Shopify இல் பாட்களைப் புரிந்துகொள்ளுதல்
பாட் என்பது இணையத்தில் தானியங்குப் பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். மனிதர்களால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பாட்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை மனிதச் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் மனிதனை விட வேகமாகவும் திறமையாகவும் செயல்படும்.
பாட்டை உருவாக்கியவரின் நோக்கத்தைப் பொறுத்து, முறையான வணிகச் செயல்பாடுகள் முதல் தீங்கிழைக்கும் செயல்பாடுகள் வரை பாட்கள் இருக்கக்கூடும். பாட்டின் நோக்கம் என்பது பாட்டின் செயல்பாடுகளுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான நோக்கமாகும், இதனைப் பயனுள்ளது, விரும்பத்தகாதது அல்லது தீங்கானது என வகைப்படுத்தலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரை Google-இன் தேடல் முடிவுகளில் காட்டுவதற்குத் தானாகவே இன்டெக்ஸ் செய்ய உதவும் Google-இன் வெப் க்ராலிங் பாட்கள் போன்ற சில பாட்கள் ஒட்டுமொத்த இணைய அனுபவத்திற்கும் பயனுள்ளதாக அமையக்கூடும். இருப்பினும், ஃப்ளாஷ் விற்பனையின் போது உங்கள் வாடிக்கையாளர்களை விட வேகமாகச் சரக்கு இருப்பை வாங்குவது போன்ற பிற நோக்கங்களுக்காகவும் சில பாட்களைப் பயன்படுத்த முடியும்.
பாட்களால் உருவாக்கப்படும் தரவின் ஓட்டம் தானியங்கு டிராஃபிக் எனப்படும், இது செயல்திறனையும் பாதுகாப்பையும் பாதிக்கலாம்.
இந்தப் பிரிவில், பாட்களின் வகைகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும், Shopify இல் உள்ள பாட்கள் மற்றும் தானியங்கு டிராஃபிக் தொடர்பான பொதுவான சொற்களஞ்சியங்களைப் பற்றியும் நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சாத்தியமான பாட் செயல்பாட்டை எப்படிக் கண்டறிவது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.