பேமெண்ட்டுகள்
உங்களின் சந்தை அமைப்புகளில், தகுதியான உள்ளூர் கட்டண முறைகளைக் காண்பிக்கும் பேமெண்ட்டுகள் கார்டும், பல்வேறு கட்டண முறைகளைச் செயல்படுத்தித் தனிப்பயனாக்குவதற்கான உங்களின் பேமெண்ட் அமைப்புகளுக்கான இணைப்பும் இடம்பெற்றிருக்கும்.
இந்தப் பக்கத்தில்
Shopify Payments மற்றும் பிற கட்டண வழங்குநர்கள்
முதன்மை நுழைவாயிலாக Shopify Payments அல்லது Adyen உள்ள ஸ்டோர்கள் மட்டுமே வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் பேமெண்ட்டுகளைச் செயலாக்க முடியும். பின்வரும் கட்டண விருப்பங்கள் பல நாணயச் செயலாக்கத்துடன் இணக்கமானவை:
- Shopify Payments கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகள்
- Shop Pay
- Apple Pay மற்றும் Google Pay
- Paypal Express
நீங்கள் வேறு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விலைகள் எப்படிக் காண்பிக்கப்படும் என்பதை மட்டுமே உள்ளூர் நாணய அம்சம் பாதிக்கும். செக்அவுட்டில் விலை உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்திற்கு மாற்றப்படும், மேலும் உங்கள் வாடிக்கையாளரிடம் அந்த நாணயத்தில் கட்டணம் விதிக்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கான நாணய மாற்றச் செயலாக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே:
- வாடிக்கையாளர்களின் உள்ளூர் நாணயத்தில் அவர்களுக்கு விலைகள் காண்பிக்கப்படும்
- செக்அவுட்டில் விலைகள் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்திற்கு மாற்றப்படும்
- அவர்களின் கட்டண முறையிலான இறுதி கட்டணம் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் இருக்கும்
- அவர்களின் கட்டண வழங்குநரிடமிருந்து அவர்கள் கூடுதல் நாணய மாற்றக் கட்டணத்தைச் செலுத்த நேரிடலாம்
எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோர் நாணயம் USD எனில், ஒரு டி-ஷர்ட்டை $10.00 USD விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர் EUR நாணயத்தைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரைப் பார்க்கத் தேர்வுசெய்கிறார் எனில், டி-ஷர்ட்டின் விலை €8.90 EUR எனப் பட்டியலிடப்பட்டிருக்கும். Shopify Payments அல்லது Adyen அல்லாத பிற கட்டண வழங்குநரைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட் செய்தால், டி-ஷர்ட்டின் விலை மீண்டும் USDக்கு மாற்றப்படும். வாடிக்கையாளரின் கட்டண வழங்குநரின் நாணய மாற்றக் கட்டணங்களால் டி-ஷர்ட்டிற்கு $10.00 USDஐ விட அதிகமான தொகையை அவர் செலுத்த நேரிடலாம். வாடிக்கையாளருக்குக் காண்பிப்பதற்காக USD நாணயத்திலிருந்து EUR நாணயத்திற்கு மாற்றப்படும்போது Shopify ஆல் எவ்வித நாணய மாற்றக் கட்டணங்களும் விதிக்கப்படுவதில்லை. மேலும் ஆர்டர் ஒரு பல நாணய ஆர்டர் என்பதை ஆர்டர் பக்கம் குறிக்காது.
இணக்கமான கட்டண முறையைக் கொண்டு Shopify Payments அல்லது Adyen மூலம் வாடிக்கையாளர் செக்அவுட் செய்தால், அவர்களின் பேமெண்ட் அவர்களுடைய உள்ளூர் நாணயத்தில் செயலாக்கப்படும். எடுத்துக்காட்டாக:
(தயாரிப்பு விலை x நாணய மாற்று வீதம்) + நாணய மாற்றக் கட்டணம்
($10.00 USD x 0.867519) + 1.5% = €8.81 EUR
நீங்கள் முழுமையாக்கல் விதிகளைச் செயல்படுத்தியிருந்தால், Shopify மொத்தத்தை முழுமையாக்கும் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் €8.90 EUR செலுத்துவார்.
உள்ளூர் கட்டண முறைகள்
ஒரு சந்தையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் கட்டண முறைகளுக்குத் தகுதிபெறும் நாட்டை உள்ளடக்கியிருக்கும்போது, கிடைக்கக்கூடிய உள்ளூர் கட்டண முறைகளைக் கொண்டு உங்கள் சந்தை அமைப்புகளில் பேமெண்ட்டுகள் கார்டு காட்டப்படும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் பெல்ஜியத்தை மட்டும் உள்ளடக்கிய ஐரோப்பாவிற்கான சந்தை இருந்தால், பேமெண்ட்டுகள் கார்டில் Bancontact கிடைக்கும். உங்களிடம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஐரோப்பாவிற்கான சந்தை இருந்தால், பேமெண்ட்டுகள் கார்டில் Bancontact மற்றும் iDEAL | Wero ஆகிய இரண்டும் கிடைக்கும்.
பேமெண்ட்டுகள் கார்டில் இருந்து, தகுதிபெறும் உள்ளூர் கட்டண முறையை நீங்கள் செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம்.
உள்ளூர் கட்டண முறைகள் குறித்து மேலும் அறிக.
சந்தைகள் என்பதில் ஒரு சந்தைக்கான நாணயத்தை அமைக்கவும்
ஒரு சந்தைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாணயமே உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும், மேலும் அந்த நாணயத்திலேயே பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும். இயல்புநிலையாக, சந்தைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த பிராந்தியத்திற்கான நாணயத்திற்குச் சந்தையின் நாணயம் அமைக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிராந்தியங்களைக் கொண்ட சந்தைகளுக்கு, இதற்குப் பதிலாக உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்து என்பது இயல்புநிலையாக அமைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு சந்தையின் நாணயத்தைத் தனிப்பயனாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.
நாணயம் அமைப்புக்கு அடுத்துள்ள
+ஐகானைக் கிளிக் செய்யவும்.நாணயத்தைக் கிளிக் செய்து, ஒரு சந்தைக்கு நீங்கள் அமைக்க விரும்பும் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நாணய மாற்றத்திற்குப் பிறகு விலைகள் முழுமையாக்கப்பட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
மேல் பட்டியில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.