Managed Markets மூலம் ஷிப்பிங் செய்வதற்கான தேவைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Managed Markets மூலம் ஷிப்பிங் செய்யும்போது, உங்கள் ஷிப்மென்ட்கள் பேக்கேஜ் மற்றும் மதிப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இலக்கு நாட்டைப் பொறுத்து சில தேவைகள் மாறுபடலாம். நீங்கள் ஷிப் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இந்தப் பக்கம் விளக்குகிறது.

Managed Markets மூலம் கிடைக்கும் ஷிப்பிங் சேவைகள்

  • Managed Markets மூலம் உங்களால் வாங்கக் கூடிய ஷிப்பிங் லேபிள்கள் உங்கள் வணிகம் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தது:
    • உங்கள் வணிகம் யுனைடெட் ஸ்டேட்ஸில் அமைந்திருந்தால், உங்களால் DHL eCommerce, DHL Express, FedEx அல்லது UPS ஷிப்பிங் லேபிள்களை மட்டுமே வாங்க முடியும்.
    • உங்கள் வணிகம் கனடா அல்லது யுனைடெட் கிங்டமில் அமைந்திருந்தால், நீங்கள் DHL Express அல்லது FedEx ஷிப்பிங் லேபிள்களை மட்டுமே வாங்க முடியும். Managed Markets for Canada அல்லது Managed Markets for the United Kingdom என்பதைப் பார்க்கவும்.
  • Managed Markets ஆர்டரை ஷிப் செய்வதற்கு Canada Post போன்ற வேறு எந்த ஷிப்பிங் கேரியரையும் நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் உள்நாட்டு ஆர்டர்களுக்கும், நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகராக இருக்கும் சர்வதேச ஆர்டர்களுக்கும் அந்த கேரியர்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
  • Managed Markets-இன் நிறைவேற்ற விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் சர்வதேச ஆர்டர்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மூன்றாம் தரப்பு ஷிப்பிங் சேவையில் பேசி முடிவுசெய்த உங்கள் சொந்தக் கட்டணங்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் பதிவுசெய்யப்பட்ட வணிகராகச் செயல்படும் Global-e வழங்கும் பலன்களைப் பெறமாட்டீர்கள். வெளிப்புற நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்தி ஆர்டர்களை நிறைவேறுதல் குறித்து மேலும் அறிக.
  • உங்கள் Shopify நிர்வாகியுடன் இணைக்கப்பட்டுள்ள UPS கணக்குகளுடன் Managed Markets இணங்காது.
  • நீங்கள் DHL eCommerce-ஐக் கேரியர் சேவையாகப் பயன்படுத்தினால், அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குச் செல்லும் ஷிப்மென்ட்களில் டெலிவரி செய்ய முடியாத பார்சல்கள் அனுப்புநரிடமே திருப்பியளிக்கப்படும். பார்சலைத் திருப்புவதற்குக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். மற்ற அனைத்து இலக்குகளுக்கும், DHL eCommerce மூலம் ஷிப் செய்யப்பட்டு டெலிவரி செய்ய முடியாத பார்சல்கள் கைவிடப்பட்ட பேக்கேஜ்களாகக் கருதப்படும்.

மேலும் தகவலுக்கு, Managed Markets-உடனான ஷிப்பிங் சேவைகள் என்பதைப் பார்க்கவும்.

Managed Markets ஆர்டர்களுக்கான நிறைவேற்றம்

  • செயலியின் இடங்கள் அல்லது தனிப்பயன் நிறைவேற்ற இடங்களில் இருந்து நிறைவேற்றப்படும் தயாரிப்புகளை Managed Markets ஆதரிக்காது. இந்த இடங்கள் பொதுவாக டிராப்ஷிப்பிங் அல்லது தேவைக்கேற்ப அச்சிடும் செயலிகளால் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் தொடர்ந்து இந்த வகையான தயாரிப்புகளை உங்கள் உள்நாட்டுச் சந்தையில் விற்கலாம்.
  • Managed Markets ஆதரிக்கப்படும் நாடு அல்லது பிராந்தியத்தில் உள்ள நிறைவேற்றும் இடங்களில் இருந்து மட்டுமே Managed Markets மூலமான ஷிப்பிங் கிடைக்கும். உங்கள் வணிகம் அமெரிக்காவில் அமைந்திருந்தால், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் குவாம் போன்ற பிராந்தியங்களைத் தவிர்த்து, உங்கள் நிறைவேற்றும் இடங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருக்க வேண்டும். கனடா மற்றும் யுனைடெட் கிங்டமைத் தளமாகக் கொண்ட வணிகங்களுக்குப் பொருந்தும் இடத் தேவைகளுக்கு, Managed Markets-ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் கவனயீர்ப்புகள் என்பதைப் பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு, Managed Markets ஆர்டர்களை நிறைவேற்றுதல் மற்றும் நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

