Managed Markets ஆர்டர்களை நிறைவேற்றுதல் மற்றும் நிர்வகித்தல்
பின்வரும் ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி Managed Markets மூலம் உங்கள் சர்வதேச ஆர்டர்களை நீங்கள் நிறைவேற்றலாம்:
- உங்கள் Shopify நிர்வாகியில் நேரடியாக ஷிப்பிங் லேபிள்களை வாங்கிப் பிரிண்ட் செய்யவும்.
- உங்கள் மூன்றாம் தரப்பு நிறைவேற்ற கூட்டாளரிடமிருந்து ஆதரிக்கப்படும் ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்தி ஆர்டர்களைப் பிரிண்ட் செய்து, நிறைவேற்றி அனுப்பவும்.
Managed Markets ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறவும் அவற்றைத் திருப்பியளிக்கவும் உங்களால் முடியும்.
இந்தச் சேவையில் Global-e வகிக்கும் பங்கு என்னவாக இருந்தாலும், Managed Markets தொடர்பான அனைத்துக் கேள்விகளும் Shopify ஆதரவுக்கே செல்லும். Global-e உங்களின் பதிவுசெய்யப்பட்ட வணிகராகச் செயல்படுவதுடன், சுங்க வரிகள், வரிப்பணம் அனுப்புதல், வணிக விலைப்பட்டியல்கள், கேரியர் ஏற்பாடுகள் உட்பட உங்களின் Managed Markets ஆர்டர்களின் சில பகுதிகளைக் கையாளுகிறது. எனினும், உங்கள் ஆர்டர்கள், பேஅவுட்கள், ஷிப்பிங் லேபிள்கள், ரிட்டர்ன்கள், வரி அல்லது சுங்க ஆவணங்கள் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக Global-e வசம் அல்லாமல், Shopify ஆதரவின் மூலமே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Global-e-க்கு ஒரு தனித்த மூன்றாம் தரப்புச் செயலியும் உள்ளது, இது Managed Markets-லிருந்து வேறுபட்டது. நீங்கள் Managed Markets-க்கு பதிலாகத் தனித்த Global-e செயலியைப் பயன்படுத்தினால், Global-e நேரடியாக உங்களுக்கு ஆதரவளிக்கும். உங்களால் Managed Markets மற்றும் Global-e செயலி ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.
இந்தப் பக்கத்தில்
- Managed Markets ஷிப்பிங் லேபிள்களை வாங்குவதற்கான பரிசீலனைகள்
- தானியங்கு முகவரித் திருத்தம்
- Managed Markets ஆர்டர்களைத் திருத்துதல்
- Shopify நிர்வாகியில் நேரடியாக ஆர்டர்களை நிறைவேற்றுதல்
- வெளியக நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்தி ஆர்டர்களை நிறைவேற்றுதல்
- நிறுத்திவைக்கப்பட்ட ஆர்டர்கள்
- Managed Markets வரைவு ஆர்டர்களை நிர்வகித்தல்
- Managed Markets ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் அவற்றைத் திருப்பியளித்தல்
- Managed Markets-இல் B2B ஆர்டர்கள்
- Managed Markets-இல் இலவச ஆர்டர்கள்
Managed Markets ஷிப்பிங் லேபிள்களை வாங்குவதற்கான பரிசீலனைகள்
உங்கள் சர்வதேச ஆர்டர்களுக்கான ஷிப்பிங் லேபிள்களை வாங்குவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்.
பேக்கேஜ் மற்றும் கேரியர் கிடைக்கும் தன்மை
- Managed Markets-இல் கேரியர் பேக்கேஜ்கள் ஆதரிக்கப்படுவதில்லை. நீங்கள் Shopify-யிலிருந்து நிறைவேற்றுகிறீர்கள் என்றால், உங்கள் நிர்வாகியில் உள்ள ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளிலிருந்து பிரத்தியேக பேக்கேஜ்களைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மூன்றாம் தரப்பு நிறைவேற்றக் கூட்டாளரைப் பயன்படுத்தி நிறைவேற்றுகிறீர்கள் என்றால், அந்தச் செயலி அல்லது பிளாட்ஃபார்மில் அமைக்கப்பட்டுள்ள பேக்கேஜ்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
- கிடைக்கும் ஷிப்பிங் லேபிள்கள் உங்கள் வணிகத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து அமையும்.
- அமெரிக்காவில், நீங்கள் DHL Express, DHL eCommerce, UPS மற்றும் FedEx ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம்.
- பிரிட்டன் மற்றும் கனடாவில், நீங்கள் DHL Express மற்றும் FedEx ஷிப்பிங் லேபிள்களை மட்டுமே வாங்க முடியும்.
