Managed Markets இல் தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகள்
எந்த வகையான பொருட்களைத் தங்கள் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென தனிப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. ஷிப்பிங் கேரியர்கள் மற்றும் கட்டணச் செயலிகளுக்கும் அவற்றுக்கெனச் சொந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன.
இலக்கு நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு தயாரிப்பை நீங்கள் விற்றால், அந்த நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான கேட்டலாக்கில் இருந்து Managed Markets அந்தத் தயாரிப்பை மறைத்துவிடும். உங்கள் Shopify நிர்வாகியில் தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்வது பற்றி மேலும் அறிக.
பின்வரும் நாடுகளுக்கான ஆர்டர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பு வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன:
- அர்ஜென்டினா: $1,000 USD
- பிரேசில்: $2,999 USD
- சீனா: ¥10,000 CNY
- இந்தோனேசியா: $1,500 USD
- மெக்சிகோ: $1,000 USD
உங்கள் கேட்டலாக் முதன்மையாக ஆதரிக்கப்படாத உருப்படிகளை விற்பனை செய்தால், நீங்கள் Managed Markets ஐப் பயன்படுத்தத் தகுதியற்றவராகலாம். நீங்கள் Managed Markets ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, எந்தெந்தத் தயாரிப்புகள் மற்றும் தயாரிப்புப் பிரிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் கீழே மதிப்பாய்வு செய்யவும். கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகள் உள்ள ஷிப்மென்டை நீங்கள் அனுப்பினால், உங்கள் பேக்கேஜ் டெலிவரி செய்ய முடியாததாகக் கருதப்படலாம்.
இந்தப் பக்கத்தில்
தடைசெய்யப்பட்ட உருப்படி வகையினங்கள்
தடைசெய்யப்பட்ட உருப்படிகள் குறித்த கூடுதல் தகவலுக்குப் பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
ஆல்கஹால் கலந்த பானங்கள் மற்றும் தயாரிப்புகள்
மதுபானங்கள், ஸ்பிரிட்ஸ், வினிகர் மற்றும் குடிநீர், காற்றூட்டப்பட்ட திரவங்கள், சோடா போன்ற மது அல்லாத பானத் தயாரிப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்புகளுக்கு உரிமம் பெறுதல், வயதுச் சரிபார்ப்பு, வரி விதிப்பு, லேபிளிங் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட ஒழுங்குமுறைத் தேவைகள் பொருந்தும். Managed Markets ஆதரிக்காத பிரத்தியேக இணக்கச் செயல்முறைகளும் இவற்றுக்குத் தேவைப்படலாம்.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- ஒயின்
- ஸ்பிரிட்ஸ்
- வீரியமான மதுபானம்
- ஒயின் தயாரிக்கும் தொகுப்புகள்
- பாட்டிலில் அடைக்கும் உருப்படிகள்
விலங்கு மற்றும் செல்லப்பிராணிப் பொருட்கள்
குறிப்பிட்ட சில விலங்கு மற்றும் செல்லப்பிராணிப் பொருட்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- விலங்குகள் (உயிருடன் இருப்பவை அல்லது இறந்தவை)
- செல்லப்பிராணி உணவு மற்றும் சிற்றுண்டிகள்
- செல்லப்பிராணி வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள்
கலைப்படைப்பு
பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரையை மீறும் கலைப்படைப்புகளுக்கு Managed Markets இல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கலைப்படைப்புகள் மற்றும் $2,000 USD-க்கும் அதிகமான மதிப்புடைய கலைப்படைப்புகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் பவர்ஸ்போர்ட்ஸ்
வாகனங்கள் மற்றும் பவர்ஸ்போர்ட்ஸ் தயாரிப்புகள் ஆபத்தான பொருட்களாகக் கருதப்படுகின்றன, இவற்றுக்கு Managed Markets இடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- ஆம்ப்ளிஃபயர்கள்
- பார்க்கிங் கேமராக்கள்
- தரைவிரிப்புகள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி
- இன்ஜின் பாகங்கள்
- ரிம்கள் மற்றும் சக்கரங்கள்
- டயர் உதிரிபாகங்கள்
- கார் கழுவும் உதிரிபாகங்கள்
- அலாரங்கள் மற்றும் பூட்டுகள்
- படகுப் பாகங்கள் மற்றும் பராமரிப்பு
பேட்டரிகள் மற்றும் மின்னணுப் பொருட்கள்
