Managed Markets-இல் DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்தல்
Managed Markets-உடன் ஷிப்பிங் சேவைகளாக நீங்கள் DHL eCommerce Parcel International Direct மற்றும் DHL eCommerce Parcel International Standard ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
- Managed Markets உடன் DHL eCommerce-ஐப் பயன்படுத்துவதில் கவனிக்க வேண்டியவை
- Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான ஷிப்பிங் சேவைகள்
- Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான பேக்கேஜ் தேவைகள்
- Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான மதிப்பு கட்டுப்பாடுகள்
- உங்களின் தயாரிப்புகளை DHL eCommerce-க்கு அனுப்புதல்
- Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான ஷிப்பிங் காப்பீடு
Managed Markets மூலம் DHL eCommerce-ஐப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
DHL eCommerce-ஐப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்வதற்கு முன், பின்வரும் அம்சத்தைக் கவனத்தில் கொள்ளவும்:
- DHL eCommerce ஷிப்பிங் லேபிள்களை நீங்கள் அச்சிடும்போது, அவை United States Postal Service (USPS) லேபிள்களாக அச்சிடப்படும். ஏனெனில், நீங்கள் ஒரு USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் உங்கள் ஷிப்மென்ட்டைக் கொடுக்க வேண்டும். USPS உங்கள் ஷிப்மென்ட்டை DHL-க்கு இடமாற்றும். ஒருவேளை உங்கள் ஷிப்பிங் இடத்திலிருந்து USPS ஏற்கெனவே ஷிப்மென்ட்களைப் பெற்றுக்கொண்டால், உங்களின் மற்ற டெலிவரிகளுடன் சேர்த்து இந்தப் பேக்கேஜ்களையும் USPS பெற்றுக்கொள்ளும்.
- USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் கொடுப்பதை ஆதரிக்கும் ஒரே சேவை DHL eCommerce ஆகும். உங்கள் பேக்கேஜ்களை USPS இருப்பிடத்திற்குக் கொடுக்கிறீர்கள் எனில், உங்கள் DHL eCommerce பேக்கேஜ்களுடன் பிற கேரியர்கள் அல்லது சேவைகளின் பேக்கேஜ்களைச் சேர்க்காமல் இருப்பதை உறுதிசெய்யவும்.
- கடைசி கண்காணிப்பு நிகழ்வுக்குப் பிறகு 21 நாட்கள் வரை, DHL eCommerce ஷிப்மென்ட்களுக்கான கண்காணிப்புத் தகவல் கிடைக்கும். எவ்விதச் செயல்பாடும் இல்லாமல் இந்தக் காலஅவகாசம் முடிவடைந்த பிறகு, ஷிப்மென்ட்களுக்கான கண்காணிப்புத் தகவல் அழிக்கப்படும்.
Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான ஷிப்பிங் சேவைகள்
DHL eCommerce ஆனது Direct மற்றும் Standard என்ற இரண்டு சேவைகளை வழங்குகிறது. வெவ்வேறான பேக்கேஜ் தேவைகள் மற்றும் மதிப்பு கட்டுப்பாடுகள் தவிர்த்து, எந்தெந்த நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பேக்கேஜ்களை அனுப்பலாம் என்பதிலும், சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP) ஷிப்மென்ட்களை அந்தச் சேவை ஆதரிக்கிறதா என்பதிலும் இந்தச் சேவைகள் வேறுபடுகின்றன. இந்த இரண்டு சேவைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| ஷிப்பிங் சேவை | DDP ஆதரவு | ஷிப் செய்யப்படும் இடம் |
|---|---|---|
| DHL eCommerce Parcel International Direct |
DDP-ஐ ஆதரிக்கும். DDP ஷிப்பிங் லேபிள் என்பது சுங்க வரிகள், இறக்குமதி வரி மற்றும் தரகு கட்டணங்களுக்கான பேமெண்ட்டை விற்பனையாளர் சேர்த்துள்ளார் என்பதைக் குறிக்கிறது. DDP குறித்து மேலும் அறிக. ஒரு DDP ஷிப்மென்ட்டை அனுப்ப, செக்அவுட்டில் நீங்கள் இறக்குமதி வரியையும் சுங்க வரிகளையும் வசூலிக்க வேண்டும். அத்துடன் DDP ஷிப்பிங் லேபிள்களை வாங்க வேண்டும். | ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஹாங்காங், இஸ்ரேல், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட 37 பெரிய ஈகாமர்ஸ் சந்தைகளுக்கு ஷிப் செய்யப்படும். |
| DHL eCommerce Parcel International Standard | DDP-ஐ ஆதரிக்காது. DHL eCommerce Parcel International Standard கொண்ட ஷிப்மென்ட்களை DAP (Delivered At Place) ஆக அனுப்ப வேண்டும். இது சுங்க வரிகள், இறக்குமதி வரி மற்றும் தரகுக் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்பதையும், டெலிவரியின்போது வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என்பதையும் குறிக்கிறது. DAP குறித்து மேலும் அறிக. | உலகெங்கிலும் உள்ள 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் ஷிப் செய்யப்படும். |
Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான பேக்கேஜ் தேவைகள்
ஷிப்மென்ட்களின் அதிகபட்ச அளவீடுகள் மற்றும் எடையில் கட்டுப்பாடுகளை DHL eCommerce விதிக்கிறது. உங்கள் ஆர்டர்கள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.
