Fulfillment Network பரிந்துரைக் கருவியைப் பயன்படுத்துதல்

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி அளவிட உதவும் சரியான 3PL (மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ்) வழங்குநரைக் கண்டறிய Fulfillment Network ஒரு பரிந்துரைக் கருவியை வழங்குகிறது. இந்தக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் பின்வரும் பலன்களைப் பெறலாம்:

  • உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப 3PL பரிந்துரைகள்.
  • வெவ்வேறு 3PLகளுக்கான தோராயமான விலை நிர்ணயக் கட்டமைப்புகள்.
  • வெவ்வேறு 3PLகளின் திறன்கள் அடிப்படையிலான ஒப்பீடுகள்.
  • நீங்கள் தேர்ந்தெடுத்த 3PLஇன் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் தடமறிதல்.
  • Shopifyஆல் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட 3PLகள்.

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Fulfillment Network பக்கத்தில் 3PL பரிந்துரைக் கருவி கிடைக்கும். உங்கள் வணிகத்திற்கு எந்த 3PLகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்க, இந்தப் பக்கத்திலிருந்து நீங்கள் அளவுகோல்களை அமைக்கலாம்.

3PL கட்டணங்களை மதிப்பிடுதல்

ஸ்டோர் விவரங்கள் கார்டில் உங்களின் தோராயமான ஷிப்பிங் மற்றும் சேமிப்பகத் தேவைகள் பற்றிய தகவலை உள்ளிட்டு முடிவுகளை வடிகட்டலாம். தகவலை உள்ளிட்ட பிறகு, நிறைவேற்றத்திற்கு ஆகும் தோராயக் கட்டணங்களும் மாதாந்திர சேமிப்பகக் கட்டணங்களும் கிடைக்கும் 3PLகளில் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Fulfillment Network என்பதற்குச் செல்லவும்.

  2. ஸ்டோர் விவரங்கள் பிரிவில் பின்வரும் தகவலை உள்ளிடவும்:

    • தயாரிப்பு மாதிரி: உங்கள் தயாரிப்புகளின் அளவு மற்றும் எடை. உங்கள் தயாரிப்புகளுக்கு மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • மாதத்திற்குச் சராசரி ஆர்டர்கள்: நீங்கள் மாதந்தோறும் நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கும் ஆர்டர்களின் எண்ணிக்கை.
    • மாதத்திற்குச் சேமிக்கப்படும் சராசரி யூனிட்டுகள்: மாதந்தோறும் 3PL இல் நீங்கள் சேமிக்கலாம் என எதிர்பார்க்கும் தயாரிப்புகளின் எண்ணிக்கை.
    • ஒரு ஆர்டருக்கான சராசரி யூனிட்டுகள்: ஒவ்வொரு ஷிப்மென்ட்டிலும் நீங்கள் எதிர்பார்க்கும் தயாரிப்புகளின் எண்ணிக்கை.
  3. விருப்பத்தேர்வு: உங்கள் முடிவுகளை ஃபில்டர் செய்ய, 3PL மூலம் அனுப்பப்படவும் சேமிக்கப்படவும் உள்ள தயாரிப்புகளுக்கான தயாரிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஸ்டோர் விவரங்களை உள்ளிட்டதும், கிடைக்கக்கூடிய 3PLகளுக்கான மதிப்பிடப்பட்ட கட்டணங்களுடன் பின்வரும் தகவல்களும் காட்டப்படும்:

  • ஆர்டர் செய்ததிலிருந்து டெலிவரி வரையிலான நேரம்: ஆர்டர்கள் செய்யப்படும் நேரத்திற்கும் அவை டெலிவரி செய்யப்படும் நேரத்திற்கும் இடையிலான சராசரி நேரத்தைக் குறிக்கிறது.
  • சரியான நேர நிறைவேற்றம்: சரியான நேரத்தில் நிறைவேற்றப்படும் ஆர்டர்களின் சதவீதத்தைக் குறிக்கிறது.
  • சரியான நேர டெலிவரி: இலக்குக்குச் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களின் சதவீதத்தைக் குறிக்கிறது.
  • அனுப்பக்கூடிய இடங்கள்: டெலிவரி செய்யக்கூடிய நாடுகளையும் பிராந்தியங்களையும் குறிக்கிறது.
  • கிடங்குகளின் எண்ணிக்கை: தயாரிப்புகளைச் சேமிக்கக் கிடைக்கும் கிடங்குகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

3PL-ஐத் தொடர்புகொள்ளவும்

3PL இன் சேவைகள் குறித்துக் கூடுதலான கேள்விகள் ஏதேனும் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Fulfillment Network என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் 3PL இன் கார்டில், தொடர்புகொள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் தொடர்புத் தகவல் மற்றும் உங்கள் கேள்விகள் அல்லது தேவைகளுடன் தொடர்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: 3PL இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யவும்.

  5. கோரிக்கையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தேவைகள் குறித்துக் கலந்தாலோசிக்க, 3PL இன் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்வார். 3PL உங்களைத் தொடர்புகொள்ள எடுக்கும் நேரம் மாறுபடலாம்.

உங்கள் ஸ்டோரை 3PL உடன் இணைக்கவும்

நீங்கள் 3PL உடன் தொடரத் தயாரானதும், அவர்களின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்க உங்கள் ஸ்டோரை இணைக்கலாம்.

நீங்கள் Flexport ஐத் தேர்ந்தெடுத்தால், Flexport அமைவு வழிகாட்டியைப் பார்க்கவும். வேறு 3PL ஐத் தேர்ந்தெடுத்தால், செயலியை நிறுவு என்பதைக் கிளிக் செய்து, 3PL வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.