உங்கள் ஸ்டோரின் மொழிகளை நிர்வகித்தல்

உங்கள் ஸ்டோரின் மொழிகளையும், உங்கள் சந்தைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்யும் டொமைன்களையும், உங்கள் Shopify நிர்வாகியின் மொழிகள் பிரிவில் இருந்து நீங்கள் நிர்வகிக்கலாம். ஒரு மொழியைச் சேர்ப்பதற்கு முன்பாக, பல மொழிகளில் விற்பனை செய்வதற்கான தேவைகள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை என்பதைப் பார்க்கவும்.

மொழி URLகள் மற்றும் SEO

பல மொழிகளில் நீங்கள் விற்பனை செய்யும்போது, வாடிக்கையாளர்களும் தேடுபொறிகளும் உங்கள் ஸ்டோருக்கான சரியான மொழிப் பதிப்பைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். ஒரு மொழியை நீங்கள் வெளியிடும்போது, URLகளுடன் மொழிக் குறியீட்டைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஸ்டோரில் மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் தனிப்பட்ட URLகள் உருவாக்கப்படும். குறிப்பிட்ட மொழிக்கான URLகள் பின்வருபவற்றையும் பெறுகின்றன:

  • Hreflang குறிச்சொற்கள்: குறிப்பிட்ட மொழிக்கான URLகளுக்குக் குறிச்சொற்கள் தானாகவே சேர்க்கப்படும்.
  • URL ஸ்லக்குகள்: மொழிபெயர்க்கப்பட்ட ஸ்லக்குகள் விருப்பத்தேர்வுக்குரியவை, ஆனால் அவை உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, /products/chair என்பதை /produkte/stuhl என நீங்கள் மொழிபெயர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக, உங்கள் முதன்மை டொமைன் example.com என வைத்துக்கொள்வோம். ஃபிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளைக் கூடுதல் மொழிகளாக நீங்கள் வெளியிட்டால், உங்கள் ஸ்டோர் URLகள் example.com/fr மற்றும் example.com/de என மாறும்.

சர்வதேச டொமைன்கள் அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு டொமைன்களில் வெவ்வேறு மொழிகள் கிடைக்கும்படியும் நீங்கள் செய்யலாம்.

Shopify-இன் Translate & Adapt செயலி, இணக்கமான மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலி அல்லது CSV ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைப் பயன்படுத்தி URL ஸ்லக்குகளை நீங்களே மொழிபெயர்க்கலாம்.

தேடுபொறிகள் உங்களின் ஸ்டோரை மொழிபெயர்க்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் குறியீட்டுக்கு (index) உட்படுத்த வேண்டும். Hreflang tags தானாகவே சேர்க்கப்படும், அத்துடன் வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளும் தளவரைபடங்களில் சேர்க்கப்பட்டிருக்கும். இவை உங்கள் ஸ்டோரில் உள்ள பல்வேறு மொழிகளைத் தேடுபொறிகள் கண்டறிய உதவும். இந்த அமைப்பை ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதிலிருந்து நீங்கள் நிர்வகிக்கலாம். தானியங்கு hreflang குறிச்சொற்கள் பற்றி மேலும் அறிக.

மொழிபெயர்ப்பு நிலைகள்

மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு உள்ளடக்கமும் பின்வரும் நிலைகளில் ஒன்றைக் கொண்டிருக்கும்:

  • மொழிபெயர்க்கப்பட்டது: உள்ளடக்கத்திற்கான மொழிபெயர்ப்புகள் உள்ளன.
  • காலாவதியானது: இயல்புநிலை மொழியில் உள்ள உள்ளடக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் மொழிபெயர்ப்புகளில் எந்தப் புதுப்பிப்புகளும் இடம்பெறவில்லை.
  • மொழிபெயர்க்கப்படாதவை: இந்த உள்ளடக்க வகைக்கான மொழிபெயர்ப்புகள் எதுவும் இல்லை.

உங்கள் தீமைப் புதுப்பிக்கும்போது, உங்களின் பிரத்தியேக மொழிபெயர்ப்புகள் தக்கவைக்கப்படும். அத்துடன், மாற்றப்பட்ட உள்ளடக்கத்திற்கான மொழிபெயர்ப்புகள் காலாவதியானவை எனக் குறிக்கப்படும். இதனால், நீங்கள் அவற்றை மதிப்பாய்வு செய்யலாம்.

'தானியங்கு ஒத்திசைவு' வசதி உள்ள நாட்டில் உங்கள் ஸ்டோர் அமைந்திருந்தால், Translate & Adapt செயலியானது ஒவ்வொரு மொழிக்கான நிலையையும் காட்டும். தானியங்கு மொழிபெயர்ப்பு நிலைகள் குறித்து மேலும் அறிக.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு மொழியைச் சேர்க்கவும்

ஒரு சந்தையானது தனி டொமைனுக்குப் பதிலாக உங்களின் முதன்மை டொமைனின் துணைக்கோப்புறையைப் (உதாரணமாக: example.com/fr-ca) பயன்படுத்துவதற்கு, துணைக்கோப்புறைகளைப் பயன்படுத்தி இலக்குச் சந்தைகளை அமைக்கவும்.

