ஷிப்பிங் மண்டலங்கள் மற்றும் சந்தைகள்
நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் ஒரு சந்தையைச் சேர்ந்தவையாக இருந்தால் மட்டுமே, உங்கள் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் உள்ள உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் அவற்றைச் சேர்க்க முடியும்.
ஒரு நாடு அல்லது பிராந்தியத்தில் விற்க, அது செயலில் உள்ள சந்தையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் சந்தை அமைப்புகளில் உள்ள செயலற்ற சந்தையில் ஒரு நாடு இருந்தால், கிடைக்கக்கூடிய ஷிப்பிங் கட்டணங்களைக் கொண்ட ஷிப்பிங் மண்டலத்தில் அந்த நாடு இருந்தாலும், அந்த நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்ய முடியாது.
இந்தப் பக்கத்தில்
புதிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களை ஷிப்பிங் மண்டலங்களில் சேர்த்தல்
புதிய நாடு அல்லது பிராந்தியத்திற்கு ஷிப்பிங் செய்வதைத் தொடங்க, பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:
- அந்த நாடு அல்லது பிராந்தியத்துடன் புதிய சந்தையைச் சேர்க்கவும் அல்லது ஏற்கெனவே உள்ள சந்தையில் அதனைச் சேர்க்கவும்.
- அந்த நாடு அல்லது பிராந்தியத்திற்கு ஒரு ஷிப்பிங் மண்டலத்தைச் சேர்க்கவும் அல்லது ஏற்கெனவே உள்ள மண்டலத்தில் அதனைச் சேர்க்கவும்.
- சந்தையைச் செயல்படுத்தவும்.
புதிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களை ஷிப்பிங் மண்டலங்களில் இருந்து நீக்குதல்
ஷிப்பிங் மண்டலத்திலிருந்து ஒரு நாடு அல்லது பிராந்தியத்தை நீக்கும்போது, அந்த நாடு அல்லது பிராந்தியம் இருக்கும் சந்தை தானாகவே முடக்கப்படாது. நாடு அல்லது பிராந்தியத்திற்குச் சாத்தியமான விநியோக முறைகள் ஏதும் இல்லை எனில், வாடிக்கையாளர்கள் எந்தெந்த நாடுகளில் செக்அவுட் செய்ய முடியாது என்பதைக் குறிக்கும் பிழை சந்தையில் காட்டப்படும். நாடு அல்லது பிராந்தியத்திற்கு ஷிப்பிங் கட்டணங்கள் இல்லை, ஆனால் ஸ்டோரில் பிக்அப் விருப்பம் இருந்தால், எந்தெந்த நாடுகளுக்கு ஷிப்பிங் கட்டணங்கள் இல்லை என்பதைக் குறிக்கும் பிழை சந்தையில் காட்டப்படும்.