செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் குறித்த சிக்கல் தீர்த்தல்

நீங்கள் வசூலித்த சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் நீங்கள் எதிர்பார்த்தபடி இல்லையென்றால், இந்தப் பொதுவான சிக்கல்களைச் சரிபார்க்கவும்.

சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் வசூலிக்கப்படவில்லை மற்றும் டெலிவரியின்போது சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் வசூலிக்கப்படலாம் என உங்கள் ஆர்டர் காட்டுகிறது

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை நீங்கள் வசூலிக்கும்போது, சுங்க வரிகளோ வரியோ வசூலிக்கப்படாத ஆர்டர் உங்களுக்கு வந்தால், அந்த ஆர்டர் பின்வரும் சூழலுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

விடுபட்ட அல்லது தவறான ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகள்

தயாரிப்புகளுக்குத் தவறான HS குறியீடுகள் உள்ளிடப்பட்டிருந்தாலோ அல்லது HS குறியீடுகள் விடுபட்டிருந்தாலோ, அது செக்அவுட்டில் ஆர்டருக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக்கூடும். சுங்க வரிகளும் வரிகளும் பயன்படுத்தப்படாமல் இருந்து, டெலிவரியின்போது சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் வசூலிக்கப்படலாம் என்ற மெசேஜை ஆர்டர் கொண்டிருந்தால், ஆர்டரிலுள்ள தயாரிப்புகளில் HS குறியீடுகள் இருப்பதைச் சரிபார்க்கவும். ஆதரிக்கப்படாத HS குறியீட்டை நீங்கள் கண்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் 0 எனக் கணக்கிடப்பட்டுள்ளன

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை நீங்கள் வசூலிக்கும்போது, சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் 0 எனக் கணக்கிடப்பட்ட ஆர்டர் உங்களுக்கு வந்தால், அந்த ஆர்டர் பின்வரும் சூழல்களில் ஒன்றுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

ஆர்டர் டி மினிமிஸுக்குக் கீழ் உள்ளது

ஒரு நாடோ பிராந்தியமோ நிர்ணயித்துள்ள டி மினிமிஸ் வரம்புக்குக் கீழ் ஒரு ஆர்டர் இருந்து, அந்த நாட்டில் அல்லது பிராந்தியத்தில் வரிகளை வசூலிக்க நீங்கள் பதிவுசெய்யவில்லை என்றால், அந்த ஆர்டருக்குச் சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் பொருந்தாது. சில நாடுகள் டி மினிமிஸ் கணக்கீட்டில் ஷிப்பிங்கைச் சேர்க்கின்றன அல்லது தவிர்க்கின்றன. நீங்கள் ஷிப் செய்யும் நாடோ அல்லது பிராந்தியமோ இந்தச் செலவுகளை டி மினிமிஸ் கணக்கீட்டில் சேர்க்கிறதா என்பது உங்களுக்குத் தெரியவில்லை எனில், அவர்களின் வரி ஆணையத்தையோ உள்ளூர் வரி நிபுணரையோ தொடர்புகொள்ளவும்.

விடுபட்ட வரிப் பதிவு

இலக்கு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் வரியை வசூலிக்க நீங்கள் பதிவுசெய்திருந்து, உங்கள் பதிவுத் தகவலை Shopify இல் உள்ளிடவில்லை எனில், வாங்குபவரின் நாட்டில் உள்ள டி மினிமிஸ் வரம்புக்குக் கீழுள்ள ஆர்டர்கள் மீதான வரிகள் கணக்கிடப்படாது. Shopify நிர்வாகியில் உங்கள் வரிப் பதிவுத் தகவலைச் சேர்க்கவும்.

வரி வசூலிக்கப்பட்டுள்ளது, ஆனால் சுங்க வரிகள் இல்லை

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை நீங்கள் வசூலிக்கும்போது, வரி வசூலிக்கப்பட்டு, சுங்க வரிகள் வசூலிக்கப்படாத ஆர்டர் உங்களுக்கு வந்தால், அந்த ஆர்டர் பின்வரும் சூழலுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

ஆர்டர், சுங்க வரி டி மினிமிஸுக்குக் கீழ் உள்ளது

சில நாடுகள் அல்லது பிராந்தியங்கள் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிக்கான தனித்தனி டி மினிமிஸ் வரம்புகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆர்டர் வரி டி மினிமிஸுக்கு அதிகமாகவும், சுங்க வரி டி மினிமிஸுக்குக் கீழாகவும் இருந்தால், அதற்கு இறக்குமதி வரி மட்டுமே விதிக்கப்படும். சில நாடுகள் டி மினிமிஸ் கணக்கீட்டில் ஷிப்பிங்கைச் சேர்க்கின்றன அல்லது தவிர்க்கின்றன. நீங்கள் ஷிப் செய்யும் நாடோ அல்லது பிராந்தியமோ இந்தச் செலவுகளை டி மினிமிஸ் கணக்கீட்டில் சேர்க்கிறதா என்பது உங்களுக்குத் தெரியவில்லை எனில், அவர்களின் வரி ஆணையத்தையோ உள்ளூர் வரி நிபுணரையோ தொடர்புகொள்ளவும்.

