Managed Markets-க்காக ஷிப்பிங்கை அமைத்தல்
நீங்கள் Managed Markets மூலம் ஷிப்பிங் செய்யத் தொடங்குவதற்கு முன், உங்களின் ஷிப்பிங் கட்டணங்களை அமைத்து மதிப்பாய்வு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் நிர்வகிக்கும் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் வழிகளில் ஷிப்பிங் கட்டணங்களை வழங்கலாம்:
- Managed Markets வழங்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள்: ஒவ்வொரு இலக்கு மற்றும் ஷிப்பிங் விருப்பத்திற்கும் Managed Markets நிலையான கட்டணத்தை அமைக்கிறது, மேலும் ஷிப்பிங் செலவின் ஒரு பகுதி உங்கள் தயாரிப்பு விலைகளில் சேர்க்கப்படும்.
- உங்களின் சொந்த நிலையான ஷிப்பிங் கட்டணங்கள்: ஒவ்வொரு ஷிப்பிங் விருப்பத்திற்கும் உங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தை நீங்கள் அமைக்கலாம்.
- கேரியர் கணக்கிடும் ஷிப்பிங் கட்டணங்கள்: ஷிப்மென்ட்டின் எடை, பரிமாணங்கள் மற்றும் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் செக்அவுட்டில் கட்டணம் கணக்கிடப்படும்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் ஷிப்பிங் கட்டண அட்டவணையைப் பதிவிறக்குக
உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணங்களுடன் CSV கோப்பைப் பதிவிறக்கலாம். இந்தக் கோப்பைப் பயன்படுத்திக் கட்டணங்களைப் பதிவேற்றவோ திருத்தவோ முடியாது என்றாலும், உங்கள் தற்போதைய ஷிப்பிங் உள்ளமைவைப் புரிந்துகொள்ள இது உதவும். Shopify நிர்வாகியிலேயே உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை நேரடியாக மாற்ற வேண்டியிருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
Managed Markets என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்ற விருப்பங்கள் பிரிவில், கட்டண அட்டவணையைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Managed Markets-இன் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள்
Managed Markets வழங்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள், விலைகளில் உள்ள சுங்க வரிகள் மற்றும் வரிகளுடன் இணைந்து செயல்படும். நீங்கள் இரண்டையும் பயன்படுத்தும்போது, உங்கள் சர்வதேச வாடிக்கையாளர்கள் ஒரு முழுமையான விலையையும் கணிக்கக்கூடிய ஷிப்பிங் கட்டணத்தையும் செலுத்துவார்கள், மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் நீங்கள் விலைகளையோ ஷிப்பிங் கட்டணங்களையோ அமைக்க வேண்டியதில்லை.
ஒரு சந்தைக்கான உங்கள் தயாரிப்புகளுக்கு Managed Markets எவ்வாறு விலை நிர்ணயம் செய்கிறது என்பதை இரண்டு அமைப்புகளும் கட்டுப்படுத்துகின்றன, மேலும் அவற்றை உங்கள் சந்தையின் Shopify Managed Markets அமைப்புகளில் நீங்கள் ஒன்றாக நிர்வகிக்கலாம்:
- தயாரிப்பு விலைகளில் உள்ள சுங்க வரிகள் மற்றும் வரிகள்: இறக்குமதி வரி, சுங்க வரிகள் மற்றும் Managed Markets கட்டணங்கள் ஆகியவை உங்கள் சர்வதேசத் தயாரிப்பு விலைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. நிலையான கட்டணங்களை வழங்க, இந்த அமைப்பு தேவைப்படுகிறது. மேலும் அறிய, Managed Markets-க்கான சர்வதேச விலை நிர்ணயம் என்பதைப் பார்க்கவும்.
- நிலையான ஷிப்பிங் கட்டணங்கள்: உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட்டில் ஒரு நிலையான கட்டணத்தைச் செலுத்துவார், மீதமுள்ள ஷிப்பிங் செலவானது சுங்க வரிகள் மற்றும் வரிகளைப் போலவே உங்கள் தயாரிப்பு விலைகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும்.