ஏற்கனவே ஒரு இயல்புநிலை மொழியைக் கொண்டுள்ள டொமைனுக்கு மட்டுமே வெளியிடப்படாத ஒரு மொழியை நீங்கள் ஒதுக்க முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மொழியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. மொழியைச் சேர் உரையாடல் பெட்டியில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. மொழியைக் கிடைக்கச் செய்ய விரும்பும் ஒவ்வொரு டொமைனையும் இயக்கிவிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும். பட்டியலில் உள்ள ஒவ்வொரு டொமைனும் அதனைப் பயன்படுத்தும் சந்தைகளைக் காட்டும்.

  5. மொழிபெயர்ப்புகளைச் சேர்க்கப் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்களின் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை Shopify-க்குள் இறக்குமதி செய்ய, Translate & Adapt செயலியைப் பயன்படுத்தவும்.
    • Shopify App Store-ஐப் பார்வையிட்டு, உங்கள் ஸ்டோரில் மொழிபெயர்ப்புச் செயலி ஒன்றை நிறுவவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பதற்கும் புதிய மொழிகளை வெளியிடுவதற்கும் செயலியில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு மொழியை வெளியிடவும்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு மொழியைக் கிடைக்கச் செய்ய, அந்த மொழியை வெளியிடவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த மொழியைக் கிடைக்கச் செய்ய வேண்டுமோ அதற்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானை மொழிகள் அட்டவணையில் கிளிக் செய்யவும்.

  3. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. மொழிக்கான மொழிபெயர்ப்புகளை நீங்கள் சேர்க்கவில்லை எனில், உறுதிப்படுத்தல் உரையாடல் பெட்டியில் உள்ள வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு மொழியை வெளியிடுவதை ரத்துசெய்யவும்

உங்களால் ஒரு மொழியை வெளியிடுவதை ரத்துசெய்ய முடியும். இது மொழியையோ மொழிபெயர்ப்புகளையோ நீக்காமல் வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த மொழியை மறைக்கும். குறிப்பிட்ட அந்த மொழியில் உள்ள ஸ்டோருக்கான இணைப்புகள் எவையேனும் 404 பிழையை ஏற்படுத்தும், எனவே நீங்கள் வெளியிடாத மொழிகள் எதற்கும் திசைதிருப்பல்களை உருவாக்கவும்.

ஒரு மொழியை வெளியிடுவதை ரத்துசெய்வது, அது ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு டொமைனிலிருந்தும் அந்த மொழியை அகற்றிவிடும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்த மொழியைக் கிடைக்காதபடி செய்ய வேண்டுமோ அதற்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானை மொழிகள் அட்டவணையில் கிளிக் செய்யவும்.

  3. வெளியிடுவதை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரையாடல் பெட்டியில், வெளியிடுவதை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு மொழியை நீக்கவும்

அந்த மொழியில் உங்களுக்கு மொழிபெயர்ப்புகள் தேவையில்லை என்பதை உறுதியாக நம்பினால், நீங்கள் அந்த மொழியை நீக்கவும் முடியும். ஒரு மொழியை நீக்குவதால், அந்த மொழியின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் நிரந்தரமாக நீக்கப்படும். எதிர்காலத்தில் நீங்கள் அந்த மொழியை மீண்டும் சேர்த்தால், மொழிபெயர்ப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கும்.

வெளியிடப்படாத ஒரு மொழியை மட்டுமே நீங்கள் அகற்ற முடியும். வெளியிடப்பட்ட மொழியை அகற்ற, முதலில் அந்த மொழியை வெளியிடுவதை ரத்துசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் ஸ்டோரிலிருந்து அகற்ற விரும்பும் வெளியிடப்படாத மொழிக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானை மொழிகள் அட்டவணையில் கிளிக் செய்யவும்.

  3. மொழியை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரையாடல் பெட்டியில், நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இயல்புநிலை மொழியை மாற்றவும்

உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை மொழியை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஸ்டோரின் செக்அவுட் மற்றும் தீமில் உங்களின் இயல்புநிலை ஸ்டோர் மொழி பயன்படுத்தப்படும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இயல்புநிலை மொழியை மாற்றிய பிறகு, உங்களின் முந்தைய இயல்புநிலை மொழி அமைப்புகள் > மொழிகள் என்பதிலிருந்து அகற்றப்படும். உங்கள் முந்தைய இயல்புநிலை மொழியை இரண்டாம் நிலை மொழியாகப் பயன்படுத்த, அமைப்புகள் > மொழிகள் என்பதில் அதை மீண்டும் சேர்த்து, அதை ஒரு டொமைனுக்கு ஒதுக்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மொழிகள் அட்டவணையில், உங்களின் தற்போதைய இயல்புநிலை மொழிக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. இயல்புநிலையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. இயல்புநிலை மொழியை மாற்று உரையாடல் பெட்டியில், மெனுவிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

