ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் ஷிப்பிங் கலைச்சொற்கள்

ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் ஷிப்பிங் என்பது பெரும்பாலான வணிகங்களின் அடிப்படைப் பகுதியாகும், மேலும் இது பல்வேறு சொற்களைக் கொண்டுள்ளது.

ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் ஷிப்பிங் பற்றிய சில கலைச்சொற்களைப் புரிந்துகொள்ள, பின்வரும் வரையறைகள் மற்றும் சொற்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.

சுங்கவரி அறிவிப்புப் படிவம்

சுங்கவரி அறிவிப்புப் படிவம் என்பது சர்வதேச அளவில் அனுப்பப்படும் பொருட்களின் உள்ளடக்கங்கள் மற்றும் மதிப்பை விவரிக்கும் ஆவணமாகும். ஒரு ஷிப்மென்ட் இலக்கு நாட்டை வந்தடையும் போது, அது அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய சுங்க அதிகாரிகள் அதன் சுங்கவரி அறிவிப்புப் படிவத்தை மதிப்பாய்வு செய்வார்கள், மேலும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியையும் மதிப்பாய்வு செய்வார்கள்.

நீங்கள் ஒரு சர்வதேச இடத்திற்கு ஷிப்பிங் செய்து, ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் Shopify நிர்வாகியில் லேபிள்களை வாங்கும் போது சுங்கவரி அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

சுங்கவரி அறிவிப்புப் படிவத்தில் உள்ள விவரங்கள் பற்றியும், விடுபட்ட விவரம் காரணமாக உங்களால் லேபிளை உருவாக்க முடியாத போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறிய, சர்வதேச ஷிப்மென்ட்களுக்கான சுங்கவரி ஆவணங்கள் என்பதைப் பார்க்கவும்.

விநியோக முறை

விநியோக முறை என்பது வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் ஆர்டர்களை எப்படி டெலிவரி செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். நீங்கள் ஷிப்பிங் கேரியர்கள் மற்றும் உள்ளூர் டெலிவரி விருப்பங்களைப் பயன்படுத்தலாம்.

மேலும் தகவலுக்கு, நேரில் பெறுதல் மற்றும் உள்ளூர் டெலிவரியை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

டெலிவரி நேரம்

டெலிவரி நேரம் என்பது உங்கள் ஸ்டோரின் நிறைவேற்ற நேரம் மற்றும் கேரியரின் போக்குவரத்து நேரம் ஆகிய இரண்டின் கலவையாகும். வாடிக்கையாளர் உங்கள் வணிகத்தில் ஆர்டர் செய்யும்போது டெலிவரி நேரம் தொடங்கி, ஷிப்மென்ட் உங்கள் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படும்போது முடிவடைகிறது.

மேலும் தகவலுக்கு, விநியோகத் தேதிகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

பரிமாண எடை

பரிமாண எடை என்பது பேக்கேஜின் உண்மையான எடைக்கு ஏற்ப அது அடைத்துக்கொள்ளும் இடத்தின் அளவைக் குறிக்கும். பேக்கேஜின் நீளம், அகலம் மற்றும் உயரத்தைப் பெருக்கி, பேக்கேஜின் கொள்ளளவுடன் தொடர்புடைய அளவீட்டு வகுப்பான் (volumetric divisor) எனப்படும் தனிப்பட்ட மதிப்பால் வகுப்பதன் மூலம் பரிமாண எடை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு கேரியரும் ஒரு தனிப்பட்ட அளவீட்டு வகுப்பானைப் பயன்படுத்துகிறது. பரிமாண எடையானது உண்மையான பேக்கேஜின் எடையை விட அதிகமாக இருந்தால், பரிமாண எடைக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

பிற சொற்கள்: கட்டணம் விதிக்கப்படக்கூடிய எடை, கன அளவீட்டு எடை, அளவீட்டு எடை.

மேலும் தகவலுக்கு, பரிமாண எடை என்பதைப் பார்க்கவும்.

நிறைவேற்றும் இடம்

நிறைவேற்றும் இடம் என்பது நீங்கள் ஆர்டர்களை நிறைவேற்றும் ஒரு இடத்தையோ அல்லது செயலியையோ குறிக்கும். ஒரு இடமானது சில்லறை விற்பனை ஸ்டோர், கிடங்கு, உங்கள் வீடு, பாப்-அப் கடை அல்லது ஒரு செயலியாக இருக்கலாம்.

மேலும் தகவலுக்கு, இருப்பிடங்கள் என்பதைப் பார்க்கவும்.

