செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கான கூடுதல் பணிகள்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை நீங்கள் செயலாக்கிய பிறகு, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வாடிக்கையாளர் ஏற்கனவே செலுத்திவிட்டார் என்பதைக் குறிக்க, சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP) ஷிப்பிங் லேபிள்களை அச்சிட வேண்டும். உங்கள் ஸ்டோரைப் பொறுத்து, உங்கள் ஸ்டோரின் சில தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம், ஃப்ளாஷ் விற்பனைக்குத் தயாராகலாம் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் குறித்த கொள்கைகளை உருவாக்கலாம். சர்வதேச அளவில் ஷிப்பிங் செய்வதற்கு முன், பின்வரும் பணிகளை மதிப்பாய்வு செய்யவும்.

DDP ஷிப்பிங் லேபிள்களை வாங்கிப் பயன்படுத்துதல்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்கத் தொடங்கிய பிறகு, உங்கள் சர்வதேச ஆர்டர்களுக்கு நிலையான ஷிப்பிங் லேபிள்களுக்குப் பதிலாக DDP ஷிப்பிங் லேபிள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். செக்அவுட்டில் நீங்கள் சுங்க வரிகளை வசூலித்து, நிலையான ஷிப்பிங் லேபிளைப் பயன்படுத்தினால், டெலிவரியின்போது உங்கள் வாடிக்கையாளரிடம் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிக்கப்படும். இந்நிலையில், உங்கள் வாடிக்கையாளர் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கு இருமுறை பணம் செலுத்துகிறார்.

சர்வதேச ஆர்டரில் சுங்க வரிகள் வசூலிக்கப்படும்போது, அந்த ஆர்டரின் விவரங்களில் சுங்க வரிகள் என்ற வரிசை உருப்படி சேர்க்கப்படும். DDP லேபிளை வாங்குவதற்கு முன், ஒவ்வொரு சர்வதேச ஆர்டரிலும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் $0 சுங்க வரிகளுடன் ஒரு ஆர்டரை அனுப்பினால், உங்கள் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த DDP ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்தலாம். செக்அவுட்டில் ஏதேனும் பிழை ஏற்பட்டிருந்தால், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிக்கப்படாமல் இருக்கலாம், அந்த ஆர்டருக்கு நீங்கள் நிலையான ஷிப்பிங் லேபிளைப் பயன்படுத்த வேண்டும்.

கேரியரிடமிருந்து உங்களின் முதல் விலைப்பட்டியலைப் பெற்றதும், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் சரியாக வசூலிக்கப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க, செக்அவுட்டில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஷிப்பிங் இலக்கில் சுங்கச்சாவடியால் வசூலிக்கப்படும் கட்டணங்களுடன் ஒப்பிடவும். அவ்வப்போது இந்தச் செயல்முறையை மீண்டும் செய்யவும். செக்அவுட்டில் வசூலிக்கப்படும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிக்கும் சுங்க அதிகாரிகளால் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை நீங்கள் கவனித்தால், உங்கள் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் முடிந்தவரை துல்லியமாகக் கணக்கிடப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் அமைவை மதிப்பாய்வு செய்யவும்.

வணிக விலைப்பட்டியல்களை உருவாக்குதல்

ஒவ்வொரு சர்வதேச ஆர்டருக்கும் வணிக விலைப்பட்டியல் தேவை. கேரியர் இணையதளத்தில், கேரியர் வழங்கும் டிஜிட்டல் வணிக விலைப்பட்டியல்களை நீங்கள் பூர்த்தி செய்யலாம். ஆர்டரைப் பொறுத்து, பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நீங்கள் வணிக விலைப்பட்டியலை உருவாக்க வேண்டும்:

  • ஆர்டருக்கு சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் செலுத்தப்பட்டிருந்தால், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் செலுத்தப்பட்டுவிட்டன என்பதைக் குறிக்க, வணிக விலைப்பட்டியலில் டெலிவரி விதிமுறைகளை DDP எனக் குறிக்கவும்.
  • ஆர்டருக்கு சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் செலுத்தப்படவில்லை எனில், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் இன்னும் செலுத்தப்படவில்லை என்பதைக் குறிக்க, வணிக விலைப்பட்டியலில் டெலிவரி விதிமுறைகளை DAP (இடத்தில் டெலிவரி செய்யப்பட்டது) எனக் குறிக்கவும்.

