உள்ளூர் நாணயங்களில் விற்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள்

உள்ளூர் நாணயங்களில் விற்கும்போது பின்வரும் வரம்புகள் மற்றும் விலக்குகள் பொருந்தும்:

  • உள்ளூர் நாணயங்களில் விற்பதை Adyen அல்லது Shopify Payments மட்டுமே ஆதரிக்கிறது, இதில் பிற Shopify Payments முறைகளுடன் Shop Pay, Apple Pay, Google Pay மற்றும் PayPal ஆகியவை அடங்கும். பிற மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் ஆர்டர்கள் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் செயலாக்கப்படும்.
  • ஒவ்வொரு சந்தைக்கும் தயாரிப்பு விலைகள் மற்றும் சதவீத விலை சரிசெய்தல்களை அமைப்பது போன்ற சில சந்தை விலை நிர்ணயத் தனிப்பயனாக்கங்கள் அனைத்துச் சந்தாத் திட்டங்களுக்கும் கிடைக்கின்றன, மேலும் இதற்கு Adyen அல்லது Shopify Payments தேவையில்லை. இருப்பினும், விலைகளை உள்ளூர் நாணயங்களில் காட்டவும் கைமுறையாக மாற்று விகிதங்களை அமைக்கவும் நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
  • Storefront API-ஐப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஹெட்லெஸ் சூழலில் உள்ளூர் நாணயங்களில் விற்பனை செய்வது ஆதரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்டிற்காக Shopify Payments-உடன் அமைக்கப்பட்ட வணிக நிறுவனம் உங்களிடம் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட இடத்தின் உள்ளூர் நாணயத்தில் விற்க Shopify POS ஆதரிக்கும். வெவ்வேறு நாடுகளில் உள்ள சில்லறை விற்பனை இருப்பிடங்களில் பல நாணயங்களில் விற்க பல வணிக நிறுவனங்கள் தேவைப்படுகின்றன, இது Shopify Plus திட்டத்திலும் Shopify Enterprise Commerce திட்டத்திலும் மட்டுமே கிடைக்கிறது.
  • உங்கள் இயல்புநிலை ஸ்டோர் நாணயத்தில் இல்லாமல் வேறு நாணயத்தில் இருக்கும் ஒரு வரைவு ஆர்டருக்கான பேமெண்ட்டைத் தாமதப்படுத்த கட்டண விதிமுறைகளை அமைத்தால், நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாகவோ ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பதன் மூலமாகவோ மட்டுமே பேமெண்ட்டை வசூலிக்க முடியும்.
  • சர்வதேச நாணயங்களில் வழங்கப்பட்ட ஆர்டர்களைத் திருத்தும் வசதி சில ஸ்டோர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பிற நாணயங்களில் வழங்கப்பட்ட ஆர்டர்களைத் திருத்துவதற்கு உங்களுக்குத் தகுதியில்லை என்றால், நீங்கள் அந்த ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெற்று, அதன் பிறகு வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி, இன்வாய்ஸை மின்னஞ்சல் செய்யலாம்.
  • உங்களது சர்வதேச வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டில் அவர்களின் உள்ளூர் நாணயத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும்கூட, சில வங்கிகளும் கிரெடிட் கார்டு வழங்குநர்களும் அவர்களிடம் கூடுதல் சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணங்களை வசூலிக்கக்கூடும். இந்தக் கட்டணங்கள் உங்கள் வாடிக்கையாளரின் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன, மேலும் இவற்றை எவ்வகையிலும் Shopify கட்டுப்படுத்துவதில்லை.
  • உங்கள் அறிக்கைகளை உங்களது ஸ்டோர் நாணயத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
  • Shopify App Store-இல் உள்ள சில நாணய மாற்றுச் செயலிகள், Shopify Payments மூலம் உள்ளூர் நாணயங்களில் விற்பனை செய்வதற்கு இணக்கமானவை அல்ல. சில செயலிகள் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த நாணயத்தில் விலைகளைக் காட்டலாம், ஆனால் செக்அவுட்டின் போது நாணயம் மீண்டும் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்திற்கு மாறிவிடும். வாடிக்கையாளர்கள் தங்கள் உள்ளூர் விலைகளில் உங்கள் ஸ்டோரை உலாவுவதற்கு உதவ, தானியங்கு திசைதிருப்பலை நீங்கள் செயல்படுத்த வேண்டும் அல்லது Shopify App Store-இலிருந்து மூன்றாம் தரப்புப் புவிஇருப்பிடச் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
  • பெரும்பாலான மூன்றாம் தரப்பு முதன்மை முறைகள் ஆதரிக்கப்படுவதில்லை. இருப்பினும், சர்வதேச விலை நிர்ணய ஆர்டர்களைச் சோதித்துப் பார்க்க, சோதனை கட்டண நுழைவாயிலை நீங்கள் பயன்படுத்தலாம்.