செக்அவுட்டில் சர்வதேசச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலித்தல்

உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்க, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கான தேவைகளை உங்கள் ஸ்டோர் பூர்த்தி செய்யவில்லை எனில், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிட நீங்கள் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தலாம்.

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியைக் கணக்கிடுவதற்கான பரிவர்த்தனைக் கட்டணச் செலவுகள்

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிட்ட ஆர்டர்களுக்குப் பரிவர்த்தனைக் கட்டணம் பொருந்தும். தற்காலிகமாகக் குறைக்கப்பட்ட கட்டணம் செயல்பாட்டில் இல்லாதபோது, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிட பின்வரும் கட்டணங்கள் வசூலிக்கப்படும்:

  • Shopify Payments-ஐத் தங்களின் கேட்வேயாகப் பயன்படுத்தும் ஸ்டோர்களில், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடும் ஆர்டர்களுக்கு 0.85% பரிவர்த்தனைக் கட்டணம் பொருந்தும். Shopify Payments முதன்மை கேட்வேயாக இருக்கும் வரை, PayPal போன்ற மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தும் ஆர்டர்களுக்கும் இந்த 0.85% பரிவர்த்தனைக் கட்டணம் பொருந்தும்.
  • பிற கட்டண வழங்குநர்களைத் தங்களின் கேட்வேயாகப் பயன்படுத்தும் ஸ்டோர்களில், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடும் ஆர்டர்களுக்கு 1.5% பரிவர்த்தனைக் கட்டணம் பொருந்தும். Shopify Payments முதன்மை கேட்வேயாக இல்லாவிட்டால், Shop Pay-ஐ விரைவான செக்அவுட்டாக பயன்படுத்தும் ஸ்டோர்களுக்கும் 1.5% பரிவர்த்தனைக் கட்டணம் பொருந்தும்.

கணக்கிடப்படும் தொகை பூஜ்ஜியமாக இருந்தாலும், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடும் ஒவ்வொரு ஆர்டருக்கும் பரிவர்த்தனைக் கட்டணம் பயன்படுத்தப்படும். பின்வரும் சந்தர்ப்பங்களில் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது:

  • ஸ்டோர் அமைந்துள்ள அதே நாடு அல்லது பிராந்தியத்திற்கு ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்கள்.
  • ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளுக்கு இடையே ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்கள்.
  • கைவிடப்பட்ட செக்அவுட்கள்.

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலித்தல்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை நீங்கள் செயல்படுத்தும்போது, சர்வதேச ஆர்டர்களுக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிக்கப்படும். உங்களின் நிறைவேற்றும் இடம் அமைந்துள்ள பிராந்தியங்களிலிருந்து செய்யப்படும் ஆர்டர்கள் பாதிக்கப்படாது.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் ஷிப்பிங் கேரியர்களும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளும் சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரியை (DDP) ஆதரிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும்.

  4. செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் வசூலிக்க விரும்பும் ஷிப்பிங் நாடுகள் அல்லது பிராந்தியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. HS குறியீடுகள் மற்றும் மூல நாடு அல்லது பிராந்தியம் விடுபட்டுள்ளதாகக் கொடியிடப்பட்ட தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்து, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் துல்லியமாகக் கணக்கிடப்படுவதை உறுதிசெய்ய அந்த விடுபட்ட தகவல்களைச் சேர்க்கவும்.

  6. சர்வதேச விற்பனைக்காக உங்கள் ஸ்டோர் கொள்கையையும் அறிவிப்புகளையும் புதுப்பித்துள்ளதை உறுதிப்படுத்தவும்.

  7. செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் சர்வதேச வரிகளைக் கணக்கிடுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

  8. ஏற்றுச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் அமைவு நிறைவடைந்தவுடன், சர்வதேச விற்பனைக்காக உங்கள் ஸ்டோரை அமைக்க முடிக்க வேண்டிய கூடுதல் பணிகளை மதிப்பாய்வு செய்யவும்.

