சர்வதேச ஆர்டர்களுக்கான கேரியர்கள் மற்றும் ஷிப்பிங் விதிமுறைகள்

நீங்கள் எல்லையைத் தாண்டி ஒரு ஆர்டரை அனுப்பும்போது, ஷிப்மென்ட் விடுவிக்கப்படுவதற்கு முன்பு உங்கள் வாடிக்கையாளரின் நாடு சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை விதிக்கலாம். உங்கள் கேரியர் வழக்கமாக அவற்றை வசூலிப்பார், மேலும் நீங்கள் பயன்படுத்தும் ஷிப்பிங் விதிமுறைகள் நீங்களா அல்லது வாடிக்கையாளரா யார் பணம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். சுங்க அதிகாரியால் விதிக்கக்கூடிய தனிப்பட்ட கட்டணங்களுக்கு, சுங்கக் கட்டணங்களைப் புரிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.

கேரியர்கள்

கேரியர் என்பது ஒரு தயாரிப்பைக் கொண்டு செல்லும் சேவையாகும். எல்லைகளைத் தாண்டி அனுப்பப்படும் தயாரிப்புகளுக்கு, கேரியர் சுங்கத் தரகராகச் செயல்படுகிறார் மற்றும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஷிப்மென்ட்டுக்குப் பயன்படுத்தப்படும் இன்கோடெர்ம்ஸ் அடிப்படையில் விற்பனையாளர் அல்லது வாடிக்கையாளரிடமிருந்து கேரியர்கள் இந்தக் கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

ஷிப்பிங் லேபிள்களுடன் DDP லேபிள்களை வாங்குதல்

Shopify இன் கேரியர் கணக்குகள் மூலம் ஷிப்பிங் லேபிள்களை வாங்கும்போது, குறிப்பிட்ட கேரியர்களுக்கு மட்டுமே DDP (சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி) லேபிள்கள் ஆதரிக்கப்படும். நீங்கள் செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலித்தால், பின்வரும் கேரியர்களுக்கு நீங்கள் DDP லேபிள்களை வாங்கலாம்:

Shopify இன் கேரியர் கணக்குகளுடன் வேறு ஏதேனும் கேரியரை நீங்கள் பயன்படுத்தினால், சுங்க வரிகள் வசூலிக்கப்பட்ட ஆர்டர்களுக்கு உங்களால் லேபிளை வாங்க முடியாது. நீங்கள் வெளிப்புறமாக லேபிளை வாங்க வேண்டும் அல்லது ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

இன்கோடெர்ம்ஸ்

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நிர்வகிப்பதற்கான விருப்பங்கள் சர்வதேச வர்த்தக விதிமுறைகள் அல்லது இன்கோடெர்ம்ஸ் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வாடிக்கையாளரிடம் எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கான கட்டணத்தை உங்கள் ஷிப்பிங் கேரியர் எவ்வாறு வசூலிக்கிறார் என்பதை இன்கோடெர்ம்ஸ் தீர்மானிக்கின்றன. பின்வருபவை மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் இன்கோடெர்ம்ஸ் ஆகும்:

  • சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP). பொருட்கள் எல்லைகளைத் தாண்டும்போது செலுத்தக்கூடிய சுங்க வரிகள், இறக்குமதி வரிகள் அல்லது புரோக்கரேஜ்/பணப்பட்டுவாடா கட்டணங்கள் போன்ற எந்தவொரு இறக்குமதிச் செலவுகளுக்கும் விற்பனையாளரே பொறுப்பேற்பார் என்பதை இந்த விதிமுறை குறிக்கிறது. செக்அவுட் செயல்முறையின்போது நீங்கள் இந்தக் கட்டணங்களை வசூலிக்கலாம். DDP இன்கோடெர்ம் கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்பின் மொத்த விலையை வழங்குவதோடு ஷிப்பிங் தாமதங்களைத் தவிர்க்கவும் உதவுகிறது.
  • இடத்தில் டெலிவரி செய்யப்பட்டது (DAP). விற்பனையாளர் தயாரிப்பை அனுப்புவதற்கு மட்டுமே பொறுப்பாவார் என்பதையும், டெலிவரியின்போது சுங்க வரிகள், இறக்குமதி வரிகள் அல்லது புரோக்கரேஜ்/பணப்பட்டுவாடா கட்டணங்கள் போன்ற எந்தவொரு இறக்குமதிச் செலவுகளையும் ஷிப்பிங் கேரியருக்குச் செலுத்த வாடிக்கையாளரே பொறுப்பாவார் என்பதையும் இந்த விதிமுறை குறிக்கிறது. முன்கூட்டியே சுங்க வரிகள் செலுத்தப்படாவிட்டால், டெலிவரியின்போது சுங்க வரிகளை வசூலிப்பதற்காகச் சில ஷிப்பிங் கேரியர்கள் கூடுதல் கட்டணங்களை விதிக்கின்றன. DAP இன்கோடெர்மைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் கட்டணங்கள் ஏற்படலாம்.

