Managed Markets-இல் FedEx மூலம் ஷிப்பிங் செய்தல்
Managed Markets உடன் FedEx International Connect Plus®-ஐ நீங்கள் ஒரு ஷிப்பிங் சேவையாகப் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
Managed Markets உடன் FedEx-ஐப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
FedEx ஐப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்வதற்கு முன் பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- FedEx International Connect Plus® ஆனது Delivery Duty Paid (DDP) ஷிப்பிங்கை ஆதரிக்கிறது. DDP மூலம், அனைத்து சுங்க வரிகள், வரிகள் மற்றும் சுங்கக் கட்டணங்களும் முன்பணமாகச் செலுத்தப்பட்டு, உங்கள் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி செயல்முறை மிகவும் சீராக நடைபெறுகிறது.
- FedEx பேக்கேஜ்களை USPS இடங்களில் கொண்டுபோய் விட முடியாது. USPS டிராப்-ஆஃப் இருப்பிடங்களுக்கு டெலிவரி செய்யக்கூடிய ஷிப்மென்ட்கள் DHL eCommerce பேக்கேஜ்கள் மட்டுமே ஆகும்.
- FedEx International Connect Plus® ஆனது Managed Markets ஐக் கொண்ட மூல இட அல்லது சேருமிட முகவரிகளுக்கு அஞ்சல் அலுவலக (PO) பெட்டிகளை ஆதரிப்பதில்லை. நீங்கள் PO பெட்டிக்கு ஷிப்பிங் செய்ய விரும்பினால், DHL eCommerce ஷிப்பிங் சேவைகளை பயன்படுத்தவும்.
- FedEx International Connect Plus® மூலம் ஷிப்பிங் செய்யப்படும் பேக்கேஜின் அதிகபட்ச மதிப்பு $2,500 USD ஆகும்.
- சேருமிடத்தைப் பொறுத்து, உங்கள் ஷிப்மென்ட்டுக்குத் தொலைதூரப் பகுதிக்கான கூடுதல் கட்டணமாக $7 USD வசூலிக்கப்படலாம். நாட்டைப் பொறுத்து, சேருமிட நகரம் அல்லது அஞ்சல் குறியீட்டின் அடிப்படையில் இது FedEx ஆல் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு ஷிப்மென்ட்டுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படுமா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
- ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடு 64 (காலணிகள்) கொண்ட உருப்படிகள் உள்ள, மெக்சிகோவைச் சேருமிடமாகக் கொண்ட ஆர்டர்களுக்கு FedEx ஷிப்பிங் லேபிள்களை வாங்க முடியாது. இந்த ஆர்டர்களுக்கு UPS லேபிள்களும் இல்லை. மெக்சிகோவைச் சேருமிடமாகக் கொண்டு, FedEx லேபிள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களால் இன்னமும் செக்அவுட் செய்ய முடியும், ஆனால் ஆர்டரை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஒரு DHL Express Worldwide லேபிளை வாங்க வேண்டும். உங்கள் வணிகம் அமெரிக்காவில் அமைந்திருந்தால், நீங்கள் அதற்குப் பதிலாக DHL eCommerce லேபிளைப் பயன்படுத்தலாம்.
Managed Markets ஐக் கொண்ட FedEx-க்கான பேக்கேஜ் தேவைகள்
ஷிப்மென்ட்களின் அதிகபட்ச அளவீடுகள் மற்றும் எடையில் FedEx கட்டுப்பாடுகளை விதிக்கிறது. உங்கள் ஆர்டர்கள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறவில்லை என்பதை உறுதிசெய்ய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.
அதிக அளவுள்ள பேக்கேஜ்களுக்குக் கூடுதல் கட்டணமாக $30 USD விதிக்கப்படும். அதிக எடையுள்ள பேக்கேஜ்களுக்குக் கூடுதல் கட்டணமாக $38 USD விதிக்கப்படும்.
| அளவீடு | FedEx International Connect Plus® |
|---|---|
| நீளம் | 48 அங்குலங்கள் |
| அகலம் | 30 அங்குலங்கள் |
| நீளம் மற்றும் சுற்றளவு | 105 அங்குலங்கள் |
| எடை | 55 lbs |
ஒரு ஷிப்மென்ட்டின் நீளம் மற்றும் சுற்றளவைத் தீர்மானிக்க, பேக்கேஜின் நீளம், உயரத்தின் இரண்டு மடங்கு மற்றும் அகலத்தின் இரண்டு மடங்கு ஆகியவற்றைச் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக, 10 அங்குல நீளம், 20 அங்குல உயரம் மற்றும் 15 அங்குல அகலம் கொண்ட ஒரு பேக்கேஜின் நீளம் மற்றும் சுற்றளவு 80 அங்குலங்களாக இருக்கும்: (10 + (20 X 2) + (15 X 2) = 80).
உங்கள் தயாரிப்புகளை FedEx-க்கு அனுப்புதல்
நீங்கள் Managed Markets உடன் FedEx ஐப் பயன்படுத்தினால், உங்கள் ஷிப்மென்ட்டை ஒரு FedEx டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் கொடுக்க வேண்டும் அல்லது பிக்அப் ஒன்றுக்குத் திட்டமிட வேண்டும். நீங்கள் தொலைபேசி வாயிலாக அல்லது FedEx மெய்நிகர் உதவியாளரைப் பயன்படுத்தி, FedEx உடன் ஒரு பிக்அப்பைத் திட்டமிடலாம்.