அனைத்துப் பேட்டரிகள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பேட்டரியுடன் கூடிய மின்சார உருப்படிகள் அல்லது நேரடியாக மின்சாரத்தில் செருகப்படும் உருப்படிகள் ஆகியவற்றிற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையினத்தில் உள்ள மின்சார உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- வீடியோ கேம் கன்சோல்கள்
- DVD மற்றும் புளூ-ரே பிளேயர்கள்
- புரொஜெக்டர் திரைகள் மற்றும் மவுண்ட்கள்
- கணினி மானிட்டர்கள்
- தொலைக்காட்சிகள்
- GPS வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் உதிரிபாகங்கள்
- கீபோர்டுகள், மவுஸ்கள் மற்றும் டிராக்பால்கள்
- கணினிகள் மற்றும் லேப்டாப்கள்
- எக்ஸ்டென்ஷன் கார்டுகள்
- சூரிய ஆற்றல் தொகுப்புகள்
- மின் மோட்டார்கள்
அழகு மற்றும் அழகுசாதனப் பொருட்கள்
இணக்கக் காரணங்கள் அல்லது அபாயகரமான பொருட்கள் காரணமாகச் சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுப் பொருட்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- பெர்ஃப்யூம்கள்
- கொலோன்
- ஓ டி டாய்லட்
- ஆல்கஹால் கலந்த நறுமண ஸ்ப்ரே
- நெயில் பாலிஷ்
- ப்ளீச் கலந்த கூந்தல் தயாரிப்புகள்
- ஏரோசோல்கள்
- கை கிருமிநாசினி
- கண் இமைப் பசை
- வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேற்பூச்சு உருப்படிகள்
- வைப்ஸ்
சில அழகு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கூந்தல் தயாரிப்புகளுக்குச் சில பிராந்தியங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. சில பிராந்தியங்களில் (மெக்சிகோ, ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் போன்றவை) கட்டுப்படுத்தப்படக்கூடிய உருப்படிகளில் பின்வருபவை சில எடுத்துக்காட்டுகளாகும், ஆனால் இவை மட்டுமின்றி வேறு சிலவும் இதில் அடங்கும்:
- சோப்புகள்
- ஷாம்பூக்கள்
- லோஷன்கள் மற்றும் க்ரீம்கள்
- மாய்ஸ்சரைசர்
வணிகம் மற்றும் தொழில்துறை
குறிப்பிட்ட வணிகம் மற்றும் தொழில்துறைத் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- வர்த்தகக் கண்காட்சி கவுன்ட்டர்கள்/காட்சிப்பொருட்கள்
- தானியக்கமாக்கல் கட்டுப்பாட்டுக் கூறுகள்
- போக்குவரத்துக் கோன்கள் மற்றும் பேரல்கள்
- பல் மருத்துவக் கருவிகள்
- உணவுச் சேவை உருப்படிகள்
- கனரக இயந்திரங்கள்
- விற்பனை இயந்திரங்கள்
- அறிவிப்புப் பலகைகள்
- ஆய்வக உபகரணங்கள்
- துளையிடுதல் மற்றும் பச்சை குத்துதல் உபகரணங்கள்
- பிளம்பிங் உபகரணங்கள்
CBD தயாரிப்புகள்
எந்த வடிவத்திலும் கன்னாபிடியோல் (CBD) அடங்கிய தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. கஞ்சாச் செடிகளில் காணப்படும் பலவகை கன்னாபினாய்டுகளில் CBD என்பதும் ஒன்றாகும்.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- உண்ணக்கூடியவை, மாத்திரைகள் அல்லது மிட்டாய்கள்
- இ-லிக்விட்கள்
- ஸ்ப்ரேக்கள்
- CBD, THC அல்லது பிற கன்னாபினாய்டுகளைக் கொண்ட எண்ணெய்கள்
தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள்
தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு
Managed Markets இல் கடுமையான ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்துப் பிராந்தியங்களிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- கார் இருக்கைகள்
- குழந்தைகளின் நாற்காலிகள்
- ஹெல்மெட்கள்
- ஸ்ட்ரோலர்கள்
- கட்டுமானப் பணிகளுக்கான கடினமான தொப்பிகள் மற்றும் ஹார்னஸ்கள்
டிஜிட்டல் தயாரிப்புகள் அல்லது பொருட்கள்
Managed Markets இல் டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும், ஆனால் பின்வரும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் பரிசீலனைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்:
- ஆர்டர் தேவைகள்: Managed Markets இல் ஒரு ஆர்டர் தகுதிபெற, அதில் டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் பிசிக்கல் தயாரிப்பு ஆகிய இரண்டும் இருக்க வேண்டும். உங்கள் ஆர்டரில் டிஜிட்டல் தயாரிப்புகள் மட்டுமே இருந்தால், அந்த ஆர்டருக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகராக நீங்கள் தானாகவே மாறிவிடுவீர்கள்.