Managed Markets மூலம் ஷிப் செய்யும்போது தயாரிப்பிற்கான தேவைகள்

  • Managed Markets-இல் சில தயாரிப்புகளுக்கும் தயாரிப்பு வகைகளுக்கும் தடை அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன.
  • நீங்கள் ஷிப் செய்யும் தயாரிப்புகள் உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் பொதுவில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். சுங்க அனுமதியைப் பெறுவதற்குச் சில நேரங்களில் கேரியர்கள் உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் உங்கள் தயாரிப்பைப் பார்க்க வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, பிரைவேட் பயன்முறைக்கு அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் ஸ்டோர் அல்லது சமீபத்தில் நீக்கப்பட்ட தயாரிப்புகள், உங்கள் தயாரிப்புகளுக்கான கேரியரின் அணுகலைத் தடுத்து சுங்க அனுமதிச் செயல்முறையை முடக்கலாம்.
  • உங்கள் தயாரிப்புகளுக்குச் சரியான மற்றும் முழுமையான ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடுகளும் மூல நாடும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு தயாரிப்பிற்கான உங்கள் HS குறியீடுகள் அல்லது மூல நாடு துல்லியமாக இல்லையெனில், உங்கள் சுங்க வரிகளுக்கு உத்திரவாதம் இல்லை.

Managed Markets மூலம் ஷிப் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

  • Managed Markets மூலம் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தனித்தனி பேக்கேஜிற்கும் பிரத்தியேக லேபிள் தேவை. பேக்கேஜ்களை ஒன்றாக டேப் செய்து, ஒரே லேபிளின் மூலம் ஷிப் செய்ய முடியாது.
  • Managed Markets மூலம் ஷிப் செய்யப்படும் ஒவ்வொரு பேக்கேஜிலும் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலைப் பொதியின் எடையும் வாங்கப்பட்ட தயாரிப்பின் எடையும் அடங்கும்.
  • Managed Markets மூலம் வாங்கப்படும் ஷிப்பிங் லேபிள்களை முடிந்தவரை ஷிப்மென்ட் தேதிக்கு அருகில் வாங்க வேண்டும். லேபிள்களை மிகவும் முன்னதாகவே வாங்குவது டெலிவரிச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
  • Managed Markets பிரித்து அனுப்புதலை ஆதரிக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஷிப்பிங் தேர்வுகளை மூன்றாம் தரப்பு ஷிப்பிங் சேவைகள் காட்டாமல் இருக்கலாம்.
  • Managed Markets மூலம் ஷிப்பிங் செய்வதற்கான அதிகபட்ச ஆர்டர் மதிப்பு $25,000 USD ஆகும், ஆனால் குறிப்பிட்ட தயாரிப்பு வகைகளுக்கான மதிப்புக் கட்டுப்பாடுகள் இலக்கு நாட்டைப் பொறுத்து மாறுபடலாம். நகைகள் அல்லது கைக்கடிகாரங்கள் போன்ற சில தயாரிப்பு வகைகளில், ஒவ்வொரு தனிப்பட்ட உருப்படியின் மதிப்பும் $10,000 USD-ஐத் தாண்டக்கூடாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் நகைகளை விற்கிறீர்கள் என்றால், $25,000 USD மதிப்பு வரையிலான ஷிப்பிங் லேபிளை உங்களால் இன்னும் வாங்க முடியும். இருப்பினும், தனிப்பட்ட நகை உருப்படிகளின் மதிப்பு $10,000 USD-ஐத் தாண்டாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

