Shopify Payments உடன் Managed Markets

அனைத்து Managed Markets பரிவர்த்தனைகள் மற்றும் பேஅவுட்களுக்கும் Shopify Payments பயன்படுத்தப்படுகிறது. Shopify Payments உடன் கூடிய Managed Markets இல் பின்வரும் மாற்றங்கள் அடங்கும்:

  • உங்கள் Managed Markets பரிவர்த்தனைகள் Shopify Payments மூலம் பிராசஸ் செய்யப்படுகின்றன.
  • எந்தவொரு Shopify Payments பரிவர்த்தனைகளையும் போலவே Managed Markets ஆர்டர்களுக்கான பேஅவுட்களும் தினமும் வழங்கப்படும்.
  • தகுதிபெறும் அனைத்து Managed Markets ஆர்டர்களும் தானாகவே Shopify Protect மூலம் பாதுகாக்கப்படும் (அமெரிக்காவிற்கு மட்டும்).
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு உள்ளூர் கட்டண முறைகள் கிடைக்கின்றன.
  • Shop Pay, Apple Pay மற்றும் Google Pay ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன. PayPal ஆதரிக்கப்படவில்லை.

இந்தச் சேவையில் Global-e எத்தகைய பங்கைக் கொண்டிருந்தாலும், Managed Markets தொடர்பான அனைத்துக் கேள்விகளும் Shopify ஆதரவுக்குச் செல்லும். Global-e என்பது உங்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகர் ஆகும், மேலும் இது சுங்க வரிகள், வரியைச் செலுத்துதல், வர்த்தக விலைப்பட்டியல்கள், கேரியர் ஏற்பாடுகள் உட்பட உங்கள் Managed Markets ஆர்டர்களின் சில பகுதிகளைக் கையாளுகிறது. உங்கள் ஆர்டர்கள், பேஅவுட்கள், ஷிப்பிங் லேபிள்கள், ரிட்டர்ன்கள் மற்றும் வரி அல்லது சுங்க ஆவணங்கள் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக Global-e க்கு அனுப்பாமல், Shopify ஆதரவின் மூலமே அனுப்ப வேண்டும்.

Global-e இல் தனித்த மூன்றாம் தரப்புச் செயலியும் உள்ளது. இது Managed Markets இலிருந்து வேறுபட்டதாகும். Managed Markets இக்குப் பதிலாக தனித்த Global-e செயலியைப் பயன்படுத்தினால், Global-e உங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும். Managed Markets, Global-e செயலி ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.

அந்நியச் செலாவணி வீதங்கள்

வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்திற்கு உங்களின் விலைகளை Managed Markets மாற்றும்போது, ஒவ்வொரு ஆர்டரிலும் பயன்படுத்தப்படும் செலாவணி வீதம் நிலைப்படுத்தப்படுவதோடு 30 நாட்களுக்கு உத்திரவாதமும் அளிக்கப்படும். உங்கள் விலைகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், நாணய ஏற்ற இறக்கங்களைக் குறைத்து உங்கள் பேஅவுட்கள் அதிக நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய உதவவும் செலாவணி வீதங்களை Shopify நிலைப்படுத்துகிறது. வீதங்கள் வழக்கமாக 7 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். எனினும், சந்தை வீதங்கள் நிலைப்படுத்தப்பட்ட வீதத்திலிருந்து 5% க்கும் அதிகமாக நகரும் அதீதச் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது, செலாவணி வீதங்களை (அதன் விளைவாக உங்கள் விலைகளையும்) Shopify இன்னும் அடிக்கடி புதுப்பிக்கலாம்.

கூடுதலாக, கடந்தகால ஏற்ற இறக்கங்கள், சந்தை மாறுபாடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதற்காக, தற்போதைய இடை-சந்தை வீதத்திலிருந்து நிலைப்படுத்தப்பட்ட செலாவணி வீதம் வேறுபடும். உங்களுக்கு ஒரு ஆர்டர் வரும்போது, அந்த ஆர்டர் பெறப்பட்ட நேரத்தில் செயலில் உள்ள செலாவணி வீதத்திற்கு 30 நாட்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்படும். ஆர்டரைத் தொடர்ந்து வரும் 30 நாட்களுக்குள் நீங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதலை வழங்கினால், வீத மாறுபாடுகளால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்பதை இது உறுதிசெய்கிறது.