கேரியர் விலைப்பட்டியலில் விதிக்கப்பட்ட சுங்க வரிகளும் இறக்குமதி வரியும் செக்அவுட்டில் வசூலிக்கப்பட்ட சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை விட அதிகம்

செக்அவுட்டில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியை நீங்கள் வசூலிக்கும்போது, உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப் செய்வதற்கான உண்மையான செலவைவிடக் குறைவான சுங்க வரிகளும் இறக்குமதி வரிகளும் வசூலிக்கப்பட்ட ஆர்டர் உங்களுக்கு வந்தால், அந்த ஆர்டர் பின்வரும் சூழல்களில் ஒன்றுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

விடுபட்ட அல்லது தவறான HS குறியீடுகள்

தயாரிப்புகளுக்குத் தவறான HS குறியீடுகள் உள்ளிடப்பட்டிருந்தாலோ அல்லது HS குறியீடுகள் விடுபட்டிருந்தாலோ, அது செக்அவுட்டில் ஆர்டருக்குச் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக்கூடும். ஆர்டரிலுள்ள தயாரிப்புகளில் HS குறியீடுகள் இருப்பதைச் சரிபார்க்கவும். ஆதரிக்கப்படாத HS குறியீட்டை நீங்கள் கண்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

சுங்க அதிகாரிகள் வெவ்வேறு HS குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளனர்

உங்கள் தயாரிப்புகள் ஒரு எல்லையைக் கடக்கும்போது, அவை இலக்கு நாடு அல்லது பிராந்தியத்தின் சுங்க அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்படலாம். இந்த அதிகாரிகள் உங்கள் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் HS குறியீடுகள், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரியைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளிலிருந்து மாறுபடக்கூடும். வேறுபட்ட HS குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ள தயாரிப்புகளைச் சரிபார்த்து, பின்வரும் செயல்களில் ஒன்றைச் செய்யவும்:

  • சுங்க அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட HS குறியீட்டைப் பயன்படுத்த உங்கள் தயாரிப்புகளைப் புதுப்பிக்கவும்.
  • நீங்கள் பயன்படுத்தும் HS குறியீடு சரியானது என நீங்கள் உறுதியாக நம்பினால், முரண்பாட்டிற்கான காரணத்தை விசாரிக்க, உங்கள் சுங்கத் தரகரைத் தொடர்புகொள்ளவும்.

வணிக விலைப்பட்டியலில் உள்ள தயாரிப்பு விலைகள் ஆர்டரில் உள்ள தயாரிப்பு விலைகளில் இருந்து மாறுபடுகின்றன

வணிக விலைப்பட்டியலில் உள்ள தயாரிப்பு விலைகள் உங்கள் வாடிக்கையாளரிடம் நீங்கள் வசூலித்த விலைகளைப் போலவே இல்லையென்றால், கேரியரிடம் உங்கள் தயாரிப்புகளுக்கான தவறான விலை நிர்ணயத் தகவல் இருக்கலாம். வணிக விலைப்பட்டியல்களை உருவாக்க நீங்கள் பயன்படுத்தும் செயலி அல்லது ஒருங்கிணைப்பை உருவாக்கியவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் நிலையான பட்டியலுக்குப் பதிலாக உங்கள் ஸ்டோரின் சமீபத்திய தயாரிப்பு விலைகளைப் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சரிபார்க்கவும்.

அந்நியச் செலாவணி விகித ஏற்ற இறக்கம்

உங்கள் உள்ளூர் நாணயத்திற்கும் உங்கள் வாடிக்கையாளரின் நாணயத்திற்கும் இடையிலான மதிப்பின் வேறுபாடானது, ஆர்டர் செய்யப்படும் நேரத்திற்கும் ஆர்டரை ஷிப் செய்வதற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நேரத்திற்கும் இடையில் மாறக்கூடும். பேமெண்ட்கள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் செயலாக்கங்களில் தாமதம் ஏற்படும்போதெல்லாம், நாணய மாற்றங்களால் நீங்கள் பணத்தை இழக்கவோ பெறவோ வாய்ப்புள்ளது.

பல நாணயங்களில் விற்பனை செய்ய உங்கள் ஸ்டோரை இயக்கும்படி செய்வதன் மூலம், அந்நியச் செலாவணி விகித ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் வித்தியாசத்தை நீங்கள் குறைக்கலாம். அதன்பிறகு வணிக விலைப்பட்டியலில் உங்கள் வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தலாம்.