உள்ளூர் நாணயங்களில் ஷிப்பிங் கட்டணங்களை அமைத்தல்
ஒரு சர்வதேசச் சந்தையில் நிலையான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கும்போது, உங்கள் ஸ்டோரின் அடிப்படை நாணயத்தையோ அந்தச் சந்தைக்கான உள்ளூர் நாணயத்தையோ பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் உள்ளூர் விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்தால், செக்அவுட் உங்கள் வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் ஷிப்பிங் கட்டணங்களைக் காண்பிக்கும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் கனடாவை முதன்மைச் சந்தையாகக் கொண்ட வணிகர், மேலும் நீங்கள் அனுப்புகின்ற ஒரு பெரிய ஐரோப்பியச் சந்தையும் உங்களிடம் உள்ளது. ஐரோப்பியச் சந்தைக்காக €15 நிலையான கட்டண ஷிப்பிங் அல்லது குறைந்தபட்சம் €200 செலவில் இலவச ஷிப்பிங் போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணங்களை அமைத்து விளம்பரப்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். ஐரோப்பியச் சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ஷிப்பிங் கட்டணங்களை அவர்களின் உள்ளூர் நாணயத்தில் செக்அவுட் காண்பிக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாணயம், தயாரிப்பு விலை மற்றும் நீங்கள் அமைத்துள்ள கார்ட் மதிப்பு நிபந்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
உள்ளூர் நாணயங்களில் நிலையான ஷிப்பிங் கட்டணங்களைச் சேர்க்க, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்:
- ஷிப்பிங் மண்டலம் ஒரேயொரு நாட்டை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
- மாற்றாக, ஒரு ஷிப்பிங் மண்டலத்தில் பல நாடுகள் இருந்தால், அவையனைத்தும் ஒரே நாணயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
மாற்றங்களின் முன்னோட்டம்
உங்கள் நிலையான ஷிப்பிங் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு மாற்றத்தின் முடிவுகளையும் நீங்கள் முன்னோட்டமிடலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் முன்னோட்டமிட விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் என்பதைக் கிளிக் செய்யவும்.
தற்போது எந்த ஷிப்பிங் கட்டணங்கள் பொருந்துகின்றன என்பதைக் காட்ட, நாடு அல்லது பிராந்தியத்தைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் கட்டணம் மற்றும் உங்கள் ஸ்டோரின் அடிப்படை நாணயத்தில் மாற்றப்பட்ட தொகை ஆகிய இரண்டையும் முன்னோட்டமிட, ஷிப்பிங்கில் நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஸ்டோரின் அடிப்படை நாணயத்திலேயே ஷிப்பிங் கட்டணங்களை அமைப்பதைத் தொடர நீங்கள் தேர்வுசெய்யலாம் (உள்ளூர்மயமாக்கப்படாமல்). உங்கள் செலவுகளை ஈடுகட்ட இந்தக் கட்டணங்கள் தானாகவே மாற்றப்படும்.