Managed Markets-இன் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள் ஒவ்வொரு இலக்குக்கும் ஷிப்பிங் விருப்பத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளன, இதனால் நீங்களே சர்வதேசக் கட்டணங்களை அமைத்துப் பராமரிக்கத் தேவையில்லை. ஒரு ஆர்டரின் எடை அல்லது பரிமாணங்கள் மூலமாகவோ குறிப்பிட்ட இலக்கிற்குள் இருக்கும் வாடிக்கையாளரின் முகவரி மூலமாகவோ, உங்கள் வாடிக்கையாளர் செலுத்தும் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. இது தள்ளுபடிகளுக்குப் பிறகு, ஷிப்பிங் செய்ய வேண்டிய உருப்படிகளின் மதிப்பைப் பொறுத்து மாறலாம்.
ஆர்டருக்கான முன்கூட்டியே செலுத்திய லேபிளை வாங்கும்போது, இந்தக் கட்டணத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. உங்கள் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும்போது ஷிப்பிங் செலவு நிர்ணயிக்கப்பட்டுவிடும் என்பதால், ஆர்டரை ஷிப் செய்யக் கூடுதல் செலவு ஏற்படும்போது அந்த வித்தியாசத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்காது.
Managed Markets-இல் நிலையான ஷிப்பிங் கட்டணங்களை உங்களால் மாற்ற முடியாது. அதற்குப் பதிலாக, குறைந்தபட்ச மதிப்பிற்கு மேலான ஆர்டர்களுக்கான ஷிப்பிங் செலவில் குறிப்பிட்ட தொகையை நீங்களே ஏற்றுக்கொள்ளலாம், இது செக்அவுட்டில் செலுத்த வேண்டிய நிலையான கட்டணத்தையும், உங்கள் தயாரிப்பு விலைகளில் சேர்க்கப்பட்டுள்ள தொகையையும் குறைக்கும். இந்தத் தொகையானது உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டை அடிப்படையாகக் கொண்டது, அதை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் எந்த நேரத்திலும் ஒவ்வொரு சந்தைக்கும் நீங்கள் இதை இயக்கலாம் அல்லது முடக்கலாம். நிலையான கட்டணங்களை இயக்கும்போது, செலவை ஏற்றுக்கொள்ளும் இந்த வசதி இயக்கப்படும்.
Managed Markets-இன் நிலையான ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்துவதற்கான கருத்தில் கொள்ள வேண்டியவை
Managed Markets-இன் நிலையான ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்துவதற்கான கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் விலைகளில் வரிகளும் சுங்க வரிகளும் சேர்க்கப்பட்டுள்ள சந்தைகளுக்கு மட்டுமே நிலையான கட்டணங்கள் கிடைக்கும். ஒரு சந்தைக்கான விலைகளில் உள்ள வரிகளையும் சுங்க வரிகளையும் முடக்கினால், அந்தச் சந்தைக்கான நிலையான கட்டணங்களும் முடக்கப்படும்.
- உங்கள் ஸ்டோர் சந்தை அடிப்படையிலான ஷிப்பிங் விருப்பங்களைப் பயன்படுத்தினால், Managed Markets வழங்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள் கிடைக்காது.
- நீங்கள் நிர்வகிக்கும் ஒவ்வொரு சந்தைக்கும் நிலையான கட்டணங்களை இயக்கலாம். எந்த நேரத்திலும் ஒரு சந்தைக்கு அவற்றை முடக்கலாம்.
- நிலையான கட்டணங்களை இயக்கும்போதும் உங்கள் சொந்த ஷிப்பிங் கட்டணங்கள் செயலில் இருக்கும். ஒரு ஆர்டருக்கு நிலையான கட்டணங்கள் கிடைக்கும்போது செக்அவுட்டில் உங்கள் சொந்தக் கட்டணங்கள் மாற்றப்படும், அவை கிடைக்காதபோது உங்கள் சொந்தக் கட்டணங்கள் வழங்கப்படும்.
- உங்களின் ஷிப்பிங் லேபிள்களுக்கான கட்டணம் FedEx மற்றும் DHL Express ஆகியவற்றில் முன்கூட்டியே செலுத்தப்பட்டிருக்கும், மேலும் அவற்றின் செலவு உங்கள் பேஅவுட்டில் காட்டப்படும். ஒரு ஆர்டருக்கு வேறு லேபிளை வாங்கினால், கட்டண உத்தரவாதம் பொருந்தாது, மேலும் அந்த லேபிளுக்கு வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படும். அந்த ஆர்டருக்காக வசூலிக்கப்பட்ட ஷிப்பிங் தொகை உங்களுக்குத் திருப்பியளிக்கப்படும்.