- வரைவு ஆர்டர்கள்: வரைவு ஆர்டர்களில் டிஜிட்டல் தயாரிப்புகளைச் சேர்க்க முடியாது. டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் தயாரிப்புகள் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு ஆர்டரை உருவாக்க, செக்அவுட் செயல்முறையின் போது பேமெண்டை வசூலிக்க நீங்கள் ஒரு விலைப்பட்டியலை அனுப்ப வேண்டும்.
Managed Markets இல் விற்கக்கூடிய டிஜிட்டல் தயாரிப்புகளில் பின்வருபவை சில எடுத்துக்காட்டுகளாகும், ஆனால் இவை மட்டுமின்றி வேறு சிலவும் இதில் அடங்கும்:
- டிஜிட்டல் கிஃப்ட் கார்டுகள் (உங்கள் சொந்த ஸ்டோருக்கானவை)
- ஆன்லைன் படிப்புகள்
- பாட்காஸ்ட்கள்
- ஒலி விளைவுகள் மற்றும் இசை
போதைப்பொருட்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள்
Managed Markets இல் போதைப்பொருட்கள் மற்றும் அது தொடர்பான உருப்படிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- போதைப்பொருட்கள் தொடர்பான ஆடைகள்
- போதைப்பொருட்களை வளர்ப்பது அல்லது பயன்படுத்துவது குறித்த புத்தகங்கள்
- போதைப்பொருட்களை வளர்ப்பதற்கான அல்லது பயன்படுத்துவதற்கான உபகரணங்கள்
- ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய தயாரிப்புகள்
வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் அது தொடர்பான உருப்படிகள்
Managed Markets இல் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் அது தொடர்பான உருப்படிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் (ஏர்சாஃப்ட் துப்பாக்கிகள் உட்பட)
- கத்திகள் (கத்திகளுக்கான நாடுகள் அளவிலான கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும்)
- உத்திகள் (tactical) பகுப்பின் கீழ் வரும் உருப்படிகள்
- ஆயுதத் துணைக்கருவிகள் மற்றும் உபகரணங்கள் (தோட்டாக்கள், பெட்டிகள், உறைகள், சுத்தப்படுத்தும் தொகுப்புகள், பூட்டுகள், ஸ்கோப்கள், இணைப்புகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்டவை)
ஏற்றுமதிக்குக் கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகள்
ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு (Export Administration Regulations - EAR) உட்பட்ட மற்றும் இரட்டைப் பயன்பாடு (இராணுவ மற்றும் சிவில் நோக்கங்களைக் கொண்டவை) கொண்டதாகக் கருதப்படும் உருப்படிகள், EAR-இன் கீழ் அமெரிக்க வர்த்தகத் துறையால் (Department of Commerce - DOC) ஒழுங்குபடுத்தப்படலாம். அமெரிக்க DOC இலிருந்து ஏற்றுமதி உரிமம் அல்லது பிற ஒப்புதல் தேவைப்படும் உருப்படிகளை Managed Markets இல் விற்பனை செய்வதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
சில ஆயுதங்கள் பாதுகாப்புப் பொருட்களாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்க வெளியுறவுத் துறையால் International Traffic in Arms Regulations (ITAR) என்பதன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. EAR அல்லது ITAR-க்கு உட்பட்ட உருப்படிகளுக்கு Managed Markets இல் கட்டுப்பாடுகள் உள்ளன.
விவசாயம்
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உருப்படிகள் அல்லது இயந்திரங்களுக்கு அனைத்துப் பிராந்தியங்களிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- டிராக்டர் பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்
- டிராக்டர் டயர்கள்
- குதிரைத் தீவனம்
- குதிரைகளுக்கான குடற்புழு நீக்கி மருந்துகள்
- உயிருள்ள மீன் தூண்டில் இரை
- பல செயல்பாட்டுக் கருவிகள்
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய மற்றும் அழுத்தப்பட்ட பொருட்கள்
பசைகள் மற்றும் ஏரோசோல்கள் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய மற்றும் அழுத்தப்பட்ட உருப்படிகளுக்கு Managed Markets இல் கட்டுப்பாடுகள் உள்ளன.