பிக்அப்பைத் திட்டமிட்ட பிறகு அதுதொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் உதவிக்கு FedEx ஐத் தொடர்புகொண்டு, உங்கள் பிக்அப் எண்ணை வழங்கலாம்.
FedEx பிக்அப் தொடர்பான விஷயங்கள்
FedEx மூலம் உங்கள் ஷிப்மென்ட்டை பிக்அப் செய்யத் திட்டமிட்டால், பிக்அப்பைத் திட்டமிடுவதற்கு முன் பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- 150 lbs-க்கும் குறைவான எடையுள்ள ஷிப்மென்ட்களுக்கு மட்டுமே எக்ஸ்பிரஸ் பிக்அப்கள் உள்ளன. 150 lbs-க்கும் அதிகமான எடையுள்ள ஷிப்மென்ட்கள் சரக்கு பிக்அப்கள் என வகைப்படுத்தப்படுகின்றன, இதற்குத் தாமதங்கள் ஆகலாம் மற்றும் கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படலாம்.
- FedEx International Connect Plus® ஷிப்மென்ட்களை ஒரு எக்ஸ்பிரஸ் டிரைவர்தான் பிக்அப் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு பிக்அப்பைத் திட்டமிட்டு, எக்ஸ்பிரஸ் பிக்அப் தேவை எனக் குறிப்பிடவில்லை எனில், உங்கள் ஷிப்மென்ட் நிராகரிக்கப்படலாம் அல்லது தாமதமாகலாம்.
- பிக்அப்புக்கு, செல்லுபடியாகக்கூடிய Managed Markets தடமறிவதற்கான எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். நீங்கள் வழங்காவிட்டால் அல்லது தடமறிவதற்கான எண் தவறாக இருந்தால், FedEx பிக்அப்புக்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்.
- FedEx டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் கொடுக்கப்படுவதற்குப் பதிலாக பிக்அப் செய்யப்படும் ஷிப்மென்ட்களுக்கு $4.00 USD ஆன்-கால் பிக்அப் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் ஒவ்வொரு பிக்அப்புக்கும் விதிக்கப்படுமே தவிர, ஒவ்வொரு பேக்கேஜுக்கும் அல்ல. வழக்கமான பிக்அப்களை ஏற்கெனவே திட்டமிட்டிருக்கும் ஷிப்பர்களுக்கு, ஆன்-கால் பிக்அப் கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
FedEx மூலம் பிக்அப்பைத் திட்டமிடுங்கள்
- 1-800-463-3339 என்ற எண்ணுக்கு அழைத்து அல்லது fedex.com இல் Ask FedEx என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் FedEx ஐத் தொடர்புகொள்ளவும்.
- உங்களுக்கு எக்ஸ்பிரஸ் பிக்அப்பைத் திட்டமிட வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதை உறுதிசெய்யவும். FedEx International Connect Plus® ஷிப்மென்ட்களை ஒரு எக்ஸ்பிரஸ் டிரைவர்தான் பிக்அப் செய்ய வேண்டும்.
- உங்கள் ஷிப்மென்ட் தொடர்பான ஏதேனும் கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளித்து, தடமறிவதற்கான எண்ணை வழங்கவும்.
- குறிப்புக்காக உங்கள் பிக்அப் எண்ணைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளவும்.
Managed Markets ஐக் கொண்ட FedEx-க்கான ஷிப்பிங் கவரேஜ்
ஒரு ஷிப்மென்ட் தொலைந்துவிட்டாலோ சேதமடைந்துவிட்டாலோ, Shopify நிர்வாகியில் ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
ஒரு பேக்கேஜ் தொலைந்துவிட்டது அல்லது சேதமடைந்துவிட்டது என்பதை நீங்கள் கண்டறிந்தவுடன், உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷிப்மென்ட் தேதியிலிருந்து 9 மாதங்களுக்குள், சேதக் கோரிக்கை குறித்த அறிவிப்பை FedEx பெற்றிருக்க வேண்டும். சேதமடையாத பாக்ஸைத் திறந்த பிறகு மட்டுமே கண்டறியப்படும், மறைக்கப்பட்ட சேதத்திற்கான கோரிக்கையாக இருந்தால், ஷிப்பிங் தேதியிலிருந்து 21 நாட்களுக்குள் அதைப் புகாரளிக்க வேண்டும்.
FedEx மூலம் நீங்கள் ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது, காப்பீடும் அதில் சேர்க்கப்படும். காப்பீட்டுத் தொகையை உள்ளடக்கிய ஷிப்பிங் சேவைகள், அதிகபட்சமாகத் தயாரிப்பின் மதிப்பும் ஷிப்பிங் லேபிள் விலையும் இணைந்த $100 USD மதிப்பைக் கவர் செய்யும்.
உங்கள் கோரிக்கையில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
- பெறுநரின் தொலைபேசி எண்
- பேக்கேஜ் சேதமடைந்ததை அல்லது தொலைந்ததை உறுதிப்படுத்தும், உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்ட செய்திகளைக் காட்டும் திரைப்பிடிப்பு
சேதமடைந்த பேக்கேஜ்களுக்கு, பின்வரும் தகவல்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்:
- சேதம் குறித்த விளக்கம்
- சேதமடைந்த பேக்கேஜ் மற்றும் தயாரிப்புகளின் புகைப்படங்கள்