- செக்அவுட்டின் போது காட்டப்படும் ஸ்டாண்டர்டு அல்லது எக்ஸ்பிரஸ் போன்று உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஷிப்பிங் விருப்பங்கள் அவர்களின் இலக்கைப் பொறுத்து மாறுபடும். உங்கள் சந்தையின் Shopify Managed Markets அமைப்புகளில் உள்ள ஷிப்பிங் விருப்பங்கள் வரிசையில், அந்தச் சந்தைக்கான விருப்பங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஒரு சந்தைக்கான விலைகள் மற்றும் நிலையான ஷிப்பிங் கட்டணங்களில் சுங்க வரிகள் மற்றும் வரிகளை அமைக்கவும்
ஒவ்வொரு சந்தைக்குமான விலைகள் மற்றும் நிலையான ஷிப்பிங் கட்டணங்களில் சுங்க வரிகள் மற்றும் வரிகளை நீங்கள் ஒன்றாக அமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் அமைக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.
Shopify Managed Markets பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
சுங்க வரிகள் மற்றும் வரிகள் பிரிவில், தயாரிப்பு விலைகளில் சுங்க வரிகள் மற்றும் வரிகளைச் சேர் என்பது இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். இந்த விருப்பம் முடக்கப்பட்டிருந்தால், உங்களால் நிலையான கட்டணங்களை வழங்க முடியாது.
ஷிப்பிங் பிரிவில், தயாரிப்பு விலைகளில் சில செலவைச் சேர்ப்பதன் மூலம் மலிவான நிலையான கட்டணங்களை வழங்கு என்பதை இயக்கவும்.
விரும்பினால்: ஷிப்பிங் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏற்றுக்கொள்வதை நிறுத்த, ஆர்டருக்கான செலவில் [amount]-ஐ ஏற்றுக்கொள் விருப்பத்தை முடக்கவும். இந்த விருப்பமானது, உங்களின் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டிற்கான தொகையை அதன் நாணயத்துடன் காட்டும். எடுத்துக்காட்டாக, ஒரு ஆர்டருக்கான செலவில் $5 USD-ஐ ஏற்றுக்கொள்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமித்த பிறகு, சந்தைக்கான நிலையான ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் விலைகளில் சுங்க வரிகள் மற்றும் வரிகள் இயக்கப்பட்டிருப்பதை பேனர் உறுதிப்படுத்தும். உங்களின் பிற சர்வதேசச் சந்தைகளுக்கும் அதே அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, இந்தப் பேனர் அவற்றுக்கான இணைப்பை வழங்கும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஷிப்பிங் குறித்த செய்திகள்
Managed Markets வழங்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் முதன்முறையாக இயக்கும்போது, Announcement bar (அறிவிப்புப் பட்டை) என்ற செயலி உட்பொதிவு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சேர்க்கப்படும். சுங்க வரிகள் அல்லது ஷிப்பிங் செலவுகளை Managed Markets உங்கள் விலைகளில் சேர்க்கும் சந்தைகளில், ஒவ்வொரு பக்கத்தின் மேற்பகுதியிலும் இது ஒரு பேனரைக் காட்டும். செக்அவுட்டிலோ டெலிவரியின்போதோ எதிர்பாராத கட்டணங்கள் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பேனர் அளிக்கும்.