சந்தைகளுக்கான மொழிகளை நிர்வகியுங்கள்

மொழிகள் டொமைன்களுக்கு ஒதுக்கப்படும், ஒவ்வொரு சந்தையும் ஒரு டொமைனைப் பயன்படுத்தும். நீங்கள் ஒரு டொமைனுக்கு ஒதுக்கும் மொழிகள் அந்த டொமைனைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தையிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். சந்தை பயன்படுத்தும் டொமைனை மாற்ற, டொமைன்கள் மற்றும் மொழிகளைச் சந்தைகளுக்கு ஒதுக்குதல் என்பதைப் பார்க்கவும்.

example.com/en-ca போன்ற துணைக்கோப்புறையைப் பயன்படுத்தும் சந்தையானது அதற்கென சொந்தமான மொழி அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். ஒரு சந்தையானது துணைக்கோப்புறையைப் பயன்படுத்தினால், அந்தச் சந்தையின் மொழிகளை அதன் டொமைன் / மொழி தனிப்பயனாக்கத்திலிருந்து நிர்வகிக்கவும். சந்தையில் டொமைன் மற்றும் மொழித் தனிப்பயனாக்கத்தைச் சேர்ப்பது எப்படி என்பதை அறிக.

வெளியிடப்படாத மொழியை டொமைனுக்கு ஒதுக்குவதற்கு முன், டொமைனுக்கு ஒரு இயல்புநிலை மொழி தேவை.

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சந்தைகள் > நாணயங்கள் என்பதிலிருந்து குறிப்பிட்ட சந்தைகளுக்கு நாணயங்களையும் நீங்கள் ஒதுக்கலாம்.

டொமைனுக்கு ஒரு மொழியை ஒதுக்கவும்

டொமைனைப் பயன்படுத்தும் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மொழியைக் கிடைக்கச் செய்ய, அந்த டொமைனுக்கு ஒரு மொழியை ஒதுக்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மொழிகள் அட்டவணையில், நீங்கள் ஒதுக்க விரும்பும் மொழிக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. டொமைனுக்கு ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. டொமைனுக்கு [language]-ஐ ஒதுக்கு உரையாடலில், எந்தெந்த டொமைன்களில் இந்த மொழி கிடைக்க வேண்டுமோ அவை ஒவ்வொன்றையும் ஆன் செய்யவும். ஒவ்வொரு டொமைனும் அதைப் பயன்படுத்தும் சந்தைகளைப் பட்டியலிடும்.

  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

டொமைனின் இயல்புநிலையாக ஒரு மொழியை அமைத்தல்

ஒவ்வொரு டொமைனுக்கும் ஒரு இயல்புநிலை மொழி இருக்கும், வாடிக்கையாளர்கள் அந்த டொமைனை முதன்முதலில் பார்வையிடும்போது அந்த மொழிதான் அவர்களுக்குக் காட்டப்படும். மொழித் திசைதிருப்பல் ஆன் செய்யப்பட்டிருந்தால், வாடிக்கையாளர்களின் உலாவி அமைப்புகளுக்குப் பொருந்தக்கூடிய மொழி அந்த டொமைனில் கிடைக்கும் பட்சத்தில், அது அவர்களுக்குக் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மொழிகள் அட்டவணையில், டொமைனின் இயல்புநிலையாக நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழிக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. டொமைன் இயல்புநிலையாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரையாடலில், எந்த டொமைனுக்கான இயல்புநிலை மொழியை நீங்கள் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த டொமைனைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. டொமைனில் ஏற்கனவே ஒரு இயல்புநிலை மொழி இருந்தால், புதிய இயல்புநிலையாக நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

டொமைனிலிருந்து ஒரு மொழியை அகற்றுதல்

ஒரு குறிப்பிட்ட டொமைனைப் பயன்படுத்தும் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு மொழியை இனி வழங்க விரும்பவில்லை எனில், அந்த டொமைனிலிருந்து அந்த மொழியை அகற்றிவிடவும். அந்த டொமைனில் குறிப்பிட்ட அந்த மொழிக்கான URL ஸ்லக்கைப் பயன்படுத்தும் URL-கள் இனி வேலை செய்யாது. எனினும், அந்த மொழியும் அதன் மொழிபெயர்ப்புகளும் உங்கள் ஸ்டோரிலேயே இருக்கும் என்பதால், அதனை நீங்கள் மீண்டும் அந்த டொமைனுக்குப் பிறகு ஒதுக்கிக்கொள்ளலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. மொழிகள் அட்டவணையில், டொமைனிலிருந்து நீங்கள் அகற்ற விரும்பும் மொழிக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. டொமைனுக்கு ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. எந்த டொமைனிலிருந்து மொழியை அகற்ற விரும்புகிறீர்களோ அதை ஆஃப் செய்யவும்.

  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.