சுங்க வரிகள் மற்றும் இலக்கு விவரங்கள்
- சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP) ஆதரிக்கப்படாத நாடுகளிலும் பிராந்தியங்களிலும் மட்டுமே வரி செலுத்தப்படாத டெலிவரி (DDU) ஷிப்பிங் லேபிள்கள் கிடைக்கும்.
- ஏதேனும் தொகையில் சுங்க வரிகள் கணக்கிடப்பட்டிருந்தாலோ பதிவுசெய்யப்பட்ட வணிகராக Managed Markets அமைக்கப்பட்டிருந்தாலோ அந்த ஆர்டர்களுக்கு உங்களால் DDU ஷிப்பிங் லேபிள்களை வாங்க முடியாது. $0.00 என்ற தொகைக்கான சுங்க வரிகளும் இதில் அடங்கும்.
- சுங்க வரிக் கணக்கீடுகளைத் துல்லியமாக வைத்திருக்க, பின்வரும் வகையான ஆர்டர்களுக்கு நீங்கள் ஷிப்பிங் நாடு, மாநிலம் அல்லது மாகாணத்தைத் திருத்த முடியாது:
- முன்கூட்டியே செலுத்தப்பட்ட சுங்க வரி ஆர்டர்கள்
- கனடா, அமெரிக்கா அல்லது பிரேசிலுக்கு அனுப்பப்படும் ஆர்டர்கள்
- சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்காக அறிவிக்கப்பட்ட அதிகபட்ச மதிப்பு $25,000 USD ஆகும்.
தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தகவல்
- Managed Markets-இல் பிரத்தியேக வரிசை உருப்படிகள் ஆதரிக்கப்படுவதில்லை. பிரத்தியேக வரிசை உருப்படிகளை அனுப்ப, நீங்கள் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி, அந்த ஆர்டரில் உள்ள Managed Markets என்ற பதிவுசெய்யப்பட்ட வணிகரை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும்.
- வாடிக்கையாளரின் ஷிப்பிங் விவரங்களில் அவரது பெயரோ குடும்பப்பெயரோ ஒற்றை எழுத்தாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு,
J Doeமற்றும்John Dஆகிய இரண்டும் தவறான வாடிக்கையாளர் பெயர் வடிவங்களாகும். - இலவச உருப்படிகளைக் கொண்டுள்ள ஆர்டர்கள், வணிக விலைப்பட்டியலில் அந்த இலவச உருப்படிகளுக்கு $1.00 USD மதிப்பைக் காட்டும். இந்த ஷிப்மென்ட் சுங்கத் துறையை வெற்றிகரமாகக் கடந்து செல்லும் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்காது, அதேபோல் இலவச உருப்படியின் மதிப்பை மேனுவலாக அறிவிக்கவும் எந்த வழியும் இல்லை.
ஷிப்பிங் லேபிள் மற்றும் ஆர்டர் கட்டுப்பாடுகள்
- Managed Markets-இல் ஒரு தயாரிப்பைப் பல ஷிப்மென்ட்டுகளாகப் பிரிப்பது ஆதரிக்கப்படாது. ஒவ்வொரு ஆர்டரிலும் ஒரு தயாரிப்புக்கு மொத்தம் 1 ஷிப்பிங் லேபிளை வாங்க முடியும்.
- ஒவ்வொரு பேக்கேஜையும் துல்லியமாக எடைபோடுமாறு ஷிப்பிங் கேரியர்களைத் தூண்டும் வகையில், அனைத்து Managed Markets ஷிப்பிங் லேபிள்களும் 1 lb எடையைக் காண்பிக்கின்றன. இது Managed Markets லேபிள்களின் பில்லிங்கை மாற்றாது. லேபிளை உருவாக்கும்போது நீங்கள் அல்லது உங்கள் லாஜிஸ்டிக்ஸ் கூட்டாளர் அறிவித்த எடையே உங்கள் தொடக்க லேபிள் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும். கேரியர் லேபிள் இன்வாய்ஸுடன் லேபிள் மதிப்பீட்டை ஒப்பிடுவதற்காக இது லேபிள் பார்கோடில் சேமிக்கப்படும்.
- லேபிளை வாங்கிய பிறகு Managed Markets ஆர்டர்களைத் திருத்த முடியாது.
- ஒவ்வொரு ஷிப்மென்ட்டிலும் பிரத்தியேக ஷிப்பிங் லேபிளும் தடமறிவதற்கான எண்ணும் இருக்க வேண்டும். ஒன்றாகக் கட்டப்பட்ட பல பேக்கேஜ்களுக்கு ஒரே ஷிப்பிங் லேபிளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தானியங்கு முகவரித் திருத்தம்
இயல்பாகவே, ஷிப்பிங் முகவரி சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த Managed Markets ஆர்டர்கள் மதிப்பாய்வு செய்யப்படும். முகவரியில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டால், அது தானாகவே சரிசெய்யப்படும்.