பேனரில் இயல்புநிலை உரையைப் பயன்படுத்தும்போது, ஜெர்மனியில் உள்ள வாடிக்கையாளருக்குப் பின்வரும் செய்திகளில் ஏதேனும் ஒன்று காட்டப்படலாம்:
- உங்கள் ஷிப்பிங் விருப்பங்களை Managed Markets அமைத்தால்:
ஜெர்மனிக்கு ஷிப்பிங் கட்டணம் €8 · இறக்குமதிச் சுங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன · டெலிவரியின்போது கட்டணங்கள் இல்லை - சுங்க வரிகள் தயாரிப்பு விலைகளில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஷிப்பிங் விருப்பங்களை நீங்கள் அமைத்தால்:
ஜெர்மனிக்கான இறக்குமதிச் சுங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன · டெலிவரியின்போது கட்டணங்கள் இல்லை
ஷிப்பிங் பேனரைத் தனிப்பயனாக்குதல் அல்லது முடக்குதல்
தீம் எடிட்டரில் ஷிப்பிங் பேனரின் உரை, நிறங்கள் மற்றும் எழுத்தமைப்பை மாற்றலாம் அல்லது பேனரை முடக்கலாம். உங்கள் உள்நாட்டுச் சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பேனர் காட்டப்படாது. எனவே, அதை முன்னோட்டமிட, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் நாட்டுத் தேர்வியைப் பயன்படுத்தி, உங்கள் சர்வதேசச் சந்தைகளில் உள்ள ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, Edit theme (தீமைத் திருத்து) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தீம் எடிட்டரில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Managed Markets செயலி உட்பொதிவில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- ஷிப்பிங் பேனரை முடக்க, Announcement bar (அறிவிப்புப் பட்டை) அமைப்பை முடக்கவும்.
- ஷிப்பிங் பேனரைத் தனிப்பயனாக்க, Managed Markets செயலி உட்பொதிவைக் கிளிக் செய்து அதன் அமைப்புகளைத் திறக்கவும். பின்னர் Customize messages (செய்திகளைத் தனிப்பயனாக்கு), Appearance (தோற்றம்) அல்லது Typography (எழுத்தமைப்பு) ஆகிய பகுதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நிலையான ஷிப்பிங் கட்டணம் குறித்த சொந்தச் செய்தியை உருவாக்குதல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் Add to cart (கார்ட்டில் சேர்) பொத்தானுக்கு அருகில் போன்ற பிற இடங்களில் நிலையான ஷிப்பிங் கட்டணங்களைக் காட்ட, உங்கள் தீமில் Liquid குறியீட்டைச் சேர்க்கலாம். இந்தக் குறியீடு, ஸ்டோரின் managed_markets.adaptive_pricing_shipping_rates மெட்டாஃபீல்டிலிருந்து கட்டணங்களைப் பெறும். Managed Markets நிலையான கட்டணங்களை வழங்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த மெட்டாஃபீல்டில் ஒரு பதிவு உள்ளது. அந்தந்த நாட்டின் இரண்டெழுத்துக் குறியீடு பதிவின் விசையாகப் பயன்படுகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒரு presentment_currency புலம் உள்ளது. வழங்கப்படும் ஒவ்வொரு நிலையான கட்டணத்துக்கும், அந்த நாணயத்தில் தசம வடிவிலான தொகையைக் கொண்ட standard அல்லது express புலமும் உள்ளது.
cart.duties_included பண்பின் மதிப்பு true ஆகவும், கட்டணத்தின் நாணயம் cart.currency.iso_code மதிப்புடன் பொருந்தியும் இருந்தால் மட்டுமே கட்டணத்தைக் காட்டவும். பணத்தொகை வடிப்பான்களுக்கு சென்ட் அளவில் தொகை தேவைப்படுகிறது. எனவே, கட்டணத்தை வடிவமைக்கும் முன் அதை 100 ஆல் பெருக்கவும். பின்வரும் எடுத்துக்காட்டு, ஷிப்பிங் பேனரில் உள்ளதைப் போன்ற செய்தியைக் காட்டுகிறது:
{%- liquid
assign country = localization.country
assign rates = shop.metafields.managed_markets.adaptive_pricing_shipping_rates.value[country.iso_code]
-%}
{%- if cart.duties_included -%}
{%- if rates.standard != blank and rates.presentment_currency == cart.currency.iso_code -%}
{{ rates.standard | times: 100 | round | money_with_currency }} shipping to {{ country.name | escape_once }} · Import duties included · No fees on delivery
{%- else -%}
Import duties included for {{ country.name | escape_once }} · No fees on delivery
{%- endif -%}
{%- endif -%}உங்கள் தீமில் Custom Liquid (தனிப்பயன் Liquid) பகுதி இருந்தால், தீம் எடிட்டரில் அந்தப் பகுதியில் குறியீட்டைச் சேர்க்கலாம். இல்லையெனில், உங்கள் தீம் குறியீட்டைத் திருத்தவும். உதவி தேவைப்பட்டால், Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம். நிலையான ஷிப்பிங் கட்டணம் குறித்த உங்கள் சொந்தச் செய்தியைக் காட்டினால், ஷிப்பிங் பேனரை முடக்குவதைப் பரிசீலிக்கவும்.
