செக்அவுட் மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளை மொழிபெயர்த்தல்

ஒரு மொழியைச் சேர்த்து வெளியிட்ட பிறகு, மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் செக்அவுட்டிலும் உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் எந்த மின்னஞ்சல் அறிவிப்புகளிலும் காட்டப்படும். வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உலாவுவதற்குப் பயன்படுத்தும் அதே மொழியிலேயே செக்அவுட்டும் காட்டப்படும். செக்அவுட்டில் சில மொழிகளுக்கான இயல்புநிலை மொழிபெயர்ப்புகள் உள்ளன. இணக்கமான மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி அல்லது CSV கோப்புகளைப் பயன்படுத்தி உங்களின் சொந்த மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்வதன் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

மின்னஞ்சல் அறிவிப்புக்கு மொழிபெயர்ப்புகள் கிடைத்தால், வாடிக்கையாளர் எந்த மொழியில் ஆர்டர் செய்தாரோ அதே மொழியிலேயே அவருக்கு தானியங்கியாக மின்னஞ்சல் அறிவிப்புகள் அனுப்பப்படும். வாடிக்கையாளர் பெறும் அறிவிப்புகளின் மொழியை மாற்ற, நீங்கள் வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் திருத்தலாம்.

மின்னஞ்சல் அறிவிப்பு மொழிபெயர்ப்பைச் சேர்த்தல் அல்லது திருத்துதல்

Shopify வழங்கும் Translate & Adapt செயலியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரில் சேர்த்துள்ள மொழிகளுக்கான மின்னஞ்சல் அறிவிப்பு மொழிபெயர்ப்புகளைச் சேர்க்கலாம் அல்லது திருத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் மின்னஞ்சல் அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. உள்ளூர்மயமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. Translate & Adapt செயலியில் உள்ள திருத்தக்கூடிய புலங்களில் உங்கள் மின்னஞ்சல் அறிவிப்புக்கான மொழிபெயர்ப்புகளைச் சேர்க்கவும் அல்லது திருத்தவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல் அறிவிப்புகளை முன்னோட்டமிடுதல்

நீங்கள் மொழிபெயர்த்துள்ள மின்னஞ்சல் அறிவிப்புகளை முன்னோட்டமிடலாம். அறிவிப்பு மொழிபெயர்ப்புகளை முன்னோட்டமிடுவதற்கு முன் அவற்றைச் சேமிக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் முன்னோட்டமிட விரும்பும் மின்னஞ்சல் அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. முன்னோட்டம் பக்கத்தில், மொழி கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் முன்னோட்டமிட விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு குறிப்பிட்ட மொழியில் உங்கள் செக்அவுட்டின் வார்த்தைகளை மாற்ற, உங்கள் செக்அவுட்டை மொழிபெயர்த்தல் என்பதைப் பார்க்கவும்.