ஒரு ஆர்டர் உருவாக்கப்பட்ட பிறகு, அந்த ஆர்டரின் முகவரியிலுள்ள துல்லியம் சரிபார்க்கப்படும் என்பதால், சிறிது நேரத்திற்கு அதற்கு நிறுத்திவைக்கப்பட்டது என்ற நிலை ஒதுக்கப்படும். முகவரியின் துல்லியம் சரிபார்க்கப்பட்டவுடன், ஆர்டர் நிறைவேற்றப்படாதது என அமைக்கப்பட்டு, முகவரி செல்லுபடியாகும் எனக் குறிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் ஒரு பதிவு ஆர்டரின் காலவரிசையில் உருவாக்கப்படும். நீங்கள் உடனடியாக நிறுத்திவைப்பை அகற்ற வேண்டும் என்றால், ஆர்டரின் பக்கத்தில் உள்ள நிறுத்திவைப்புகளை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
முகவரி தவறானது எனத் தீர்மானிக்கப்பட்டால், முகவரி புதுப்பிக்கப்படும் வரை ஆர்டர் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இந்தச் செயல்முறைக்கு ஒரு வணிக நாள் வரை ஆகும். முகவரி திருத்தப்படும்போது, ஆர்டர் நிறைவேற்றப்படாதது என அமைக்கப்பட்டு, ஷிப்பிங் முகவரியில் செய்யப்பட்ட மாற்றங்களைக் குறிக்கும் வகையில் ஆர்டரின் காலவரிசையில் ஒரு பதிவு உருவாக்கப்படும்.
மதிப்பாய்வுக்குப் பிறகு சரியான முகவரியைத் தீர்மானிக்க முடியவில்லை எனில், ஆர்டர் நிறைவேற்றப்படாதது என அமைக்கப்பட்டு, ஆர்டர் பக்கத்தின் வாடிக்கையாளர் பிரிவில் பிழை அறிவிப்பு காட்டப்படும். கூடுதல் முகவரி விருப்பங்களுக்கு, பிழை அறிவிப்பில் உள்ள மதிப்பாய்வு செய் பொத்தானைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் கைமுறையாக முகவரியைப் புதுப்பிக்கலாம், முகவரியை உறுதிப்படுத்த வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஷிப்பிங் முகவரியை மதிப்பாய்வு செய்ய முகவரிச் சரிபார்ப்பானைப் பயன்படுத்தலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் தானியங்கி முகவரித் திருத்தத்தில் இருந்து நீங்கள் விலகலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் பகுதிக்குச் செல்லவும்.
Managed Markets என்பதைக் கிளிக் செய்யவும்.
தவறான ஷிப்பிங் முகவரிகளைத் திருத்த Managed Markets-ஐ அனுமதி என்பதை ஆஃப் நிலைக்கு நிலைமாற்றவும்.
தானியங்கி முகவரித் திருத்தத்தை ஆஃப் செய்த பிறகு, துல்லியத்திற்காக உங்கள் ஆர்டர்கள் மதிப்பாய்வு செய்யப்படவோ திருத்தப்படவோ மாட்டாது.
Managed Markets ஆர்டர்களைத் திருத்துதல்
நிறைவேற்றப்படாத அல்லது பகுதியளவு நிறைவேற்றப்பட்ட மற்றும் ஷிப்பிங் லேபிள் வாங்கப்படாத Managed Markets ஆர்டர்களை நீங்கள் திருத்தலாம். Managed Markets ஆர்டர்களைத் திருத்துவதற்கான பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் ஸ்டோரில் Managed Markets முடக்கப்பட்டிருந்தால், Managed Markets ஆர்டர்களைத் திருத்த முடியாது.
- ஷிப்பிங் முகவரிகளை வேறொரு நாடு, மாகாணம் அல்லது மாநிலத்திற்கு மாற்ற முடியாது.
- Managed Markets ஆர்டருக்கான நிறைவேற்றத்தை உங்களால் ரத்துசெய்ய முடியாது.
- Managed Markets ஆர்டருக்கான ஷிப்பிங் கட்டணத்தை உங்களால் திருத்த முடியாது.
- Managed Markets ஆர்டரில் பிரத்தியேக உருப்படிகளை உங்களால் சேர்க்க முடியாது.
- Managed Markets ஆர்டருக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷிப்பிங் சேவையை மாற்ற முடியாது.
- Managed Markets ஆர்டருக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகரை உங்களால் மாற்ற முடியாது.
