Shopify Inbox இல் அறிவிப்புகளை அமைத்தல்

ஒரு வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உரையாடலைத் தொடங்கும்போது அல்லது ஏற்கனவே உள்ள உரையாடலுக்குப் பதிலளிக்கும்போது, பின்வரும் எந்தவொரு அறிவிப்புகளின் மூலமும் அவர்களின் செய்திக்கான அறிவிப்பை நீங்கள் பெறலாம்:

உரையாடல்களின் புதுப்பிப்புகளுக்கான நிகழ்நேர விழிப்பூட்டல்களைப் பெற, டெஸ்க்டாப், மொபைல் மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளை நீங்கள் ஆன் செய்ய வேண்டும். அறிவிப்புகளைப் பெற, உங்கள் Shopify கணக்கு Shopify Inbox-க்குத் தேவையான அனுமதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் பல ஸ்டோர்களில் Inbox ஐ நிறுவியிருந்தால், நீங்கள் உள்நுழைந்துள்ள ஒவ்வொரு ஸ்டோருக்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். ஒரு ஸ்டோருக்கான அறிவிப்புகளை முடக்க, மொபைலின் பக்கவாட்டு மெனுவில் இருந்தோ அல்லது டெஸ்க்டாப்பின் ஸ்டோர் கீழ்தோன்றல் மெனுவில் இருந்தோ அந்த குறிப்பிட்ட ஸ்டோரிலிருந்து வெளியேறவும்.

டெஸ்க்டாப் அறிவிப்புகள்

உங்கள் உலாவி திறந்திருக்கும்போது மற்றும் நீங்கள் உங்கள் Shopify கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது Chrome மற்றும் Firefox இல் புதிய Inbox செய்திகளுக்கான டெஸ்க்டாப் அறிவிப்புகள் தோன்றும். நீங்கள் உள்நுழைந்த பிறகு, உங்கள் செய்திகளைப் பார்க்க, குறைந்தபட்சம் ஒரு முறையாவது Shopify Inbox ஐத் திறக்க வேண்டும். நீங்கள் உள்நுழைந்து Shopify Inbox செயலியைத் திறந்த பிறகு, உலாவித் தாவலை நீங்கள் மூடலாம், எனினும் உங்கள் உலாவியை மூடும் வரை அறிவிப்புகள் அனுப்பப்படும். உலாவி மூடினாலோ அல்லது உங்கள் Shopify கணக்கிலிருந்து வெளியேறினாலோ, டெஸ்க்டாப் அறிவிப்புகளைப் பெற நீங்கள் மீண்டும் Shopify Inbox இல் உள்நுழைய வேண்டியிருக்கும்.

Safari அல்லது Edge போன்ற வேறு உலாவியைப் பயன்படுத்தினால், டெஸ்க்டாப் அறிவிப்புகளைப் பெற, நீங்கள் Shopify Inbox இல் உள்நுழைந்து, உலாவித் தாவலைத் திறந்திருக்க வேண்டும்.

உங்கள் ஸ்டோருக்கு ஒரு செய்தி வரும்போது, ஒரு விழிப்பூட்டல் ஒலிக்கும், திறந்திருக்கும் ஏதேனும் Inbox உலாவித் தாவல்களில் அதற்கான குறியீடு காட்டப்படும், அத்துடன் ஒரு டெஸ்க்டாப் அறிவிப்பும் தோன்றும்.