நிறைவேற்றச் சேவை

நிறைவேற்றச் சேவை என்பது உங்களுக்கான ஆர்டர்களைத் தயார் செய்து அனுப்பும் மூன்றாம் தரப்புக் கிடங்கு அல்லது நிறைவேற்ற மையமாகும்.

மேலும் தகவலுக்கு, தனிப்பயன் நிறைவேற்றச் சேவைகள் என்பதைப் பார்க்கவும்.

நிறைவேற்ற நேரம்

நிறைவேற்ற நேரம் என்பது வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை வழங்கும் நேரத்திற்கும் ஷிப்பிங் கேரியரிடம் ஷிப்மென்ட் கொடுக்கப்படும் நேரத்திற்கும் இடைப்பட்ட கால அளவாகும்.

மேலும் தகவலுக்கு, நிறைவேற்ற நேரத்தைப் புரிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.

சுற்றளவு

சுற்றளவு (Girth) என்பது பேக்கேஜின் அதிகபட்ச அளவைத் தீர்மானிக்க பல ஷிப்பிங் கேரியர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகையான அளவீடாகும். நீளம் அல்லாத பிற பக்கங்களின் தடிமனான பகுதியைச் சுற்றியுள்ள தூரமே சுற்றளவு ஆகும்.

  • செவ்வகப் பேக்கேஜ்களுக்கு, சுற்றளவு என்பது உயரத்தை இரண்டால் பெருக்கி அதனுடன் அகலத்தை இரண்டால் பெருக்கி வரும் மதிப்பைக் கூட்டினால் கிடைப்பதாகும்: 2 x அகலம் + 2 x உயரம்.
  • உருளை வடிவ பேக்கேஜ்களுக்கு, சுற்றளவு என்பது உருளையின் சுற்றளவாகும்.

ஒருங்கிணைந்த சிஸ்டம் குறியீடு

ஒருங்கிணைந்த சிஸ்டம் குறியீடு என்பது இறக்குமதி செய்யப்பட்ட அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு உருப்படியையும் வகைப்படுத்தும் ஆறு இலக்கக் குறியீடாகும். சுங்கவரி அறிவிப்புப் படிவத்தை நிரப்பும்போது நீங்கள் HS குறியீட்டை வழங்க வேண்டும்.

பிற சொல்: HS குறியீடு.

மேலும் தகவலுக்கு, HTS குறியீடுகள்: சர்வதேச வணிகம் மற்றும் இறக்குமதிகள் என்பதைப் பார்க்கவும்.

பேக்கிங் சீட்டு

பேக்கிங் சீட்டு என்பது ஷிப்பிங் மற்றும் பில்லிங் முகவரிகள், மேலும் SKU எண், எடை அல்லது அளவு போன்ற தயாரிப்புத் தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஆவணமாகும்.

மேலும் தகவலுக்கு, பேக்கிங் சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

திருப்பியனுப்பல் லேபிள்

ஷிப்மென்டை உங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்காக வாடிக்கையாளருக்கு நீங்கள் அனுப்பக்கூடிய லேபிளே, திருப்பியனுப்பல் லேபிள் ஆகும். ஒரு வாடிக்கையாளருக்கு இனி தேவைப்படாத சரக்கு இருப்பை நீங்கள் திரும்பப் பெறுவதற்குத் திருப்பியனுப்பல் லேபிள்கள் உதவும்.

மேலும் தகவலுக்கு, திருப்பியனுப்பல் லேபிள்களை வாங்குதல் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் கேரியர்

ஷிப்பிங் கேரியர் என்பது UPS, FedEx, DPD, USPS, Canada Post அல்லது Chronopost போன்ற உங்கள் பேக்கேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையாகும். கேரியரைப் பொறுத்து, பேக்கேஜை நேரில் பெறுவதற்கான நேரத்தை நீங்கள் திட்டமிடலாம் அல்லது கேரியரின் டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் உங்கள் பேக்கேஜை ஒப்படைக்கலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் கேரியர்கள் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் காப்பீடு

ஷிப்பிங் காப்பீடு என்பது சேதமடைந்த, தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட ஷிப்மென்ட்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு சேவையாகும். ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது, உங்கள் ஷிப்மென்ட்களுக்கு நீங்கள் காப்பீடு செய்யலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் காப்பீடு என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் லேபிள்

ஷிப்பிங் லேபிள் என்பது உங்கள் ஷிப்மென்ட் பேக்கேஜில் இணைக்கும் லேபிளாகும். ஷிப்மென்ட் சரியாக டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்ய, ஷிப்பிங் கேரியர்கள் பயன்படுத்தும் தகவல்களை ஒரு ஷிப்பிங் லேபிள் கொண்டிருக்கும். ஷிப்பிங் லேபிளில் வழக்கமாகப் பெறுநரின் முகவரி, மூல இடத்தின் முகவரி மற்றும் பார்கோடு ஆகியவை இருக்கும்.