வாடிக்கையாளரிடம் நீங்கள் வசூலிக்கும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிக்கும் சுங்கச்சாவடி ஏஜென்சிகளால் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறைக்க, உங்கள் வணிக விலைப்பட்டியலில் துல்லியமான தகவல்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். உங்களின் விலைப்பட்டியலை உருவாக்கும்போது, பின்வருபவை வணிக விலைப்பட்டியல் மற்றும் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்:

  • ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடு
  • மூல நாடு அல்லது பிராந்தியம்
  • தள்ளுபடிகளுக்குப் பிந்தைய விலை
  • அளவு
  • வசூலிக்கப்பட்ட சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரி
  • நீங்கள் குறைந்த மதிப்புள்ள பொருட்கள் வரியை வசூலிக்கிறீர்கள் எனில் உங்களின் உள்ளூர் வரிப் பதிவு எண்

உங்கள் ஷிப்பிங் கொள்கை மற்றும் அறிவிப்புகளைப் புதுப்பித்தல்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதைச் செயல்படுத்திய பிறகு, உங்கள் சர்வதேச விற்பனைக்கான கொள்கைகள் மற்றும் கட்டணங்களை உங்கள் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் உங்கள் ஷிப்பிங் கொள்கை மற்றும் உங்கள் அறிவிப்பு வார்ப்புருக்களைப் புதுப்பிக்கவும்.

உங்கள் Shopify நிர்வாகியில் அமைப்புகள் > கொள்கைகள் என்பதற்குச் சென்று உங்கள் ஷிப்பிங் கொள்கையைப் புதுப்பிக்கவும்.

நீங்கள் இயல்புநிலை ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் மின்னஞ்சல் வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால், சுங்க வரிகள் வரிசை உருப்படியைச் சேர்க்க உங்கள் மின்னஞ்சல்கள் தானாகவே புதுப்பிக்கப்படும், நீங்கள் எவ்வித மாற்றங்களையும் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கியிருந்தால், சுங்க வரிகள் வரியைச் சேர்க்க நீங்கள் உங்கள் அறிவிப்பு வார்ப்புருக்களில் குறியீட்டைச் சேர்க்கலாம்.

ஃப்ளாஷ் விற்பனைகளுக்குத் தயாராகுதல்

நீங்கள் ஃப்ளாஷ் விற்பனைகளை நடத்தினால், உங்கள் விற்பனை முடியும் வரை செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை முடக்குவதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் விற்பனையின் போது செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்க நீங்கள் முடிவு செய்தால், உங்கள் விற்பனைத் தயாரிப்புகளில் HS குறியீடுகள், மூல நாடு அல்லது பிராந்தியம் மற்றும் தயாரிப்பு வகை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க அவற்றை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் விற்பனைத் தயாரிப்புகளில் இந்தப் புலங்கள் நிரப்பப்பட்டுள்ளதைச் சரிபார்ப்பது, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிச் செலவுகளை மதிப்பிட உதவுகிறது.

பணத்தைத் திரும்பப்பெறுதல்களை நிர்வகித்தல்

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உங்கள் விருப்பமாகும். சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்குப் பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் முடிவு செய்தால் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

  • இன்னும் நிறைவேற்றப்படாத ஆர்டருக்கான பணத்தைத் திரும்ப அளித்தால், வாடிக்கையாளருக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் திரும்ப அளிக்கம்.
  • ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஆர்டருக்கான பணத்தை நீங்கள் திரும்ப அளித்தால், வாடிக்கையாளருக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் திரும்ப அளிக்கலாம். இருப்பினும், DDP லேபிள்களை வாங்க நீங்கள் பயன்படுத்திய எந்த நிதியும் கேரியரால் உங்களுக்குத் திருப்பித் தரப்படாது.

இறக்குமதி வரி செலுத்தப்பட்ட ஆர்டருக்கான பணத்தை நீங்கள் திரும்ப அளிக்கும்போது, மற்ற சுங்கக் கட்டணங்களிலிருந்து வரியைத் தனியாகத் திரும்ப அளிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் செலுத்திய நிதியைச் சுங்க முகமையிடமிருந்து மீட்டெடுக்க முடியாத நிலையில், உங்கள் வாடிக்கையாளருக்காக அந்தச் செலவை ஏற்க நீங்கள் விரும்பவில்லை எனில், இறக்குமதி வரிக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்களை நீங்கள் நிறுத்தி வைக்க விரும்பலாம்.

வாடிக்கையாளர் அவர்களின் கட்டண வழங்குநரிடம் ஆர்டர் தொடர்பான சர்ச்சையை எழுப்புவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஆர்டருக்கான முழுப் பணத்தையும் திரும்ப அளிப்பதே என்பதை நினைவில் கொள்ளவும்.