உணவு மற்றும் பானங்கள்
உணவு மற்றும் பானங்கள் இறக்குமதி செய்யும் நாட்டின் சுகாதார அமைச்சகம் அல்லது அதற்கு இணையான துறையின் அனுமதிகள் மற்றும் சோதனைத் தேவைகளுக்கு உட்பட்டவை. ஈகாமர்ஸின் கால உணர்திறன் தன்மை காரணமாக, இந்தத் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
உட்கொள்ளக்கூடியவை, ஆரோக்கியம் மற்றும் மருத்துவச் சாதனங்கள்
உட்கொள்ளக்கூடிய உருப்படிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) மருத்துவச் சாதனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள உருப்படிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன (மேலும் தகவலுக்கு, FDA இணையதளத்தைப் பார்க்கவும்). FDA பதிவுசெய்த அல்லது லேசர்களைப் பயன்படுத்தும் அழகுச் சாதனங்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன, அவை FDA அல்லது சுகாதார அமைச்சகத்தின் இணையான அனுமதிகள்/உரிமங்களுக்கு உட்பட்டவை. சுகாதாரம், மருத்துவம் அல்லது ஆரோக்கியம் தொடர்பான பலன்களை வழங்குவதாகக் கூறும் அனைத்து உருப்படிகளுக்கும் சர்வதேச அளவிலும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள்
- மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கப்படும் (OTC) மருந்துகள்
- உரிமம் பெற்ற மருந்தாளரால் மட்டுமே விற்கப்பட வேண்டிய மருந்துகள்
- வைட்டமின்கள், சப்ளிமென்ட்கள் மற்றும் ஷேக்குகள் உட்பட உட்கொள்ளக்கூடியவை
- மூலிகை அல்லது ஹோமியோபதி தயாரிப்புகள்
- உரிமம் பெறாத மருந்துகள் மற்றும் மருத்துவம் அல்லது ஆரோக்கியப் பலன்களை வழங்குவதாகக் கூறும் தயாரிப்புகள்
- HIV, போதைப்பொருள் அல்லது கர்ப்பப் பரிசோதனைகள் போன்ற மருத்துவப் பரிசோதனைகள்
- செவித்திறன் கருவிகள்
- மருத்துவ அலாரங்கள்
- முதலுதவித் தொகுப்புகள்
- செயல்பாட்டு மானிட்டர்கள்
- கருத்தடைச் சாதனங்கள்
வீடு மற்றும் தோட்டத் தயாரிப்புகள்
சில வீடு மற்றும் தோட்டப் பொருட்கள் Managed Markets இல் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- மெழுகுவர்த்திகள்
- எசென்ஷியல் ஆயில்கள் மற்றும் ஆயில் வார்மர்கள்
- ஊதுபத்திகள்
- கத்திகள் (கத்திகளுக்கான நாடுகள் அளவிலான கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும்)
- மணல், மண், உரங்கள் மற்றும் தழைக்கூளம் உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்கள்
- உட்புற மற்றும் வெளிப்புறத் தாவரங்கள்
மனித முடி
உண்மையான மனித முடியால் செய்யப்பட்ட விக், எக்ஸ்டென்ஷன்கள் அல்லது அதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஸ்பெயின், இத்தாலி மற்றும் கோஸ்டாரிகா போன்ற குறிப்பிட்ட பிராந்தியங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.
செயலில் இல்லாத தயாரிப்புகள்
உங்கள் Shopify ஸ்டோர்ஃபிரண்டில் காப்பகப்படுத்தப்பட்ட, வரைவு அல்லது செயலில் இல்லாததால் விற்கக்கூடியதாக இல்லாத உருப்படிகள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தானாகவே தடைசெய்யப்படும். இந்தத் தயாரிப்புகளை நீங்கள் செயலில் உள்ளதாக மாற்றியதும், அவை மதிப்பாய்வு செய்யப்படும்.
தயாரிப்பு நிலை குறித்து மேலும் அறிக.
