உங்கள் பல நாணய அமைப்பைச் சோதித்தல்

சர்வதேச விற்பனைக் கருவிகளுடன் பல நாணயங்களில் விற்பனை செய்வதைச் செயல்படுத்திய பிறகு, உங்கள் விலைகள் வெவ்வேறு நாணயங்களில் சரியாகக் காட்டப்படுவதையும், உங்கள் செயலிகள் மற்றும் தனிப்பயனாக்கங்கள் எதிர்பார்த்தபடி தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்ய வாடிக்கையாளர் அனுபவத்தைச் சோதிக்க வேண்டும். உங்கள் ஸ்டோரில் உலாவவும், சோதனை ஆர்டர்களை உருவாக்கவும், அத்துடன் சோதனை கிரெடிட் கார்டு எண்களைப் பயன்படுத்தி அவற்றுக்குப் பணம் செலுத்துவது போல் செய்து பார்க்கவும்.

உங்கள் ஸ்டோரில் நாட்டுத் தேர்வி காட்டப்படவில்லை எனில், நீங்கள் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.

உங்கள் ஸ்டோரில் நாணயங்களை முன்னோட்டமிடுதல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒவ்வொரு நாணயத்திலும் விலைகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை நீங்கள் முன்னோட்டமிடலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், சந்தைகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் சோதிக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் > ஆன்லைன் ஸ்டோரைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.

பல நாணயங்களுடனான செயலியின் இணக்கத்தன்மை

உங்கள் ஸ்டோரில் பல நாணயங்கள் செயல்பாட்டில் இருக்கும்போது, சில செயலிகள் எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகலாம். நீங்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் சென்று வாடிக்கையாளர் அனுபவத்தைச் சோதிக்கப் பரிந்துரைக்கிறோம். பின்வரும் பணிகளைச் செய்ய நீங்கள் செயலிகளை நிறுவியிருந்தால், அவை பல நாணயங்களுடன் எதிர்பார்த்தபடி தொடர்ந்து செயல்படுகின்றனவா என்பதை நீங்கள் சோதித்து உறுதிசெய்ய வேண்டும்:

  • ஸ்டோர்ஃபிரண்டில் அல்லது அறிக்கையில் விலைகள் அல்லது மொத்தத் தொகைகள் போன்ற பண மதிப்புகளைக் காட்டுதல்
  • விலைகள் அல்லது மொத்தத் தொகைகள் போன்ற பண மதிப்புகளை உள்ளடக்கிய அறிவிப்புகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புதல்.

இந்தச் செயலிகளில் சிக்கல் ஏதேனும் இருந்தால், அது உங்கள் ஸ்டோரின் வாடிக்கையாளர் அனுபவத்தைப் பாதிக்கலாம். உதாரணமாக, வாடிக்கையாளர்களால் செக்அவுட் செய்ய முடியும் என்றாலும், அவர்கள் தவறான பண மதிப்புகளைப் பார்க்க நேரிடலாம்.

பெரும்பாலான பொதுச் செயலிகள் பல நாணயங்களில் விற்பனை செய்வதை ஆதரிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் சில இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. பல நாணயங்களில் விற்பனை செய்வதற்கு இணக்கமில்லாத செயலிகள் உங்கள் Shopify நிர்வாகியில் அமைப்புகள் > செயலிகள் என்பதன் கீழ் ஹைலைட் செய்து காட்டப்படும்.

பல நாணயங்களுக்கு இணக்கமில்லாத செயலிகளை நீங்கள் நிறுவியிருந்தால், பல நாணயங்களில் விற்பனை செய்வதைச் செயல்படுத்தும் முன் அந்தச் செயலிகளை முதலில் நிறுவல் நீக்க வேண்டும்.

தனிப்பயன் செயலிகளுடனான இணக்கத்தன்மை

உங்கள் Shopify நிர்வாகியில் தனிப்பயன் செயலிகள் குறித்த அறிவிப்பைப் பெற்றால், நீங்கள் பல நாணயங்களில் விற்பனை செய்யும்போது, இந்தச் செயலிகளையும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் உங்கள் டெவலப்பர் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.