சர்வதேச டொமைன்கள்
சர்வதேச டொமைன் என்பது ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கான குறிப்பிட்ட இணைய முகவரி அல்லது URL ஆகும். ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு நீங்கள் சர்வதேச டொமைன்களை அமைக்கும் போது, அந்தப் பிராந்தியத்திற்கான நாணயம் மற்றும் மொழியில் உங்களின் ஆன்லைன் ஸ்டோரின் உள்ளூர் பதிப்பை உருவாக்குகிறீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரின் சரியான பதிப்பைக் கண்டறிய உதவ, தேடல் முடிவுகளில் பிராந்தியம் சார்ந்த டொமைன்களையும் நீங்கள் காட்டலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் வாடிக்கையாளரின் உள்ளூர் மொழி மற்றும் நாணயத்தில் காட்டப்படும்போது, வாடிக்கையாளர்கள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உள்ளூர்மயமாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவங்கள் உங்கள் பிராண்டை வாடிக்கையாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும், அவர்கள் எவ்வளவு விரைவாகக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதையும் பாதிக்கின்றன. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் வாடிக்கையாளரின் உள்ளூர் மொழி மற்றும் நாணயத்தில் காட்டப்படும்போது, வாடிக்கையாளர்கள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்வதேச டொமைன்களை அமைப்பதன் மூலம், நீங்கள் பிற நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம், மேலும் ஒரு சர்வதேச பிராண்டாக உங்கள் நற்பெயரைக் கட்டியெழுப்பலாம்.
Shopify-நிர்வகிக்கும் டொமைன்கள் மற்றும் மூன்றாம் தரப்பு டொமைன்கள் ஆகிய இரண்டின் மூலமும் நீங்கள் சர்வதேச டொமைன்களை அமைக்கலாம். நீங்கள் உயர்மட்ட டொமைன்கள், துணை டொமைன்கள், துணைப் கோப்புறைகள் அல்லது ஒவ்வொன்றின் கலவையையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வெவ்வேறு மொழிகள் மற்றும் நாணயங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளிலும் விற்றால், நீங்கள் சர்வதேச டொமைன்களைப் பயன்படுத்தலாம்:
- அமெரிக்காவிற்கு
example.com - பிரான்ஸிற்கு
example.fr,fr.example.comஅல்லதுexample.com/fr-fr
இந்தப் பக்கத்தில்
- கவனிக்க வேண்டியவை
- குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கான தனித்துவமான URLகள்
- உங்கள் சர்வதேச டொமைன்களுக்கான சிறந்த SEO உத்தியைத் தேர்ந்தெடுத்தல்
- குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கான தனித்துவமான URLகளை அமைத்தல்
- Markets இல் குறிப்பிட்ட சந்தைகளுக்கான டொமைன்கள் மற்றும் மொழிகளை அமைத்தல்
- சர்வதேச டொமைன்களை நிர்வகித்தல்
- சரியான நாடு அல்லது பிராந்தியத்திற்கு வாடிக்கையாளர்களை வழிநடத்துதல்
- சர்வதேச டொமைன்களில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
கவனிக்க வேண்டியவை
நீங்கள் சர்வதேச டொமைன்களை அமைப்பதற்கு முன், பின்வரும் தேவைகள் மற்றும் கவனிக்க வேண்டியவற்றை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் ஸ்டோரின் myshopify.com டொமைனிலிருந்து உங்களால் சர்வதேச டொமைன்களை உருவாக்க முடியாது. Shopify அல்லது மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் மூலம் வாங்கப்பட்ட தனிப்பயன் டொமைனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
- ஜெர்மன் சந்தைக்கு
example.deஅல்லது ஐரோப்பியச் சந்தைக்குexample.com/en-euபோன்று ஒவ்வொரு தனிப்பட்ட சந்தைக்கும் நீங்கள் ஒரு URLஐ உருவாக்கலாம். .caமற்றும்.frபோன்ற சில நாடு சார்ந்த டொமைன்களில், Shopify மூலம் ஒரு டொமைனை வாங்கும் போது நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது வணிகப் பதிவுத் தேவைகள் உள்ளன.- ஒரு சந்தைக்கு வேறு டொமைன் அல்லது துணைக்கோப்புறையை ஒதுக்கும் வரை, நீங்கள் சந்தைக்கு ஒதுக்கும் டொமைன் அல்லது துணை டொமைனை உங்கள் ஸ்டோரின் முதன்மை டொமைனாக அமைக்க முடியாது.