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கான கட்டணங்களை மதிப்பாய்வு செய்தல்

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளின் வசூலை அமைத்த பிறகு, தொகை $0 ஆக இருந்தாலும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆர்டரிலும் உள்ள கட்டணங்களின் சுருக்கத்தை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். அந்தச் சுருக்கத்தில் பின்வரும் தகவல்கள் உள்ளன:

  • ஆர்டரில் உள்ள ஒவ்வொரு உருப்படிக்குமான பொருந்தக்கூடிய ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகள், சுங்க வரி விகிதங்கள், சுங்க வரியின் பெயர் மற்றும் கணக்கிடப்பட்ட சுங்க வரித் தொகை
  • ஆர்டருக்கு முன்னுரிமை ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது
  • ஆர்டர் குறைந்தபட்ச மதிப்புக்கு (de minimis) மேல் இருந்ததா என்பது

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. சுங்க வரிகள் பிரிவில், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளின் தொகையைக் கிளிக் செய்யவும்.

சந்தைகள் பிரிவில் குறிப்பிட்ட சந்தைகளுக்கான சுங்க வரிகள் மற்றும் வரிகளை அமைக்கவும்

ஒவ்வொரு சந்தைக்கும், அந்தச் சந்தைக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் விதிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும் செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரிகள் மற்றும் சுங்க வரிகள் எப்படிக் காட்டப்படும் என்பதையும் அமைக்கலாம்.

உங்கள் ஸ்டோர் Plus திட்டத்தில் இருந்து, நீங்கள் சந்தைகளுடன் B2B-ஐப் பயன்படுத்தினால், B2B முதன்மைச் சந்தைக்கான சுங்க வரிகள் மற்றும் வரிகளை முடக்கி, உங்கள் அமைப்பை உங்கள் B2B துணைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லலாம் அல்லது பின்வரும் படிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சந்தையையும் தனித்தனியாக நிர்வகிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.

  3. வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்கு அடுத்துள்ள + ஐகானைக் கிளிக் செய்யவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன காட்டப்படும் என்பதற்கான உதாரணத்தை வழங்க ஒரு முன்னோட்டம் உருவாக்கப்படும்.

  4. அந்தச் சந்தைக்கான வரிகள் மற்றும் சுங்க வரிகளை வசூலிக்க, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை வசூலி என்ற விருப்பத்தை இயக்கவும். இயல்பாக, உங்கள் வரி வசூலிப்பானது டைனமிக் வரிப் காட்சி மற்றும் வரிசை உருப்படியாகக் காட்டு என அமைக்கப்பட்டிருக்கும்.

  5. விருப்பத்தேர்வு: உங்கள் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கான அமைப்புகளை மாற்றவும்:

    1. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரிகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
      • வாடிக்கையாளரின் பிராந்தியத்தின் அடிப்படையில் வரிகளைத் தானாகவே உள்ளூர்மயமாக்க, டைனமிக் வரிப் காட்சி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்த நாடு வரியுடன் கூடிய கட்டணத்தை எதிர்பார்க்கும் போது, மொத்தத் தொகையில் வரி எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
      • இந்தச் சந்தையில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செக்அவுட்டில் வரியை மொத்தத் தொகையில் சேர்க்க, சேர்க்கப்பட்டதாகக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளர்களின் மொத்தத் தொகையில் எவ்வளவு வரி சேர்க்கப்பட்டுள்ளது என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
      • இந்தச் சந்தையில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செக்அவுட்டில் வரியைத் தனி வரிசை உருப்படியாகச் சேர்க்க, வரிசை உருப்படியாகக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. செக்அவுட்டில் வாடிக்கையாளரின் மொத்தத் தொகையில் சுங்க வரிகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
      • செக்அவுட்டில் சுங்க வரிகளைக் கணக்கிட்டுச் சேர்க்க, வரிசை உருப்படியாகக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • சுங்க வரிகளை உங்கள் வாடிக்கையாளரின் மொத்தத் தொகையில் சேர்ப்பதற்குப் பதிலாக நீங்களே செலுத்த, விலையில் சுங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சுங்க வரிகளின் கணக்கீடு மற்றும் வசூலிப்பை நீங்கள் இயக்கியிருந்தால், சேவை விதிமுறைகள் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்துவிட்டு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. மேல் பட்டியில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

HS குறியீடுகள் மற்றும் மூல நாடு அல்லது பிராந்தியம்

ஒவ்வொரு தயாரிப்பின் HS குறியீடு மற்றும் அதன் மூல நாடு அல்லது பிராந்தியத்திலிருந்து சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் கணக்கிடப்படுகின்றன, எனவே செக்அவுட்டில் அவற்றை வசூலிக்கும் முன்பு இரண்டையும் சேர்க்கவும். ஒரு தயாரிப்பில் HS குறியீடு விடுபட்டிருந்தால், தயாரிப்பின் விவரணை மற்றும் தயாரிப்பு வகையின் அடிப்படையில் கணக்கீடுகள் செய்யப்படுகின்றன. தயாரிப்பில் HS குறியீடு, விவரணை அல்லது வகை இல்லையென்றால், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் இன்னும் கணக்கிடப்படும், ஆனால் அவை துல்லியமாக இருக்காது.

