நாணய மாற்றங்களும் மாற்று விகிதங்களும்
நீங்கள் பேமெண்ட்டைப் பிடிக்கும்போதோ, பணத்தைத் திரும்ப அளிக்கும்போதோ அல்லது கட்டணத் திருப்பல் ஏற்படும்போதோ, அதாவது ஒரு பரிவர்த்தனை நடக்கும்போது நாணய மாற்றம் நிகழ்கிறது. பரிவர்த்தனை நிகழும் நேரத்தில் உள்ள விகிதமே வெளிநாட்டு மாற்று விகிதமாகப் பயன்படுத்தப்படும்.
ஒரு பரிவர்த்தனையின் பிரேக்டவுனை ஆர்டரின் காலவரிசையில் நீங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு சந்தைக்கும் ஒவ்வொரு தயாரிப்பு விலையும் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதற்கான பிரேக்டவுனை நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பக்கத்தில்
- நாணய வரையறைகளும் மாற்றங்களும்
- நாணய மாற்ற அபாயங்கள்
- தானியங்கு மாற்று விகித மாற்றங்கள்
- கைமுறை மாற்று விகித மாற்றங்கள்
- கைமுறை மாற்று விகிதத்தைச் செயல்படுத்துதல்
- கைமுறையாகப் பிடிக்கப்பட்ட பேமெண்ட்டுகள்
- பணத்தைத் திரும்பப்பெறுதல்கள்
- சார்ஜ்பேக்குகள்
- பல்வேறு நாணயங்களில் விற்றுத் தீர்வுசெய்தல் மற்றும் உள்ளூர் நாணயங்களில் விற்றல்
நாணய வரையறைகளும் மாற்றங்களும்
உங்கள் ஸ்டோரில் மூன்று வகையான நாணயங்கள் உள்ளன:
- ஸ்டோர் நாணயம் - உங்கள் Shopify நிர்வாகியின் நாணயம். உங்களின் முதன்மைச் சந்தையில் உங்கள் தயாரிப்புகள் மற்றும் தயாரிப்பு மாறுபாடுகளுக்கு விலைகளை அமைக்க இந்த நாணயத்தையே நீங்கள் பயன்படுத்துவீர்கள், அத்துடன் உங்கள் அறிக்கைகளிலும் இந்நாணயமே காட்டப்படும்.
- உள்ளூர் நாணயம் (வாடிக்கையாளர் அல்லது காட்சிப்படுத்தல் நாணயம் என்றும் அழைக்கப்படுகிறது) - உங்கள் ஸ்டோரில் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும் நாணயம் மற்றும் வாடிக்கையாளர் செக்அவுட்டில் தங்கள் ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்தும் நாணயம்.
- பேஅவுட் நாணயம் - உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும்போது Shopify பயன்படுத்தும் நாணயம்.
நாணய மாற்று அபாயங்கள்
நாணய மாற்று வீதங்கள் எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பேமெண்ட்டுகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும்போதெல்லாம், நாணய மாற்றத்தின் காரணமாக உங்களுக்குப் பணம் இழப்போ லாபமோ ஏற்பட வாய்ப்புள்ளது.
பின்வரும் சூழ்நிலைகளில் உங்களுக்குப் பண இழப்பு அல்லது லாபம் ஏற்படலாம்:
தானியங்கு நாணய மாற்று வீதங்கள்
உள்ளூர் நாணயங்களைக் கொண்ட சந்தைகளில் நீங்கள் விற்கும்போது, உங்களின் ஆன்லைன் ஸ்டோர் விலைகள் உங்கள் வாடிக்கையாளரின் நாணயத்திற்கு மாற்றப்படும். சந்தையின் மாற்று வீதங்களுக்கு ஏற்ப உங்கள் ஸ்டோர் விலைகள் தானாகவே மாறும்.
தயாரிப்பு விலையுடன் நாணய மாற்று வீதத்தைப் பெருக்கி, மாற்றுக் கட்டணத்தைச் சேர்த்து, பொருந்தினால் அந்த நாணயத்திற்கான முழுமையாக்கல் விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் விலைகள் மாற்றப்படும். மாற்றப்பட்ட விலைகளில் நாணய மாற்றுச் செலவுகளும் அடங்கும். உதாரணமாக, $10.00 USD தயாரிப்பானது யூரோவாக மாற்றப்படும்போது, மாற்றப்பட்ட €8.81 விலையில் நாணய மாற்று வீதமும் மாற்றுக் கட்டணமும் அடங்கும்.