Shopify Inbox இல் டெஸ்க்டாப் அறிவிப்புகளை ஆன் செய்தல்

  1. Shopify Inbox க்குச் சென்று, உங்கள் ஸ்டோரில் உள்நுழையவும்.
  2. உங்கள் கணினியில் டெஸ்க்டாப் அறிவிப்புகளைப் பெற, Shopify Inbox வழங்கும் டெஸ்க்டாப் அறிவிப்புகளை அனுமதிக்கும்படி உங்கள் உலாவி கேட்கும்போது அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் முதல் முறை Shopify Inbox இல் உள்நுழையும்போது இந்த உலாவி பிராம்ட் தோன்றும்.
  3. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அறிவிப்பு வகைகள் பிரிவில், உங்கள் டெஸ்க்டாப் சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  5. அறிவிப்பு ட்ரிக்கர்கள் பிரிவில், நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் ஒவ்வொரு ட்ரிக்கருக்கும் புஷ் அறிவிப்புகள் (டெஸ்க்டாப் மற்றும் மொபைல்) என்பதைத் தேர்வுசெய்யவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. விருப்பத்தேர்வு: உங்கள் சாதனத்திற்கு ஒரு சோதனை அறிவிப்பை அனுப்ப, சோதனை அறிவிப்பை அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

மொபைல் அறிவிப்புகள்

உங்களின் Android அல்லது iPhone மொபைல் சாதனத்தில் Shopify Inbox மொபைல் செயலி நிறுவப்பட்டிருந்தால், புதிய செய்திகளுக்கான மொபைல் அறிவிப்புகள் காட்டப்படும். அறிவிப்புகளைப் பெற, உங்களின் Shopify கணக்கைக் கொண்டு Shopify Inbox செயலியில் உள்நுழைய வேண்டும். உங்கள் சாதனத்தில் Shopify செயலியும் நிறுவப்பட்டிருந்தால், ஏதேனும் ஒரு செயலியிலிருந்து வெளியேறும்போது மற்றொன்றிலிருந்தும் வெளியேற்றப்படுவீர்கள், மேலும் உங்களுக்கு அறிவிப்புகள் வருவது நிறுத்தப்படும்.

மொபைல் அறிவிப்புகளை ஆன் செய்தல்

எல்லா அறிவிப்பு விருப்பங்களையும் பெற, உங்கள் Shopify Inbox மொபைல் செயலியின் பதிப்பு 6.12.0 அல்லது அதற்கும் மேலானதாக இருக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் மொபைல் சாதனத்தில், Shopify Inbox மொபைல் செயலியைத் திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவர ஐகான் > அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. அறிவிப்பு வகைகள் பிரிவில் உங்கள் மொபைல் சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  4. நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் தூண்டுதல்களுக்கு, மொபைல் மற்றும் டெஸ்க்டாப் விருப்பம் இயக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.
  6. விருப்பத்திற்குரியது: உங்கள் சாதனத்திற்குச் சோதனை அறிவிப்பை அனுப்ப, சோதனை அறிவிப்பை அனுப்பு என்பதைத் தட்டவும்.

மின்னஞ்சல் அறிவிப்புகள்

புதிய Inbox மெசேஜ்களுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகள், உங்கள் Shopify கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. Shopify Inbox பகுதிக்குச் சென்று, தேவைப்பட்டால் உங்கள் ஸ்டோரில் உள்நுழையவும்.
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்துவிட்டு, அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அறிவிப்பு வகைகள் பிரிவில் உங்கள் Shopify கணக்கின் மின்னஞ்சல் முகவரி பட்டியலிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  4. அறிவிப்பு ட்ரிக்கர்கள் பிரிவில், நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் தூண்டுதல்களுக்கு மின்னஞ்சல் அறிவிப்பு என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விருப்பத்திற்குரியது: உங்கள் மின்னஞ்சலுக்குச் சோதனை அறிவிப்பை அனுப்ப, சோதனை அறிவிப்பை அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. உங்கள் மொபைல் சாதனத்தில், Shopify Inbox மொபைல் செயலியைத் திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவர ஐகான் > அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. அறிவிப்பு வகைகள் பிரிவில் உங்கள் Shopify கணக்கின் மின்னஞ்சல் முகவரி பட்டியலிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  4. நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் தூண்டுதல்களுக்கு மின்னஞ்சல் விருப்பம் இயக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.
  6. விருப்பத்திற்குரியது: உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு சோதனை அறிவிப்பை அனுப்ப, சோதனை அறிவிப்பை அனுப்பு பொத்தானைத் தட்டவும்.