நகைகள் மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்கள்
Managed Markets இல் உதிரி கற்கள் (வெட்டப்பட்டவை அல்லது வெட்டப்படாதவை, பளபளப்பாக்கப்பட்டவை அல்லது பளபளப்பாக்கப்படாதவை) மற்றும் முத்துச்சிப்பி, பவளம், சிப்பிகள் கொண்ட துணைப்பொருள்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கேரியர் தேவைகள் காரணமாக, $10,000 USD-க்கும் அதிக மதிப்புள்ள நகைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பின்வரும் நாடுகள் உள்ளிட்ட பிராந்தியங்களின் துணைக்குழுவில் மற்ற அனைத்து நகைகளும் பகுதியளவில் தடைசெய்யப்பட்டுள்ளன:
- பிரேசில்
- பிரான்ஸ்
- இந்தியா
- இந்தோனேசியா
- குவைத்
- மலேசியா
- மெக்சிகோ
- போர்ச்சுகல்
- ரஷ்யா
- சுவிட்சர்லாந்து
இந்த வகையிலான உருப்படிகளில் பின்வரும் நகைகள் உள்ளடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல:
- பிரேஸ்லெட்கள்
- நெக்லஸ்கள்
- முலாம் பூசப்பட்ட நகைகள்
- லேபல் மற்றும் அலங்காரப் பின்கள்
கத்திகள்
பாதுகாப்பான போக்குவரத்து முயற்சிகளின் காரணமாக கேரியர் மற்றும் நாட்டின் இறக்குமதி வரம்புகளின் அடிப்படையில் எந்தவொரு கத்திகளுக்கும் (வேட்டையாடுவது, சமையல் செய்வது, கட்லரி மற்றும் உபயோகம்) வெவ்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பொம்மைக் கத்திகளுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கலாம். பின்வரும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கத்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
- ஆஸ்திரேலியா
- பெலாரஸ்
- சீனா
- டென்மார்க்
- எல் சால்வடார்
- ஃபரோ தீவுகள்
- பின்லாந்து
- ஹங்கேரி
- ஐஸ்லாந்து
- இஸ்ரேல்
- ஜப்பான்
- கஜகஸ்தான்
- கென்யா
- லிச்சென்ஸ்டீன்
- லிதுவேனியா
- மடகாஸ்கர்
- மலேசியா
- மொரிஷியஸ்
- மெக்சிகோ
- மொனாக்கோ
- நியூசிலாந்து
- சிங்கப்பூர்
- தென் கொரியா
- துருக்கி
- உக்ரைன்
- யுனைடெட் கிங்டம்
- வெனிசுலா
சட்டவிரோதச் செயல்களைச் சித்தரிக்கும் பொருட்கள்
நீங்கள் செயல்படும் நாடு அல்லது நீங்கள் விற்கும் நாடுகளில் சட்டவிரோதச் செயல்களைச் சித்தரிக்கும் அல்லது அங்கீகரிக்கும் தயாரிப்புகள் Managed Markets இல் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ சட்டவிரோதச் செயலைச் சித்தரிக்கும் அல்லது அங்கீகரிக்கும் பொருட்கள்
- நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ வன்முறை அல்லது துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் அல்லது அங்கீகரிக்கும் பொருட்கள்
பேமெண்ட்டாகப் பயன்படுத்தப்படும் பணம் அல்லது பண ரீதியான உருப்படிகள்
பணம் அல்லது பேமெண்ட்டாகப் பயன்படுத்தப்படும் மற்ற உருப்படிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- நாணயம்
- ரொக்கத்திற்கு இணையானவை
- கிஃப்ட் கார்டுகள் (மூன்றாம் தரப்பு ஸ்டோர்களுக்கானவை)
- உதிரியான விலையுயர்ந்த கற்கள்
- லாட்டரி டிக்கெட்டுகள்
மிஸ்டரி உருப்படிகள் அல்லது சரியாக விவரிக்கப்படாத தயாரிப்புகள்
வாடிக்கையாளர்கள் தாங்கள் எதை வாங்குகிறார்கள் என்பதைத் தெளிவாக்கும் தலைப்பு மற்றும் விளக்கத்தைத் தயாரிப்புகள் கொண்டிருக்க வேண்டும். தெளிவாக விவரிக்கப்படாத அல்லது அடையாளம் காணப்படாத தயாரிப்புகள் Managed Markets இல் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- மிஸ்டரி உருப்படிகள் (வாங்கி டெலிவரி செய்யப்படும் வரை அது என்னவென்று வாடிக்கையாளரால் அறிய முடியாத தயாரிப்புகள்)
- தீம் செய்யப்பட்ட 'சர்ப்ரைஸ்' பாக்ஸ்கள்
- தெளிவற்ற விளக்கங்களைக் கொண்ட தயாரிப்புகள்
அடகுக் கடைகள்
அடகுக் கடைகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
தாவரம், மரம் மற்றும் விதைத் தயாரிப்புகள்
முழுமையாகவோ பகுதியாகவோ இயற்கை/தாவர நார்களைக் (வைக்கோல், பிரம்பு, ராஃபியா மற்றும் சணல் உள்ளிட்டவை, ஆனால் இவை மட்டுமல்ல) கொண்டு செய்யப்பட்ட உருப்படிகளுக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற குறிப்பிட்ட பிராந்தியங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.
மரம், மூங்கில், கார்க் அல்லது அவற்றிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அல்லது அவற்றைக் கொண்டுள்ள உருப்படிகள் ஆஸ்திரேலியா, மெக்சிகோ மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. காகிதம், துணி, அட்டை, லேமினேட் செய்யப்பட்டவை, நடுத்தர அடர்த்தி ஃபைபர்போர்டு (MDF) அல்லது ப்ளைவுட் ஆகியவை இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
வாடகைத் தயாரிப்புகள்
வாடகை, கூலி அல்லது குத்தகைக்கு வழங்கப்படும் தயாரிப்புகள் Managed Markets இல் தடைசெய்யப்பட்டுள்ளன. Managed Markets தயாரிப்புகளின் விற்பனையை ஆதரிக்கிறது, எனவே வாடகைக்கு மட்டுமே கிடைக்கும் தயாரிப்புகள் தகுதியற்றவை மற்றும் உங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படாது.