CSV கோப்பு மூலமாகவும் மொத்தத் திருத்தியிலும் சேர்ப்பது உட்பட, ஒரு HS குறியீட்டையும் மூல நாடு அல்லது பிராந்தியத்தையும் சேர்ப்பதற்கான வழிகளுக்கு, உங்கள் தயாரிப்புகளில் HS குறியீடுகளைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் அமைப்புகளின் தொடர்புடைய அமைப்புகள் பிரிவில் உள்ள மூன்று அமைப்புகள் தொகைகள் கணக்கிடப்படும் விதத்தை மாற்றுகின்றன. வசூலிப்பை நீங்கள் இயக்கிய பிறகு அவற்றில் எதையும் மாற்றலாம்.

முன்னுரிமை ஒப்பந்தங்கள்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) என்றும் அழைக்கப்படும் முன்னுரிமை ஒப்பந்தங்கள் என்பவை குறிப்பிட்ட தயாரிப்புகளின் மீதான சுங்க வரிகளைக் குறைக்கக்கூடிய அல்லது அகற்றக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் ஆகும். முன்னுரிமை ஒப்பந்தங்களின் சில உதாரணங்கள்:

இயல்புநிலையாக, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடும்போது முன்னுரிமை ஒப்பந்தங்கள் கருத்தில் கொள்ளப்படும். ஒரு விற்பனைக்கு முன்னுரிமை ஒப்பந்தம் பொருந்துமா என்பது ஷிப்மென்ட்டின் ஷிப்பிங் தோற்றம், இலக்கு, தயாரிப்பின் மூல நாடு குறியீடு, HS குறியீடு ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப்படும். முன்னுரிமை ஒப்பந்தம் பொருந்தும் எல்லை தாண்டிய விற்பனையை நீங்கள் செய்யும்போது, தயாரிப்பின் மூல நாட்டைச் சரிபார்க்க, நாடு அல்லது பிராந்தியத்தின் சுங்கத்துறை அதிகாரிகளால் ஆவணம் (பொதுவாக மூலச் சான்றிதழ் வடிவில்) கேட்கப்படலாம்.

உங்கள் ஷிப்மென்ட்கள் ஏதேனும் முன்னுரிமை ஒப்பந்தங்களுக்குத் தகுதியானவையா என்பதில் உங்களுக்குத் தயக்கம் இருந்தால், அதற்கான தகுதியையும் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுமா என்பதையும் தீர்மானிக்க, உங்கள் கேரியர் அல்லது உள்ளூர் வரி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.

நீங்கள் முன்னுரிமை ஒப்பந்தங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை எனில் அல்லது நீங்கள் தகுதிபெற்றுள்ள முன்னுரிமை ஒப்பந்தத்திற்குத் தேவையான ஆவணங்களை உங்களால் வழங்க முடியவில்லை எனில், முன்னுரிமை ஒப்பந்தங்களை முடக்கவும்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தொடர்புடைய அமைப்புகள் பிரிவில், முன்னுரிமை ஒப்பந்தங்கள் அனுமதிக்கும்போது கட்டணங்களைக் குறைக்கவும் என்பதை நிலைமாற்றவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அஞ்சல் சுங்கவரிக் கட்டணங்கள்

இயல்புநிலையாக, வணிக மற்றும் அஞ்சல் கேரியர்கள் ஆகிய இருவருக்குமே சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் ஒரே வகையில்தான் கணக்கிடப்படுகின்றன. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பேக்கேஜ்களுக்கு, நீங்கள் உங்கள் தயாரிப்புகளில் சேர்த்துள்ள HS குறியீடுகள் மற்றும் மூல நாடு தகவலைப் பயன்படுத்தி சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் Canada Post போன்ற அஞ்சல் கேரியரைப் பயன்படுத்தினால், உங்கள் Shopify நிர்வாகியில் அஞ்சல் சுங்கவரிக் கட்டணங்களைச் செயல்படுத்தலாம். செயல்படுத்தப்படும்போது, இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பேக்கேஜ்களுக்கான சுங்க வரிகளை ad valorum (ஷிப்மென்ட் உள்ளடக்கங்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது) மற்றும் மூல நாடு (COO) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடும். இந்த விருப்பத்தின் மூலம் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரி குறையலாம்.

