்பதையும் காட்டும். டயலாக்கிலேயே நீங்கள் தானியங்கு டெலிவரி தேதிகளை இயக்கலாம், இது Shop செயலியிலும் அவற்றை இயக்கும். விருப்பத்தேர்வு கிடைத்தால், நீங்கள் ரிட்டர்ன் விதிகளையும் இயக்கலாம். இந்த விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே Shop Promise-ஐ இயக்குவது ரிட்டர்ன் விதிகளை உருவாக்குகிறது.
டயலாக்கில் நீங்கள் இயக்கும் ரிட்டர்ன் விதிகள், நிறைவேற்றப்பட்ட உருப்படிகளுக்குப் பொருந்தும். இறுதி விற்பனை உருப்படிகள் மற்றும் மேலெழுதல்களைச் சேர்க்க, உங்கள் கொள்கைகள் அமைப்புகளில் ரிட்டர்ன் விதிகளை அமைக்கவும். ரிட்டர்ன் விதிகளை நீங்கள் இயக்கினால், அவற்றோடு பொருந்தும் வகையில் உங்களுடைய எழுத்துப்பூர்வமான ரிட்டர்ன் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையைப் புதுப்பிக்கவும்.
உங்கள் தயாரிப்புகள் ஏதேனும் பலனைக் காட்டுவதற்கு முன்பே, நீங்கள் Shop Promise-ஐ இயக்க முடியும். தானியங்கு டெலிவரி தேதிகள் அல்லது ரிட்டர்ன் விதிகளை நீங்கள் இயக்கிய பிறகு அல்லது நம்பகமான டெலிவரி கிடைக்க உங்கள் ஆர்டர்கள் கேரியரை விரைவாகச் சென்றடைந்த பிறகு பலன்கள் காண்பிக்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
Shop Promise கார்டில், Shop Promise-ஐ நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: தயாரிப்புப் பக்கங்களிலும் செக்அவுட்டிலும் Shop Promise எப்படிக் காட்டப்படும் என்பதை முன்னோட்டமிட, எடுத்துக்காட்டுகளைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.
இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Shop Promise-ஐ இயக்கு டயலாக் திறந்தால், பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- விருப்பத்தேர்வு: நம்பகமான டெலிவரியைக் காட்ட, தானியங்கு டெலிவரி மதிப்பீடுகளை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே வைத்து, நிறைவேற்றும் நேரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்தேர்வு: திருப்பியளிப்புப் பலனைக் காட்ட, கிடைத்தால் ரிட்டர்ன் விதிகளை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு திருப்பியளிக்கும் கால அவகாசம் மற்றும் ஒரு ரிட்டர்ன் ஷிப்பிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- Shop Promise-ஐ இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தயாரிப்புகளால் எந்தப் பலன்களையும் இன்னும் காட்ட முடியவில்லை என்றால், எப்படியும் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Shop Promiseஐ முடக்கு
Shop Promise-ஐ முடக்கினால், Shop Promise பேட்ஜ் இனி உங்கள் தயாரிப்புப் பக்கங்களிலோ செக்அவுட் பக்கத்திலோ Shop செயலியிலோ காட்டப்படாது. Shop Promise-ஐ முடக்குவது உங்கள் தானியங்கு டெலிவரி தேதிகளை மாற்றாது, எனவே பேட்ஜ் இல்லாமலேயே டெலிவரி தேதிகள் தொடர்ந்து காட்டப்படலாம். உங்கள் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் நீங்கள் தானியங்கு டெலிவரி தேதிகளைத் தனியாக முடக்கலாம்.
உங்கள் ஸ்டோரின் தகுதிநிலை தகுதிபெற்றது என இருக்கும்போது Shop Promise பக்கத்திலிருந்து Shop Promise-ஐ மீண்டும் இயக்கலாம். இடைநிறுத்தப்பட்டது என்ற நிலையில் இருக்கும்போது Shop Promise-ஐ நீங்கள் முடக்கினால், உங்கள் ஸ்டோர் மீண்டும் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது அது தானாகவே மீண்டும் இயங்காது. நீங்களே அதை மீண்டும் இயக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
Shop Promise கார்டில், Shop Promise-ஐ நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஐகானைக் கிளிக் செய்து, முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Shop Promise-ஐ முடக்குவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
முந்தைய ஆர்டர்களுக்கான வரையறுக்கப்பட்ட உத்திரவாதம்
Shop Promise-இல் இனி வரையறுக்கப்பட்ட டெலிவரி உத்திரவாதம் சேர்க்கப்படாது. உங்கள் ஸ்டோர் புதுப்பிக்கப்பட்ட Shop Promise-க்கு மாறிய பிறகு வழங்கப்படும் ஆர்டர்கள் தாமதமாக வந்தால், அவை $5.00 USD Shop Cash-ஐப் பெறத் தகுதிபெறாது.