- உங்கள் ஸ்டோரைப் பல மொழிகளில் காட்ட, Translate and Adapt செயலியைப் பயன்படுத்தி அல்லது இணக்கமான மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தி, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில்
example.com/frஎன்ற URL வடிவமைப்பில் ஏற்கனவே பல மொழிகளைப் பயன்படுத்தினால், உங்கள் தற்போதைய URL-கள் தொடர்ந்து செயல்படும்./frஅல்லது/enபோன்ற மொழி மட்டும் உள்ள துணைக்கோப்புறைகள், உங்கள் முதன்மைச் சந்தையில் மட்டுமே இருக்க முடியும். உங்கள் இரண்டாம் நிலைச் சந்தைகளில், உள்ளூர் மொழிகள் மற்றும் நாணயங்களில் தனிப்பயனாக்கிய உள்ளடக்கத்தைக் காட்ட, துணைக்கோப்புறைகளில் மொழிக் குறியீட்டுடன் நாட்டுக் குறியீடும் இணைந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு,/fr-caஅல்லது/en-eu. சர்வதேச விற்பனைக் கருவிகளுடன் பல மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக. - ஒரு சந்தைக்குச் சர்வதேச டொமைன்கள் அல்லது துணைக்கோப்புறைகளைப் பயன்படுத்திய பிறகு, அச்சந்தையின் உள்ளடக்கத்தை அகற்றினால், வாடிக்கையாளர்கள் இல்லாத ஒரு பக்கத்திற்குச் செல்வதைத் தவிர்க்க, URL திசைதிருப்பல்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.
- பல நாணயங்களில் விற்க, Shopify Payments-ஐச் செயல்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கான தனித்துவமான URL-கள்
சர்வதேச டொமைன்களை அமைக்கும் போது, நீங்கள் உள்ளூர்மயமாக்கிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க விரும்பும் ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும் தனித்துவமான இணைய முகவரி அல்லது URL-ஐ உருவாக்க வேண்டும். உங்கள் ஸ்டோரின் மொழிகள் மற்றும் நாணயங்களை நீங்கள் எப்படி உள்ளமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு URL-உம் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் உள்ளூர்மயமாக்கிய பதிப்பைக் குறிக்கும். நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தினால், ஒவ்வொரு URL-இன் இயல்புநிலை நாணயத்தையும், அந்த நாடு அல்லது பிராந்தியத்தின் உள்ளூர் நாணயத்திற்கு நீங்கள் அமைக்கலாம்.
நீங்கள் இலக்கு வைக்க விரும்பும் ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும் தனித்துவமான URL-களை அமைக்கலாம்:
example.frபோன்ற உயர்மட்ட டொமைன்கள்fr.example.comபோன்ற துணை டொமைன்கள்example.com/fr-frபோன்ற துணைக்கோப்புறைகள்
உங்கள் தேடுபொறி உகப்பாக்க (SEO) உத்தியைப் பொறுத்து, ஒரு முறையை அல்லது பல முறைகளின் கலவையைப் பயன்படுத்தலாம். முதல் முறையாகச் சர்வதேச விற்பனைக் கருவிகளை அமைக்கிறீர்கள் என்றால், அமைப்பதற்கு எளிதான மற்றும் SEO பலன்களை வழங்கும் துணைக்கோப்புறைகளைப் பயன்படுத்துவதைக் கவனத்தில் கொள்ளவும்.
குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குச் சர்வதேச டொமைன்களை அமைக்க, பின்வரும் பணிகளை நிறைவுசெய்ய வேண்டும்:
- உங்கள் சர்வதேச டொமைன்களுக்குச் சிறந்த SEO உத்தியைத் தேர்வுசெய்யவும்.
- நீங்கள் உள்ளூர்மயமாக்கிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க விரும்பும் ஒவ்வொரு இலக்குச் சந்தைக்கும் ஒரு தனித்துவமான URL-ஐச் சேர்க்கவும்.
உங்கள் சர்வதேச டொமைன்களை அமைத்த பிறகு, வாடிக்கையாளர்களின் மொழி மற்றும் இருப்பிட விருப்பத்தேர்வுகளுக்குப் பொருந்தும் URL-க்கு அவர்களைத் திசைதிருப்ப வேண்டும்.
உங்கள் சர்வதேச டொமைன்களுக்கான சிறந்த SEO உத்தியைத் தேர்வுசெய்தல்
சர்வதேச டொமைன்களை அமைப்பதற்கான ஒவ்வொரு முறைக்கும் தேடுபொறி உகப்பாக்கம் (SEO) குறித்த சொந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. உங்கள் பிராந்தியம் சார்ந்த URL-களை உருவாக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.
எந்த முறையைப் பயன்படுத்துவது என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், தொடங்குவதற்கு முன் பின்வரும் தகவல்களைச் சரிபார்க்கவும்.
துணைக்கோப்புறைகளுக்கான SEO கட்டுப்பாடுகள்
துணைக்கோப்புறைகள் என்பவை உங்கள் முதன்மை டொமைனுக்குள் உள்ள துணை அடைவுகள் அல்லது பாதைகளாகும், இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உலாவும் போது முகவரிப் பட்டியில் காட்டப்படும். உதாரணத்திற்கு, உங்கள் ஸ்டோரின் முதன்மை டொமைன் example.com எனில், நீங்கள் கனடாவுக்கு example.com/en-ca என்ற URL-ஐக் கொண்ட துணைக்கோப்புறையையும், பிரான்ஸுக்கு example.com/fr-fr என்ற URL-ஐக் கொண்ட துணைக்கோப்புறையையும் உருவாக்கலாம்.
முதல் முறையாகச் சர்வதேச விற்பனைக் கருவிகளை அமைக்கிறீர்கள் என்றால், பின்வரும் காரணங்களுக்காகத் துணைக்கோப்புறைகளே சிறந்த விருப்பத்தேர்வாகும்:
- துணைக்கோப்புறைகளுக்கு மிகக் குறைவான அமைவுப் பணிகள் போதும்.