படிகள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்திய பிறகு, நீங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆர்டர் மொத்தத்தை மதிப்பாய்வு செய்து, அது சரியானதுதானா எனச் சரிபார்க்க வேண்டும். ஆர்டர் புதுப்பிக்கப்படும் வரை சுங்க வரிகளும் வரிகளும் மீண்டும் கணக்கிடப்பட மாட்டாது, மேலும் அவற்றின் அருகில் (அசல்) எனக் காட்டப்படும். புதுப்பிக்கப்பட்ட ஆர்டரை நீங்கள் மதிப்பாய்வு செய்த பிறகு, சுங்க வரிகள் மற்றும் வரியை மீண்டும் கணக்கிட புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும். ஆர்டர் புதுப்பிக்கப்பட்டதும், தேவைக்கேற்ப உங்கள் வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸை அனுப்பலாம், பேமெண்ட்டை ஏற்கலாம் அல்லது பணத்தைத் திரும்பப்பெற வழங்கலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் நேரடியாக ஆர்டர்களை நிறைவேற்றுதல்
ஷிப்பிங் லேபிள்களைத் தனித்தனியாகவோ மொத்தமாகவோ வாங்குவதன் மூலம், உங்கள் Managed Markets ஆர்டர்களை உங்கள் Shopify நிர்வாகியிலேயே நேரடியாக நிறைவேற்றலாம்.
ஷிப்பிங் லேபிள்களைத் தனித்தனியாக வாங்கி அச்சிடுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
நிறைவேற்றப்படாத உருப்படிகளைக் கொண்ட ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்றப்படாதவை பிரிவில், ஷிப்பிங் லேபிளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உருப்படிகள் பிரிவில், இந்த நிறைவேற்றத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் உருப்படிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும். வாடிக்கையாளரின் ஆர்டரை ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைவேற்றங்களைப் பயன்படுத்தி அனுப்ப விரும்பினால், இந்த நிறைவேற்றத்தில் அனுப்ப விரும்பாத ஒவ்வொரு உருப்படியின் அளவையும் மாற்றவும். முழு ஆர்டரையும் முடிக்கத் தேவையான ஒவ்வொரு நிறைவேற்றத்திற்கும் கூடுதல் ஷிப்பிங் லேபிளை நீங்கள் வாங்கலாம்.
சுங்க அறிவிப்புப் படிவத்தை மதிப்பாய்வு செய்து, விடுபட்ட தகவல்களைச் சேர்க்கவும்:
- உருப்படிகள் பிரிவில், சுங்கத் தகவலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- எடை, அளவு, மதிப்பு மற்றும் விளக்கம் போன்ற உங்கள் தயாரிப்புத் தகவலைச் சரிபார்க்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பேக்கேஜ் பிரிவில், முன்பே உள்ள பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய பேக்கேஜை உருவாக்கவும்:
- முன்பே உள்ள பேக்கேஜைப் பயன்படுத்த, பேக்கேஜ் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய பேக்கேஜை உருவாக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
- பேக்கேஜ் பிரிவில், பேக்கேஜைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பேக்கேஜைச் சேர் உரையாடல் பெட்டியில், உங்கள் புதிய பேக்கேஜ் குறித்த தகவலை உள்ளிடவும்.
- பேக்கேஜைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
மொத்த எடை (பேக்கேஜுடன்) புலத்தில், உங்கள் ஷிப்மென்ட்டின் மொத்த எடையை உள்ளிடவும்.
ஷிப்பிங் தேதி புலத்தில், ஷிப்பிங் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். அந்தத் தேதியில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷிப்மென்ட் விவரங்களைத் தானாகவே அனுப்ப விரும்பினால், வாடிக்கையாளர்களுக்கு ஷிப்பிங் தகவலை அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சுருக்கம் பிரிவில் உங்கள் ஷிப்பிங் விவரங்களை மதிப்பாய்வு செய்து, அதன் பிறகு ஷிப்பிங் லேபிளை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஷிப்பிங் லேபிள்களை சுங்கப் படிவங்கள் அல்லது பேக்கிங் சீட்டுகளுடன் ஒன்றிணைக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் அச்சுத் தாள் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஷிப்பிங் லேபிள்களையும் ஆவணங்களையும் அச்சிடவும்.
ஷிப்பிங் லேபிள்களை மொத்தமாக வாங்கி அச்சிடுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: நிறைவேற்றப்பட வேண்டிய ஆர்டர்களை மட்டும் பார்க்க, நிறைவேற்றப்படாதவை தாவலைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் ஷிப்பிங் லேபிளை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு ஆர்டருக்கும் அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஷிப்பிங் லேபிள்களை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் பல இருப்பிடங்களில் இருந்து நிறைவேற்றினால், பொருத்தமான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
சுங்க அறிவிப்புப் படிவத்தை மதிப்பாய்வு செய்து, விடுபட்ட தகவல்களைச் சேர்க்கவும்:
- ஆரடருக்கான உருப்படிகள் புலத்தைக் கிளிக் செய்யவும்.
