Flexport-உடன் தொடங்குதல்
Fulfillment Network செயலியை அமைப்பதற்கான படிகளைப் பார்த்த பிறகு, Flexport-ஐ மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் (3PL) சேவையாகப் பயன்படுத்த முடிவெடுத்தால், நீங்கள் Flexport-ஐ அமைக்கத் தொடங்கலாம். இந்தச் சரிபார்ப்புப் பட்டியலைப் பார்ப்பதன் மூலம், Fulfillment Network செயலியுடன் Flexport-ஐ அமைப்பதற்கு என்ன தேவை என்பது குறித்து மேலும் அறியலாம். அமைவுச் செயல்முறை முழுவதும் பார்க்க இந்தப் பக்கத்தை அச்சிடுவது உதவியாக இருக்கும்.
இந்தப் பக்கத்தில்
Flexport-உடன் தொடங்குதல் சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் ஸ்டோருடன் Flexport-ஐ இணைத்தல்
உங்கள் நிறைவேற்ற அமைப்புகளைத் தனிப்பயனாக்குங்கள்
பில்லிங்கைப் புரிந்துகொள்ளுதல்
உங்கள் ஸ்டோருடன் Flexport-ஐ இணைத்தல்
Fulfillment Network செயலியைப் பயன்படுத்தத் தொடங்க, உங்கள் ஸ்டோரை Flexport-உடன் இணைக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Fulfillment Network என்பதற்குச் செல்லவும்.
உங்கள் ஸ்டோரை இணை (Connect your store) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify ஸ்டோருடன் Flexport-ஐ இணைக்கவும்:
- உங்களுக்கு Flexport-இல் கணக்கு இல்லையெனில், உங்கள் Facebook, Google அல்லது Shopify கணக்கு மூலம் இணைக்கவும்.
- உங்களிடம் ஏற்கனவே Flexport கணக்கு இருந்தால், உங்கள் Flexport கணக்கை அமைக்கப் பயன்படுத்திய சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
தேவையான அணுகல்களை மதிப்பாய்வு செய்துவிட்டு, அனுமதி (Allow) என்பதைக் கிளிக் செய்யவும்.
அமைவு செயல்முறையைத் தொடங்கிய பிறகு, உங்கள் Shopify ஸ்டோர் Flexport-உடன் இணைந்து உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைக்கச் சிறிது நேரம் ஆகலாம். ஒத்திசைவு ஐகானுக்குப் பதிலாகச் சரிபார்ப்புக்குறி இடம்பெறும்போது, உங்கள் கணக்கும் தயாரிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், Flexport மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய தயாரிப்புகளுக்காக உங்கள் Shopify ஸ்டோரில் புதிய இடம் ஒன்று உருவாக்கப்படும். இந்தப் புதிய இடம் SFN - Flexport என அழைக்கப்படுகிறது.
Flexport-இல் உங்கள் சரக்கு இருப்பை மதிப்பாய்வு செய்யவும்
உங்கள் ஒத்திசைக்கப்பட்ட தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், அதை Flexport-இல் செய்யலாம். உங்கள் Shopify ஸ்டோரை Flexport-உடன் இணைத்த பிறகு, நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை தயாரிப்புகள் ஒத்திசைக்கப்படும். எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் Flexport-இல் தானாகக் காட்டப்படுவதற்குச் சற்று தாமதமாகலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Fulfillment Network என்பதற்குச் செல்லவும்.
Flexport-க்குச் செல் (Go to Flexport) என்பதைக் கிளிக் செய்யவும்.
சரக்கு இருப்பு (Inventory) என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் தயாரிப்பு அட்டவணையை மீண்டும் ஒத்திசைக்கவும், கடந்த நான்கு மணிநேரத்திற்குள் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளைச் சேர்க்கவும், அட்டவணையை ஒத்திசை (Sync Catalog) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் அட்டவணையை ஒத்திசைத்த பிறகும் தயாரிப்பு ஏதேனும் காட்டப்படவில்லை எனில், அது Flexport-இன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதைச் சரிபார்க்க உங்கள் தயாரிப்பை மதிப்பாய்வு செய்யவும்:
- தயாரிப்புகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
- தயாரிப்புகளுக்குத் தலைப்பு இருக்க வேண்டும்.
- தயாரிப்புகளின் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் ஒரு SKU மதிப்பு இருக்க வேண்டும்.
- SKU மதிப்புகளில் இடைவெளிகளோ சிறப்பு எழுத்துகளோ இருக்கக்கூடாது.
- ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கும் SKU மதிப்புகள் தனித்துவமானவையாக இருக்க வேண்டும்.
ஆதரவைப் பெறுதல்
Fulfillment Network செயலியை அமைப்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.