Managed Markets இக்கான விலை நிர்ணயம்

சர்வதேச ஆர்டர்களுக்கான ஆர்டரின் மொத்தத் தொகைக்குப் பொருந்தும் பின்வரும் கட்டணங்களை Managed Markets கொண்டுள்ளது:

  • உங்கள் Shopify திட்டம் மற்றும் வாடிக்கையாளர் பயன்படுத்திய கட்டண முறையைப் பொறுத்து மாறுபடக்கூடிய Shopify Payments செயலாக்கக் கட்டணம். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பேமெண்ட்டுகள் பக்கத்தில் உங்களின் Shopify Payments கட்டணங்களைக் கண்டறியலாம்.
  • Managed Markets பரிவர்த்தனைக் கட்டணம்:
    • Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்களுக்கு 3.25%.
    • Basic, Grow அல்லது Advanced திட்டத்திலுள்ள ஸ்டோர்களுக்கு 3.5%.
  • நாணய மாற்றக் கட்டணம், இது அந்நியச் செலாவணிக் (FX) கட்டணம் எனவும் அழைக்கப்படும். உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் சர்வதேசச் சந்தைகளுக்கான தயாரிப்பு விலைகளை அதிகமாகவோ குறைவாகவோ நீங்கள் சரிசெய்து கொள்ளலாம்.

Managed Markets இக்கு மாதாந்திரக் கட்டணம் ஏதுமில்லை, அதோடு Managed Markets ஐப் பயன்படுத்த நீங்கள் உறுதியளிக்க வேண்டிய குறிப்பிட்ட காலகட்டமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் Managed Markets ஐப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் B2B ஐப் பயன்படுத்தினால், சர்வதேச B2B ஆர்டர்களுக்குப் பரிவர்த்தனைக் கட்டணம் விதிக்கப்படாது. B2B ஆர்டர்களானது Managed Markets உடன் இணக்கமானவையல்ல.

நிதியின் நகர்வு

Managed Markets அம்சங்கள் Global-e மூலம் இயக்கப்படுகின்றன. உங்கள் ஸ்டோரில் சர்வதேச Managed Markets ஆர்டர் பெறப்பட்ட பிறகு, அந்தப் பரிவர்த்தனையை Shopify Payments செயல்படுத்தி, பணத்தை Global-e கணக்கில் வைத்திருக்கும்.

நீங்கள் Global-e மூலம் எல்லை தாண்டி அனுப்பும்போது, அது உங்களுக்கான பதிவுசெய்யப்பட்ட வணிகராகச் செயல்படும். எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள உரிய அதிகாரிகளுக்குச் செலவுகளைச் செலுத்துவதற்காக, Global-e நிதியை வைத்திருக்கும்.

பேமெண்ட்டைப் பெறுதல்

Managed Markets ஆர்டர்களுக்கான பேஅவுட்களை நீங்கள் தினசரி பெறுவீர்கள். வாடிக்கையாளரின் பேமெண்ட் பெறப்பட்ட தேதிக்கும் உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பேஅவுட் அனுப்பப்படும் தேதிக்கும் இடைப்பட்ட காலம், உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டைப் பொறுத்தது.

Managed Markets பரிவர்த்தனைகள் உங்களின் வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கைகளில் Shopify Payments ஆகக் காட்டப்படும்.

சர்வதேச விலை நிர்ணயம் இல்லாமல் Managed Markets பேஅவுட்களைக் கணக்கிடுதல்

Managed Markets பேஅவுட்களைக் கணக்கிட, பின்வரும் கணக்கீட்டை நீங்கள் பயன்படுத்தலாம்:

மொத்த ஆர்டர் செலவு – (செலுத்தப்பட்ட வரி/VAT + செலுத்தப்பட்ட சுங்க வரி + Shopify Payments செயலாக்கக் கட்டணம் + Managed Markets கட்டணம் + நாணய மாற்றக் கட்டணம்) = செலுத்தப்பட்ட தொகை

எடுத்துக்காட்டாக, €150 EUR மொத்தச் செலவிலான சட்டைக்காக ஒரு ஆர்டர் பெறப்படுவதாகக் கொள்வோம். உங்கள் பேஅவுட் தொகையை உங்கள் நாணயத்தில் கணக்கிட, பரிவர்த்தனை நடந்த நாளன்று உள்ள நாணய மாற்ற வீதம் பயன்படுத்தப்படும். இந்த எடுத்துக்காட்டில், உங்கள் ஸ்டோர் அமெரிக்காவில் அமைந்துள்ளது, மேலும் €150 EUR என்பதன் மாற்றப்பட்ட மொத்தம் $158.97 USD ($1 USD = €0.94364EUR) ஆகும். ஆர்டரின் மொத்தப் பிரிப்புப் பின்வருமாறு:

