Shop Promise-இலிருந்து விலக்கப்பட்டுள்ள ஆர்டர் வகைகள்

சில ஆர்டர் வகைகளுக்கு ஆதரவில்லை என்பதுடன் அவை தானாகவே Shop Promise-இலிருந்து விலக்கப்படும். பிற ஆர்டர் வகைகள் Shop Promise-க்குத் தகுதிபெறக் கூடுதல் தேவைகளைக் கொண்டுள்ளன. மேலும் அறியப் பின்வரும் ஆர்டர் வகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.

அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வரும் அல்லது செல்வதற்கான ஆர்டர்கள்

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களில் இருந்து வரும் அல்லது அங்கு அனுப்பப்படும் ஆர்டர்கள் Shop Promise-க்குத் தகுதியற்றவை என்பதுடன் அவை தானாகவே விலக்கப்படும்.

பூஜ்ஜியச் சரக்கு இருப்பு

கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பு பூஜ்ஜியமாக உள்ள தயாரிப்புகள் Shop Promise-க்குத் தகுதியற்றவை என்பதுடன் தானாகவே விலக்கப்படும்.

வாங்குவதற்கு முன் முயன்று பாருங்கள்

வாங்குவதற்கு முன் முயன்று பாருங்கள் ஆர்டர்களை உடனடியாக நிறைவேற்ற முடியுமானால் மட்டுமே அவை Shop Promise திட்டத்திற்குத் தகுதிபெறும். ஒரு தயாரிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனில், பின்வருபவை உண்மையாக இருக்க வேண்டும்:

முன்பதிவுகள்

முன்பதிவுகள் Shop Promise-க்குத் தகுதியற்றவை என்பதுடன் தானாகவே விலக்கப்படும்.

சந்தாக்கள்

சந்தாவில் உள்ள முதல் ஆர்டர் மட்டுமே Shop Promise-க்குத் தகுதிபெறும். அந்தச் சந்தாவிற்கான அடுத்தடுத்த ஆர்டர்கள் Shop Promise-க்குத் தகுதியற்றவை என்பதுடன் தானாகவே விலக்கப்படும்.

டிஜிட்டல் தயாரிப்புகள்

டிஜிட்டல் தயாரிப்புகளும் சேவைகளும் Shop Promise-க்குத் தகுதியற்றவை. உங்கள் ஸ்டோர் டிஜிட்டல் தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்கினால், அந்தத் தயாரிப்புகளுக்கான ஷிப்பிங்கை நீங்கள் அகற்ற வேண்டும்.

ஷிப்பிங் இல்லாத நிறைவேற்றும் இடங்கள்

உள்ளூர் டெலிவரியை அல்லது ஸ்டோரில் பிக்அப்பை மட்டுமே பிரத்தியேகமாக வழங்கும் இடங்கள் போன்று ஷிப்பிங்கை வழங்காத நிறைவேற்றும் இடங்கள் Shop Promise-க்குத் தகுதியற்றவை என்பதுடன் தானாகவே விலக்கப்படும்.