ஷிப்பிங் கேரியர்களிடமிருந்தோ மூன்றாம் தரப்புச் செயலிகளிடமிருந்தோ நேரடியாக அல்லது ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்தி உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தோ நீங்கள் ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் லேபிள்களைப் புரிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்

ஷிப்பிங் மேனிஃபெஸ்ட் என்பது உங்களின் அனைத்து USPS ஷிப்மென்ட்களையும் ஒற்றைப் பார்கோடாக இணைக்கும் ஆவணமாகும்.

மேலும் தகவலுக்கு, USPS ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டுகள் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் சுயவிவரம்

ஷிப்பிங் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் இடங்களுக்கு நீங்கள் உள்ளமைக்கக்கூடிய ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் மண்டலங்களின் தொகுப்பாகும். உதாரணமாக, உடையக்கூடிய தயாரிப்புகளுக்கு ஒரு ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கி ஷிப்பிங்கிற்கு 15 USD வசூலிக்கலாம், உங்களின் மற்ற அனைத்துத் தயாரிப்புகளுக்கும் மற்றொரு ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கி ஷிப்பிங்கிற்கு 5 USD வசூலிக்கலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் சுயவிவரங்கள் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் கட்டணம்

செக்அவுட்டின்போது ஷிப்பிங்கிற்காக வாடிக்கையாளர்களிடம் நீங்கள் வசூலிப்பதே ஷிப்பிங் கட்டணமாகும். உதாரணமாக, செக்அவுட்டின்போது நீங்கள் 10 USD-க்கு நிலையான ஷிப்பிங்கையும் 30 USD-க்கு விரைவு ஷிப்பிங்கையும் வழங்கலாம். தயாரிப்பின் எடை அல்லது ஆர்டரின் விலையின் அடிப்படையில் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கலாம். நீங்கள் நிலையான ஷிப்பிங் கட்டணங்களையோ கேரியர் கணக்கிட்ட கட்டணங்களையோ பயன்படுத்தலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் கட்டணங்கள் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் உத்தி

ஷிப்பிங்கிற்காக வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கட்டணம் வசூலிக்கும் முறையே ஷிப்பிங் உத்தியாகும். உதாரணமாக, நீங்கள் இலவச ஷிப்பிங்கை வழங்கி, தயாரிப்பு விலையில் ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்கலாம் அல்லது நிலையான ஷிப்பிங் கட்டணங்களை வழங்கலாம்.

மேலும் தகவலுக்கு, உங்கள் ஷிப்பிங் உத்தியைத் திட்டமிடல் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் மண்டலம்

ஷிப்பிங் மண்டலம் என்பது ஒரு குறிப்பிட்ட ஷிப்பிங் கட்டணங்கள் வழங்கப்படும் நாடுகள் அல்லது பிராந்தியங்களின் குழுவாகும். உதாரணமாக, நீங்கள் ஐரோப்பாவிற்கு ஒரு ஷிப்பிங் மண்டலத்தை உருவாக்கி, ஐரோப்பாவிற்கு ஷிப் செய்யப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் கிடைக்கக்கூடிய DHL Express கட்டணங்கள் மற்றும் ஒரு நிலையான கட்டணத்தை வழங்கலாம். அதன் பிறகு, அமெரிக்காவிற்குத் தனி ஷிப்பிங் மண்டலத்தை உருவாக்கி, அமெரிக்காவிற்கு ஷிப் செய்யப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச ஷிப்பிங் மற்றும் USPS கட்டணங்களை வழங்கலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் மண்டலங்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் சேவை

ஷிப்பிங் சேவை என்பது ஷிப்பிங் கேரியர் வழங்கும் ஷிப்பிங் முறையாகும். உதாரணமாக, USPS வழங்கும் ஷிப்பிங் சேவைகளில் ஒன்று USPS Priority Mail International ஆகும். இந்தச் சேவையில் தடமறிவதற்கான எண்ணும் ஷிப்பிங் காப்பீடும் அடங்கும். பொதுவாக ஷிப்பிங் கேரியர்கள் மூல இடம் மற்றும் சேருமிட முகவரிகள், ஷிப்மென்ட்டின் எடை மற்றும் அளவு ஆகியவற்றைப் பொருத்து வெவ்வேறு டெலிவரி நேரங்கள், வெவ்வேறு விலைகளுடன் கூடிய பல ஷிப்பிங் சேவைகளை வழங்குகின்றனர்.