- பார்வையாளர்களின் மொழி மற்றும் இருப்பிட விருப்பத்தேர்வுகளுக்குப் பொருந்தும் URL-க்கு அவர்களைத் தானாகவே திசைதிருப்பத் துணைக்கோப்புறைகள் அனுமதிக்கின்றன.
- துணைக்கோப்புறைகள் உங்கள் முதன்மை டொமைனைப் பயன்படுத்துவதால், உங்கள் பிராந்தியம் சார்ந்த URL-கள் உங்கள் ஸ்டோரின் தற்போதைய தேடல் தரவரிசை மற்றும் டொமைன் அங்கீகாரத்திலிருந்து பலன்களைப் பெறுகின்றன.
துணை டொமைன்களுக்கான SEO கட்டுப்பாடுகள்
துணை டொமைன்கள் என்பவை உங்கள் டொமைனில் முன்னொட்டாகச் சேர்க்கும் முதன்மை டொமைனின் துணைப் பிரிவுகளாகும். உதாரணத்திற்கு, உங்கள் ஸ்டோரின் முதன்மை டொமைன் example.com எனில், கனடாவுக்கு ca.example.com என்ற URL-ஐக் கொண்ட துணை டொமைனையும், பிரான்ஸுக்கு fr.example.com என்ற URL-ஐக் கொண்ட துணை டொமைனையும் உருவாக்கலாம்.
துணை டொமைன்கள் உங்களின் முதன்மை டொமைனுக்குச் சொந்தமானவை என்பதால், Shopify நிர்வகிக்கும் டொமைன்கள் மற்றும் மூன்றாம் தரப்பு டொமைன்கள் ஆகிய இரண்டிலுமே அவற்றை இலவசமாக அமைக்கலாம். இருப்பினும், உங்கள் முதன்மை டொமைனின் தேடல் தரவரிசை மற்றும் முக்கியச் சொற்களிலிருந்து துணைக்கோப்புறைகள் பெறும் அளவுக்கு அவை அதிகப் பலன்களைப் பெறாது, அதோடு டொமைன் அங்கீகாரத்தைப் பெற அதிக நேரமும் ஆகலாம்.
உயர்மட்ட டொமைன்களுக்கான SEO கட்டுப்பாடுகள்
உயர்மட்ட டொமைன்கள் என்பவை டொமைனின் முடிவில் உள்ள நீட்டிப்பாகும். உங்கள் பிராந்தியம் சார்ந்த URL-களுக்கு உயர்மட்ட டொமைன்களைப் பயன்படுத்த, நீங்கள் அமைக்க விரும்பும் ஒவ்வொரு இலக்குச் சந்தைக்கும், நாட்டின் குறியீட்டைக் கொண்ட உயர்மட்ட டொமைன் (ccTLD) நீட்டிப்புடன் ஒரு தனி டொமைன் பெயரை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் ஸ்டோரின் முதன்மை டொமைன் example.com எனில், கனடாவுக்கு example.ca என்ற டொமைனையும், பிரான்ஸுக்கு example.fr என்ற டொமைனையும் வாங்கலாம்.
நீங்கள் விரிவுபடுத்தும் புதிய சந்தைக்கான குறிப்பிட்ட இலக்கு உத்தி இருந்தால் மட்டுமே உயர்மட்ட டொமைன்களைப் பயன்படுத்தவும். உயர்மட்ட டொமைன்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், உங்கள் ஸ்டோரின் ஒவ்வொரு பிராந்தியம் சார்ந்த பதிப்பும் அதன் சொந்த டொமைன் அங்கீகாரம் மற்றும் தேடல் தரவரிசையை உருவாக்கும். இதன் விளைவாக, உங்கள் SEO-ஐ உருவாக்க இந்த முறைக்கு அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும்.
உங்கள் முதன்மை டொமைனை மட்டும் பயன்படுத்துவதற்கான SEO கட்டுப்பாடுகள்
வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உலாவும் போது, முகவரிப் பட்டியில் காட்டப்படும் டொமைன் பெயரே உங்கள் முதன்மை டொமைனாகும்.
பிராந்தியம் சார்ந்த URL-களை உருவாக்காமலேயே, வெவ்வேறு மொழிகள் மற்றும் நாணயங்களுடன் உள்ளூர்மயமாக்கிய ஷாப்பிங் அனுபவங்களை வழங்க இந்த முறை அனுமதிக்கும். இதற்குப் பதிலாக, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு மொழிக்கும் நாணயத்திற்கும் அதே URL பயன்படுத்தப்படும்.
பிராந்தியம் சார்ந்த URL-கள் உருவாக்கப்படாததால், இரண்டாம் நிலைச் சந்தைகளில் இருந்து SEO டிராஃபிக்கைப் பெற இந்த முறை உதவாது.
குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குத் தனித்துவமான URL-களை அமைக்கவும்
சர்வதேச டொமைன்களை அமைக்கும் போது, நீங்கள் உள்ளூர்மயமாக்கிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க விரும்பும் ஒவ்வொரு சந்தைக்கும் ஒரு தனித்துவமான இணைய முகவரி அல்லது URL-ஐச் சேர்ப்பீர்கள். ஒரு முறையை அல்லது பல முறைகளின் கலவையைப் பயன்படுத்தி, நீங்கள் தனித்துவமான URL-களை அமைக்கலாம், அத்துடன் எந்த நேரத்திலும் முறைகளை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த முறையைப் பயன்படுத்துவது என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், தொடங்குவதற்கு முன் வெவ்வேறு சர்வதேச டொமைன்களுக்கான SEO உத்திகளைச் சரிபார்க்கவும். முதல் முறையாகச் சந்தைகளை அமைக்கிறீர்கள் என்றால், அமைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த SEO பலன்களை வழங்கும் துணைக்கோப்புறைகளே எளிமையான விருப்பத்தேர்வாகும்.
இயல்பாகவே, உங்கள் சந்தைகளை உருவாக்கும் போது உங்கள் ஸ்டோரின் முதன்மை மொழி மட்டுமே செயல்படும். நீங்கள் பல மொழிகளில் விற்றால், அத்துடன் துணைக்கோப்புறைகள், துணை டொமைன்கள் அல்லது உயர்மட்ட டொமைன்களைப் பயன்படுத்திச் சர்வதேச டொமைன்களை அமைத்தால், ஒவ்வொரு சந்தைக்கும் கூடுதல் மொழிகளைச் செயல்படுத்தலாம். நீங்கள் பல மொழிகளில் விற்கவில்லை என்றால், உங்கள் முதன்மை மொழி மட்டுமே கிடைக்கும். பல மொழிகளில் விற்பது குறித்து மேலும் அறிக.
உங்கள் முதன்மை டொமைனை மட்டும் பயன்படுத்தி இலக்குச் சந்தைகளை அமைத்தல்
உங்கள் முதன்மை டொமைனை மட்டும் பயன்படுத்த உங்கள் சந்தைகளை அமைக்கும்போது, உங்களின் Shopify நிர்வாகியில் மேற்கொண்டு எந்த விருப்பத்தேர்வுகளையும் உள்ளமைக்க வேண்டியதில்லை. அனைத்துச் சந்தைகளுமே ஒரே ஸ்டோர் URL-ஐப் பயன்படுத்துவதால், ஒவ்வொரு சந்தைக்கும் எந்தெந்த மொழிகள் கிடைக்க வேண்டும் என்பதைத் தனிப்பயனாக்க முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நிர்வகிக்க விரும்பும் சந்தையின் பெயரைக் கிளிக் செய்யவும்.
சந்தை அமைப்புகள் பிரிவில், மொழிகள் மற்றும் டொமைன்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்து, முதன்மைச் சந்தை உள்ளமைவைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முதன்மைச் சந்தையில் பல டொமைன்களைச் சேர்த்தல்
உங்கள் முதன்மை இலக்குச் சந்தைக்குப் பயன்படுத்த விரும்பும் பல டொமைன்கள் உங்களிடம் இருந்தால், அந்தச் சந்தையில் கூடுதல் டொமைன்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் முதன்மைச் சந்தை கனடாவாக இருந்து, பிரத்தியேகப் பிராந்திய டொமைன்கள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு அனுபவங்களை வழங்க விரும்பினால், அந்த இரண்டு டொமைன்களையும் உங்கள் கனடா சந்தையில் சேர்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
முதன்மை சந்தையின் பெயரைக் கிளிக் செய்யவும்.
சந்தை அமைப்புகள் பிரிவில், மொழிகள் மற்றும் டொமைன்கள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் டொமைன்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்களை நிர்வகி உரையாடலில், பல டொமைன்களைப் பயன்படுத்து > + ஏற்கனவே உள்ள டொமைனைச் சேர் அல்லது புதிய ஒன்றை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் சேர்க்க விரும்பும் டொமைனைத் தேர்ந்தெடுக்கவும்.
இயல்புநிலை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து டொமைனுக்கான இயல்புநிலை மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்கள் அல்லது துணை டொமைன்களைப் பயன்படுத்தி இலக்குச் சந்தைகளை அமைத்தல்
உங்கள் பிராந்தியம் சார்ந்த URLகளுக்கு மேல்-நிலை டொமைன்கள் அல்லது துணை டொமைன்களைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் அமைக்க விரும்பும் ஒவ்வொரு சந்தைக்கும் டொமைன் அல்லது துணை டொமைனைச் சேர்க்க வேண்டும். உங்கள் டொமைன்கள் அல்லது துணை டொமைன்களைச் சேர்த்த பிறகு, அவற்றை அதற்கேற்ற இலக்குச் சந்தைகளுக்கு ஒதுக்கி, நீங்கள் காட்ட விரும்பும் மொழிகளைச் செயல்படுத்த வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
பிரத்தியேக டொமைனை ஒதுக்க விரும்பும் சந்தையின் பெயரைக் கிளிக் செய்யவும்.