உங்கள் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க உதவ, உங்கள் செக்அவுட்டில் பொருந்தக்கூடிய சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் விதிக்கலாம். சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்குப் பின்னர் உங்கள் கேரியர் உங்களுக்கு இன்வாய்ஸ் அனுப்புவார், அதன்பின் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து நீங்கள் வசூலிக்கும் கட்டணத்தைக் கொண்டு நீங்கள் செலுத்தலாம்.

சர்வதேச ஷிப்பிங் ஒப்பந்தங்கள்

வாடிக்கையாளருக்கும் வணிகருக்கும் இடையில் பொருட்களைக் கொண்டு செல்வதில் சர்வதேச ஷிப்பிங் ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்கள் போக்குவரத்தில் இருக்கும்போது யார் அவற்றக்குப் பொறுப்பேற்பது என்பதை இந்த ஒப்பந்தங்கள் தீர்மானிக்கின்றன. பின்வருபவை மிகவும் பொதுவான ஒப்பந்தங்கள் ஆகும்:

  • செலவு, காப்பீடு, சரக்கு (CIF). பொருட்கள் வாடிக்கையாளரால் பெறப்படும் வரை காப்பீடு மற்றும் பிற செலவுகளை விற்பனையாளரே ஏற்றுக்கொள்கிறார் என்பதை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.
  • செலவின்றி ஏற்றுதல் (FOB). பொருட்கள் அனுப்பப்பட்டவுடன் காப்பீடு மற்றும் பிற செலவுகளை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார் என்பதை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.

ஒரு ஷிப்மென்ட் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரி வரம்புகளுக்கு மேல் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும்போது, பெரும்பாலான நாடுகளும் பிராந்தியங்களும் ஷிப்பிங், கையாளுதல் மற்றும் காப்பீடு (CIF) ஆகியவற்றைச் சேர்க்கின்றன. மற்றவை இந்தச் செலவுகளைத் தவிர்க்கின்றன (FOB). எந்தெந்த ஒப்பந்தங்கள் உங்களுக்குக் கிடைக்கின்றன என்பது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் ஷிப்பிங் கேரியரைத் தொடர்புகொள்ளவும். ஷிப்பிங், கையாளுதல் மற்றும் காப்பீட்டிற்கான செலவுகளைச் சேர்க்காத குறிப்பிடத்தக்க நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பின்வருமாறு:

  • கனடா
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • தென்னாப்பிரிக்கா

ஷிப்பிங் விதிமுறைகள் குறித்து உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

புரோக்கரேஜ் மற்றும் பணப்பட்டுவாடா கட்டணங்கள்

கேரியர்கள் தங்களின் சேவைகளுக்குப் புரோக்கரேஜ் மற்றும் பணப்பட்டுவாடா கட்டணத்தை விதிக்கலாம். இந்தக் கட்டணம் சுங்க ஆணையத்தால் அல்லாமல் கேரியரால் விதிக்கப்படுகிறது, எனவே செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பது செயல்படும்போது அது சேர்க்கப்படாது. உங்கள் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் புரோக்கரேஜ் மற்றும் பணப்பட்டுவாடா கட்டணத்தை வசூலிக்க வேண்டியிருந்தால், உங்கள் ஷிப்பிங் கட்டணங்களில் கட்டணத்தின் செலவைச் சேர்ப்பதைக் கருத்தில்கொள்ளவும்.