கட்டணங்கள் மற்றும் செலவுகள்
நீங்கள் உள்ளூர் நாணயங்களில் விற்பனை செய்யும்போது, உங்களிடம் வழக்கமான Shopify Payments செயலாக்கக் கட்டணம் மற்றும் நாணய மாற்றக் கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்கள் சேவை விதிமுறைகளில் கட்டண மதிப்புகளைக் கண்டறியலாம்.
ஒவ்வொரு சந்தைக்கும் ஒவ்வொரு தயாரிப்பு விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கான பகுப்பாய்வைப் பார்க்கலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify Payments கட்டணம்
ஒவ்வொரு பேமெண்ட்டையும் செயலாக்க Shopify Payments ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது, மேலும் கார்டு வகை மற்றும் இடத்தின் அடிப்படையில் விகிதம் மாறுபடும். ஆர்டருக்கான பேமெண்ட்டைப் பெறும்போது, பேமெண்ட்டைச் செயலாக்குவதற்கான செலவை உள்ளடக்கும் வகையில் உங்களிடம் Shopify Payments கட்டணம் (உங்கள் பேஅவுட் நாணயத்தில்) வசூலிக்கப்படும். கட்டணத் தொகையானது பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டின் வகை மற்றும் கிரெடிட் கார்டு பதிவுசெய்யப்பட்டுள்ள இடத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, Visa கார்டுக்கான கட்டணத் தொகை சில நேரங்களில் American Express கார்டுக்கான கட்டணத் தொகையிலிருந்து வேறுபடலாம். Shopify Payments வசூலிக்கும் செயலாக்கக் கட்டணங்களின் வகைகள் பின்வருமாறு:
- பேமெண்ட் செயலாக்கக் கட்டணங்கள் (உள்நாட்டு): உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள அதே நாடு அல்லது பிராந்தியத்தில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளைச் செயலாக்குவதற்கான செலவு.
- பேமெண்ட் செயலாக்கக் கட்டணங்கள் (எல்லை தாண்டிய): உங்கள் ஸ்டோருடன் தொடர்புடைய நாட்டைத் தவிர்த்து வேறொரு நாடு அல்லது பிராந்தியத்தில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளைச் செயலாக்குவதற்கான செலவு.
மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணம்
மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் என்பது பாதுகாப்பான செக்அவுட் தளத்தை வழங்கவும் வெளிப்புறக் கட்டண வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கவும் ஆகும் செலவை ஈடுகட்ட Shopify மூலம் வசூலிக்கப்படுபவையாகும். நீங்கள் தேர்வுசெய்யும் Shopify திட்டத்தைப் பொறுத்துப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மாறுபடும், மேலும் பின்வரும் சூழ்நிலைகளில் அவை வசூலிக்கப்படுகின்றன:
- வாடிக்கையாளரின் பேமெண்ட்டுகளை ஏற்க நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தும்போது.
- மே 12, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட Shopify ஸ்டோர்களில், ஒரு ஆர்டரில் கட்டண முறையாக ஸ்டோர் கிரெடிட் அல்லது கிஃப்ட் கார்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும் போது. எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோர் Shopify Payments ஐப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒரு ஆர்டருக்குக் கிரெடிட் கார்டு மற்றும் $10 CAD ஸ்டோர் கிரெடிட் இரண்டையும் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், உங்களிடம் $10 CAD ஸ்டோர் கிரெடிட்டிற்கு மட்டுமே மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தும்போது, பின்வரும் கட்டண முறைகளைப் பயன்படுத்திச் செயலாக்கப்படும் ஆர்டர்களுக்கு மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது:
- Shopify Payments
- Shop Pay
- Shop Pay Installments
- ரொக்கம், கேஷ் ஆன் டெலிவரி (COD) மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற மேனுவல் பேமெண்ட் முறைகள்.