Shopify Fulfillment Network (SFN)

Shopify Fulfillment Network (SFN) என்பது, உங்கள் சரக்கு இருப்பைச் சேமித்து, ஆர்டர்களை நிறைவேற்றும் சேவையுடன் ஒருங்கிணைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நிறைவேற்றச் சேவைச் செயலியாகும். இந்த நிறைவேற்றச் சேவையை வழங்க, Shopify Flexport உடன் கூட்டாளராக உள்ளது. மேலும் அறிய, Shopify Fulfillment Network என்பதைப் பார்க்கவும்.

Shopify-இல் ஷிப்பிங் லேபிள்கள்

Shopify-இல் உள்ள ஷிப்பிங் லேபிள்கள் மூலம், ஆதரிக்கப்படும் கேரியர்களிடம் இருந்து தள்ளுபடிக் கட்டணங்களில் ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கான கேரியர் லேபிள்களை உங்களின் Shopify நிர்வாகியில் இருந்தே நேரடியாக வாங்கலாம் மற்றும் பிரிண்ட் செய்யலாம்.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் லேபிள்கள் என்பதைப் பார்க்கவும்.

ஸ்டோரின் இயல்புநிலைப் பொதி

ஸ்டோரின் இயல்புநிலைப் பொதி என்பது செக்அவுட்டின்போது ஷிப்பிங் கட்டணங்களைக் கணக்கிடப் பயன்படுவதாகும், இதை உங்களின் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் அமைக்கலாம்.

செக்அவுட்டின்போது ஷிப்பிங் செலவுகள் கணக்கிடப்படும்போது, எடை அடிப்படையிலான அல்லது கேரியர் கணக்கிட்ட கட்டணங்களை நீங்கள் பயன்படுத்தினால், ஸ்டோரின் இயல்புநிலைப் பொதியின் பரிமாணங்களும் எடையும் ஷிப்பிங் விலையில் கணக்கில் கொள்ளப்படும். செக்அவுட்டின்போது வாடிக்கையாளர்களுக்குச் சரியான ஷிப்பிங் விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய, நீங்கள் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தும் பொதியை உங்களின் ஸ்டோரின் இயல்புநிலைப் பொதியாக அமைக்கவும்.

மேலும் தகவலுக்கு, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலைப் பொதியை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

தடமறிவதற்கான எண்

தடமறிவதற்கான எண் என்பது ஒரு பொதி அல்லது ஷிப்மென்ட்டுக்கு ஒதுக்கப்படும் தனித்துவமான ID எண் அல்லது குறியீடாகும். நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் இந்தப் பொதியின் ஷிப்பிங் பயணம் முழுவதும் அதனைத் தடமறிய இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். சில தடமறிவதற்கான எண்கள் மதிப்பிடப்பட்ட விநியோகத் தேதியைக் குறிக்கும். பெரும்பாலான ஷிப்பிங் சேவைகள் தடமறிவதற்கான எண்ணுடன் வருகின்றன, ஆனால் மலிவான சேவைகளில் அவை இருக்காது.

பிற சொல்: தடமறிவதற்கான குறியீடு

போக்குவரத்து நேரம்

போக்குவரத்து நேரம் என்பது, ஷிப்பிங் கேரியர் உங்களிடமிருந்து ஷிப்மென்ட்டைப் பெறுவது முதல் உங்கள் வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்மென்ட் சென்றடைவது வரையிலான காலக்கட்டமாகும்.

நிலையான ஷிப்பிங் கட்டணங்களுக்காக உங்களின் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் அமைக்கக்கூடிய அம்சத்தையும் போக்குவரத்து நேரம் குறிக்கலாம்.

மேலும் தகவலுக்கு, போக்குவரத்து நேரத்தை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

ஷிப்பிங் லேபிளை ரத்துசெய்தல்

ரத்துசெய்தல் என்பது உங்களின் ஷிப்பிங் லேபிளை கேன்சல் செய்வதையோ செல்லாததாக்குவதையோ குறிக்கிறது.

மேலும் தகவலுக்கு, ஷிப்பிங் லேபிள்களை மாற்றுதல் மற்றும் ரத்துசெய்தல் என்பதைப் பார்க்கவும்.