(**Product price** x **currency conversion rate**) x (**1** + **currency conversion fee**)</br>
<br>($10.00 USD x 0.867519) x (1 + .015) = €8.81</br>உங்களிடம் முழுமையாக்கல் விதிகள் செயலில் இருந்தால், மாற்றப்பட்ட விலை €8.85 ஆக முழுமையாக்கப்படும்.
மேனுவல் நாணய மாற்று வீதங்கள்
Managed Markets மூலம், உங்களின் ஒவ்வொரு சந்தைக்குமான நாணய மாற்று வீதத்தை நீங்கள் மேனுவலாக அமைக்கலாம். தானியங்கு மாற்று வீதங்களால் உங்கள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கு மாறாக, ஒவ்வொரு சந்தைக்குமான விலைகளை நிலையாக வைத்திருக்க இது அனுமதிக்கிறது.
மேனுவல் நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் அமைத்த மேனுவல் மாற்று வீதத்திற்கும் தற்போதைய சந்தை மாற்று வீதத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பொறுத்து உங்களுக்குப் பண லாபமோ அல்லது இழப்போ ஏற்படலாம்.
உங்கள் நாணய மாற்றத்திற்கு மாற்றுக் கட்டணம் பொருந்தும். உங்கள் மேனுவல் கட்டணத்தில் இந்தக் கட்டணத்தைச் சேர்க்க விரும்பினால், உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டிற்கான மாற்றுக் கட்டணத்தால் உங்கள் மாற்று வீதத்தைப் பெருக்கிக் கொள்ளவும். உதாரணமாக, 1.5% மாற்றுக் கட்டணத்துடனான USD-லிருந்து EUR-க்கான மாற்று வீதம் இவ்வாறு இருக்கலாம்: 0.90867 x 1.015 = 0.9223.
உங்களின் முதன்மைச் சந்தையாக இல்லாத சந்தைகளுக்கு மேனுவல் மாற்று வீதத்தை நீங்கள் அமைக்கலாம். உங்கள் ஸ்டோர் நாணயத்திலிருந்து வேறுபட்ட அடிப்படை நாணயத்தை நீங்கள் அமைத்துள்ள சந்தைகளாக இருந்தாலும், அமைப்புகள் > பொதுவானவை என்பதில் உள்ள உங்கள் ஸ்டோரின் அடிப்படை நாணயத்தின் அடிப்படையிலேயே இந்த மாற்று வீதங்கள் கணக்கிடப்படும்.
மேனுவல் மாற்று வீதங்களுடன் விலைச் சரிசெய்தல்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் ஸ்டோர் நாணயமான USD-ல் ஒரு தயாரிப்பின் விலை 20.00 என்று இருந்து, அனைத்து சந்தைகளுக்கும் அருகிலுள்ள 1.00-க்கு விலையை முழுமையாக்குவது ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்களின் கனடா சந்தைக்கான விலையை பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் நீங்கள் கட்டுப்படுத்தலாம்:
- CAD விலையை நிலையாக வைத்திருக்க, நீங்கள் மேனுவல் மாற்று வீதமாக 1.3-ஐ அமைத்து, பின்னர் 20% விலை சரிசெய்தலைப் பயன்படுத்தலாம். இதன்படி விலை 20.00 x 1.3 x 1.2 = 32.00 CAD எனக் கணக்கிடப்படும்.
- நீங்கள் மேனுவல் மாற்று வீதமாக 1-ஐ அமைத்துவிட்டு, அதன்பிறகு விலையைச் சரிசெய்வதை மட்டுமே பயன்படுத்தி CAD விலையைக் கட்டுப்படுத்த, 50% சரிசெய்தலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்படி விலை 20.00 x 1 x 1.5 = 30.00 CAD எனக் கணக்கிடப்படும்.