சந்தை அமைப்புகள் பிரிவில், மொழிகள் மற்றும் டொமைன்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பிரத்தியேக டொமைன்/துணை டொமைனைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
டொமைன் அல்லது துணை டொமைன் பட்டியலிலிருந்து, இந்தச் சந்தைக்கு ஒதுக்க விரும்பும் மேல்-நிலை டொமைன் அல்லது துணை டொமைனைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: மொழிகள் பிரிவில், இந்தச் சந்தைக்கு நீங்கள் செயல்படுத்த விரும்பும் மொழிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்கள் அல்லது துணை டொமைன்களைப் பயன்படுத்தி இலக்குச் சந்தைகளை அமைத்த பிறகு, தொடர்புடைய டொமைன் அல்லது துணை டொமைன் உங்கள் Shopify நிர்வாகியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை நீங்கள் வேறு முறைக்கு மாறலாம். டொமைன் அல்லது துணை டொமைனை நீங்கள் அகற்றினால், அந்தப் பிராந்தியம் சார்ந்த URLஐப் பார்வையிட முயற்சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 404 பிழைப் பக்கம் காட்டப்படும்.
துணை கோப்புறைகளைப் பயன்படுத்தி இலக்குச் சந்தைகளை அமைத்தல்
துணை கோப்புறைகளைப் பயன்படுத்தி தனித்துவமான URLகளை அமைக்கும்போது, சந்தை ஆதரிக்கும் ஒவ்வொரு மொழிக்கான இரண்டு-எழுத்து மொழிப் பின்னொட்டுக்குப் பிறகு, உங்கள் URLஇன் முடிவில் காட்டப்படும் பிராந்தியம் சார்ந்த பின்னொட்டைச் சேர்க்கிறீர்கள். நீங்கள் பல மொழிகளில் விற்பனை செய்தால், ஒவ்வொரு சந்தைக்கும் பல மொழிகளைச் செயல்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, example.com இல் அமெரிக்கா உங்களின் முதன்மைச் சந்தையாக இருந்தால், example.com/en-ca இல் கனடாவிற்கான சந்தையை இலக்காகக் கொள்ள நீங்கள் துணை கோப்புறைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் கனேடிய வாடிக்கையாளர்களுக்கும் பிரஞ்சு மொழியை ஒரு மொழி விருப்பமாக வழங்க முடிவு செய்தால், example.com/fr-ca என்ற தனித்துவமான துணை கோப்புறையும் அதற்குக் கிடைக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
துணை கோப்புறையை அமைக்க விரும்பும் சந்தையின் பெயரைக் கிளிக் செய்யவும்.
சந்தை அமைப்புகள் பிரிவில், மொழிகள் மற்றும் டொமைன்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
டொமைன்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்து, துணை கோப்புறைகளைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
டொமைன் பின்னொட்டு பெட்டியில், உங்கள் இலக்குச் சந்தைக்கான பிராந்தியம் சார்ந்த பின்னொட்டை உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவிற்கு
euஅல்லது கனடாவிற்குca.விருப்பத்தேர்வு: மொழிகள் பிரிவில், இந்தச் சந்தைக்கு நீங்கள் செயல்படுத்த விரும்பும் மொழிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முதன்மை டொமைனைப் பயன்படுத்தி துணை கோப்புறைகள் உருவாக்கப்படுகின்றன. உங்கள் முதன்மை டொமைனை மாற்றினால், உங்கள் துணை கோப்புறையின் URLகளும் மாறும்.
துணை கோப்புறைகளைப் பயன்படுத்தும் சந்தையை நீக்க நீங்கள் பின்னர் முடிவு செய்தால், அந்தப் பிராந்தியம் சார்ந்த URLஐப் பார்வையிட முயற்சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 404 பிழைப் பக்கம் காட்டப்படும். அந்த வாடிக்கையாளர்களை உங்கள் முதன்மை டொமைனுக்கோ மற்றொரு பிராந்தியம் சார்ந்த URLஇற்கோ திசைதிருப்ப, CSV கோப்பைப் பயன்படுத்தி URL திசைதிருப்பல்களை இறக்குமதி செய்யலாம்.
சந்தைகள் பிரிவில் குறிப்பிட்ட சந்தைகளுக்கான டொமைன்கள் மற்றும் மொழிகளை அமைத்தல்
ஒவ்வொரு சந்தைக்கும், உங்களின் ஸ்டோர்ஃபிரண்டிற்கு எந்த டொமைன் மற்றும் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.
டொமைன் / மொழி என்பதற்கு அடுத்துள்ள
+ஐகானைக் கிளிக் செய்யவும்.சந்தைக்குப் பயன்படுத்த வேண்டிய மொழி மற்றும் டொமைன் பின்னொட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
மேல் பட்டியில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சர்வதேச டொமைன்களை நிர்வகித்தல்
உங்களின் சர்வதேச டொமைன்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் பராமரிப்பதும், வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரை அணுகுவதை உறுதிசெய்ய உதவுகிறது.