வாடிக்கையாளர் செலுத்துவது

  • சட்டையின் விலை €120 EUR
  • சுங்க வரிகள் €5 EUR ($5.30 USD நிறுத்திவைக்கப்பட்டது)
  • வரிகள் மற்றும் VAT €10 EUR ($10.60 USD நிறுத்திவைக்கப்பட்டது)
  • சர்வதேச ஷிப்பிங் செலவு €15 EUR

இந்த எடுத்துக்காட்டில், உங்கள் வாடிக்கையாளர் Global-e க்கு €150 EUR செலுத்துகிறார். Global-e பின்வரும் செலவுகளைச் செலுத்துகிறது:

  • அரசாங்கத்திற்கு €10 EUR வரி/VAT செலவு
  • சுங்க முகமைகளுக்கு €5 EUR சுங்க வரிச் செலவு

நீங்கள் செலுத்துவது

  • $6.50 USD (மொத்த ஆர்டர் மதிப்பில் 3.9% + $0.30 USD) மதிப்பிலான Shopify Payments செயலாக்கக் கட்டணங்கள்
    • Shopify Payments கட்டணங்கள் உங்களின் Shopify திட்டம் மற்றும் பரிவர்த்தனையில் உங்கள் வாடிக்கையாளர் பயன்படுத்திய கட்டண முறை ஆகியவற்றைப் பொறுத்தது. உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள பேமெண்ட்டுகள் பக்கத்தில் தற்போதைய கட்டணங்களைக் கண்டறியலாம்.
  • $5.56 USD (மொத்த ஆர்டர் மதிப்பில் 3.5%) மதிப்பிலான Managed Markets கட்டணம்
    • Shopify Plus இக்கான Managed Markets கட்டணம் 3.25%
  • நாணய மாற்றத்திற்காக நாணய FX கட்டணமான $2.38 USD செலுத்தப்படுகிறது. மொத்த ஆர்டர் மதிப்பின் ($158.97 USD) அடிப்படையில் FX கட்டணம் கணக்கிடப்படும்.

விலைச் சரிசெய்தல்களைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் செலுத்தும் தொகையுடன் இந்தத் தொகைகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தச் செலவுகள் அனைத்தும் கழிக்கப்பட்ட பிறகு, $128.63 USD உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங்கிற்காக எவ்வளவு கட்டணம் விதிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவுசெய்ய வேண்டும். சிறந்த மாற்றத்திற்காக ஷிப்பிங் கட்டணப் பரிந்துரைகளை Managed Markets உள்ளடக்கியுள்ளது. உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து நீங்கள் வசூலிக்கும் ஷிப்பிங் கட்டணம் உங்களின் பேஅவுட்டில் சேர்க்கப்படும். நீங்கள் வாங்கும் ஷிப்பிங் லேபிளின் செலவானது உங்கள் Shopify கணக்கில் உள்ள கிரெடிட் கார்டிலிருந்து வசூலிக்கப்படும்.

சர்வதேச விலை நிர்ணயத்துடன் Managed Markets பேஅவுட்களைக் கணக்கிடுதல்

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உள்ள உங்கள் ஸ்டோரில் ஒரு சட்டையின் விலையானது உங்களின் உள்ளூர் நாணயத்தில் $180 USD என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், அதை இங்கிலாந்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இந்தச் சட்டையின் ஆர்டருக்கான கணக்கீடுகளின் பிரிப்புப் பின்வருமாறு:

  • சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் $57.68 USD.
  • 3.25% Managed Markets கட்டணம் $8.11 USD ஆகும்.
  • 1.5% நாணய மாற்றக் கட்டணம் $3.74 USD ஆகும்.
  • உங்கள் உருப்படிக்கான துணை மொத்தம் $249.53 USD.
  • நாணய மாற்றம் மற்றும் முழுமையாக்கலுக்குப் பிறகு, உங்கள் வாடிக்கையாளருக்கான உங்கள் ஸ்டோரில் உள்ள உருப்படியின் விலை £185 GBP ஆகும்.