பாலியல் மற்றும் சிற்றின்பத் தயாரிப்புகள்
பாலியல் ரீதியாகத் தூண்டும் அல்லது வெளிப்படையான உள்ளடக்கங்களைச் சித்தரிக்கும் அல்லது பாலியல் அல்லது சிற்றின்பச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய உருப்படிகள் Managed Markets இல் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ வெளிப்படையான சிற்றின்ப அல்லது பாலியல் இயல்புடைய புத்தகங்கள், வீடியோக்கள், வீடியோ கேம்கள் அல்லது பிற உள்ளடக்க ஊடகங்கள்
- ஆடைகள், போஸ்டர்கள், சிலைகள் அல்லது காம மற்றும் பாலியல் ரீதியான சித்தரிப்புகளைக் கொண்ட பிற பொருட்கள் (புகைப்படமாகவோ வரைபடமாகவோ இருக்கலாம்)
- அசைவைத் தடுக்கும் அல்லது வலியை ஏற்படுத்தும் தயாரிப்புகள்
சிறப்பு ஆடைகள்
Convention on International Trade of Endangered Species (CITES)-க்கு உட்பட்ட அழிந்துவரும் உயிரினங்களின் கூறுகளைக் கொண்ட உருப்படிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட உருப்படிகளை ஊக்குவிக்கும் அல்லது காண்பிக்கும் உருப்படிகளுக்கு Managed Markets இல் கட்டுப்பாடுகள் உள்ளன.
import and export controlled US species-இன் கூறுகளைக் கொண்ட உருப்படிகளும் கண்காணிக்கப்படுகின்றன, மேலும் அவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தடைசெய்யப்படலாம்.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- முத்துச் சிப்பி பொத்தான்கள்
- முதலை (கைப்பைகள் மற்றும் காலணிகள்)
- மலைப்பாம்பு (பெல்ட்டுகள்)
- இறகுகள் (போவா ஆடைகள் மற்றும் ட்ரிம்)
- அலிகேட்டர் (காலணிகள் மற்றும் கைப்பைகள்)
- நெருப்புக்கோழி (தோல் தயாரிப்புகள்)
- போதைப்பொருள் போன்ற பிற தடைசெய்யப்பட்ட உருப்படிகளை ஊக்குவிக்கும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய ஆடைகள்
- ராணுவ மற்றும் பாதுகாப்புப் படைச் சீருடைகள்
- பெயிண்ட்பால் ஆடைகள்
சந்தாத் தயாரிப்புகள்
சந்தா விற்பனைத் திட்டத்துடன் விற்கப்படும் தயாரிப்புகளை Managed Markets ஆதரிக்காது.
உங்கள் ஸ்டோரில் சந்தாக்களுக்காக அமைக்கப்பட்ட தயாரிப்புகள் உங்களிடம் இருந்தால், Managed Markets ஆல் நிர்வகிக்கப்படும் அனைத்து சர்வதேசச் சந்தைகளுக்கும் சந்தா விற்பனைத் திட்டம் அகற்றப்படும். உங்கள் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை இன்னும் ஒரு முறை வாங்குதலாக வாங்க முடியும்.
சந்தா மூலம் மட்டுமே கிடைக்கக்கூடிய தயாரிப்புகளை நீங்கள் விற்றால், அவை தானாகவே கட்டுப்படுத்தப்படும் மற்றும் உங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படாது.
புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான தயாரிப்புகள்
புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான தயாரிப்புகளுக்கு Managed Markets இல் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த வகையினத்தில் உள்ள உருப்படிகள் பின்வருபவை மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியவை:
- சிகரெட்டுகள்
- சுருட்டுகள்
- இ-சிகரெட்டுகள்
- நிக்கோடின் கலந்த தயாரிப்புகள்
- பிற புகையிலை சார்ந்த தயாரிப்புகள்
வாரண்டிகள், சேவைத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உத்திரவாதங்கள்
வாரண்டிகள், சேவைத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உத்திரவாதங்கள் போன்ற தொட்டு உணர முடியாத பொருட்களுக்கு Managed Markets இல் கட்டுப்பாடுகள் உள்ளன.