சில முந்தைய ஆர்டர்கள் இன்னும் முந்தைய விதிமுறைகளின் கீழ் உள்ளன. இந்த ஆர்டர்கள் உங்கள் ஸ்டோர் புதுப்பிக்கப்பட்ட Shop Promise-க்கு மாறுவதற்கு முன்பு வழங்கப்பட்டவை என்பதோடு வரையறுக்கப்பட்ட உத்திரவாதத்திற்குத் தகுதிபெற்றவை. இந்த ஆர்டர்களில் ஒன்றிற்கான முதல் டெலிவரி முயற்சி அதன் Shop Promise தேதிக்குப் பிறகு இருந்தால், உங்கள் வாடிக்கையாளர் $5.00 USD Shop Cash-ஐப் பெறத் தகுதிபெறலாம். Shop Cash-க்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
முதல் டெலிவரி முயற்சி செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தகுதியான ஒவ்வொரு ஆர்டருக்கும் வாடிக்கையாளர்கள் ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். அனைத்துக் கோரிக்கைகளும் டிசம்பர் 16, 2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். Shop செயலியிலோ Shop இணையதளத்திலோ அவர்கள் கோரலாம். ஒரு வாடிக்கையாளரால் கோர முடியுமா என்பது செக்அவுட்டில் அவர்கள் பயன்படுத்திய கட்டண முறையைப் பொறுத்தது. Shop உதவி மையத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் கோரிக்கைகளைப் பற்றி மேலும் அறியலாம்.
இந்த ஆர்டர்களுக்கான வரம்பிற்குட்பட்ட உத்தரவாதமானது வாடிக்கையாளர்களுக்கான Shop Promise கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. Shop Cash பயன்பாடு Shop Rewards விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது.
ஷிப்பிங் கட்டணப் பெயருக்கான பரிந்துரைகள்
சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க, உங்கள் தனிப்பயன் ஷிப்பிங் கட்டணப் பெயர்களில் டெலிவரி நேரங்கள் அல்லது வேகங்களைச் சேர்க்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறோம். உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை மாற்றுவது குறித்த வழிகாட்டுதலுக்கு, டெலிவரி நேரங்களை அகற்ற உங்கள் ஷிப்பிங் கட்டணங்களைத் திருத்துதல் என்பதைப் பார்க்கவும். உதாரணமாக, Expedited (1 day) எனப்படும் தனிப்பயன் ஷிப்பிங் கட்டணம் உங்களிடம் இருந்தால், உங்கள் கட்டணத்தின் பெயரை Expedited என மாற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
ஷிப்பிங் கட்டணத்தால் கணிக்கப்பட்ட டெலிவரி தேதியைக் காட்ட முடியாதபோது, அதற்குப் பதிலாக உங்கள் செயலாக்க நேரத்தின் அடிப்படையிலான இயல்புநிலை விளக்கம் காட்டப்படும். Shop Promise மூலம் டெலிவரி விளக்கங்கள் பற்றி மேலும் அறிக.
டெலிவரி நேரத்தைக் கொண்ட தனிப்பயன் ஷிப்பிங் கட்டணப் பெயரானது, Shop Promise உடன் காட்டப்படும் மதிப்பிடப்பட்ட வருகைத் தேதியுடன் முரண்படலாம். உங்கள் வாடிக்கையாளர்களைக் குழப்புவதைத் தவிர்க்க, நீங்கள் செயல்படுத்துவதற்கு முன் இந்தக் கட்டணங்களைச் சரிசெய்யவும். நீங்கள் Shopify வழங்கும் ஷிப்பிங் கட்டணங்களையும் (Express, Standard மற்றும் Economy) பயன்படுத்தலாம்.
Shop Promise தொடர்பான கேள்விகள் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவுதல்
சேதமடைந்த, தவறான அல்லது பழுதடைந்த தயாரிப்பு குறித்து அல்லது வந்து சேராத ஆர்டர் குறித்து வாடிக்கையாளருக்குக் கேள்வி ஏதேனும் இருந்தால், ஒரு தீர்வை வழங்க நேரடியாக உங்கள் வாடிக்கையாளருடன் இணைந்து செயல்படுங்கள். உங்களுடைய சொந்த ரிட்டர்ன் விதிகள் மற்றும் கொள்கையின் கீழ் ரிட்டர்ன்கள் கையாளப்படுகின்றன. அவை Shopify மூலம் செயலாக்கப்படவோ அவற்றுக்கு பணம் செலுத்தப்படவோ இல்லை.
தாமதமான ஆர்டருக்கு இன்னமும் வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் பொருந்தினால், அந்த ஆர்டரைப் பெறுவது குறித்து வாடிக்கையாளர் கேட்டால், Shop உதவி மையத்தை அணுகும்படி அவர்களிடம் தெரிவிக்கவும்.