Managed Markets ஆர்டர்களுக்கான ஷிப்பிங் லேபிள் விலை மாற்றங்கள்

உங்கள் பேக்கேஜின் எடை அல்லது பரிமாணங்கள் நீங்கள் லேபிளை வாங்கும்போது உள்ளிட்டவற்றுடன் பொருந்தவில்லை எனில் அல்லது பேக்கேஜை டெலிவரி செய்ய முடியவில்லை எனில், ஷிப்பிங் லேபிள் விலை மாற்றம் நிகழும். எடுத்துக்காட்டாக, உங்கள் பேக்கேஜ் லேபிளை வாங்கும்போது நீங்கள் குறிப்பிட்டதை விட அதிக எடையுடனோ அல்லது பெரிதாகவோ இருந்தால், விலை மாற்றம் விதிக்கப்படலாம். உங்கள் ஆர்டரை ஷிப் செய்த பிறகு, சரியான ஷிப்பிங் லேபிள் விலையை ஷிப்பிங் கேரியர் சரிபார்ப்பார். உங்கள் ஷிப்மென்ட்டிற்கு விலை மாற்றம் தேவை என்று கேரியர் தீர்மானித்தால், அந்த மாற்றம் ஆர்டர் காலவரிசையில் காட்டப்படும். உங்களின் அடுத்த பேஅவுட்டில் கட்டணம் கழிக்கப்படும். மாற்றம் இருந்தாலும் உங்கள் பேக்கேஜ் தொடர்ந்து டெலிவரி செய்யப்படலாம்.

Managed Markets ஆர்டர்களுக்கு அனைத்து வரிகள், VAT (மதிப்புக்கூட்டு வரி) மற்றும் IOSS (Import One-Stop Shop) எண்கள் தானாகவே பயன்படுத்தப்படும்.

விலை மாற்றங்கள் என்பது தொழில்துறையின் ஒரு நிலையான நடைமுறையாகும். மேலும் பெரும்பாலான ஷிப்பிங் கேரியர்கள் இந்தத் தரநிலையைப் பின்பற்றுகின்றனர். விலை மாற்றங்களைத் தவிர்க்க, ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது சரியான தகவலை உள்ளிடுகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். ஷிப்பிங் கேரியர்களின் செயலாக்க நேரம் காரணமாக, நீங்கள் ஷிப்பிங் லேபிளை வாங்குவதற்கும் விலை மாற்றத்திற்கான கட்டணம் அல்லது கிரெடிட்டைப் பெறுவதற்கும் இடையில் தாமதம் இருப்பது அசாதாரணமானது அல்ல.

பின்வரும் எடுத்துக்காட்டுகள் விலை மாற்றங்களுக்கான சாத்தியமான காரணங்களாகும்:

  • லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பேக்கேஜின் எடை ஷிப்மென்ட்டின் உண்மையான எடையுடன் பொருந்தவில்லை.
  • லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பேக்கேஜின் பரிமாணங்கள் ஷிப்மென்ட்டின் உண்மையான பரிமாணங்களுடன் பொருந்தவில்லை.
  • நிலையான கட்டண லேபிள் எடை அடிப்படையிலான கட்டணப் பெட்டியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது அல்லது எடை அடிப்படையிலான கட்டண லேபிள் நிலையான கட்டணப் பெட்டியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • டெலிவரிக்காக வழங்கப்பட்ட முகவரி தவறானது.

ஷிப்பிங் லேபிள் விலை மாற்றங்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

Managed Markets-க்கான பரிமாண எடை

சில ஷிப்பிங் கேரியர்கள் ஷிப்பிங் செலவுகளைக் கணக்கிட பரிமாண எடையைப் பயன்படுத்துகின்றன. பரிமாண எடை என்பது பேக்கேஜின் உண்மையான எடையை மட்டும் பொறுத்தது அல்ல, அதன் அளவையும் பொறுத்தது. உங்கள் பேக்கேஜ் பெரிதாக இருந்து, எடை குறைவாக இருந்தால், அதன் எடைக்கு பதிலாக அளவின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இதன்படி, உங்கள் பேக்கேஜ் எடை குறைவாக இருந்தாலும், அதிக இடத்தை ஆக்கிரமித்தால் ஷிப்பிங் செலவு அதிகமாக இருக்கலாம். எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்க, ஷிப்பிங் லேபிள்களை வாங்கும்போது சரியான பேக்கேஜ் பரிமாணங்களையும் எடையையும் உள்ளிடுவதை உறுதிசெய்யவும்.