- நீங்கள் தானியங்கு மாற்று வீதங்களைத் தேர்ந்தெடுத்து, CAD விலைகளுக்கு 50% விலை சரிசெய்தலைப் பயன்படுத்தலாம். இதன்படி விலை 20.00 x [தற்போதைய மாற்று வீதம்] x 1.5 எனக் கணக்கிடப்படும். 50% விலை சரிசெய்தல் கூடுதலாகச் சேர்க்கப்படுவதால், தற்போதைய மாற்று வீதங்களின் அடிப்படையில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
சந்தையின் அடிப்படை நாணயம் மாற்றப்பட்டாலோ மேனுவல் மாற்று வீதங்கள் தானியங்கு முறைக்கு மாற்றப்பட்டாலோ, மேனுவல் கட்டணம் முடக்கப்படுமே தவிர நீக்கப்படாது. அதாவது, அசல் சந்தை நாணயம் மீட்டமைக்கப்பட்டாலோ மேனுவல் மாற்று வீதங்கள் மீண்டும் ஆன் செய்யப்பட்டாலோ, மேனுவல் மாற்று வீதம் மீண்டும் செயலுக்கு வரும்.
மேனுவல் மாற்று வீதத்தைச் செயல்படுத்துதல்
உங்களின் சந்தைகள் பக்கத்திலிருந்து, ஒரு நாடு உள்ள சந்தைகள் அல்லது உள்ளூர் நாணயங்கள் ஆஃப் செய்யப்பட்ட பல நாடுகள் உள்ள சந்தைகளுக்கு மேனுவல் மாற்று வீதங்களை நீங்கள் அமைக்கலாம். மேனுவல் மாற்று வீதத்தைப் பயன்படுத்த விரும்பும் ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும் தனித்தனி நாடுகள் உள்ள சந்தைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்.
மேனுவல் மாற்று வீதங்களை உங்களின் முதன்மைச் சந்தைக்குப் பயன்படுத்த முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் பகுதிக்குச் செல்லவும்.
மேனுவல் மாற்று வீதத்தைச் சேர்க்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.
நாணயத் தேர்வியில், நாணய விருப்பத்தேர்வுகளைக் காட்ட சந்தையின் நாணயத்தைக் கிளிக் செய்யவும்.
மாற்று வீதம் (FX) பிரிவில், மேனுவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மாற்று வீதத்தை உள்ளிடவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
மேனுவலாகப் பெறப்பட்ட பேமெண்ட்டுகள்
நீங்கள் உள்ளூர் நாணயங்களில் விற்கும்போது, பேமெண்ட்டாக நீங்கள் பெறும் தொகையானது வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் நீங்கள் கட்டணம் விதிக்கும் நேரத்தில் உள்ள நாணய வீதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். நீங்கள் பேமெண்ட்டுகளை மேனுவலாகப் பெற்றால், வாடிக்கையாளர் ஆர்டரைச் சமர்ப்பிக்கும்போது அல்லாமல், நீங்கள் ஆர்டரைச் செயல்படுத்தும்போதே வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் கட்டணம் விதிக்கப்படும். அங்கீகார நேரத்திற்கும் நீங்கள் நிதியை மேனுவலாகப் பெறும் நேரத்திற்கும் இடையில் நாணய மாற்று வீதம் மாறக்கூடும் என்பதால் சிறிய முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் விற்பனையை அறிக்கையிடுவதற்கு வசதியாக உங்கள் Shopify நிர்வாகியில், பல்வேறு நாணயங்களில் உள்ள ஆர்டர்கள் உங்களின் ஸ்டோர் நாணயத்திற்கு மாற்றப்படும். வாடிக்கையாளரின் ஆர்டருக்கு நீங்கள் கட்டணம் விதிக்கும் வரை, இந்த மாற்றப்பட்ட மதிப்புகள் தோராயமானவையாகவே இருக்கும்.
உதாரணமாக, உங்கள் ஸ்டோர் நாணயம் USD ஆக இருந்து, நீங்கள் USD மற்றும் EUR நாணயங்களில் விற்கிறீர்கள் எனில்: உங்கள் வாடிக்கையாளர் €90 மதிப்புள்ள புத்தக அலமாரிக்கு ஆர்டரை உருவாக்குகிறார். அவர்கள் ஆர்டரைச் சமர்ப்பிக்கும்போது, $1 USD என்பது €0.90 EUR-க்குச் சமமாக இருக்கும்.