அஞ்சல் சுங்கவரிக் கட்டணக் கணக்கீடுகளைப் பயன்படுத்த, உங்களின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் நீங்கள் ஒரு COO-ஐ வரையறுக்க வேண்டும். உங்கள் தயாரிப்புகளுக்கு இயல்புநிலை COO ஒன்றையும் நீங்கள் அமைக்கலாம், ஒரு தயாரிப்புக்கு COO கைமுறையாகப் பயன்படுத்தப்படாதபோது இது பயன்படுத்தப்படும்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தொடர்புடைய அமைப்புகள் பிரிவில், அமெரிக்காவிற்குள் அஞ்சல் சுங்கவரிக் கட்டணங்களைப் பயன்படுத்துக என்பதை நிலைமாற்றவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரிவு 232 கட்டணங்களுக்கான சுங்க வரிகளைத் தீர்மானித்தல்

எஃகு அல்லது அலுமினியம் உள்ள அமெரிக்காவிற்குச் செல்லும் ஷிப்மென்ட்கள், பிரிவு 232 கட்டணங்களுக்கு உட்பட்டவை. அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், உங்கள் தயாரிப்புகளில் எஃகு அல்லது அலுமினியம் இருந்தால், உங்கள் தயாரிப்புகளில் இந்த உலோகங்கள் எவ்வளவு உள்ளன என்பதைக் குறிப்பிடலாம். இது தயாரிப்பின் மொத்த மதிப்பைக் கருத்தில்கொள்ளாமல், உங்கள் தயாரிப்புகளில் உள்ள எஃகு அல்லது அலுமினியத்தின் உண்மையான அளவின் அடிப்படையில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிட உதவும்.

கனடாவிலிருந்து வரும் சில பொருட்களுக்கான பிரிவு 338 கட்டணங்களுக்கு எந்த அமைப்பும் இல்லை. ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது, செக்அவுட்டில் கணக்கிடப்படும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளில் பிரிவு 338 கட்டணங்களும் சேர்க்கப்படும். பிரிவு 338 கட்டணங்கள் குறித்து மேலும் அறிக.

இந்த அம்சத்தைச் செயல்படுத்துவதற்கு முன், பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் சதவீதமானது, அமெரிக்காவில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்படும் ஷிப்மென்ட்களுக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடுவதற்கு மட்டுமே பொருந்தும். இது வேறெந்த இலக்குக்கும் பொருந்தாது.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் சதவீதம், உங்கள் ஸ்டோரில் பிரிவு 232க்கு உட்பட்ட அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பொருந்தும். தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு உங்களால் வெவ்வேறு சதவீதங்களை அமைக்க முடியாது.
  • பிரிவு 232 அமைப்பிற்கான இயல்புநிலை சதவீதம் 100% ஆகும். இந்தச் சதவீதத்தை நீங்கள் மாற்றவில்லை எனில், பிரிவு 232க்கு உட்பட்ட உங்கள் தயாரிப்புகள் 100% எஃகு அல்லது அலுமினியத்தால் ஆனவை எனக் கருதி கட்டணங்கள் கணக்கிடப்படும்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தொடர்புடைய அமைப்புகள் பிரிவில், எஃகு அல்லது அலுமினியத்தால் ஆன உங்கள் தயாரிப்பின் சதவீதத்தை உள்ளிடவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை நிறுத்துதல்

உங்கள் செக்அவுட்டில் குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குத் தனித்தனியாகச் சுங்க வரிகள் மற்றும் வரிகள் வசூலிப்பதை நீங்கள் நிறுத்தலாம் அல்லது அனைத்து நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கும் சுங்க வரிகள் மற்றும் வரிகளை வசூலிப்பதை முழுமையாக நிறுத்த இந்த அம்சத்தை நீங்கள் ஒட்டுமொத்தமாக முடக்கலாம்.

தனிப்பட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிப்பதை முடக்குதல்

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நாடுகள்/பிராந்தியங்கள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை நீங்கள் நிறுத்த விரும்பும் நாடு அல்லது பிராந்தியத்தின் தேர்வை அகற்றவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அனைத்து நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குமான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிப்பதை முடக்குதல்

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஆஃப் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் தேர்வை உறுதிசெய்து, ஆஃப் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.