- சுங்க அறிவிப்பைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு தயாரிப்புக்கும், தயாரிப்பின் எடை, அளவு, மதிப்பு மற்றும் விளக்கம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
- விருப்பத்தேர்வு: தயாரிப்பு விவரங்களில் ஷிப்பிங் தகவலைச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சுங்க அறிவிப்புப் படிவத்தைப் புதுப்பி என்பதன் கீழ், பல ஆர்டர்களைப் புதுப்பிப்பதற்கான அல்லது இந்த ஆர்டரை மட்டும் புதுப்பிப்பதற்கான விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் லேபிள்களை உருவாக்கு பக்கத்தில், உங்கள் லேபிள்களில் தேவையான திருத்தங்களைச் செய்யவும்.
மதிப்பாய்வு செய்து வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: ஷிப்பிங் தேதியை மாற்றவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் நிறைவேற்ற மின்னஞ்சல் அனுப்பப்படுகிறதா என்பதை மாற்றவும்.
ஷிப்பிங் லேபிள்களை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஷிப்பிங் லேபிள்களை சுங்கப் படிவங்கள் மற்றும் பேக்கிங் சீட்டுகளுடன் ஒன்றிணைக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் அச்சுத் தாள் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஷிப்பிங் லேபிள்களையும் ஆவணங்களையும் அச்சிடவும்.
வெளிப்புற நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்தி ஆர்டர்களை நிறைவேற்றுதல்
பின்வரும் இணக்கமான நிறைவேற்றச் சேவைகளின் மூலம் Managed Markets ஆர்டர்களை நிறைவேற்றலாம்:
ஒருங்கிணைப்பை முடிக்க, உங்கள் நிறைவேற்றச் சேவையின் ஒருங்கிணைப்பு ஆவணங்களைப் பார்க்கவும். உங்களின் Managed Markets உலகளாவிய தனித்துவ அடையாளங்காட்டியையும் (GUID) உங்கள் நிறைவேற்றச் சேவையுடன் பகிர வேண்டும்.
வெளிப்புற நிறைவேற்றச் சேவையிலிருந்து ஏற்கெனவே இருக்கும் ஷிப்பிங் லேபிளை ரத்துசெய்து, புதிய லேபிளைப் பெற வேண்டுமானால், லேபிளை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்து, புதிய லேபிளை வாங்கவும். ஷிப்பிங் கேரியர் ஸ்கேன் செய்யும் லேபிளுக்கு மட்டுமே உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
வெளிப்புற நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம். உங்கள் சேவை கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், தகவல்களுக்கு உங்கள் நிறைவேற்றச் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
இந்தப் பட்டியலில் இல்லாத நிறைவேற்றச் சேவையை நீங்கள் பயன்படுத்தி, உடனடியாகத் தொடங்க விரும்பினால், நீங்களோ உங்கள் நிறைவேற்றக் கூட்டாளரோ ஷிப்பிங் லேபிள்களை வாங்கி, Shopify நிர்வாகி மூலம் Managed Markets ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டும். மாற்றாக, Managed Markets லேபிள்களை வாங்க உங்கள் நிறைவேற்றக் கூட்டாளர் Shopify உடன் நேரடியாக ஒருங்கிணைக்கலாம்.
வெளிப்புற நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான கருத்தில்கொள்ள வேண்டியவை
வெளிப்புற நிறைவேற்றச் சேவைகளின் மூலம் எந்த விநியோக முறைகள் கிடைக்கின்றன என்பதை Shopify ஆல் கட்டுப்படுத்த முடியாது.
உங்கள் ஷிப்பிங் அமைப்புகளை இன்னமும் புதுப்பிக்காத காரணத்தால் பிரத்தியேக நிலையான கட்டணங்களைப் பயன்படுத்தினால், அது அனுமதிக்கும் அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றைப் புதுப்பிப்பதைக் கருத்தில்கொள்ளவும்.
Shopify நிர்வாகிக்கு வெளியே ஷிப்பிங் லேபிளை அச்சிட்டால், செக்அவுட்டில் வாடிக்கையாளர் தேர்ந்தெடுப்பது எதுவாக இருந்தாலும் அது லேபிளாக வெளிப்புற நிறைவேற்ற வழங்குநருக்கு அனுப்பப்படும். வெளிப்புற வழங்குநரால் Managed Markets ஷிப்பிங் சேவைகளிலிருந்து தேர்வுசெய்ய முடியாது என்பதால், வெளிப்புற வழங்குநருக்கு அனுப்பப்படும் விவரங்கள் செக்அவுட்டில் எந்தெந்தக் கட்டணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து இருக்கும். கேரியர் கணக்கிட்ட கட்டணங்கள் செக்அவுட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் வகுப்பாக அனுப்பப்படும். செக்அவுட்டில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிலையான கட்டணங்கள் வெவ்வேறு விதமாக அனுப்பப்படும்:
- Economy International: DHL eCommerce.