டொமைன்களைத் திருத்துதல்
உங்கள் Shopify நிர்வாகியில் அமைப்புகள் > டொமைன்கள் என்பதன் கீழ், நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- உங்களின் DNS அமைப்புகளை அமைத்தல் அல்லது மாற்றுதல்
- வெவ்வேறு பிராந்தியங்களுக்கு புதிய துணை டொமைன்களைச் சேர்த்தல்
- உங்கள் பாதுகாப்புச் சான்றிதழ்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல்
செயல்திறனைத் தடமறிதல்
வெவ்வேறு பிராந்தியங்களில் உங்கள் ஸ்டோர் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள Shopify Analytics உதவுகிறது:
- உங்களைப் பார்வையிடுபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பார்த்தல்
- எந்தப் பிராந்தியங்களில் அதிக விற்பனை நடக்கிறது என்பதைச் சரிபார்த்தல்
- வாடிக்கையாளர்கள் எந்த மொழிகள் மற்றும் நாணயங்களை விரும்புகிறார்கள் என்பதைப் பார்த்தல்
முறைகளை மாற்றுதல்
தேவைப்பட்டால் உங்கள் டொமைன்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை மாற்றலாம்:
- துணை டொமைன்கள் அல்லது துணை கோப்புறைகள் போன்ற வெவ்வேறு URL வகைகளுக்கு இடையே மாறுதல்
- மாற்றங்களைச் செய்யும்போது உங்கள் தேடல் தரவரிசைகளைத் தக்கவைத்தல்
- உங்கள் ஸ்டோரின் மொழி அமைப்புகளைப் புதுப்பித்தல்
அடுத்த படிகள்
உங்கள் பிராந்தியம் சார்ந்த URLகளை அமைத்த பிறகு, Google Search Console இல் உள்ள ஒவ்வொரு டொமைன் மற்றும் துணை டொமைனுக்கும் தளவரைபடத்தைச் சமர்ப்பிக்க கருத்தில் கொள்ளுங்கள். இது உங்கள் ஸ்டோரின் புதிய தளவமைப்பை Google அட்டவணைப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்களைச் சரியான நாடு அல்லது பிராந்தியத்திற்கு வழிநடத்துதல்
பல்வேறு மொழிகள் மற்றும் நாணயங்களுடன் உங்கள் சந்தைகளை அமைத்த பிறகு, வாடிக்கையாளர்களை அவர்களின் உள்ளூர்மயமாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவங்களுக்கு நீங்கள் திசைதிருப்ப வேண்டும். வாடிக்கையாளர்களின் மொழி மற்றும் இருப்பிட விருப்பத்தேர்வுகளுக்குப் பொருந்தக்கூடிய உங்கள் ஸ்டோரின் சரியான பதிப்பைக் கண்டறிய உதவ, நீங்கள் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம்:
- தானியங்கி டொமைன் திசைதிருப்பல் - உங்கள் Shopify நிர்வாகியில் இந்த அமைப்பை நீங்கள் செயல்படுத்தும்போது, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் உலாவிப் பதிவுசெய்துள்ள மொழி மற்றும் புவியியல் இருப்பிடத்துடன் பொருந்துகின்ற URL-க்குத் தானாகவே திசைதிருப்பப்படுவார்கள்.
- புவிஇருப்பிடச் செயலிகள் - வாடிக்கையாளர்களின் புவியியல் இருப்பிடம் மற்றும் உலாவி அல்லது சாதன மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மொழி மற்றும் நாட்டுப் பரிந்துரைகளை வழங்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய இணக்கமான மூன்றாம் தரப்புச் செயலிகள்.
- டீப் லிங்குகள் - ஒரே சந்தையில் பல நாடுகள் இருக்கும்போது அல்லது சந்தைக்கு எனச் சொந்த URL இல்லாதபோது, டீப் லிங்கைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அவர்களின் நாடு அல்லது பிராந்தியத்துக்கான சரியான அனுபவத்திற்கு நேரடியாக நீங்கள் அனுப்பலாம்.
டீப் லிங்குகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அவர்களின் நாடு அல்லது பிராந்தியத்திற்குத் திசைதிருப்பல்
வாடிக்கையாளர்களை அவர்களின் நாடு அல்லது பிராந்தியத்திற்கான சரியான அனுபவத்திற்கு நேரடியாக நீங்கள் அனுப்ப விரும்பும்போது, அந்த நாட்டிற்கு அல்லது பிராந்தியத்திற்கு எனச் சொந்த URL இல்லை எனில், நீங்கள் டீப் லிங்குகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தை இலக்காகக் கொண்ட சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள், சமூகப் பகிர்வு அல்லது ஏதேனும் இணைப்புப் பகிர்வில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு அளவுருவை உங்கள் URL-களின் இறுதியில் நீங்கள் கைமுறையாகச் சேர்ப்பதை டீப் லிங்குகள் பயன்படுத்துகின்றன. ISO 3166 தரநிலைகளின்படி இரண்டு இலக்க நாட்டுக் குறியீடுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைச் சரியான நாடு அல்லது பிராந்தியத்திற்கு அனுப்பும் ஒரு அளவுருவை நீங்கள் உருவாக்கலாம்.
