சுங்க வரி மற்றும் வரி உள்ளிட்ட விலை நிர்ணயம்
இந்தப் பக்கத்தில்
வரி உள்ளிட்ட விலை நிர்ணயம்
நீங்கள் விற்கும் ஒவ்வொரு சந்தைக்கும் உங்கள் வாடிக்கையாளரின் பிராந்தியத்தின் அடிப்படையில் உங்கள் தயாரிப்பு விலைகளில் வரிகளைத் தானாகவே சேர்க்க வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வரி உள்ளிட்ட விலை நிர்ணயம் உங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, யுனைடெட் கிங்டம் போன்ற சில நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் உள்ளூர் மதிப்புக்கூட்டு வரி (VAT) உள்ளிட்ட தயாரிப்பு விலைகளை எதிர்பார்க்கின்றனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற பிற நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் வரிகள் தங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் பொருந்துமானால் செக்அவுட்டில் சேர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பின்வரும் பிராந்தியங்களுக்கு வரி உள்ளிட்ட விலைகள் பொருந்தும்:
- யுனைடெட் கிங்டம்
- ஆஸ்திரேலியா
- நியூசிலாந்து
- ஐரோப்பிய ஒன்றியம்
- மெக்ஸிகோ
- இஸ்ரேல்
- நார்வே
- சுவிட்சர்லாந்து
- சிங்கப்பூர்
- தென்னாப்பிரிக்கா
- ஜப்பான்
மற்ற அனைத்து நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு, செக்அவுட்டில் வரிகள் கணக்கிடப்பட்டுக் காட்டப்படும்.
உங்கள் சந்தைகளுக்கு வரி உள்ளிட்ட விலை நிர்ணயத்தைச் செயல்படுத்துவதற்கு முன், பின்வரும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- வரி உள்ளிட்ட விலைகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன
- வரி சேர்க்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்கள்
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் புதுப்பிக்க விரும்பும் சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோர்ஃபிரண்ட் மற்றும் செக்அவுட் விலை நிர்ணயம் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும். உங்கள் தற்போதைய வரி மற்றும் சுங்க வரிகள் அமைப்புகள் மற்றும் இந்த அமைப்புகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு தெரிவிக்கப்படுகின்றன என்பதற்கான முன்னோட்டம் காட்டப்படும்.
பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.
வரிகள் பிரிவில், டைனமிக் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தேர்வைச் செய்யும்போது, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலைகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை நீங்கள் முன்னோட்டமிடலாம்.
சுங்க வரி உள்ளிட்ட விலை நிர்ணயம்
சுங்க வரி உள்ளிட்ட விலை நிர்ணயம் செயல்படுத்தப்படும்போது, செக்அவுட்டில் உங்கள் தயாரிப்புகளின் விலையில் சுங்க வரிகள் சேர்க்கப்படாது. மாறாக, வாடிக்கையாளர்களின் மொத்தத் தொகையில் சுங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த அம்சத்தைச் செயல்படுத்துவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- சுங்க வரிகள் தானாகவே உங்கள் தயாரிப்பு விலைகளிலோ செக்அவுட்டிலோ சேர்க்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, சுங்க வரிகளுக்கான கட்டணம் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். சுங்க வரிகளுக்கான செலவை நீங்களே செலுத்த வேண்டுமா அல்லது அதை ஈடுசெய்ய உங்கள் தயாரிப்பு விலைகளைச் சரிசெய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானியுங்கள்.
- விலையில் சுங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் தெரிவிக்கப்படும். உங்கள் ஹெடரில் அறிவிப்புப் பட்டியைச் சேர்ப்பதன் மூலமாகவோ தயாரிப்புப் பக்கங்களில் கூடுதல் தயாரிப்புத் தகவலைச் சேர்ப்பதன் மூலமாகவோ, உங்கள் ஸ்டோரிலும் இந்தத் தகவலைச் சேர்க்க நீங்கள் விரும்பலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் புதுப்பிக்க விரும்பும் சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைகளில் அல்லது செக்அவுட்டில் சேகரித்தல் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும். உங்கள் தற்போதைய வரி மற்றும் சுங்க வரி அமைப்புகளும், இந்த அமைப்புகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படிக் காட்டப்படுகின்றன என்பதற்கான முன்னோட்டமும் காட்டப்படும்.
பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.
சுங்க வரிகள் பிரிவில், சுங்க வரிகளைச் சேர்க்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தேர்வைச் செய்யும்போது, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலைகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை நீங்கள் முன்னோட்டமிடலாம்.
சுங்க வரிகளின் செலவைச் சரிபார்
உங்கள் விலைகளை அதற்கேற்பச் சரிசெய்துள்ளதை உறுதிப்படுத்த, சுங்க வரிகளுக்காக நீங்கள் எவ்வளவு செலவிடுகிறீர்கள் என்பதை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.
காலப்போக்கில் மொத்த விற்பனை அறிக்கையைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: சந்தையின் அடிப்படையில் சுங்க வரிகளுக்கான செலவுகளைச் சரிபார்க்க, உங்கள் அறிக்கையில் சந்தைப் பெயர் நெடுவரிசையைச் சேர்க்கவும்.
சுங்க வரிகளுடன் தொடர்புடைய விற்பனையின் சதவீதத்தைத் தீர்மானிக்க, சுங்க வரிகள் நெடுவரிசையில் உள்ள தொகையை நிகர விற்பனை நெடுவரிசையில் உள்ள தொகையால் வகுக்கவும்.