| ஸ்டோர் நாணய விலை | வாடிக்கையாளரின் நாணய விலை | தோராயமான ஆர்டர் தொகை |
|---|---|---|
| $100 USD | €90 EUR | $100 USD |
சில நாட்களுக்குப் பிறகு நாணய வீதம் மாறி, $1 USD என்பது இப்போது €0.85 EUR-க்குச் சமமாகிறது. உங்கள் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் இருந்து €90 EUR தொகையை நீங்கள் கட்டணமாக விதிக்கிறீர்கள். நாணய மாற்று வீதம் மாறி $1 USD = €0.85 EURO என்றானதால், €90 என்பது $98 USD ஆக மாறுகிறது. எனவே உங்களுக்கு $98 USD கிடைக்கும்.
| ஸ்டோர் நாணய விலை | வாடிக்கையாளரின் நாணய விலை | ஸ்டோர் நாணயத்திற்கு மாற்றப்பட்ட பெறப்பட்ட தொகை |
|---|---|---|
| $100 USD | €90 EUR | $98 USD |
பணத்தைத் திரும்பப்பெறுதல்
ஒரு வாடிக்கையாளர் ஆர்டரை உருவாக்கும் நேரத்திற்கும் அதைத் திருப்பியளிக்கும் நேரத்திற்கும் இடையில் பெரும்பாலும் நேர இடைவெளி இருக்கும். இதன் விளைவாக, ஆர்டருக்கு நீங்கள் பெறும் மாற்றப்பட்ட தொகையும் பணத்தைத் திரும்பப்பெறுதலில் நீங்கள் திருப்பிக் கொடுக்கும் மாற்றப்பட்ட தொகையும் வழக்கமாகச் சமமாக இருக்காது. வாடிக்கையாளர் அவர்களின் உள்ளூர் நாணயத்தில் செலுத்திய முழுத் தொகையையும் திரும்பப்பெறும்படி பரிந்துரைக்கிறோம். நாணய மாற்றங்களின் காரணமாக நீங்கள் பணத்தை இழக்கலாம் அல்லது பெறலாம் என்பதை இது குறிக்கிறது. உள்ளூர் நாணயங்களில் விற்கும் போது ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் பற்றி அறிக.
சார்ஜ்பேக்குகள்
ஒரு கார்டுதாரர் சார்ஜ்பேக்கைத் தொடங்கும்போது, நிதியை இடமாற்றும் நேரத்திலுள்ள மாற்று வீதத்தைப் பயன்படுத்தி நாணய மாற்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆர்டர் செய்த நேரத்திலுள்ள மாற்று வீதம் பயன்படுத்தப்படாது.
திரும்பப் பெறப்படும் தொகையை Shopify மாற்றிக் கார்டுதாரருக்குச் சர்ச்சைக்குரிய தொகையைச் செலுத்துகிறது, பின்னர் உங்கள் அடுத்த பேஅவுட்டிலிருந்து திரும்பப் பெறப்படும் தொகையைக் கழித்துவிட்டு, உங்கள் சார்பாக கார்டுதாரரின் வங்கிக்குக் கட்டணத்தைச் செலுத்துகிறது. இந்த நாணய மாற்றத்திற்கு உங்களிடம் மாற்று கட்டணம் விதிக்கப்படாது.
நீங்கள் சார்ஜ்பேக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அது உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டால், சார்ஜ்பேக்கில் சர்ச்சைக்குரிய தொகையும் தற்போதைய மாற்று வீதத்தின் அடிப்படையிலான சார்ஜ்பேக் கட்டணமும் உங்களுக்குத் திரும்பியளிக்கப்படும்.
சார்ஜ்பேக்குகள் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன என்பது குறித்து மேலும் அறிக.
வெவ்வேறு நாணயங்களில் விற்பனை செய்து தீர்த்துவைத்தல் மற்றும் உள்ளூர் நாணயங்களில் விற்பனை செய்தல்
பெரும்பாலான நாணய மாற்றங்கள் உங்கள் வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்திற்கும் உங்கள் ஸ்டோர் நாணயத்திற்கும் இடையில் நிகழும். உங்கள் ஸ்டோர் நாணயம் உங்கள் பேஅவுட் நாணயத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தால், வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்திற்கும் உங்கள் பேஅவுட் நாணயத்திற்கும் இடையில் நாணய மாற்றங்கள் நிகழும்.