உங்கள் வாடிக்கையாளர் சட்டையை வாங்கி DHL eCommerce Parcel Direct மூலம் ஷிப்பிங்கிற்குச் செலுத்துகிறார். சுங்க வரிகள், இறக்குமதி வரிகள் மற்றும் கட்டணங்களை உங்கள் வாடிக்கையாளர் ஏற்கனவே செலுத்திவிட்டதால், உங்கள் பேஅவுட் பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது:

ஆர்டரின் மொத்தச் செலவு – Shopify Payments கட்டணம் = செலுத்திய தொகை

இந்த எடுத்துக்காட்டில், உங்கள் பேஅவுட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • உங்கள் தயாரிப்புக்கான உங்கள் பேஅவுட் $180 USD.
  • ஷிப்பிங் கட்டணங்களுக்கான உங்கள் பேஅவுட் $14.58 USD.
  • உங்கள் மொத்தப் பேஅவுட் $194.58 USD.
  • உங்கள் Shopify Payments கட்டணம் $9.04 USD.

உங்கள் பேஅவுட்களில் சேர்க்கப்பட்ட நிகரத் தொகை $185.54 USD (194.58 – 9.04 = 185.54) ஆகும்.

மோசடி மற்றும் சார்ஜ்பேக்குகள்

அமெரிக்காவில் உள்ள ஸ்டோர்களுக்குப் பொருத்தமான Managed Markets ஆர்டர்கள் Shopify Protect மூலம் தானாகவே பாதுகாக்கப்படுகின்றன. மோசடியான மற்றும் அங்கீகரிக்கப்படாத சார்ஜ்பேக்குகள் போன்ற மோசடிகளிலிருந்து கட்டணத் திருப்பப் பாதுகாப்பை Shopify Protect வழங்குகிறது.

Managed Markets உடன் உள்ளூர் கட்டண முறைகள்

Managed Markets மூலம், உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்காக நீங்கள் பல உள்ளூர் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் டென்மார்க்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை விற்றால், அந்த வாடிக்கையாளர்கள் DKK நாணயத்தைப் பயன்படுத்தி Klarna மூலம் தயாரிப்புகளுக்குப் பணம் செலுத்தலாம்.

Managed Markets இல் புதிய உள்ளூர் கட்டண முறைகள் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன.

Shopify Payments மூலம் தற்போது கிடைக்கக்கூடிய உள்ளூர் கட்டண முறைகள், அவை செயல்படும் புவியியல் பகுதிகள் மற்றும் கிடைக்கக்கூடிய நாணயங்கள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணைகளை மதிப்பாய்வு செய்யவும்.

அமெரிக்காவில் உள்ள Managed Markets இல் கிடைக்கக்கூடிய உள்ளூர் கட்டண முறைகள்

அமெரிக்க Managed Markets உள்ளூர் கட்டண முறைகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பிராந்தியங்கள் மற்றும் நாணயங்களின் பட்டியல்.
கட்டண முறைநாடுநாணயம்
Klarnaஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துEUR
ஐக்கிய இராச்சியம்GBP
டென்மார்க்DKK
நார்வேNOK
ஸ்வீடன்SEK
போலந்துPLN
MobilePayடென்மார்க் மற்றும் பின்லாந்துEUR, DKK, SEK மற்றும் NOK
Blikபோலந்துPLN
EPSஆஸ்திரியாEUR
Multibancoபோர்ச்சுகல்EUR
Bancontactபெல்ஜியம்EUR

ஐக்கிய இராச்சியத்தில் Managed Markets இல் கிடைக்கக்கூடிய உள்ளூர் கட்டண முறைகள்

யுகே Managed Markets உள்ளூர் கட்டண முறைகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பிராந்தியங்கள் மற்றும் நாணயங்களின் பட்டியல்.
கட்டண முறைநாடுநாணயம்
Klarnaஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துEUR
ஐக்கிய இராச்சியம்GBP
டென்மார்க்DKK
நார்வேNOK
ஸ்வீடன்SEK
போலந்துPLN
MobilePayடென்மார்க் மற்றும் பின்லாந்துEUR, DKK, SEK மற்றும் NOK
Blikபோலந்துPLN
EPSஆஸ்திரியாEUR
Multibancoபோர்ச்சுகல்EUR
Bancontactபெல்ஜியம்EUR

கனடாவில் Managed Markets இல் கிடைக்கக்கூடிய உள்ளூர் கட்டண முறைகள்

கனடா Managed Markets உள்ளூர் கட்டண முறைகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பிராந்தியங்கள் மற்றும் நாணயங்களின் பட்டியல்.
கட்டண முறைநாடுநாணயம்
MobilePayடென்மார்க் மற்றும் பின்லாந்துEUR, DKK, SEK மற்றும் NOK
Blikபோலந்துPLN
EPSஆஸ்திரியாEUR
Multibancoபோர்ச்சுகல்EUR
Bancontactபெல்ஜியம்EUR