கைக்கடிகாரங்கள்
கேரியர் தேவைகள் காரணமாக, $10,000 USD-க்கும் அதிக மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரம்பிற்குக் குறைவான மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், பின்வரும் நாடுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன:
- குவைத் - அனைத்துக் கைக்கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரப் பட்டைகள்
- சுவிட்சர்லாந்து - விலைமதிப்பற்ற அல்லது ஓரளவு விலைமதிப்பற்ற கற்கள் அல்லது உலோகங்கள் கொண்ட கைக்கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரப் பட்டைகள்
தடைசெய்யப்பட்ட Managed Markets தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்தல்
நீங்கள் Managed Markets ஐச் செயல்படுத்துவதற்கு முன், தடைசெய்யப்பட்ட உருப்படிகளுக்காக உங்கள் தயாரிப்புப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும். நீங்கள் Managed Markets ஐ அமைக்கும் போது முடிவுகள் காண்பிக்கப்படும். பெரும்பாலான தயாரிப்புகள் வினாடிகளில் முடிவைப் பெறும், ஆனால் ஒரு பெரிய தயாரிப்புப் பட்டியலை மதிப்பாய்வு செய்ய சில மணிநேரம் ஆகலாம். தயாரிப்பு மதிப்பாய்வு என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயலாகும். நீங்கள் உங்கள் ஸ்டோரில் சேர்க்கும் புதிய தயாரிப்புகள், நீங்கள் புதுப்பிக்கும் அல்லது திருத்தும் தயாரிப்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட நிலையில் மாற்றத்தைக் கண்ட தயாரிப்புகளுக்கு மதிப்பாய்வு செயல்முறை பொருந்தும்.
ஒரு தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய, உங்கள் தயாரிப்பிற்கு ஒரு தலைப்பு, விளக்கம், 0-ஐ விட அதிகமான விலை, தயாரிப்பு வகை ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்பில் பல மாறுபாடுகள் இருந்தால், ஆரம்ப மதிப்பாய்வானது அதிகபட்ச மாறுபாட்டு விலையைப் பயன்படுத்துகிறது, எனவே உங்களின் மிகவும் விலையுயர்ந்த மாறுபாட்டால் தூண்டப்படும் மதிப்புக் கட்டுப்பாடு முழுத் தயாரிப்பிற்கும் பொருந்தும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் தயாரிப்பின் மதிப்பாய்வு சில வினாடிகளில் செய்யப்படும். சில தயாரிப்புகளுக்கு விரிவான மதிப்பாய்வு தேவைப்படும், இதை முடிக்க அதிக நேரம் ஆகலாம்.
உங்கள் தயாரிப்பின் நிலை, உங்கள் தயாரிப்புப் பக்கத்தின் Managed Markets பிரிவில் காட்டப்படும். உங்கள் தயாரிப்பின் மதிப்பாய்வு நிலை குறித்த கூடுதல் தகவலுக்குப் பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| மதிப்பாய்வு நிலை | விளக்கம் |
|---|---|
| (X) பிராந்தியங்களில் மதிப்பாய்வில் உள்ளது |
உங்கள் தயாரிப்பு மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பொதுவாக, மதிப்பாய்வு சில வினாடிகளுக்குள் நிறைவடையும். சில தயாரிப்புகளுக்கு விரிவான மதிப்பாய்வு தேவைப்படலாம், இதற்கு 24 மணிநேரம் வரை ஆகலாம்.
மதிப்பாய்வு நிலையில் உள்ள தயாரிப்புகளை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வெளியிட முடியாது. |
| தயாரிப்பு ஆதரிக்கப்படவில்லை |
உங்கள் தயாரிப்பை Managed Markets இல் விற்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இடத்திலிருந்து நிறைவேற்றம் செய்யப்பட வேண்டும் போன்ற, உங்கள் தயாரிப்பு ஆதரிக்கப்படாததற்கான காரணத்தைக் காட்ட தயாரிப்பு ஆதரிக்கப்படவில்லை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதரிக்கப்படாத நிலையில் உள்ள தயாரிப்புகளை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வெளியிட முடியாது. |
| (X) பிராந்தியங்களில் ஆதரிக்கப்படவில்லை |
குறிப்பிட்ட பிராந்தியங்களில் உங்கள் தயாரிப்பு ஆதரிக்கப்படவில்லை. சில விலங்கு அல்லது தாவரப் பொருட்களைக் கொண்ட தயாரிப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது போன்ற, உங்கள் தயாரிப்பு ஆதரிக்கப்படாததற்கான காரணத்தைக் காட்ட (X) பிராந்தியங்களில் ஆதரிக்கப்படவில்லை என்பதைக் கிளிக் செய்யவும். தயாரிப்பு தடைசெய்யப்பட்டுள்ள பிராந்தியங்களின் பட்டியலும் காட்டப்படும்.