உங்கள் சொந்த ஷிப்பிங் விருப்பங்களை அமைத்து நிர்வகிக்கவும்
நீங்கள் நிர்வகிக்கும் சந்தைகளுக்கு உங்கள் சொந்த நிலையான கட்டணங்கள் அல்லது கேரியர் கணக்கிடும் கட்டணங்களை நீங்கள் அமைக்கலாம். ஒரு ஆர்டருக்கு Managed Markets வழங்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள் கிடைக்காதபோது செக்அவுட்டில் உங்கள் சொந்தக் கட்டணங்கள் வழங்கப்படும்.
உங்கள் சொந்த நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும்
நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கும்போது, ஷிப்பிங் கட்டணங்களுக்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் உள்ளமைக்கலாம். நீங்கள் போக்குவரத்து நேரத்துடன் நிலையான கட்டணங்களை அமைக்க வேண்டும். Managed Markets மூலம் நிர்வகிக்கப்படும் அனைத்துச் சந்தைகளிலும் உங்கள் கட்டணங்களைச் சேர்க்கவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படும் நிலையான கட்டணங்கள் பின்வருமாறு:
- DHL eCommerce International Parcel Direct மற்றும் DHL eCommerce International Parcel Standard நிலையான கட்டணங்கள் Economy International எனக் காண்பிக்கப்படும்
- DHL Express Worldwide நிலையான கட்டணமானது Express International எனக் காண்பிக்கப்படும்
- FedEx International Connect Plus®, UPS Standard மற்றும் UPS Worldwide Expedited நிலையான கட்டணங்கள் Standard International எனக் காண்பிக்கப்படும்
மேலும் அறிய, நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும். உங்கள் நிலையான கட்டணத்தை அமைக்கும்போது, நீங்கள் Economy International, Standard International அல்லது Express International என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளூர் நாணயத்தில் உங்கள் நிலையான கட்டணத்தைக் காண்பிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் சொந்த கேரியர் கணக்கிடும் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும்
கேரியர் கணக்கிடும் கட்டணங்கள் செக்அவுட்டில் தானாகவே கணக்கிடப்படும். உங்கள் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய ஷிப்பிங் கட்டணமானது ஷிப்மென்ட்டின் எடை, பரிமாணங்கள் மற்றும் சேருமிட முகவரி போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. Managed Markets நிர்வகிக்கும் அனைத்துச் சந்தைகளுக்கும் உங்கள் கட்டணங்களைச் சேர்க்கவும். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தானாகவே காட்டப்படும் கேரியர் கணக்கிடும் கட்டணங்கள் பின்வருமாறு:
- DHL eCommerce கேரியர் கணக்கிட்ட கட்டணமானது DHL eCommerce Parcel International Direct அல்லது DHL eCommerce Parcel International Standard எனக் காண்பிக்கப்படும்
- DHL Express கேரியர் கணக்கிட்ட கட்டணமானது DHL Express Worldwide எனக் காண்பிக்கப்படும்
- FedEx கேரியர் கணக்கிட்ட கட்டணமானது FedEx International Connect Plus® எனக் காண்பிக்கப்படும்
எந்த நேரத்திலும் நீங்கள் UPS கேரியர் கணக்கிடும் கட்டணங்களைச் சேர்க்கலாம் அல்லது இயல்புநிலை கேரியர்கள் எதையும் அகற்றலாம்.
மேலும் அறிய, கேரியர் கணக்கிட்ட ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும். நீங்கள் கேரியர் கணக்கிட்ட கட்டணத்தை அமைக்கும்போது, Managed Markets services பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஷிப்பிங் லேபிள்களுக்கான கட்டணங்களை மதிப்பாய்வு செய்தல்
உங்கள் ஷிப்பிங் லேபிள்களின் செலவு உங்கள் Shopify கணக்கில் உள்ள கிரெடிட் கார்டில் இருந்து வசூலிக்கப்படும். உங்கள் Shopify நிர்வாகியில் ஷிப்பிங் லேபிள்களுக்கான கட்டணங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நிதி என்பதற்குச் செல்லவும்.
பேஅவுட்கள் > பரிவர்த்தனைகளைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.
கூடுதல் வடிப்பான்கள் > வகை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் லேபிள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.