Managed Markets ஐச் செயல்படுத்துக

Managed Markets மூலம், சுங்க வரிகள், வரிகள் மற்றும் இணக்கத்தை உங்கள் சார்பாக நிர்வகித்து, நீங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யலாம். நீங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்தால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே நேரடியாக Managed Markets ஐச் செயல்படுத்தலாம். Managed Markets உங்கள் ஸ்டோரில் பல மாற்றங்களைச் செய்வதால், Managed Markets ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு மாற்றங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

Managed Markets ஐச் செயல்படுத்துவதற்கு முன்

Managed Markets ஐச் செயல்படுத்துவதற்கு முன், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் Managed Markets செய்யும் பின்வரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

உங்கள் ஸ்டோரில் Managed Markets செய்யும் மாற்றங்கள்
அமைப்புஉங்கள் ஸ்டோருக்கான மாற்றங்கள்
ஸ்டோர்
செக்அவுட்
  • உங்கள் செக்அவுட்டில் உள்ளூர் கட்டண முறைகள் சேர்க்கப்படுகின்றன.
  • செக்அவுட்டில் சுங்க வரிகள் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகின்றன.
  • Managed Markets ஆர்டர்களுக்காகச் செக்அவுட்டில் வாடிக்கையாளரின் ஃபோன் எண் பெறப்படுகிறது.
  • முன்பணம் செலுத்திய சுங்க வரிகளுடனான ஷிப்பிங் செக்அவுட்டில் பயன்படுத்தப்படுகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸில், DHL Express, DHL eCommerce, UPS மற்றும் FedEx மூலம் ஷிப்பிங் கிடைக்கிறது. யுனைடெட் கிங்டம் மற்றும் கனடாவில், DHL Express மற்றும் FedEx மூலம் ஷிப்பிங் கிடைக்கிறது.
  • சர்வதேச ஆர்டர்கள் மீதான பரிவர்த்தனைகளுக்கு Global-e என்பது பதிவுசெய்யப்பட்ட வணிகர் என்று தெரிவிக்கும் பொறுப்புத்துறப்பு செக்அவுட்டில் சேர்க்கப்படுகிறது.
சர்வதேச விற்பனைக் கருவிகள்
  • பொருந்தாத நாடுகள் அகற்றப்படுகின்றன.
  • Managed Markets நிர்வகிக்கும் சந்தைகள் பொருந்தும் நாணயங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். Managed Markets ஐச் செயல்படுத்துவதற்கு முன் உங்கள் நாணய அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.
ஆன்லைன் ஸ்டோர்
பேமெண்ட்டுகள்
  • Shopify Payments மூலம் பேமெண்ட்டுகள் தினமும் செயலாக்கப்படும்.
  • Managed Markets ஷிப்பிங் லேபிள்கள், பேஅவுட்டுகளில் ஒரு புதிய பரிவர்த்தனை வகையைக் கொண்டுள்ளன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் உள்ள சர்வதேச ஆர்டர்களுக்கு, Managed Markets உங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகராகச் செயல்படுகிறது.

Managed Markets ஐச் செயல்படுத்துக

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சந்தைகள் பக்கத்தில் இருந்து நீங்கள் Managed Markets ஐ நேரடியாகச் செயல்படுத்தலாம். செயல்படுத்தும் படிகளை முடித்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கு Managed Markets உடனடியாகச் செயல்படத் தொடங்கும்.

செயல்படுத்தும்போது முடிவுகளைப் பார்ப்பதற்காக, நீங்கள் செயல்படுத்துவதற்கு முன், தடைசெய்யப்பட்ட உருப்படிகளுக்காக உங்கள் தயாரிப்புகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலான தயாரிப்புகளுக்கான முடிவுகள் சில விநாடிகளில் கிடைத்துவிடும், ஆனால் பெரிய அளவிலான தயாரிப்புப் பட்டியலை மதிப்பாய்வு செய்யச் சில மணிநேரம் ஆகலாம். தயாரிப்பு மதிப்பாய்வு நிலைகள் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. Managed Markets என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: உங்கள் ஸ்டோரில் Managed Markets செய்யும் மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும்.

  4. சர்வதேச அளவில் விற்பனை செய்யத் தொடங்குங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. Managed Markets இக்காக உருவாக்கப்பட்ட புதிய சந்தையை மதிப்பாய்வு செய்யவும். இயல்பாகவே, இந்தச் சந்தை உலகின் பிற பகுதிகள் (Rest of World) என்று அழைக்கப்படுகிறது, மேலும் Managed Markets இற்குத் தகுதியான அனைத்துப் பிராந்தியங்களும் இதில் அடங்கும். ஆனால் உங்கள் சந்தைப் பெயரை மாற்றிக்கொள்ளலாம் மற்றும் சேர்க்கப்பட்ட பிராந்தியங்களின் பட்டியலில் இருந்து நாடுகள் மற்றும் பிராந்தியங்களை அகற்றலாம்.

  6. விருப்பத்திற்குரியது: உங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய, தயாரிப்புத் தகுதி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தயாரிப்புகள் ஓரளவு ஆதரிக்கப்படுபவை என்றோ ஆதரிக்கப்படாதவை என்றோ பட்டியலிடப்பட்டிருந்தால், தயாரிப்பு எங்கு மற்றும் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்க விவரங்கள் என்பதன் மீது உங்கள் மவுஸை நகர்த்தலாம்.

  7. விருப்பத்திற்குரியது: Global-e இன் ஷிப்பிங் லேபிள்கள் மற்றும் கட்டணங்களை மதிப்பாய்வு செய்ய, ஷிப்பிங் லேபிள்கள் என்பதைக் கிளிக் செய்யவும். Managed Markets ஷிப்பிங் கட்டணங்களைக் கொண்ட CSV கோப்பைப் பதிவிறக்க கட்டணங்களைப் பதிவிறக்குக என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Managed Markets ஐச் செயல்படுத்தியதும், உடனடியாக உங்கள் ஸ்டோர் புதுப்பிக்கப்படும். Managed Markets ஐ எவ்வாறு அமைப்பது என்பது குறித்து மேலும் அறிக.

Managed Markets ஐ முடக்குதல்

உங்களுக்கு இனி Managed Markets ஐப் பயன்படுத்த விருப்பமில்லை என்றால், ஒரு குறிப்பிட்ட சந்தைக்காக அல்லது உங்கள் முழு ஸ்டோருக்காகவும் அதை முடக்கிக்கொள்ளலாம். Managed Markets ஐ முடக்குதல் குறித்து மேலும் அறிக.