- Standard International: உங்கள் கேரியர் விருப்பத்தேர்வைப் பொறுத்து FedEx அல்லது UPS. கேரியர் விருப்பத்தேர்வு எதுவும் அமைக்கப்படவில்லை எனில், Standard International நிலையான கட்டணங்கள் FedEx நிறைவேற்றத்திற்கு இயல்புநிலையாக மாறும்.
- Express International: DHL Express.
- பிரத்தியேக நிலையான கட்டணம்: FedEx.
நீங்கள் ஒரு நிறைவேற்றச் சேவையாக இருந்தாலோ அல்லது இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தும் வணிகராக இருந்தாலோ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நிறுத்திவைக்கப்பட்ட ஆர்டர்கள்
Managed Markets ஆர்டர்கள் நிறுத்திவைக்கப்படும், மேலும் நிறுத்திவைப்பு அகற்றப்படும் வரை அவற்றை நிறைவேற்ற முடியாது. ஆர்டர் நிறுத்திவைக்கப்படும்போது, Managed Markets உங்கள் ஆர்டரின் மோசடி பகுப்பாய்வை மேற்கொண்டு, வாடிக்கையாளரின் மின்னஞ்சல் மற்றும் ஃபோன் எண் போன்ற உங்கள் ஆர்டர் தகவலைச் சரிபார்த்து, பொருந்தக்கூடிய சுங்க வரிகளும் இறக்குமதி வரிகளும் வசூலிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும்.
ஆர்டர் நிறுத்திவைப்பு பொதுவாக ஐந்து நிமிடங்களில் அகற்றப்படும். சில சந்தர்ப்பங்களில், கூடுதல் ஆர்டர் பரிசோதனைக்காக Managed Markets உங்கள் ஆர்டரை அதிக நேரம் நிறுத்திவைக்கலாம்.
ஆர்டர் நிறுத்திவைப்பு அகற்றப்பட்டதும், உங்கள் ஆர்டர் பேமெண்ட் தானாகவே பெறப்படும் அல்லது உங்கள் பேமெண்ட் பெறும் முறையைப் பொறுத்து அதை மேனுவலாகப் பெறலாம்.
Managed Markets வரைவு ஆர்டர்களை நிர்வகித்தல்
நீங்கள் வரைவு ஆர்டரை உருவாக்கி, Managed Markets மூலம் நிர்வகிக்கப்படும் சந்தையிலிருந்து ஒரு ஷிப்பிங் முகவரியைக் கொண்ட வாடிக்கையாளரைச் சேர்த்தால், உங்கள் வரைவு ஆர்டருக்கு Managed Markets பதிவுசெய்யப்பட்ட வணிகர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்.
உங்கள் வரைவு ஆர்டருக்கு Managed Markets ஷிப்பிங் சேவையை ஒதுக்குவது முக்கியமாகும். Managed Markets ஷிப்பிங் முறையை ஒதுக்கத் தவறினால், சுங்க வரிகள் கணக்கிடப்படாது, அத்துடன் Managed Markets பதிவுசெய்யப்பட்ட வணிகராக ஒதுக்கப்பட மாட்டாது.
வாடிக்கையாளரைச் சேர்க்காமல் Managed Markets மூலம் நிர்வகிக்கப்படும் சந்தையைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் வரைவு ஆர்டருக்கு Managed Markets பதிவுசெய்யப்பட்ட வணிகர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்.
Managed Markets மூலம் நிர்வகிக்கப்படும் வரைவு ஆர்டர்களுக்குப் பின்வரும் கருத்தில்கொள்ள வேண்டியவை பொருந்தும்:
- ஒத்திவைக்கப்பட்ட பேமெண்ட்டுகள் ஆதரிக்கப்படுவதில்லை.
- பிரத்தியேக வரிசை உருப்படிகளைச் சேர்ப்பது ஆதரிக்கப்படுவதில்லை.
- B2B ஆர்டர்களை Managed Markets ஆர்டர்களாகச் செயல்படுத்த முடியாது. நீங்களே பதிவுசெய்யப்பட்ட வணிகராக மாற வேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் சேர்க்க முடியாது.
- இணக்கமான நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு மட்டுமே நீங்கள் ஷிப்பிங் செய்ய முடியும்.
- உங்கள் வரைவு ஆர்டரில் வாடிக்கையாளரின் ஃபோன் எண், மின்னஞ்சல் மற்றும் ஷிப்பிங் முகவரி இருக்க வேண்டும்.