எடுத்துக்காட்டாக, example.com என்ற டொமைனில் 44 நாடுகளைக் கொண்ட Europe என்ற பெயரிலான சந்தை உங்களிடம் உள்ளது. ஜெர்மனிக்காகப் பிரத்தியேகமாகச் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்; இது உங்களின் ஜெர்மன் பார்வையாளர்களைச் சரியான அனுபவத்திற்கு நேரடியாக அனுப்புகிறது. அப்படிச் செய்வதற்கு, நீங்கள் example.com?country=DE என்ற URL-ஐப் பயன்படுத்த வேண்டும்.
hreflang டேக்குகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அவர்களின் பிராந்தியம் சார்ந்த URL-க்குத் திசைதிருப்பல்
உங்களின் தீமில் உள்ள குறியீட்டு கூறுகள்தான் hreflang டேக்குகள்; இவை ஒரு இணையதளம் எந்த மொழி மற்றும் பிராந்தியத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பதைத் தீர்மானிக்கத் தேடுபொறிகளை அனுமதிக்கின்றன. பின்னர் வாடிக்கையாளரின் மொழி மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பொருத்தமான URL-ஐ வழங்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை URL example.com ஆகவும், ஸ்பானிஷ் URL es.example.com ஆகவும் இருக்கலாம். வாடிக்கையாளர் ஸ்பெயினில் இருக்கும்போது, அவரின் சாதனம் அல்லது உலாவியில் ஸ்பானிஷ் மொழி அமைக்கப்பட்டிருந்தால், வாடிக்கையாளர் ஸ்பானிஷ் URL-க்குத் திசைதிருப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் தீமில் உள்ள hreflang டேக் அதிகரிக்கிறது.
உங்கள் உள்ளூர்மயமாக்கப்பட்ட URL-களை நகல் வலைப்பக்கங்களாக இல்லாமல், பிராந்தியப் பதிப்புகளாக hreflang டேக்குகள் அடையாளப்படுத்துவதால், அவை SEO-க்கு அவசியமாகும்.
நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு சர்வதேச டொமைன் அல்லது துணைக்கோப்புறைக்கும் hreflang டேக்குகளும் மெட்டா டேக்குகளும் தானாகவே உருவாக்கப்படும். உங்கள் ஸ்டோரில் உள்ள பல்வேறு மொழிகளைத் தேடுபொறிகள் கண்டறிய உதவும் வகையில், உங்கள் தளவரைபடங்களில் வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளும் சேர்க்கப்பட்டிருக்கும்.
சர்வதேச டொமைன்களில் சிக்கல் தீர்த்தல்
சர்வதேச டொமைன்களில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால், பொதுவான பிழைகளைத் தீர்க்கப் பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளைப் பயன்படுத்தவும்.
படி 1: பொதுவான சிக்கல் தீர்த்தல்
குறிப்பிட்ட பிழைகளைச் சரிசெய்வதற்கு முன், பின்வரும் பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகளை முயன்று பார்க்கவும்:
- சந்தைகள் என்பதில் உங்கள் சந்தைகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சர்வதேச டொமைன்களுக்கு நீங்கள் தனிப்பயன் டொமைனைப் (myshopify.com அல்ல) பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
- நீங்கள் பல நாணயங்களைப் பயன்படுத்தினால், Shopify Payments செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- அமைப்புகள் > டொமைன்கள் என்பதில் உங்களின் டொமைன்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சந்தைகள் என்பதில் உங்கள் சந்தைகளுக்குச் சரியான டொமைன் மற்றும் மொழி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- மாற்றங்கள் நடைமுறைக்கு வர 48 மணிநேரம் வரை அவகாசம் அளித்து, DNS பெருக்கம் நிறைவடைந்துள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- உங்களின் சந்தைகள் அமைப்புகளில் தானியங்கித் திசைதிருப்பல் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- புவிஇருப்பிடச் செயல்பாட்டை உறுதிசெய்ய, வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து உங்கள் ஸ்டோரின் அணுகல்தன்மையைச் சோதிக்கவும்.
மேலே உள்ளவற்றை உறுதிசெய்த பிறகு, ஏதேனும் அறியப்பட்ட சிக்கல்கள் உள்ளதா என அறிய Shopify Status பக்கத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும்; உங்கள் உலாவித் தேக்ககத்தை (cache) அழித்துவிட்டு, வெவ்வேறு இணைய இணைப்புகள் மற்றும் சாதனங்களில் இருந்து சோதித்துப் பார்க்கவும்.
படி 2: சர்வதேச டொமைன் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிழையைச் சந்திக்கிறீர்கள் எனில், பொருத்தமான சிக்கல் தீர்த்தல் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்:
அகற்றப்பட்ட சந்தைகளில் இருந்து ஏற்படும் 404 பிழைகளைச் சரிசெய்தல்
நீங்கள் அகற்றிய சந்தைகளுக்கான URL-களை அணுகும்போது வாடிக்கையாளர்களுக்கு 404 பிழைகள் ஏற்பட்டால், நீங்கள் சரியான திசைதிருப்பல்களை அமைக்க வேண்டும்.
அகற்றப்பட்ட சந்தைகளுக்குச் சரியான திசைதிருப்பல்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். துணைக்கோப்புறைகளைப் பயன்படுத்திய ஒரு சந்தையை நீங்கள் அகற்றியிருந்தால், வாடிக்கையாளர்களை உங்களின் முதன்மை டொமைனுக்கு அல்லது வேறொரு பிராந்தியம் சார்ந்த URL-க்குத் திசைதிருப்ப, CSV கோப்பைப் பயன்படுத்தி URL திசைதிருப்பல்களை இறக்குமதி செய்யவும்.
