செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கான பரிசீலனைகள்

உங்கள் செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்கும் முன்பு, பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

செக்அவுட் பிரத்தியேகமாக்கல்களுடனான இணக்கத்தன்மை

சில செக்அவுட் பிரத்தியேகமாக்கல்கள் செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதில் முரண்படலாம். உங்கள் செக்அவுட்டைப் பிரத்தியேகமாக்கியிருந்தால், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் அம்சத்தைச் செயலாக்கும் முன்பு உங்கள் பிரத்தியேகமாக்கல்களை மதிப்பாய்வு செய்யவும்.

வரி அமைப்புகள்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பது சில வரி அமைப்புகளுடன் முரண்படலாம்:

  • செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதானது வரி ஓவர்ரைடுகள் அல்லது கைமுறை வரி வீதங்களுடன் இணங்காது. உங்களிடம் ஏதேனும் வரி ஓவர்ரைடுகள் அல்லது மேனுவல் கட்டணங்கள் இருந்தால், அவை உங்கள் பிராந்தியத்திற்குள்ளான விற்பனைக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச விற்பனைக்கான ஓவர்ரைடுகள் மற்றும் மேனுவல் கட்டணங்கள் ஆகியவை செக்அவுட் அம்சத்திலுள்ள சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளால் ஓவர்ரைடு செய்யப்படும்.
  • செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதைச் செயலாக்கிவிட்டு, பின்னர் அதை முடக்கினால், உங்களின் முந்தைய வரி அமைப்புகள் மீட்டமைக்கப்படும்.
  • செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பது உங்கள் வரி அமைப்பைப் பாதிக்கலாம்.
    • உங்கள் ஸ்டோர் அடிப்படை வரி சேவையைப் பயன்படுத்தினால், அந்த நாடு அல்லது பிராந்தியத்திற்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை நீங்கள் செயலாக்கினால் மட்டுமே சர்வதேச ஆர்டர்களுக்கு மதிப்புக்கூட்டு வரி (VAT) அல்லது விற்பனை வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படும். அந்த நாடு அல்லது பிராந்தியத்தில் சர்வதேச ஆர்டர்களுக்கான வரிகளை நீங்கள் வசூலிக்க வேண்டுமெனில், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிப்பதையும் நீங்கள் செயலாக்க வேண்டும். அத்தகைய நாடுகளுக்கோ பிராந்தியங்களுக்கோ DAP (Delivered At Place) இன்கோடேர்மைப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்தால் வரிப் பதிவுகள் பயன்படுத்தப்பட மாட்டாது.
    • உங்கள் ஸ்டோர் கைமுறை வரியைப் பயன்படுத்தினால், சர்வதேச ஆர்டர்களுக்கு VAT அல்லது விற்பனை வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படாது. செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதானது, கைமுறையாக உள்ளிடப்பட்ட வரி வீதங்களுடன் இணங்காது.
  • சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கு வாடிக்கையாளர் வரி விலக்குகள் (தனிநபர் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனம்/B2B நிலை ஆகிய இரண்டுமே) பயன்படுத்தப்பட மாட்டாது. உள்நாட்டு ஆர்டர்களுக்கு அல்லது Shopify-இன் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தாத சர்வதேச ஆர்டர்களுக்கு மட்டுமே வரி விலக்குகள் பயன்படுத்தப்படும்.

ஷிப்பிங் தேவைகள்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்குச் சில தேவைகள் உள்ளன, இவை உங்கள் ஷிப்பிங் அமைப்புகள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கேரியரைக் கட்டுப்படுத்தலாம்:

