Translate & Adapt செயலியைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை
Translate & Adapt செயலியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரை மொழிபெயர்ப்பதற்கு முன், செயலிக்கு என்னென்ன தேவை மற்றும் எவற்றை அதனால் மொழிபெயர்க்க முடியாது என்பதைச் சரிபார்க்கவும். இவற்றைக் கருத்தில் கொள்வது, எந்தெந்த உள்ளடக்கங்களைச் செயலியில் மொழிபெயர்க்க வேண்டும் மற்றும் எந்தெந்த உள்ளடக்கங்களுக்கு வேறு மொழிபெயர்ப்பு முறைகள் தேவை என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும்.
இப்பக்கத்தில்
Translate & Adapt செயலியைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
Translate & Adapt செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்:
- உங்கள் ஸ்டோர் பல மொழிகளில் விற்பனை செய்வதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
- உள்ளடக்கத்தை வேறொரு மொழிக்கு மொழிபெயர்க்க, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை மொழியுடன் கூடுதலாகக் குறைந்தபட்சம் ஒரு மொழியையாவது நீங்கள் சேர்த்திருக்க வேண்டும். உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை மொழியில் பல்வேறு சந்தைகளுக்காக உள்ளடக்கத்தை மாற்றியமைக்க, நீங்கள் மற்றொரு மொழியைச் சேர்க்க வேண்டியதில்லை.
Translate & Adapt செயலியைப் பயன்படுத்துவதில் கருத்தில் கொள்ள வேண்டியவை
Translate & Adapt செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, கருத்தில் கொள்ள வேண்டிய பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:
- Translate & Adapt செயலியால் சில உள்ளடக்கங்களை மொழிபெயர்க்க முடியாது. ஆதரிக்கப்படாத உள்ளடக்க வகைகள் குறித்து மேலும் அறிக.
- Translate & Adapt செயலியைப் பயன்படுத்திச் சில மொழிகளை மொழிபெயர்க்க முடியாது. இணக்கமற்ற மொழிகள் குறித்து மேலும் அறிக.
- நீங்கள் பயன்படுத்தக்கூடிய தானியங்கு மொழிபெயர்ப்பு அம்சங்கள், உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டைப் பொறுத்து மாறுபடும். தானியங்கு மொழிபெயர்ப்பு கிடைக்கும் தன்மை குறித்து மேலும் அறிக.
/products/en-ca/shoesபோன்ற URL ஹேண்டில்களை/products/es-mx/zapatosஎன மொழிபெயர்க்கலாம். ஆனால்,productsஎன்ற வார்த்தையை மொழிபெயர்க்க முடியாது.- சந்தைகளுக்காக URL ஹேண்டில்களைத் தனிப்பயனாக்க முடியாது. ஒரு மொழி புலப்படும் அனைத்துச் சந்தைகளிலுமுள்ள URL ஹேண்டில்களுக்கு மட்டுமே மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க முடியும்.
- சில மொழிபெயர்க்கக்கூடிய வள வகைகளுக்குத் Translate & Adapt செயலியின் தேடல் அம்சத்தில் ஆதரவு கிடையாது. ஆதரிக்கப்படாத மொழிபெயர்க்கக்கூடிய வள வகைகள் குறித்து அறிக.
- Translations API-ஐப் பயன்படுத்தும் பிற மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலிகளுடன் Translate & Adapt செயலி இணக்கமாகச் செயல்படும். இந்தச் செயலிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், Translate & Adapt செயலியில் மட்டுமின்றி, மூன்றாம் தரப்பு மொழிபெயர்ப்புச் செயலியிலும் கிடைக்கும்.
- நீங்கள் செயலியை நிறுவல்நீக்கும்போது, Translate & Adapt செயலி மூலம் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளும் உள்ளடக்கமும் அழிக்கப்படாது. செயலியை நிறுவல்நீக்குவதற்கு முன்பே, அதிலுள்ள மொழிபெயர்ப்புகளை உங்களால் அழிக்க முடியும். அல்லது, நிறுவல்நீக்கிய பிறகு ஒரு CSV கோப்பை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலம் அவற்றை அகற்றலாம்.
ஆதரிக்கப்படாத உள்ளடக்க வகைகள்
Translate & Adapt செயலியைப் பயன்படுத்திப் பின்வரும் வகையான உள்ளடக்கங்களை உங்களால் மொழிபெயர்க்க முடியாது:
- சேகரிப்பு ஃபில்டர்கள்
- Shopify Forms செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படிவங்கள்
- மேனுவல் பேமெண்ட் முறையின் வழிமுறைகள்
- தயாரிப்புப் படங்கள்
- டேகுகள்
- Shopify மொழிபெயர்க்கக்கூடிய வள வகையாகவோ ஸ்டோர்ஃபிரண்ட் லோகேல் ஃபைலாகவோ ஹோஸ்ட் செய்யப்படாத மூன்றாம் தரப்புச் செயலியின் உள்ளடக்கம்
இணக்கமற்ற மொழிகள்
Translate & Adapt செயலியைப் பயன்படுத்திப் பின்வரும் மொழிகளை மொழிபெயர்க்க முடியாது:
- வங்காளம்
- செபுவானோ
- கோர்சிகன்
- ஃப்ரிசியன்
- ஹைட்டியன் கிரியோல்
- ஹவாய்
- ஹ்மாங்
- லத்தீன்
- நியாஞ்சா (சிச்சேவா)
- ஒடியா (ஒரியா)
- சமோவான்
- ஸ்காட்ஸ் கேலிக்
- செசோதோ
- தகலாக் (பிலிப்பினோ)
ஆதரிக்கப்படாத மொழிபெயர்க்கக்கூடிய வள வகைகள்
வள வகை ஃபில்டரில் பட்டியலிடப்பட்டுள்ள வளங்களை மட்டும் தேடல் ஆதரிக்கிறது. கூடுதல் வளங்களை CSV ஏற்றுமதிக்குள் தேடிக் கொள்ளலாம். பின்வரும் மொழிபெயர்க்கக்கூடிய வள வகைகளுக்குத் தேடலில் ஆதரவு கிடையாது:
- DELIVERY_METHOD_DEFINITION
- EMAIL_TEMPLATE
- FILTER
- METAFIELD
- ONLINE_STORE_THEME_APP_EMBED
- ONLINE_STORE_THEME_SETTINGS_CATEGORY
- ONLINE_STORE_THEME_SETTINGS_DATA_SECTIONS
- PACKING_SLIP_TEMPLATE
- PAYMENT_GATEWAY
- SELLING_PLAN
- SELLING_PLAN_GROUP
- SHOP
- SHOP_POLICY