Fulfillment Network செயலி மூலம் தயாரிப்புகளை நிர்வகித்தல்

மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கு (3PL) சரக்கு இருப்பை அனுப்பும் முன்பு, உங்கள் தயாரிப்புகளுடன் தொடர்புடைய அனைத்துத் தேவையான தகவல்களும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

SKUகள்

SKU (ஸ்டாக் கீப்பிங் யூனிட்) என்பது ஒரு தனித்துவமான எண்ணெழுத்துக் குறியீடாகும். இது ஒரு தயாரிப்பு அல்லது தயாரிப்பு மாறுபாட்டை அதன் மாடல், அளவு அல்லது நிறம் போன்ற விவரங்களின் அடிப்படையில் அடையாளம் காணப் பயன்படுகிறது. SKUகள் நீளத்தில் மாறுபடலாம், மேலும் அவை எழுத்துகள், எண்கள் அல்லது இரண்டையும் கொண்டிருக்கலாம். தயாரிப்பு மாறுபாடுகளை வேறுபடுத்தவும், சரக்கு இருப்பைத் தடமறியவும் சரியான உருப்படியை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவும் SKUகள் பயன்படுகின்றன.

சரக்கு இருப்பின் வெளிச்செல்லும் இடமாற்றத்தை உருவாக்கும் முன்பு, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிலும் தனித்துவமான SKU உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வெவ்வேறான மாறுபாடுகளில் ஒரே SKU ஐப் பயன்படுத்த முடியாது. உங்கள் மாறுபாடுகள் ஏதேனும் ஒரே SKU ஐக் கொண்டிருந்தால், மாறுபாட்டின் விவரங்களில் ஒன்றை மாற்றவும். நீங்கள் CSV கோப்பைப் பயன்படுத்தி மொத்தமாக SKUகளைத் திருத்தவும் முடியும்.

Fulfillment Network உடன் மற்றொரு நிறைவேற்றச் சேவைச் செயலியைப் பயன்படுத்தினால், பல இருப்பிடங்களில் ஒரே SKU ஐப் பகிர்வது தடுக்கப்படலாம். இதைத் தீர்க்க, சரக்கு இருப்பை பல இருப்பிடங்களில் ஸ்டாக் செய்யலாம் அல்லது Fulfillment Network செயலி மூலம் உங்கள் 3PL ஸ்டாக் செய்ய வேண்டிய மாறுபாட்டின் நகலை எடுக்கலாம்.

உங்கள் 3PL இடம் சமர்ப்பித்த பிறகு தயாரிப்பின் SKU ஐ மாற்ற வேண்டாம்.

பார்கோடுகள்

பார்கோடு என்பது தயாரிப்புத் தகவலைச் சேமிக்கவும் கண்டறியவும் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தால் படிக்கக்கூடிய குறியீடாகும். தயாரிப்பின் வகையைப் பொறுத்து வெவ்வேறு நீளங்களில் எண்களைப் பார்கோடுகள் கொண்டிருக்கலாம். உங்கள் 3PL ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டுமெனில், தயாரிப்புகளின் பார்கோடுகள் தொழிற்துறைத் தரநிலை பார்கோடுகளாக இருக்க வேண்டும்.

சரக்கு இருப்பின் வெளிச்செல்லும் இடமாற்றத்தை உருவாக்கும் முன்பு, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிலும் தனித்துவமான பார்கோடு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வெவ்வேறு மாறுபாடுகளுக்கு ஒரே பார்கோடைப் பயன்படுத்த முடியாது.

மற்றொரு வணிகர் வேறொரு தயாரிப்புக்குப் பயன்படுத்தும் பார்கோடு உள்ள தயாரிப்பை நீங்கள் அனுப்பினால், உங்கள் 3PL உங்கள் தயாரிப்புக்குப் புதிய பார்கோடை வழங்கும்.

உங்கள் தயாரிப்புகளுக்குப் பார்கோடுகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகள்

நீங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்தால் மட்டுமே ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகள் தேவைப்படும். ஆர்டருக்கு எந்த வரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த சுங்கத்துறைத் தகவலை HS குறியீடுகள் வழங்கும். உங்கள் HS குறியீடுகளைக் கண்டறிந்து அவற்றை நீங்கள் சர்வதேச அளவில் அனுப்பும் தயாரிப்புகளுக்கு ஒதுக்கவும். உங்கள் தயாரிப்புகளில் HS குறியீடுகளைச் சேர்ப்பது எப்படி என அறியவும்.