- உங்கள் வரைவு ஆர்டரின் மதிப்பு பூஜ்ஜியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- உங்கள் வரைவு ஆர்டருக்கு ஒரு Managed Markets ஷிப்பிங் சேவை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு Managed Markets ஷிப்பிங் முறையை ஒதுக்கவில்லை எனில், சுங்க வரிகள் கணக்கிடப்படாது, அத்துடன் Managed Markets பதிவுசெய்யப்பட்ட வணிகராக ஒதுக்கப்பட மாட்டாது.
உங்கள் சர்வதேச வரைவு ஆர்டருக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகரை மாற்றுதல்
உங்கள் சர்வதேச வரைவு ஆர்டருக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகரை மாற்றலாம். பதிவுசெய்யப்பட்ட வணிகரை Managed Markets என்பதிலிருந்து நீங்களே என்பதாக மாற்றினால், சர்வதேச விற்பனையின் நிதி மற்றும் சட்டரீதியான சிக்கல்களைக் கையாளுவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுசெய்யப்பட்ட வணிகரைப் பொறுத்து, வெவ்வேறு ஷிப்பிங் லேபிள்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள்:
- Managed Markets மூலம் நிர்வகிக்கப்படும் ஆர்டர்களுக்கு, Managed Markets ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம்
- நீங்களே பதிவுசெய்யப்பட்ட வணிகராக நிர்வகிக்கும் ஆர்டர்களுக்கு, ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம்
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்த வரைவு ஆர்டருக்குப் பதிவுசெய்யப்பட்ட வணிகரை மாற்ற விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
சந்தை பிரிவில்,
என்பதைக் கிளிக் செய்து, பதிவுசெய்யப்பட்ட வணிகரை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆர்டரை நிர்வகிக்க நீங்கள் விரும்பும் பதிவுசெய்யப்பட்ட வணிகரைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Managed Markets ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் ரிட்டர்ன் செய்தல்
Managed Markets ஆர்டர்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகர் Global-e ஆவார், ஆனால் ரிட்டர்ன் கோரிக்கைகளைப் பெறும் முறையிலோ பணத்தைத் திரும்பப்பெறும் முறையிலோ எந்த மாற்றமும் இல்லை. உங்களின் மற்ற ஆர்டர்களைப் போலவே, Managed Markets ஆர்டர்களுக்கான ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களையும் உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நீங்களே நிர்வகிக்கலாம். ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களை நிர்வகிப்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.
30 நாள் நாணயமாற்று வீத உத்தரவாதம்
அந்நியச் செலாவணியில் பேமெண்ட் செலுத்தப்பட்ட Managed Markets ஆர்டர்களுக்கு, 30 நாட்களுக்கு அந்நியச் செலாவணி வீதப் பூட்டு பயன்படுத்தப்படும். 30 நாள் நாணயமாற்று வீத உத்தரவாதமானது, உங்கள் ஆர்டர் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகும் அதே நாணயமாற்று வீதம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதோடு, நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
அதாவது, கடந்த 30 நாட்களுக்குள் வழங்கப்பட்ட ஆர்டருக்கான பணத்தை நீங்கள் திரும்பப்பெற வேண்டுமெனில், ஆர்டர் வழங்கப்பட்டபோது இருந்த நாணயமாற்று வீதமே இதற்கும் இருக்கும்.
சுங்க வரிகள், சுங்கவரி மற்றும் VAT
Managed Markets ஆர்டர் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுங்க வரிகள், சுங்கக் கட்டணங்கள் அல்லது VAT ஆகியவற்றுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல் வழங்கப்படாது. ஆர்டர் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே முழு ஆர்டருக்கும் பணத்தைத் திரும்பப்பெறுதல் வழங்கப்பட்டால், அதற்கடுத்த பேஅவுட் தேதியில் சுங்க வரிகளும் சுங்கக் கட்டணங்களும் உங்களுக்குத் திருப்பியளிக்கப்படும்.
ரிட்டர்ன்கள்
உங்களின் பிற ஆர்டர்களைப் போலவே, Managed Markets ஆர்டர்களுக்கான ரிட்டர்ன்களையும் உங்கள் Shopify நிர்வாகியில் பெற்று நிர்வகிக்கலாம்:
- நீங்கள் சுய-சேவை திருப்பியளிப்பைச் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு அல்லது ஆர்டர் நிலை பக்கத்தில் இருந்து ரிட்டர்னைக் கோரலாம்; அந்த கோரிக்கை நீங்கள் மதிப்பாய்வு செய்து அனுமதிப்பதற்காக உங்கள் நிர்வாகியில் தோன்றும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் நேரடியாகவும் நீங்கள் ஒரு ரிட்டர்னை உருவாக்கலாம்.