பரிமாண எடை மற்றும் அது கணக்கிடப்படும் முறை குறித்து மேலும் அறிக.

Managed Markets-இல் டெலிவரி செய்ய முடியாத பேக்கேஜ்கள்

ஒரு வாடிக்கையாளருக்கு பேக்கேஜை டெலிவரி செய்ய முடியவில்லை எனில், அது டெலிவரி செய்ய முடியாத நிலையில் இருக்கும். ஷிப்மென்ட்களை டெலிவரி செய்ய முடியாமல் போவதற்கான காரணங்கள் மாறுபடும். இருப்பினும், பின்வருபவை சில பொதுவான காரணங்களாகும்:

  • வாடிக்கையாளரின் முகவரி முழுமையடையாமல், படிக்க முடியாமல், தவறாக அல்லது கண்டறிய முடியாததாக உள்ளது.
  • வாடிக்கையாளரின் நாடு அல்லது பிராந்தியத்தில் சுங்க அதிகாரியால் பேக்கேஜை அனுமதி பெறச் செய்ய முடியவில்லை.
  • பேக்கேஜைத் திறப்பதற்கு முன்பே வாடிக்கையாளர் அதை நிராகரித்துவிட்டார்.
  • பேக்கேஜில் தடைசெய்யப்பட்ட உருப்படிகள் உள்ளன.

பொதுவாக, ஒரு பேக்கேஜை டெலிவரி செய்ய முடியாது எனக் கருதப்பட்டால், அதற்கான காரணத்தையும் அதன் முடிவையும் விவரித்து Shopify ஆதரவிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வரும். சில சமயங்களில், DHL Express வாடிக்கையாளரை மட்டுமே தொடர்புகொள்ளலாம். டெலிவரி செய்ய முடியாத பேக்கேஜின் முடிவு பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். இது கேரியர், பேக்கேஜின் இடம், டெலிவரி செய்ய முடியாததற்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்:

  • பேக்கேஜைத் திசைதிருப்பு
  • மூல இடத்திற்குத் திருப்பு
  • கைவிடப்பட்ட பேக்கேஜ்

இந்த முடிவுகளுக்கு வழக்கமாகக் கட்டணம் விதிக்கப்படும். இது உங்களின் அடுத்த பேஅவுட் மற்றும் ஆர்டரின் காலவரிசை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

டெலிவரி செய்ய முடியாத பேக்கேஜ்களுக்கான முடிவுகள்
முடிவுவிவரங்கள்Shopify நிர்வாகியில் உள்ள விளக்கம்
பேக்கேஜைத் திசைதிருப்புபேக்கேஜிற்கான புதிய ஷிப்பிங் முகவரியை நீங்கள் வழங்குவீர்கள். ஷிப்பிங் லேபிளை மாற்றுவதற்குக் கட்டணம் விதிக்கப்படும்.ஷிப்பிங் லேபிள் மாற்றம்
மூல இடத்திற்குத் திருப்புபேக்கேஜ் ஷிப் செய்யப்பட்ட இடத்திற்கே திருப்பியளிக்கப்படும். புதிய ஷிப்பிங் லேபிளை உருவாக்குவதற்குக் கட்டணம் விதிக்கப்படும்.ஷிப்பிங் லேபிள்
கைவிடப்பட்ட பேக்கேஜ்வாடிக்கையாளரின் நாடு அல்லது பிராந்தியத்தில் கேரியரால் பேக்கேஜ் அப்புறப்படுத்தப்படும். பேக்கேஜை அப்புறப்படுத்துவதற்குக் கட்டணம் விதிக்கப்படலாம்.மாற்றம்

சர்வதேச ஷிப்பிங் இடையூறுகள்

நீங்கள் ஷிப் செய்யும் இடத்தைப் பொறுத்து ஷிப்பிங்குக் கூடுதல் கட்டணங்கள், இடையூறுகள் அல்லது சேவைக் குறுக்கீடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் கேரியரின் ஷிப்பிங் விழிப்பூட்டல் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாகவோ அவர்களின் ஆதரவுக் குழுக்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ ஷிப்பிங் செயல்பாடுகளின் இடையூறுகளைக் கண்காணிக்கலாம்.