நாணயம் அல்லது மொழிப் பொருத்தமின்மைகளைச் சரிசெய்தல்
வாடிக்கையாளர்கள் தங்கள் பிராந்தியத்திற்கான தவறான நாணயங்களையோ மொழிகளையோ பார்த்தால், உங்கள் Shopify Payments அல்லது மொழிச் செயலி உள்ளமைவில் சிக்கல்கள் இருக்கலாம்.
படிகள்:
- பல நாணயச் செயல்பாட்டிற்கு Shopify Payments செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- உங்கள் மொழிச் செயலி சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சந்தைகள் என்பதில் ஒவ்வொரு சந்தைக்கும் சரியான நாணயம் மற்றும் மொழி அமைப்புகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- மூன்றாம் தரப்புப் புவிஇருப்பிடச் செயலியைப் பயன்படுத்தினால், உங்கள் புவிஇருப்பிடச் செயலி சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
நகல் உள்ளடக்கச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் சர்வதேச டொமைன்களை நகல் உள்ளடக்கம் எனத் தேடுபொறிகள் குறிப்பிட்டால், உங்கள் hreflang உள்ளமைவில் அல்லது டொமைன்கள் முழுவதும் உள்ள ஒரே மாதிரியான உள்ளடக்கத்தில் உங்களுக்குச் சிக்கல்கள் இருக்கலாம்.
படிகள்:
- அனைத்துச் சர்வதேச டொமைன்களுக்கும் hreflang டேக்குகள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சரியான hreflang-ஐச் செயல்படுத்தாமல், பல டொமைன்கள் முழுவதும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- ஒரே சந்தையில் பல டொமைன்களைச் சேர்க்கும்போது ஒவ்வொரு டொமைனும் வெவ்வேறு மொழியை இலக்காகக் கொண்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த, உங்கள் தளவரைபடத்தை மதிப்பாய்வு செய்யவும்.
டொமைன் பெயர்களில் உள்ள சிறப்பு எழுத்துகளில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்
நீங்கள் சிறப்பு எழுத்துகளைக் கொண்ட சர்வதேச டொமைன் பெயர்களைப் பயன்படுத்திச் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்களுக்கு சர்வதேச டொமைன் பெயர்கள் (IDNA) ஆதரவில் சிக்கல்கள் இருக்கலாம்.
படிகள்:
- உங்கள் டொமைன் சர்வதேச டொமைன் பெயர்களை (IDNA) ஆதரிக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
- வெவ்வேறு உலாவிகளில் டொமைன் சரியாகக் காட்டப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
- வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் சாதனங்களில் இருந்து டொமைன் அணுகல்தன்மையைச் சோதிக்கவும்.
- சர்வதேச எழுத்துகளுக்கு hreflang டேக்குகள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
வேலை செய்யாத டொமைன் திசைதிருப்பலைச் சரிசெய்தல்
தானியங்கி டொமைன் திசைதிருப்பல் சரியாக வேலை செய்யவில்லை எனில், உங்கள் சந்தைகளின் அமைப்புகள் அல்லது புவிஇருப்பிட உள்ளமைவில் உங்களுக்குச் சிக்கல்கள் இருக்கலாம்.
படிகள்:
- உங்களின் சந்தைகள் அமைப்புகளில் தானியங்கித் திசைதிருப்பல் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- இலக்குச் சந்தைகளில் தனித்துவமான URL-கள் உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- உங்கள் உலாவித் தேக்ககத்தை அழித்துவிட்டு, வெவ்வேறு இடங்கள் மற்றும் சாதனங்களிலிருந்து சோதிக்கவும்.
- மூன்றாம் தரப்புத் தீர்வைப் பயன்படுத்தினால், உங்களின் ஜியோலொகேஷன் செயலி சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.
சந்தைகளின் டொமைன் உள்ளமைவுச் சிக்கல்களைத் தீர்க்கவும்
டொமைன் ஒதுக்கீடுகள் அல்லது சந்தை உள்ளமைவுகளில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், உங்கள் டொமைன் இணைப்பு அல்லது சந்தை அமைப்புகளில் சிக்கல்கள் இருக்கலாம்.
படிகள்:
- அமைப்புகள் > டொமைன்கள் என்பதில் டொமைன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சந்தைகள் என்பதில் சந்தைக்குச் சரியான டொமைன் மற்றும் மொழி ஒதுக்கீடு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- DNS பரவல் முடிந்துவிட்டதா என்பதைச் சரிபார்க்கவும். DNS மாற்றங்களுக்கு 48 மணிநேரம் வரை ஆகலாம்.
- வெவ்வேறு பிராந்தியங்களிலிருந்து துணைக்கோப்புறை அல்லது துணை டொமைன் அணுகல்தன்மையைச் சோதிக்கவும்.
படி 3: ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
நீங்கள் சிக்கல் தீர்த்தல் படிகளை முடித்த பிறகும் உங்கள் சர்வதேச டொமைன்கள் சரியாக வேலை செய்யவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் சந்தை உள்ளமைவு, டொமைன் அமைவு முறை (துணைக்கோப்புறைகள், துணை டொமைன்கள் அல்லது உயர்மட்ட டொமைன்கள்) மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிழைச் செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கவும்.