Managed Markets ஆர்டர்களுக்கான திருப்பியனுப்பல் லேபிளை மூன்றாம் தரப்பு வழங்குநர் அல்லது கேரியரிடமிருந்து நீங்கள் வாங்கலாம். திருப்பியனுப்பல் லேபிள்களுக்கு எனப் பிரத்தியேகத் தேவைகள் எதுவும் Managed Markets ஆர்டர்களுக்கு இல்லை.
EU திரும்பப் பெறும் உரிமை
ஐரோப்பிய யூனியனில் (EU) உள்ள வாடிக்கையாளர்களுக்குத் திரும்பப் பெறும் உரிமை உள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கியதை, அதைப் பெற்ற 14 நாட்களுக்குள் ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை வணிகர்கள் வழங்க வேண்டும் என இந்த உரிமை கோருகிறது. EU வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்ட Managed Markets ஆர்டர்களுக்கான இந்தத் திரும்பப் பெறும் கோரிக்கைகளை, நீங்கள் உங்கள் Shopify நிர்வாகியில் நிர்வகிக்கலாம்: பிற ரத்துசெய்தல் அல்லது ரிட்டர்ன்களைப் போலவே, இன்னும் ஷிப்பிங் செய்யப்படாத உருப்படிகளுக்கு ரத்தாகவும், டெலிவரி செய்யப்பட்ட உருப்படிகளுக்கு ரிட்டர்னாகவும் இவற்றைப் பெறலாம்.
EU திரும்பப் பெறும் உரிமை மற்றும் 19 ஜூன் 2026 அன்று நடைமுறைக்கு வந்த மின்னணு முறையில் திரும்பப் பெறும் செயல்பாடு குறித்த தேவை பற்றி அறிய, EU திரும்பப் பெறும் உரிமையின் இணக்கம் என்பதைப் பார்க்கவும். EU-க்கான ரிட்டர்ன் மற்றும் ரத்துசெய்தல் விதிகளை அமைக்க, EU திரும்பப் பெறும் உரிமைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல் என்பதைப் பார்க்கவும்.
பரிமாற்றங்கள்
தயாரிப்புப் பரிமாற்றமானது, சுங்கச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய புதிய Managed Markets ஆர்டராகக் கருதப்படும். நீங்களோ உங்கள் வாடிக்கையாளரோ சுங்க வரிகள் மற்றும் வரிகளை இரண்டாவது முறையாகச் செலுத்த வேண்டும்.
Managed Markets உடனான B2B ஆர்டர்கள்
Managed Markets-இல் B2B ஆர்டர்கள் ஆதரிக்கப்படுவதில்லை. Managed Markets-ஆல் நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கோ பிராந்தியங்களுக்கோ B2B ஆர்டர்களைச் செய்யும்போது, அந்த ஆர்டர்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகராக நீங்களே செயல்பட வேண்டும். B2B ஆர்டர்களை நீங்கள் வரைவு ஆர்டர்களாகச் செயல்படுத்தலாம்.
நீங்கள் Shopify B2B-ஐப் பயன்படுத்தினால், உங்கள் வாடிக்கையாளர் அவர்களின் நிறுவனக் கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது, பதிவுசெய்யப்பட்ட வணிகர், Managed Markets என்பதில் இருந்து உங்களுக்குச் சொந்தமான பதிவுசெய்யப்பட்ட வணிகருக்குத் தானாகவே மாற்றப்படுவார். நீங்கள் B2B ஆர்டர்களை வரைவு ஆர்டர்களாகவும் செயல்படுத்தலாம்.
சில இலக்கு நாடுகளில், ஆர்டரில் அதிக அளவிலான உருப்படிகள் இருக்கும்போதோ அல்லது ஆர்டர் அதிக மதிப்பிலான ஆர்டர் தொகையைக் கொண்டிருக்கும்போதோ, அந்த ஆர்டர்கள் சாத்தியமான B2B ஆர்டராகவும் கருதப்படலாம். சுங்க அதிகாரிகளால் ஒரு ஆர்டர் B2B ஆகக் கருதப்பட்டால், Managed Markets-இன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட கூடுதல் தகவல்களோ செலவுகளோ பொருந்தக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், கேரியர் மற்றும் சுங்க அதிகாரிகளின் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்திற்கு Shopify மற்றும் Managed Markets உத்தரவாதம் அளிக்க முடியாது.
Managed Markets உடனான இலவச ஆர்டர்கள்
Managed Markets-இல் இலவச ஆர்டர்கள் ஆதரிக்கப்படுவதில்லை. Managed Markets-ஆல் நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கோ பிராந்தியங்களுக்கோ பூஜ்ஜிய டாலர் மதிப்பில் நீங்கள் ஒரு ஆர்டரை உருவாக்கும்போது, அந்த ஆர்டர்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகராக நீங்களே செயல்பட வேண்டும். செக்அவுட்டின்போது, இந்த ஆர்டர்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகராக ஸ்டோர் தானாகவே அமைக்கப்படும்.