ஒரு குறிப்பிட்ட சந்தைக்கு ஆதரிக்கப்படாத நிலையில் உள்ள தயாரிப்புகளை அந்தச் சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் காட்ட முடியாது. |
| (X) பிராந்தியங்களில் ஆதரிக்கப்படுகிறது | உங்கள் தயாரிப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு, உங்கள் தற்போதைய சந்தைகள் அனைத்திலும் விற்கப்படலாம். |
தடைசெய்யப்பட்ட உருப்படிகளை வடிகட்டு
ஒரு குறிப்பிட்ட சந்தை அல்லது அனைத்துச் சந்தைகளிலும் தடைசெய்யப்பட்ட உருப்படிகளைக் காட்ட உங்கள் தயாரிப்புகள் பட்டியலை வடிகட்டலாம். வடிகட்டி முடிவுகளில் உங்கள் முதன்மைச் சந்தை சேர்க்கப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
வடிகட்டியைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வெளியீட்டுப் பிழை என்பதைக் கிளிக் செய்யவும்.
எந்தச் சந்தைகளில் தடைசெய்யப்பட்ட உருப்படிகளை வடிகட்ட விரும்புகிறீர்களோ அவற்றை தேர்ந்தெடுக்கவும். தடைசெய்யப்பட்ட அனைத்து உருப்படிகளையும் வடிகட்ட, அனைத்தையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
தடைசெய்யப்பட்ட உருப்படிகளை வரிசைப்படுத்து
உங்கள் தயாரிப்புப் பட்டியலில் தடைசெய்யப்பட்ட உருப்படிகளையும் வரிசைப்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வரிசைப்படுத்து ஐகானைக் கிளிக் செய்யவும்.
வெளியீட்டுப் பிழை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: தடைசெய்யப்பட்ட உருப்படிகளின் வரிசை, பழையதில் இருந்து புதியதாகக் காட்டப்பட வேண்டுமா அல்லது புதியதில் இருந்து பழையதாகக் காட்டப்பட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவிப்புகள்
ஒரு புதிய தயாரிப்பு அல்லது அந்தத் தயாரிப்பைப் பாதிக்கும் விதிமுறைகள் மாறியிருப்பதால், தடைசெய்யப்பட்ட புதிய உருப்படி கண்டறியப்பட்டால், உங்கள் Shopify நிர்வாகியில் அறிவிப்பைப் பெறுவீர்கள். இந்த அறிவிப்பிலிருந்து, அனைத்துச் சந்தைகளுக்கும் தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளின் வடிகட்டப்பட்ட பட்டியலை நீங்கள் அணுகலாம். உங்கள் Shopify நிர்வாகியில் விழிப்பூட்டல்களை அணுகுவது குறித்து மேலும் அறிக.
நீங்கள் Managed Markets-ஐச் செயல்படுத்துவதற்கு முன்பு, முதலில் உங்கள் தயாரிப்புப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும், அதோடு நீங்கள் Managed Markets-ஐப் பயன்படுத்தும் வரை தயாரிப்பை மதிப்பாய்வு செய்யும் பணியும் தொடரும். மேலும் அறிந்துகொள்ள, தடைசெய்யப்பட்ட Managed Markets தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்தல் என்பதைப் பார்க்கவும்.
தடைசெய்யப்பட்ட Managed Markets தயாரிப்புகளை மெட்டாஃபீல்டுகளுடன் புதுப்பிக்கவும்
உங்கள் தயாரிப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு, உங்கள் சந்தைகளுக்கு ஆதரிக்கப்படவில்லை (Unsupported) என்ற நிலைக்கு அமைக்கப்பட்டால், உங்கள் தயாரிப்பை இன்னும் துல்லியமாக விவரிக்க, அந்தத் தயாரிப்பில் பகுப்பு மெட்டாஃபீல்டுகளைப் புதுப்பிக்கலாம். உங்கள் மெட்டாஃபீல்டுகள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, உங்கள் தயாரிப்பு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
புதுப்பிக்க வேண்டிய தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
பகுப்பு மெட்டாஃபீல்டுகள் (Category metafields) பிரிவில், ஒவ்வொரு மெட்டாஃபீல்டுக்கும் பொருத்தமான மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தயாரிப்பு புதுப்பிக்கப்பட்ட பிறகு, அது மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும். பெரும்பாலான நேரங்களில் மதிப்பாய்வுகள் சில வினாடிகளுக்குள் நடக்கும், ஆனால் சில நேரங்களில் மதிப்பாய்வுகளுக்கு 24 மணிநேரம் வரை ஆகலாம்.