  • எந்த இடத்திலிருந்து ஆர்டர் நிறைவேற்றப்படுகிறதோ, அதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கு மட்டுமே சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் கணக்கிடப்படுகின்றன. ஒரே நாட்டிற்குள் செய்யப்படும் ஷிப்மென்ட்டுகளுக்கோ ஐரோப்பிய யூனியன் (EU) உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஷிப்மென்ட்டுகளுக்கோ சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் கணக்கிடப்படுவதில்லை. இந்த ஆர்டர்களுக்கு நீங்கள் VAT அல்லது விற்பனை வரியை வசூலிக்க வேண்டுமெனில், உங்கள் இடங்கள் மற்றும் ஆர்டர் வழிப்படுத்துதல் அமைப்புகளை மதிப்பாய்வு செய்து, நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும் வரிகளை அமைக்கவும். EU-க்குள்ளான விற்பனைக்கு, EU வரிகள் என்பதைப் பார்க்கவும்.
  • உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட்டில் சுங்க வரிகளையும் இறக்குமதி வரிகளையும் செலுத்தினால், அவரது ஆர்டரை நிறைவேற்ற சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP) ஷிப்பிங் லேபிளை வாங்கிப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். இதனால், டெலிவரியின்போது வாடிக்கையாளரிடம் மீண்டும் சுங்க வரிகளும் இறக்குமதி வரிகளும் வசூலிக்கப்படாது.
  • ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும், DDP அல்லது DAP-பைப் பயன்படுத்துவதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இருப்பினும், ஒரே நாடு அல்லது பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு DDP மற்றும் DAP ஆகிய இரண்டையும் உங்களால் வழங்க முடியாது.
  • Shopify-இன் கேரியர் கணக்குகள் மூலம் லேபிள்களை வாங்கும்போது, ஆதரிக்கப்படும் கேரியர்கள் மற்றும் இலக்குகளுக்கு மட்டுமே DDP கிடைக்கும். Shopify-க்கு வெளியே வாங்கப்படும் லேபிள்களுக்கு, உங்கள் இலக்குகளுக்கு DDP ஆதரவு உள்ளதா என்பதை உறுதிசெய்ய உங்கள் கேரியரைத் தொடர்புகொள்ளவும்.
  • உலகின் பிற பகுதிகள் ஷிப்பிங் மண்டலத்தில் உள்ளவர்களுக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைச் செக்அவுட்டில் உங்களால் வசூலிக்க முடியாது. ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிக்க, ஏற்கனவே இருக்கும் ஷிப்பிங் மண்டலத்தில் அதைச் சேர்க்கவும் அல்லது புதிய ஒன்றை உருவாக்கவும்.
  • Shopify Fulfillment Network செயலி செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை ஆதரிப்பதில்லை.

சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரி மதிப்பீடுகள்

செக்அவுட்டில் வசூலிக்கப்படும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் என்பது ஒரு நாட்டின் அல்லது பிராந்தியத்தின் வரி ஆணையத்தால் வசூலிக்கப்படும் தொகையின் மதிப்பீடாகும்:

  • வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் நேரத்தில் உள்ள சமீபத்திய தகவலின் அடிப்படையில் வசூலிக்கப்படும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் மதிப்பீடுகளாகும். தவறான சுங்க வரிகளைச் செலுத்துதல் அல்லது தவறான ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகக் கூடுதல் சுங்க வரிகள் வசூலிக்கப்படலாம்.
  • கையாளுதல் கட்டணங்கள், தரகு மற்றும் பணப்பட்டுவாடா கட்டணங்கள் ஆகியவை சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிக் கணக்கீடுகளில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு கேரியருடனான உங்களின் ஒப்பந்தத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை எனில், அந்தக் கட்டணங்களின் செலவை உங்களின் தயாரிப்பு விலைகள் அல்லது ஷிப்பிங் கட்டணங்களில் சேர்ப்பதைப் பரிசீலிக்கவும்.