Shopify Payments-ஐ உங்களின் முதன்மைக் கட்டண வழங்குநராகத் தேர்வுசெய்தால், PayPal பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மாற்று வீதம் மற்றும் கட்டணம்
உங்கள் பேஅவுட் நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் பேமெண்ட்டுகளை ஏற்கும் போது, நாணய மாற்றத்தில் மாற்று விகிதம் மற்றும் கட்டணம் ஆகிய இரண்டும் அடங்கும். உங்களின் பேஅவுட் நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் பேமெண்ட்டை நீங்கள் ஏற்கும்போது, நாணய மாற்றம் ஏற்படும். உங்கள் வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் நீங்கள் பெறும் தொகையானது (இது காட்சிப்படுத்தல் நாணயம் எனவும் குறிப்பிடப்படுகிறது) உங்கள் பேஅவுட் நாணயத்திற்கு மாற்றப்படும், மேலும் உங்களிடம் நாணய மாற்றக் கட்டணம் வசூலிக்கப்படும்:
- நாணய மாற்று வீதம் - ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றுவதற்கான சந்தை வீதம். மாற்று வீதமானது ஒரு கட்டணமல்ல (இது எந்தவொரு மார்க்கப்பும் இல்லாத சந்தையின் நடுத்தர வீதமாகும்). எடுத்துக்காட்டாக, USD/EUR இன் மாற்று வீதம்
0.8788எனில் $1 USD ஆனது €0.87 EUR ஆக மாற்றப்படும். - நாணய மாற்றுக் கட்டணம் - நீங்கள் பேமெண்ட்டைப் பெறும்போது நாணயங்களை மாற்றுவதற்காக Shopify வசூலிக்கும் கட்டணம் (உங்கள் பேஅவுட் நாணயத்தில் இருக்கும்). நீங்கள் பணத்தைத் திரும்பியளிக்கும் போது நாணய மாற்றுக் கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் உங்களுக்குத் திருப்பித் தரப்படாது, ஆனால் நீங்கள் பணத்தைத் திரும்பியளிக்கும் போது அல்லது சார்ஜ்பேக்கைப் பெறும்போது உங்களிடம் கூடுதல் மாற்றுக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
Shopify Payments நாணய மாற்றுக் கட்டணம்
மாற்றுக் கட்டணத் தொகையானது உங்கள் ஸ்டோரின் முதன்மை நாட்டை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் உள்நாட்டு நாணயம் அல்லாத ஒன்றில் பரிவர்த்தனைகளை ஏற்றால், நாணய மாற்றுக் கட்டணம் பயன்படுத்தப்படும்.
| அமெரிக்கா | பிரான்ஸ் | மற்ற அனைத்து Shopify Payments பிராந்தியங்களும் | |
|---|---|---|---|
| நாணய மாற்றுக் கட்டணம் | 1.5% | 2% | 2% |
Shopify Payments-க்கான PayPal Wallet நாணய மாற்றுக் கட்டணம்
அமெரிக்காவில் உள்ள Shopify Payments அல்லது Shopify Payments France என்பதற்கு நீங்கள் PayPal Wallet ஐச் செயல்படுத்தினால், நாணய மாற்று வீதம் பயன்படுத்தப்படும்.
| அமெரிக்கா | பிரான்ஸ் | மற்ற அனைத்து Shopify Payments பிராந்தியங்களும் | |
|---|---|---|---|
| நாணய மாற்றுக் கட்டணம் | 3% | 3% | கிடைக்கவில்லை |
நாணய மாற்றுக் கட்டணம் கணக்கிடப்பட்ட பிறகு, உங்கள் செலவுகளை ஈடுசெய்ய உதவும் வகையில் அது உங்கள் வாடிக்கையாளரின் விலையில் சேர்க்கப்படுகிறது.
[பேஅவுட் தொகை] உங்கள் [தேதி] பேஅவுட்டில் சேர்க்கப்படும் என்ற மெசேஜைக் கிளிக் செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆர்டருக்கான நாணய மாற்று வீதம் மற்றும் கட்டணத்தை ஆர்டரின் காலவரிசையில் பார்க்கலாம். உங்கள் பேஅவுட் உங்கள் ஸ்டோரின் பேஅவுட் நாணயத்தில் காட்டப்படும்.
சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணம்
சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் என்பவை எல்லை தாண்டி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் விதிக்கப்படுபவையாகும், ஆனால் வணிகரான உங்களுக்கு இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படாது. சர்வதேச வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டில் உள்ளூர் நாணயத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்போதும், அவர்களது வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குநரால் சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் (அல்லது வெளிநாட்டுப் பரிவர்த்தனைக் கட்டணங்கள்) அவர்களுக்கு விதிக்கப்படலாம். உதாரணமாக, உங்கள் வணிகம் அமெரிக்காவில் அமைந்திருந்து கனடாவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்தால், அவரது கிரெடிட் கார்டில் CAD நாணயத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அவரது வங்கி சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணத்தை விதிக்கக்கூடும்.
இந்தக் கட்டணங்கள் மாறுபடும் என்பதோடு உங்கள் வாடிக்கையாளரின் வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குநரால் அவை அமைக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன—எந்த வகையிலும் Shopify இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்தக் கட்டணங்கள் குறித்து மேலும் அறிய, சர்வதேச வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குநரைத் தொடர்புகொள்ளலாம்.