| அளவீடு | DHL eCommerce Parcel International Direct | DHL eCommerce Parcel International Standard |
|---|---|---|
| நீளம் | 42 இன்ச்சுகள் (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 79 இன்ச்சுகள்) | 47 இன்ச்சுகள் |
| அகலம் | DHL eCommerce Parcel International Direct-க்கான அளவு, (நீளம் + சுற்றளவு) அடிப்படையில் கணக்கிடப்படும். மொத்த அளவு வரம்பு 79 இன்ச்சுகள் (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 118 இன்ச்சுகள்) | 24 இன்ச்சுகள் |
| உயரம் | 24 இன்ச்சுகள் | |
| எடை | 44 lbs (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 66 lbs) | 44 lbs (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 66 lbs) |
இலவச DHL ஷிப்பிங் சப்ளைகள்
ShopifyMPSupplies@dhl.com என்ற முகவரிக்கு DHL-க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் இலவச ஷிப்பிங் சப்ளைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம். இந்த இணைப்பு, நீங்கள் விரும்பும் மின்னஞ்சல் கிளையண்டில் மின்னஞ்சல் வார்ப்புரு ஒன்றைத் திறக்கும்:
Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான மதிப்பு கட்டுப்பாடுகள்
DHL eCommerce Parcel International Direct மற்றும் DHL eCommerce Parcel International Standard ஷிப்மென்ட்டிற்கான அதிகபட்ச ஆர்டர் மதிப்பு $1,000 USD ஆகும். சில நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இந்த வரம்பிலிருந்து விலக்கு உண்டு.
| இலக்கு | DHL eCommerce Parcel International Direct | DHL eCommerce Parcel International Standard |
|---|---|---|
| ஆஸ்திரேலியா | 1,000 AUD | 2,000 AUD |
| கனடா | $3,300 CAD | $2,500 CAD |
| சீனா | பொருந்தாது | 1,000 CNY |
| ஜெர்மனி | €1,000 EUR | €1,000 EUR |
| நியூசிலாந்து | 1,000 NZD | 1,000 NZD |
| யுனைடெட் கிங்டம் | £2,500 GBP | £900 GBP |
நகைகள் அல்லது கைக்கடிகாரங்கள் போன்ற சில தயாரிப்பு வகைகளில், ஒவ்வொரு தனிப்பட்ட உருப்படியின் மதிப்பும் $10,000 USD-ஐத் தாண்டக்கூடாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் நகைகளை விற்கிறீர்கள் என்றால், அதிகபட்ச ஆர்டர் மதிப்பு வரையிலான ஷிப்பிங் லேபிளை உங்களால் இன்னும் வாங்க முடியும். இருப்பினும், தனிப்பட்ட நகை உருப்படிகளின் மதிப்பு $10,000 USD-ஐத் தாண்டாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
உங்களின் தயாரிப்புகளை DHL eCommerce-க்கு அனுப்புதல்
Managed Markets மூலம் DHL eCommerce-ஐப் பயன்படுத்தினால், USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் ஷிப்மென்ட்டைக் கொடுக்க வேண்டும் அல்லது USPS மூலம் ஷிப்மென்ட்டைப் பெற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். தொடர் நேரில் பெறுதல் உட்பட USPS நேரில் பெறுதல் சேவைகள் குறித்து மேலும் அறிக. USPS உங்கள் ஷிப்மென்ட்டை DHL-க்கு இடமாற்றும்.
Managed Markets கொண்ட DHL eCommerce-க்கான ஷிப்பிங் காப்பீடு
ஷிப்மென்ட் தொலைந்துவிட்டாலோ சேதமடைந்துவிட்டாலோ, Shopify நிர்வாகியில் ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
DHL eCommerce பேக்கேஜைத் தங்களின் விநியோக மையங்களில் ஒன்றில் முதல் முறை ஸ்கேன் செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் DHL eCommerce கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். பேக்கேஜ் சேதமடைந்து இருந்தால், எந்தவொரு ஷிப்பிங் சேவையாக இருந்தாலும் நீங்கள் உடனடியாகக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். கேரியர் ஏற்றுக்கொண்ட 45 நாட்களுக்குப் பின்னரே DHL eCommerce பேக்கேஜ்கள் தொலைந்ததற்கான கோரிக்கைக்குத் தகுதிபெறும். பேக்கேஜ் இத்தாலிக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதற்கான காலஅவகாசம் 60 நாட்களாகும். DHL eCommerce தொலைந்ததற்கான கோரிக்கை வழிமுறைகள் குறித்து மேலும் அறிக.
DHL eCommerce மூலம் ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது காப்பீடும் சேர்ந்தே வழங்கப்படும். காப்பீட்டை உள்ளடக்கிய ஷிப்பிங் சேவைகள், ஒருங்கிணைந்த தயாரிப்பு மதிப்பு மற்றும் ஷிப்பிங் லேபிள் செலவில் அதிகபட்சமாக $100 USD வரைக் காப்பீடு வழங்கும்.
உங்கள் கோரிக்கையில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
- பெறுநரின் தொலைபேசி எண்
- பேக்கேஜ் தொலைந்தது அல்லது சேதமடைந்ததை உறுதிப்படுத்தும் வாடிக்கையாளரின் செய்திகளைக் காட்டும் திரைப்பிடிப்பு
சேதமடைந்த பேக்கேஜ்களுக்கு, பின்வரும் தகவல்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்:
- சேதம் குறித்த விளக்கம்
- சேதமடைந்த பேக்கேஜ் மற்றும் தயாரிப்புகளின் படங்கள்