தள்ளுபடி செய்யப்பட்ட மற்றும் இலவச உருப்படிகளுக்கான சுங்க வரிகள் கணக்கீடு

ஒரு உருப்படியின் வழக்கமான விலையின் அடிப்படையில் அல்லாமல் வாடிக்கையாளர் செலுத்தும் தொகையின் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் அல்லது பிராந்தியத்தின் வரி ஆணையத்தால் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் தீர்மானிக்கப்படுகின்றன. தள்ளுபடி செய்யப்பட்ட ஆர்டருக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் வசூலித்தால், சரியான விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்க உங்கள் வர்த்தக விலைப்பட்டியலை மதிப்பாய்வு செய்யவும். ஷிப்மென்ட்டில் ஒரு இலவசத் தயாரிப்போ மாதிரியோ சேர்க்கப்பட்டிருக்கும் போது, பூஜ்ஜியம் அல்லாத மதிப்பை உருப்படி செலவாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

பரிவர்த்தனைக் கட்டணங்கள்

சோதனை ஆர்டர்கள் உட்பட, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிடும் எந்தவொரு செக்அவுட்டிற்கும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தும். பரிவர்த்தனைக் கட்டணங்கள் பற்றிய விவரங்களுக்கு, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியைக் கணக்கிடுவதற்கான பரிவர்த்தனைக் கட்டணச் செலவுகள் என்பதைப் பார்க்கவும்.

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை ஆதரிக்காத நாடுகளும் பிராந்தியங்களும்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்குப் பின்வரும் நாடுகளும் பிராந்தியங்களும் ஆதரிக்கப்படவில்லை. இந்தப் பிராந்தியங்களுக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை உங்களால் வசூலிக்க முடியாது.

ஆப்பிரிக்கா

  • சூடான் குடியரசு (SD)

அண்டார்டிகா

  • தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் (GS)

ஆசியா

  • ஈராக் குடியரசு (IQ)

ஐரோப்பா

  • வடக்கு அயர்லாந்து (XI)
  • ரஷ்யக் கூட்டமைப்பு (RUS)

ஓசியானியா

  • மைக்ரோனேஷிய கூட்டாட்சி நாடுகள் (FM)
  • மார்ஷல் தீவுகள் குடியரசு (MH)
  • பலாவு குடியரசு (PW)

வட அமெரிக்கா

  • செயின்ட் பியர் மற்றும் மிக்குயிலோன் பிராந்தியக் குழு (PM)
  • புவேர்ட்டோ ரிக்கோ காமன்வெல்த் (PR)

தென் அமெரிக்கா

  • ஃபாக்லாந்து தீவுகள் (FK)

எல்லை தாண்டிய வரிகளை மட்டும் வசூலித்தல்

நீங்கள் செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் என்பதைச் செயல்படுத்தும்போது, பொருந்தக்கூடிய சர்வதேச ஆர்டர்கள் மீது சுங்க வரிகள் மற்றும் வரிகள் ஆகிய இரண்டும் வசூலிக்கப்படும். நீங்கள் வரிகளுக்கான கட்டணத்தை மட்டும் வசூலிக்க முடியாது.

நீங்கள் யுனைடெட் கிங்டம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஆர்டர்களைப் போன்று எல்லை தாண்டிய வரிகளை மட்டும் வசூலிக்க வேண்டுமென்றால், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் என்பதைச் செயல்படுத்த வேண்டாம். இந்த அம்சம் உங்கள் ஸ்டோரில் ஏற்கெனவே செயலில் இருந்தால், பொருந்தக்கூடிய எந்தவொரு ஆர்டர்களுக்கும் உங்கள் ஸ்டோர் சுங்க வரிகளை வசூலிப்பதை நிறுத்த இந்த அம்சத்தை முடக்க வேண்டும்.

மூன்றாம் தரப்புச் செயலிகள்

மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸுக்கு உங்கள் ஸ்டோர் செயலிகளைப் பயன்படுத்தினால், செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதை ஆதரிக்கும் வகையில் உங்கள் செயலிகளும் ஒருங்கிணைப்புகளும் உள்ளமைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் DDP இன்கோடெர்மை (incoterm) ஆதரிக்க வேண்டும் மற்றும் உங்கள் தயாரிப்புகளுக்குச் சரியான HS குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.