Shopify Inbox-க்கு உடனடிப் பதில்களை அமைக்கவும்
வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அரட்டையைத் திறக்கும்போது, அரட்டைச் சாளரம் உங்கள் வாழ்த்துச் செய்தியையும் கேள்விகள் அல்லது பரிந்துரைகளின் பட்டியலையும் காட்டும். இந்தப் பரிந்துரைகளின் உள்ளடக்கம் மற்றும் செயல்பாடு, உங்கள் Inbox ஏஜென்ட் செயலில் உள்ளதா என்பதைப் பொறுத்து அமையும்.
உங்கள் Inbox ஏஜென்ட் ஆக்டிவாக இல்லாதபோது, தனிப்பயன் உடனடிப் பதில்களிலிருந்து பரிந்துரைகள் கிடைக்கும். வாடிக்கையாளர் ஒரு கேள்வியைக் கிளிக் செய்தால், முன்பே வரையறுக்கப்பட்ட பதில் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, உங்களின் திருப்பியளிப்புக் கொள்கையை விளக்கும் உடனடிப் பதிலை உருவாக்கினால், வாடிக்கையாளர்கள் உங்களின் திருப்பியளிப்புக் கொள்கை என்ன? என்ற கேள்வியைக் கிளிக் செய்து பதிலைப் பார்க்கலாம். அதன்பின்னர் வரும் செய்திகளுக்கு உங்கள் பணியாளர்கள் பதிலளிப்பார்கள்.
உங்கள் Inbox ஏஜென்ட் ஆக்டிவாக இருக்கும்போது, அது உரையாடலைத் தொடங்கும் செய்திகளை வழங்கி பதில்களையும் கையாளும். உங்கள் Inbox ஏஜென்ட் ஆக்டிவாக உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆர்டர் எண்ணையும் மின்னஞ்சலையும் பயன்படுத்தும் எனது ஆர்டரைத் தடமறி விருப்பம் கிடைக்கும். ஏற்கெனவே உள்ள ஆர்டரை மதிப்பாய்வு செய்ய, வாடிக்கையாளர் உள்நுழைய வேண்டும்.
Chat buttons are different from instant answers and from the suggestions that your Inbox agent displays in the chat window. Chat buttons are displayed on your online store pages and open the chat.
இந்தப் பக்கத்தில்
AI உருவாக்கிய உடனடிப் பதில் பரிந்துரைகள்
AI உருவாக்கும் உடனடிப் பதில் பரிந்துரைகள் உங்கள் ஸ்டோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் ஸ்டோரின் கொள்கைகளில் போதிய தகவல் இல்லை எனில், வணிகர்கள் பொதுவாகப் பெறும் கேள்விகளின் அடிப்படையில் உடனடிப் பதில்கள் பரிந்துரைக்கப்படும். அந்தக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஸ்டோருக்குப் பொருத்தமான பதிலை நீங்கள் சேர்க்கலாம்.
தானாக உருவாக்கப்படும் உடனடிப் பதில் பரிந்துரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். இயல்பாக, ஆங்கிலப் பரிந்துரைகளுக்கு அமெரிக்க ஆங்கிலமே பயன்படுத்தப்படும். AI பயன்படுத்தும் மொழித் தரவு பெரும்பாலும் வட அமெரிக்க மூலங்களிலிருந்தே பெறப்படுவதால், உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் அப்பகுதிக்குரிய சொற்களும் வெளிப்பாடுகளும் இருக்கலாம். உங்கள் தேவைக்கேற்பப் பரிந்துரைக்கப்படும் உடனடிப் பதில் உள்ளடக்கத்தின் எந்தப் பகுதியையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
பரிந்துரையிலிருந்து உடனடிப் பதிலை உருவாக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > இன்பாக்ஸ் என்பதற்குச் செல்லவும்.
அரட்டை அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதில்கள் பிரிவில், பரிந்துரைக்கப்பட்ட உடனடிப் பதிலைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: தானாக உருவாக்கப்பட்ட கேள்வியையும் பதிலையும் திருத்திவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அரட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உடனடிப் பதிலைச் சேர்க்க, ஆன் செய் என்பதைக் கிளிக் செய்துவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதிலை உருவாக்கவும்
உங்களுக்குத் தேவையான அளவு உடனடிப் பதில்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு 100 உடனடிப் பதில்கள் வரைக் காட்டலாம். உடனடிப் பதிலை உருவாக்கும்போது, வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் கேள்வி, அக்கேள்விக்கான பதில் என இரண்டையும் நீங்கள் உள்ளிட வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > இன்பாக்ஸ் என்பதற்குச் செல்லவும்.
அரட்டை அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதில்கள் பிரிவில், உடனடிப் பதிலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கேள்வி உரைப் பெட்டியில், நீங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்ட விரும்பும் கேள்வியை உள்ளிடவும்.
பதில் உரைப் பெட்டியில், வாடிக்கையாளர்கள் கேள்வியைக் கிளிக் செய்யும்போது அவர்களுக்குக் காட்ட விரும்பும் பதிலை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: இயல்பாகவே உங்களின் புதிய உடனடிப் பதில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும். அது காட்டப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில், பார்வைநிலை பிரிவில் ஆஃப் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதில்கள் காட்டப்படும் வரிசையை மாற்றவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > இன்பாக்ஸ் என்பதற்குச் செல்லவும்.
அரட்டை அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதில்கள் பிரிவில்,
⋮⋮என்பதைக் கிளிக் செய்து, காட்டப்படும் பட்டியலை மறுவரிசைப்படுத்த உடனடிப் பதிலை இழுத்துவிடவும்.சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதிலை ஆஃப் செய்யவும்
ஒரு உடனடிப் பதிலைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும், ஆனால் அது உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் காட்டப்படுவதை மறைக்க வேண்டும் எனில், அந்த உடனடிப் பதிலை நீங்கள் ஆஃப் செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > இன்பாக்ஸ் என்பதற்குச் செல்லவும்.
அரட்டை அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதில்கள் பிரிவில், நீங்கள் மறைக்க விரும்பும் உடனடிப் பதிலுக்கு நேராக உள்ள ஆஃப் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதிலை மீண்டும் ஆன் செய்ய, முந்தைய படிகளை மீண்டும் செய்துவிட்டு ஆன் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதிலை நீக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > இன்பாக்ஸ் என்பதற்குச் செல்லவும்.
அரட்டை அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் நீக்க விரும்பும் உடனடிப் பதிலைக் கிளிக் செய்யவும்.
உடனடிப் பதிலை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த, உடனடிப் பதிலை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.